Skip to content

சொல் பொருள்

1. (வி) கொத்தாகு, 2. (பெ) 1. பூங்கொத்து,  2. காய்,பழம் இவற்றின் குலை,

சொல் பொருள் விளக்கம்

1. கொத்தாகு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

cluster (as in flowers), cluster of flowers, bunch

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

விரி சினை துணர்ந்த நாகு இள வேங்கையின் – புறம் 352/12

விரிந்த கிளையினில் கொத்துக்கொத்தாகப் பூத்துள்ள இளைய வேங்கை மரத்தைப்போல

மணி துணர்ந்து அன்ன மா குரல் நொச்சி – புறம் 272/1

மணிகளைக் குலையாகத் தொடுத்தது போன்ற கரிய கொத்துக்களையுடைய நொச்சியே!

வாங்கு சினை மருத தூங்கு துணர் உதிரும் – நற் 350/3

வளைந்த கிளைகளைக் கொண்ட மருதமரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் பூங்கொத்துக்கள் உதிர்கின்ற

1.வாகை நெற்றின் குலை

வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர்
ஆடு_கள பறையின் அரிப்பன ஒலிப்ப – அகம் 45/1,2

உலர்ந்த வாகைமரத்திலுள்ள விளைந்த நெற்றுக்களின் குலை
ஆடுகளத்தில் (ஒலிக்கும் கழைக் கூத்தர்களின்) பறையினைப் போல் விட்டுவிட்டு ஒலிக்கும்

2. மாங்காய்களின் குலை

நறு வடி மாவின் பைம் துணர் உழக்கி – கலி 41/14

நறிய பிஞ்சுகளைக் கொண்ட மாமரத்தின் பசிய குலைகளை உலுக்கிவிட்டு

3. பலாக்குலை

சாரல் பலவின் கொழும் துணர் நறும் பழம் – ஐங் 214/1

மலைச் சாரலிலுள்ள பலாவின் கொழுத்த குலையான நறும் பழம்

4. கொன்றைப்பழங்களின் குலை

துணர் காய் கொன்றை குழல் பழம் ஊழ்த்தன – ஐங் 458/1

குலை குலையான காய்களைக் கொண்ட கொன்றையின் குழல் போன்ற பழங்கள் பழுத்து முதிர்ந்தன

5. முருங்கைக் காய்களின் குலை

வேனில் முருக்கின் விளை துணர் அன்ன – நற் 73/1

வேனில்காலத்து முருக்க மரத்தில் நன்கு விளைந்து முற்றிய காய்களின் கொத்தினைப் போன்ற

6. மிளகுக்காய்களின் குலை

கரும் கொடி மிளகின் காய் துணர் பசும் கறி – மலை 521

கரிய கொடிகளையுடைய மிளகின் காய்க்குலைகளின் (காய்ந்துபோகாத)பச்சை மிளகும்

7. சங்குகளின் கொத்து

கோடு துணர்ந்து அன்ன குருகு ஒழுக்கு எண்ணி – நற் 159/4

சங்குகளைக் குலையாகத் தொடுத்தது போன்ற குருகுகளின் வரிசையை எண்ணி

மேற்கண்ட எடுத்துக்காட்டுகள், படங்கள் மூலம்,’இணர்’ என்பது தனித்தனியாக நீண்ட காம்புகள் கொண்ட
பூக்கள் அல்லது காய்,பழங்களின் தொகுதி என்பது பெறப்படும். இந்தக் காம்புகள் தனித்தனியாக இல்லாமல்,
ஒன்றாகச் சேர்ந்திருந்தால் அது இணர் எனப்படும்.

பார்க்க: இணர்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *