தம் என்பதன் பொருள்தருக, கொணர்க, தாம் என்பதன் முதற்குறை.
1. சொல் பொருள்
(வி) தருக, கொணர்க, 2. (சு.பெ) தாம் என்பதன் முதற்குறை
இலக்கணம். வேற்றுமை உருபுக்கு ஏற்பத் திரியும்தாம் என்பதன் வடிவம்; பெரும்பான்மை படர்க்கைப்பன்மையுடன் சேர்ந்துவரும் சாரியை
மூச்சு
உடல் வலிமை தேவைப்படும் கடினமான செயல்களுக்கு மூச்சை உள்ளிழுத்து அடக்குதல்; மூச்சடக்குகை
புகைப் பிடிக்கையில் புகையை ஒருமுறை உள்ளிழுத்து வெளிவிடுதல்
சதம்
2. சொல் பொருள் விளக்கம்
தருக, கொணர்க,
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
bring, take in
his, her, their
flexional increment generally used along with the nouns of third person plural; oblique of தாம்
holding the breath especially during hard tasks such as lifting something heavy, or going under water
breath
hundred

4.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது - குறள் எண்:68 தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும். மா தாங்கு எறுழ் தோள் மறவர் தம்-மின் – மது 729 குதிரையைச் செலுத்தும் வலியையுடைய தோளினையும் உடைய மறவரைக் கொணர்மின் நாடி நட்பின் அல்லது நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே – நற் 32/8,9 முதலில் ஆராய்ந்து நட்புச் செய்வரே அன்றி, நட்புச் செய்தபின் அவரைப்பற்றி ஆராயமாட்டார், தம்மைச் சார்ந்தவரிடத்து
5. பயன்பாடு
1. மூச்சை தம் பிடித்து தூக்கும் அளவுக்கு பளுவை உங்கள் உடலில் ஏற்றாதீர்கள் 2. தம் அடிக்காததால்தான் தம் பிடித்து நிற்கிறேன்! – டி.ராஜேந்தர் 3. அத்தூரத்தை தம் மக்கள் கூட்டத்துடன் இணைந்து பயணிக்க திருவண்ணாமலை பகுதியில் தலைவர் திரு. @ikamalhaasan அவர்கள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்