Skip to content

சொல் பொருள்

(வி) 1. புலன்களால் நுகர், 2. அனுபவி, 3. உண்ணு, தின்னு, 

2. (பெ) 1. கதிர் பூவிதழ் முதலியவற்றின் மெல்லிய பகுதி, 2. புளியம்பழத்தின் ஆர்க்கு, 3. மென்மை, 4. பஞ்சுப்பிசிர், 5. சிம்பு

சொல் பொருள் விளக்கம்

1. புலன்களால் நுகர்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

enjoy by means of the senses; experience as the fruits of actions, eat, A soft part in the ears of corn, in the petals of flowers, etc.; Fibre covering the tamarind pulp; softness, cotton fibres, fibre

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல் என – குறு 63/1

இரப்போருக்கு ஈதலும், இன்பத்தை நுகர்தலும், இல்லாதவருக்கு இல்லை என எண்ணி

தொல் வினை பயன் துய்ப்ப துறக்கம் வேட்டு எழுந்தால் போல் – கலி 118/3

முந்தைய நல்வினைகளின் பயன்களை அனுபவிப்பதற்கு, சுவர்க்கத்தை விரும்பிப் போவதைப் போல

அத்த இருப்பை ஆர் கழல் புது பூ
துய்த்த வாய ————————
————————————-
வன் கை எண்கின் வய நிரை – அகம் 15/13-16

அரிய சுரத்தில் உள்ள இலுப்பை மரத்தின் ஆர்க்கு கழன்ற புதிய பூக்களைத்
தின்ற வாயையுடைய ————————–
—————————————–
வலிய கையை உடைய கரடியின் வலிமை உள்ள கூட்டம்

துய் தலை வாங்கிய புனிறு தீர் பெரும் குரல் – குறி 37

மெல்லிய பஞ்சை நுனியில் உடைய வளைந்த பிஞ்சுத்தன்மை நீங்கிய(முற்றிய) பெரிய கதிர்களை

கடவுள் வாகை துய் வீ ஏய்ப்ப – பதி 66/15

கொற்றவை வாழும் வாகை மரத்தின் பஞ்சினைக் கொண்ட பூவைப் போல

வெண் புடை கொண்ட துய் தலை பழனின் – மலை 178

வெண்மையான புடைத்த பக்கங்களைக்கொண்ட, நாரை உச்சியில் கொண்ட (புளியம்)பழத்தின்

துய் மயிர் அடக்கிய சேக்கை அன்ன – மலை 418

மென்மையான உரோமத்தை உள்ளடக்கிய மெத்தை விரிப்பைக்கொண்ட கட்டில் போன்ற

துய் தலை மந்தி வன் பறழ் தூங்க – நற் 95/4

பஞ்சுப்பிசிர் போன்ற தலையைக் கொண்ட குரங்கின் வலிய குட்டி தொங்க

நெய் வார்ந்து அன்ன துய் அடங்கு நரம்பின்
இரும் பாண் ஒக்கல் தலைவன் – நற் 300/8,9

நெய்யை ஊற்றிவிட்டாற் போன்ற சிம்பு அடங்கிய நரம்புகளைக் கொண்ட யாழை இசைக்கும்
பெரிய பாணர் சுற்றத்தாருக்குத் தலைவனே

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *