Skip to content
துழாய்

துழாய் என்பது துளசி

1. சொல் பொருள்

(பெ) துளசி, துளவு, துளவம், ராமதுளசி, திருத்துழாய்(வைணவர்கள் துளசிக்கு வழங்கும் பெயர்)

2. சொல் பொருள் விளக்கம்

துழாய் என்பது மூலிகை செடியாகும். வீடுகளில் துளசியை வளர்த்து வணங்கும் வழக்கமும் உண்டு

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Sacred basil, ocimum sanctum, Linn.

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

துழாய்
துழாய்
மண் மிசை அவிழ் துழாய் மலர் தரு செல்வத்து
புள் மிசை கொடியோனும் புங்கவம் ஊர்வோனும்
மலர் மிசை முதல்வனும் – பரி 8/1-3

இந்த மண்ணுலகத்தில் – மலர்ந்த துளசி மாலையினையும், உயிர்களுக்கு அளிக்கும் செல்வத்தினையும்,
மேலே கருடப்பறவை வரையப்பெற்ற கொடியினையும் உடைய திருமாலும், காளையின் மேல் ஏறிவரும் சிவபெருமானும்,
தாமரை மலர் மேல் அமர்ந்திருக்கும் பிரமனும்

வண் துழாய் மாலையை மாயவன் மேல் இட்டு - மது:17/66

வண் துழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே - மது:17/138

நிழல் மணி புரவி திண் தேர் நிழல் துழாய் குனிந்து குத்தும் - சிந்தா:10 2220/1

மண் மிசை அவிழ் துழாய் மலர் தரு செல்வத்து - பரி 8/1

தும்பை துழாஅய் சுடர் பூ தோன்றி - குறி 90

கண் பொரு திகிரி கமழ் குரல் துழாஅய்/அலங்கல் செல்வன் சேவடி பரவி - பதி 31/8,9

நக்கு அலர் துழாஅய் நாறு இணர் கண்ணியை - பரி 4/58

புரி மலர் துழாஅய் மேவல் மார்பினோய் - பரி 13/61

அஞ்ஞானம் தந்திட்டு அது ஆங்கு அற துழாய்
கை ஞானம் கொண்டு ஒழுகும் காரறிவாளர் முன் - நாலடி:32 1/2,3

தொல் மாண் துழாய் மாலையானை தொழல் இனிதே - இனிய40:0/2
துழாய்
துழாய்
பூ ஆர் பொன் தவிசின் மிசை இருந்தவனும் பூம் துழாய் புனைந்த மாலும் - தேவா-சம்:1413/1

கொய் மலர் கொன்றை துழாய் வன்னி மத்தமும் கூவிளமும் - தேவா-அப்:857/1

தூங்கான் துளங்கான் துழாய் கொன்றை துன்னிய செம் சடை மேல் - தேவா-அப்:861/1

தொடுத்த துழாய் மலர் சூடி களைந்தன சூடும் இ தொண்டர்களோம் - நாலாயி:9/2

கான் ஆர் நறும் துழாய் கைசெய்த கண்ணியும் - நாலாயி:50/1

நாடும் ஊரும் அறியவே போய் நல்ல துழாய் அலங்கல் - நாலாயி:290/1

நாற்ற துழாய் முடி நாராயணன் நம்மால் - நாலாயி:483/3

மதுவின் துழாய் முடி மாலே மாயனே எங்கள் அமுதே - நாலாயி:525/2

ஆர்க்கோ இனி நாம் பூசல் இடுவது அணி துழாய்
தார்க்கு ஓடும் நெஞ்சம் தன்னை படைக்க வல்லேன் அந்தோ - நாலாயி:597/3,4

தண் அம் துழாய் என்னும் மாலை கொண்டு சூட்ட தணியும் பிலம்பன்-தன்னை - நாலாயி:623/3

நீலார் தண் அம் துழாய் கொண்டு என் நெறி மென் குழல் மேல் சூட்டிரே - நாலாயி:628/4

மாலை உற்ற கடல் கிடந்தவன் வண்டு கிண்டு நறும் துழாய்
மாலை உற்ற வரை பெரும் திருமார்வனை மலர் கண்ணனை - நாலாயி:665/1,2

தூய்மை யோகம் ஆயினாய் துழாய் அலங்கல் மாலையாய் - நாலாயி:765/1

வண்டு கிண்டு தண் துழாய் அலங்கலாய் கலந்த சீர் - நாலாயி:773/3

தேன் அகஞ்செய் தண் நறும் மலர் துழாய் நன் மாலையாய் - நாலாயி:781/3

குடம் கலந்த கூத்தன் ஆய கொண்டல்_வண்ண தண் துழாய்
வடம் கலந்த மாலை மார்ப கால நேமி காலனே - நாலாயி:789/3,4

புண்ணியா புனம் துழாய் அலங்கல் அம் புனிதனே - நாலாயி:796/4

தோடு பெற்ற தண் துழாய் அலங்கல் ஆடு சென்னியாய் - நாலாயி:797/1

தொத்து இறுத்த தண் துழாய் நன் மாலை வாழ்த்தி வாழ்-மினோ - நாலாயி:819/4

மட்டு உலாவு தண் துழாய் அலங்கலாய் பொலன் கழல் - நாலாயி:834/1

சுரும்பு அரங்கு தண் துழாய் துதைந்து அலர்ந்த பாதமே - நாலாயி:844/1

தூயனாயும் அன்றியும் சுரும்பு உலாவு தண் துழாய்
மாய நின்னை நாயினேன் வணங்கி வாழ்த்தும் ஈது எலாம் - நாலாயி:861/1,2

தண் துழாய் மாலை மார்பன் தமர்களாய் பாடி ஆடி - நாலாயி:876/3

புன துழாய் மாலையானே பொன்னி சூழ் திருவரங்கா - நாலாயி:901/3

அலங்கல் ஆய தண் துழாய் கொண்டு ஆயிரம் நாமம் சொலி - நாலாயி:976/3

கொந்து அலர்ந்த நறும் துழாய் சாந்தம் தூபம் தீபம் கொண்டு அமரர் தொழ பணம் கொள் பாம்பில் - நாலாயி:1139/1

தேன் ஆய நறும் துழாய் அலங்கலின் திறம் பேசி உறங்காள் காண்-மின் - நாலாயி:1390/2

வாடா மலர் துழாய் மாலை முடியானை - நாலாயி:1521/3

தார் தழைத்த துழாய் முடியன் தளிர் அடியே அடை நெஞ்சே - நாலாயி:1534/4

துன்னு மா மணி முடி மேல் துழாய் அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால் - நாலாயி:1650/1

விரை எடுத்த துழாய் அலங்கல் விறல் வரை தோள் புடைபெயர - நாலாயி:1668/3

வண்ண நறும் துழாய் வந்து ஊதாய் கோல் தும்பீ - நாலாயி:1678/4

தாது நறும் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ - நாலாயி:1679/4

வண்டு நறும் துழாய் வந்து ஊதாய் கோல் தும்பீ - நாலாயி:1680/4

தார் மலி தண் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ - நாலாயி:1681/4

தார் ஆர் நறும் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ - நாலாயி:1682/4

தாரில் நறும் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ - நாலாயி:1683/4

தாம நறும் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ - நாலாயி:1684/4

கோல நறும் துழாய் கொண்டு ஊதாய் கோல் தும்பீ - நாலாயி:1685/4

கொந்து நறும் துழாய் கொண்டு ஊதாய் கோல் தும்பீ - நாலாயி:1686/4

வம்பு அவிழும் துழாய் மாலை தோள் மேல் கையன ஆழியும் சங்கும் ஏந்தி - நாலாயி:1761/1

வவ்வி துழாய் அதன் மேல் சென்ற தனி நெஞ்சம் - நாலாயி:1780/1

பாலை ஆர் அமுதத்தினை பைம் துழாய்
மாலை ஆலியில் கண்டு மகிழ்ந்து போய் - நாலாயி:1850/2,3

சீராளா செந்தாமரை கண்ணா தண் துழாய்
தார் ஆளா கொட்டாய் சப்பாணி தட மார்வா கொட்டாய் சப்பாணி - நாலாயி:1897/3,4

மால் இனம் துழாய் வரும் என் நெஞ்சகம் - நாலாயி:1959/1

மாலின் அம் துழாய் வந்து என் உள் புக - நாலாயி:1959/2

அல்லி மலர் தண் துழாய் நினைந்திருந்தேனையே - நாலாயி:1964/2

சூடோமே சூடும் துழாய் அலங்கல் சூடி நாம் - நாலாயி:1979/3

தோடு ஆர் நறும் துழாய் மார்வனை ஆர்வத்தால் - நாலாயி:2015/3

கள் ஊரும் பைம் துழாய் மாலையானை கனவிடத்தில் யான் காண்பன் கண்ட-போது - நாலாயி:2074/3

தன் அலர்ந்த நறும் துழாய் மலரின் கீழே தாழ்ந்து இலங்கு மகரம் சேர் குழையும் காட்டி - நாலாயி:2076/2

தாயவனை கேசவனை தண் துழாய் மாலை சேர் - நாலாயி:2181/3

துணிந்தது சிந்தை துழாய் அலங்கல் அங்கம் - நாலாயி:2214/1

மேலா வியன் துழாய் கண்ணியனே மேலால் - நாலாயி:2281/2

பொன் தோய் வரை மார்பில் பூம் துழாய் அன்று - நாலாயி:2283/2

தனத்து உள்ளான் தண் துழாய் மார்பன் சினத்து - நாலாயி:2284/2

மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டு அறையும் தண் துழாய்
கண்ணனையே காண்க நம் கண் - நாலாயி:2289/3,4

வாச மலர் துழாய் மாலையான் தேசு உடைய - நாலாயி:2302/2

புனம் துழாய் மாலையான் பொன் அம் கழற்கே - நாலாயி:2304/3

மனம் துழாய் மாலாய் வரும் - நாலாயி:2304/4

மறை பாடகம் அனந்தன் வண் துழாய் கண்ணி - நாலாயி:2311/3

துரக வாய் கீண்ட துழாய் முடியாய் நங்கள் - நாலாயி:2328/3

சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால் - நாலாயி:2331/1

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கரும் குழல் மேல் மல் பொன்ற - நாலாயி:2350/1,2

விரை ஆர் நறும் துழாய் வீங்கு ஓத மேனி - நாலாயி:2360/3

கொங்கு அணைந்து வண்டு அறையும் தண் துழாய் கோமானை - நாலாயி:2363/3

கொந்தின்வாய் வண்டு அறையும் தண் துழாய் கோமானை - நாலாயி:2368/3

மது நின்ற தண் துழாய் மார்வன் பொது நின்ற - நாலாயி:2369/2

வண் துழாய் மால் அளந்த மண் - நாலாயி:2371/4

சார்வு நமக்கு என்றும் சக்கரத்தான் தண் துழாய்
தார் வாழ் வரை மார்பன் தான் முயங்கும் கார் ஆர்ந்த - நாலாயி:2381/1,2

துழாய் மன்னு நீள் முடி என் தொல்லை மால்-தன்னை - நாலாயி:2392/3

மார்பில் சிரீதரன் தன் வண்டு உலவு தண் துழாய்
தார் தன்னை சூடி தரித்து - நாலாயி:2443/3,4

நிழல் போல்வனர் கண்டு நிற்கும்-கொல் மீளும்-கொல் தண் அம் துழாய்
அழல் போல் அடும் சக்கரத்து அண்ணல் விண்ணோர் தொழ கடவும் - நாலாயி:2480/2,3

முனி வஞ்ச பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்
பனி நஞ்ச மாருதமே எம்மது ஆவி பனிப்பு இயல்வே - நாலாயி:2481/3,4

பனிப்பு இயல்பு எல்லாம் தவிர்ந்து எரி வீசும் அம் தண் அம் துழாய்
பனி புயல் சோரும் தடம் கண்ணி மாமை திறத்து-கொலாம் - நாலாயி:2482/2,3

ஈர்கின்ற சக்கரத்து எம்பெருமான் கண்ணன் தண் அம் துழாய்
சார்கின்ற நல் நெஞ்சினார் தந்து போன தனி வளமே - நாலாயி:2489/3,4

சாரிகை புள்ளர் அம் தண் அம் துழாய் இறை கூய் அருளார் - நாலாயி:2496/3

சொல் மொழி மாலை அம் தண் அம் துழாய் கொண்டு சூட்டு-மினே - நாலாயி:2497/4

புயல் வாய் இன நிரை காத்த புள் ஊர்தி கள் ஊரும் துழாய்
கொயல் வாய் மலர் மேல் மனத்தொடு என்னாம்-கொல் எம் கோல் வளைக்கே - நாலாயி:2501/3,4

நம் கோன் உகக்கும் துழாய் என் செய்யாது இனி நானிலத்தே - நாலாயி:2502/4

யாமங்கள்-தோறு எரி வீசும் நம் கண்ணன் அம் தண் அம் துழாய்
தாமம் புனைய அ வாடை ஈதோ வந்து தண்ணென்றதே - நாலாயி:2504/3,4

தண் அம் துழாய் வளை கொள்வது யாம் இழப்போம் நடுவே - நாலாயி:2505/1

ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய் - நாலாயி:2511/3

ஞால பொன் மாதின் மணாளன் துழாய் நங்கள் சூழ் குழற்கே - நாலாயி:2517/3

வண்டு உண் துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன் - நாலாயி:2526/3

விலை கொண்டு தந்த சங்கம் இவை வேரி துழாய் துணையா - நாலாயி:2528/3

சீர் ஆயின தெய்வ நல் நோய் இது தெய்வ தண் அம் துழாய்
தார் ஆயினும் தழை ஆயினும் தண் கொம்பு அது ஆயினும் கீழ் - நாலாயி:2530/2,3

போழ்கின்ற திங்கள் அம் பிள்ளையும் போழ்க துழாய் மலர்க்கே - நாலாயி:2549/2

கிளர்ந்து மறிதர கீண்டு எடுத்தான் முடி சூடு துழாய்
அளைந்து உண் சிறு பசும் தென்றல் அந்தோ வந்து உலாகின்றதே - நாலாயி:2551/3,4

இடம் போய் விரிந்து இ உலகு_அளந்தான் எழில் ஆர் தண் துழாய்
வடம் போது இனையும் மட நெஞ்சமே நங்கள் வெள் வளைக்கே - நாலாயி:2553/1,2

வெம் களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா - நாலாயி:2554/3

பொலியும் உருவின் பிரானார் புனை பூம் துழாய் மலர்க்கே - நாலாயி:2555/3

பெறுகின்ற தாயர் மெய் நொந்து பெறார்-கொல் துழாய் குழல் வாய் - நாலாயி:2558/2

இணரும் துழாய் அலங்கல் எந்தை உணர - நாலாயி:2613/2

மதுகரம் மே தண் துழாய் மாலாரை வாழ்த்து ஆம் - நாலாயி:2621/3

ஏசியே ஆயினும் ஈன் துழாய் மாயனையே - நாலாயி:2622/3

தழைக்கும் துழாய் மார்வன் தன்னை அழைத்து ஒருகால் - நாலாயி:2623/2

ஈர்ம் துழாய் மாயனையே என் நெஞ்சே பேர்ந்து எங்கும் - நாலாயி:2644/2

வெறி கொண்ட தண் துழாய் வேதியனை நெஞ்சே - நாலாயி:2650/3

பேராமல் தாங்கி கடைந்தான் திரு துழாய் - நாலாயி:2693/6

போர் ஆர் வேல் கண்ணீர் அவன் ஆகில் பூம் துழாய்
தாராது ஒழியுமே தன் அடிச்சி அல்லளே மற்று - நாலாயி:2696/2,3

சீர் ஆர் திரு துழாய் மாலை நமக்கு அருளி - நாலாயி:2700/1

சீரானை செம் கண் நெடியானை தேன் துழாய்
தாரானை தாமரை போல் கண்ணானை எண் அரும் சீர் - நாலாயி:2708/4,5

இன் உயிர் தோழியால் எம் பெருமான் ஈன் துழாய்
மன்னு மணி வரை தோள் மாயவன் பாவியேன் - நாலாயி:2748/1,2

மன்னன் நறும் துழாய் வாழ் மார்பன் மா மதிகோள் - நாலாயி:2763/1

கடி சேர் தண் அம் துழாய் கண்ணி புனைந்தான் தன்னை கண்ணனை - நாலாயி:2949/2

விராய் மலர் துழாய் வேய்ந்த முடியன் - நாலாயி:2970/2

குடைந்து வண்டு உண்ணும் துழாய் முடியானை - நாலாயி:2975/1

சூடும் தண் துழாய்
நீடு நின்றவை - நாலாயி:2976/2,3

தாள் இணை மேலும் புனைந்த தண் அம் துழாய் உடை அம்மான் - நாலாயி:2993/2

கற்றை துழாய் முடி கோல கண்ணபிரானை தொழுவார் - நாலாயி:2996/2

தாள் பட்ட தண் துழாய் தாமம் காமுற்றாயே - நாலாயி:3010/4

கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல் - நாலாயி:3012/1

அம் தாமம் தண் துழாய் ஆசையால் வேவாயே - நாலாயி:3017/4

கடி வார் தண் அம் துழாய் கண்ணன் விண்ணவர் பெருமான் - நாலாயி:3039/1

திவளும் தண் அம் துழாய் கொடீர் என - நாலாயி:3046/3

மட்டு அலர் தண் துழாய் என்னும் சுடர் - நாலாயி:3050/2

பூம் பிணைய தண் துழாய் பொன் முடி அம் போர் ஏறே - நாலாயி:3059/4

தன் முடிவு ஒன்று இல்லாத தண் துழாய் மாலையனை - நாலாயி:3060/2

தாமரை_கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை துழாய் விரை - நாலாயி:3066/1

மேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே - நாலாயி:3073/4

கண்ணி தண் அம் துழாய் முடி கமல தடம் பெரும் கண்ணனை புகழ் - நாலாயி:3074/1

பூம் தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே - நாலாயி:3089/4

மாட்டாத பல சமய மதி கொடுத்தாய் மலர் துழாய்
மாட்டே நீ மனம் வைத்தாய் மா ஞாலம் வருந்தாதே - நாலாயி:3124/3,4

போது வாழ் புனம் துழாய் முடியினாய் பூவின் மேல் - நாலாயி:3126/3

நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறும் துழாய்
போதனை பொன் நெடும் சக்கரத்து எந்தை பிரான்-தன்னை - நாலாயி:3189/1,2

மட்டு அவிழ் தண் அம் துழாய் முடியானை வணங்கி அவன் திறத்து - நாலாயி:3222/3

துக்கம் இல் ஞான சுடர் ஒளி மூர்த்தி துழாய் அலங்கல் பெருமான் - நாலாயி:3228/1

கடி சேர் துழாய் முடி கண்ணன் கழல்கள் நினை-மினோ - நாலாயி:3233/4

கோமின் துழாய் முடி ஆதி அம் சோதி குணங்களே - நாலாயி:3237/4

தாள் இணை மேல் அணி தண் அம் துழாய் என்றே - நாலாயி:3242/3

நல் அடி மேல் அணி நாறு துழாய் என்றே - நாலாயி:3243/3

சேவடி மேல் அணி செம்பொன் துழாய் என்றே - நாலாயி:3244/3

பாதங்கள் மேல் அணி பைம்பொன் துழாய் என்றே - நாலாயி:3245/3

தாள் இணை மேல் அணி தண் அம் துழாய் என்றே - நாலாயி:3246/3

பாதங்கள் மேல் அணி பைம்பொன் துழாய் என்றே - நாலாயி:3247/3

வடம் கொள் பூம் தண் அம் துழாய் மலர்க்கே இவள் - நாலாயி:3248/3
வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள் - நாலாயி:3249/3

சங்கு என்னும் சக்கரம் என்னும் துழாய் என்னும் - நாலாயி:3250/3

மின் செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய்
பொன் செய் பூண் மென் முலைக்கு என்று மெலியுமே - நாலாயி:3251/3,4

வெறி கொள் துழாய் மலர் நாறும் வினையுடையாட்டியேன் பெற்ற - நாலாயி:3266/3

நாறு துழாய் மலர் காணில் நாரணன் கண்ணி ஈது என்னும் - நாலாயி:3270/3

தேர்ப்பாகனார்க்கு இவள் சிந்தை துழாய் திசைக்கின்றதே - நாலாயி:3286/4

மது வார் துழாய் முடி மாய பிரான் கழல் வாழ்த்தினால் - நாலாயி:3288/3

களி மலர் துழாய் அலங்கல் கமழ் முடியன் கடல் ஞாலத்து - நாலாயி:3312/3

தூ மடல் தண் அம் துழாய் மலர் கொண்டு சூடுவோம் - நாலாயி:3372/2

நாறு பூம் தண் துழாய் முடியாய் தெய்வ_நாயகனே - நாலாயி:3416/4

புணர்த்த பூம் தண் துழாய் முடி நம் பெருமானை கண்டு - நாலாயி:3455/3

புன துழாய் முடி மாலை மார்பன் என் அப்பன் தன் மாயங்களே - நாலாயி:3490/3

கொங்கு அலர் தண் அம் துழாய் முடியானுக்கு என் - நாலாயி:3507/3

மா மது வார் தண் துழாய் முடி வானவர்_கோனை கண்டு - நாலாயி:3531/3

தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான் - நாலாயி:3533/2

பூ தண் துழாய் முடியாய் புனை கொன்றை அம் செம் சடையாய் - நாலாயி:3618/2

கொங்கு அலர் தண் அம் துழாய் முடி என்னுடை கோவலனே - நாலாயி:3619/4

விள்கின்ற பூம் தண் துழாய் விரை நாற வந்து என் உயிரை - நாலாயி:3635/3

அம் கள் மலர் தண் துழாய் முடி அச்சுதனே அருளாய் - நாலாயி:3639/1

வாச மலர் தண் துழாய் முடி மாயவனே அருளாய் - நாலாயி:3642/2

அல்லி துழாய் அலங்கல் அணி மார்ப என் அச்சுதனே - நாலாயி:3647/3

முடி சேர் சென்னி அம்மா நின் மொய் பூம் தாம தண் துழாய்
கடி சேர் கண்ணி பெருமானே என்று என்று ஏங்கி அழுத-கால் - நாலாயி:3717/1,2

எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்றுஎன்று - நாலாயி:3725/1

அல்லி அம் தண் அம் துழாய் முடி அப்பன் ஊர் - நாலாயி:3726/3

அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம் தண் துழாய் கமழ்தல் - நாலாயி:3768/1

புனம் மேவிய பூம் தண் துழாய் அலங்கல் - நாலாயி:3807/3

கொங்கு ஆர் பூம் துழாய் முடி எம் குடக்கூத்தர்க்கு என் தூதாய் - நாலாயி:3847/3

புன கொள் காயா மேனி பூம் துழாய் முடியார்க்கே - நாலாயி:3854/4

பூம் துழாய் முடியார்க்கு பொன் ஆழி கையாருக்கு - நாலாயி:3855/1

மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே - நாலாயி:3982/4

தனி நெஞ்சம் முன் அவர் புள்ளே கவர்ந்தது தண் அம் துழாய்க்கு
இனி நெஞ்சம் இங்கு கவர்வது யாம் இலம் நீ நடுவே - நாலாயி:2481/1,2

மால்-பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு நல்கிற்றை எல்லாம் - நாலாயி:2512/3

சரிகின்றது சங்கம் தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை - நாலாயி:2524/3

அளப்புஅரும் தன்மைய ஊழி அம் கங்குல் அம் தண் அம் துழாய்க்கு
உள பெரும் காதலின் நீளியவாய் உள ஓங்கு முந்நீர் - நாலாயி:2536/1,2

வாய் நறும் கண்ணி தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை - நாலாயி:2547/2

தாது நல்ல தண் அம் துழாய்கொடு அணிந்து - நாலாயி:1922/2

நலம் திகழ் சடையான் முடி கொன்றை மலரும் நாரணன் பாத துழாயும்
  கலந்து இழி புனலால் புகர் படு கங்கை கண்டம் என்னும் கடி நகரே - நாலாயி:392/3,4

கள் ஆர் துழாயும் கணவலரும் கூவிளையும் - நாலாயி:2017/1

பூம் தண் மாலை தண் துழாயும் பொன் முடியும் வடிவும் - நாலாயி:3388/3

அல்லி மலர் தண் துழாயும் தாரான் ஆர்க்கு இடுகோ இனி பூசல் சொல்லீர் - நாலாயி:3687/3

துனி வளர் காதல் துழாயை துழாவு தண் வாடை தடிந்து - நாலாயி:2490/3

திங்கள் ஆர் கொன்றை மத்தம் துழாய் துன்று பொன் செம் சடா பஞ்சத்து உறு தோகை - திருப்:74/7

வாளம் முழுது ஆளும் ஓர் தண் துழாய் தங்கு சோதி மணி மார்ப மாலின் பினாள் இன் சொல் - திருப்:94/13

துணைவ பாற்கடல் வனிதை சேர்ப்ப துழாய் மார்பா கோபாலா காவாய் எனவே கை - திருப்:1059/6

கொங்கு அடுத்த குரா மாலிகை தண் கடுக்கை துழாய் தாதகி கும்பிட தகு பாகீரதி மதி மீது - திருப்:1159/5

பூம் துழாய் மாலை போர் மழு படையோன் பொன் அடி பொலிவுற வணங்கி - வில்லி:1 93/3

முன்னம் யாவையும் முடித்தருள் மொய் துழாய் முடியோன் - வில்லி:7 78/1

நறை கமழ் தண் துழாய் மாலை நாரணற்கு நண்பான நரனார் செம் கை - வில்லி:8 10/1

மன்றல் அம் துழாய் மாயவன் அருளினால் வடி கணை மாளாமல் - வில்லி:9 7/3

தம்பியர்கள் நால்வருடன் தண் துழாய் முடியோனும் தானும் ஏனை - வில்லி:10 9/1

அரி விரசும் துழாய் மகுடத்து அரியும் இரண்டு அரிகள் அருள் ஆண்மையோரும் - வில்லி:10 17/1

வாள் உகிர் வாளால் கனகனை பிளந்த வண் துழாய் மணம் கமழ் மௌலி - வில்லி:10 26/3

துரகத தடம் தேர் விட்டு துழாய் மணம் கமழும் பொன் தோள் - வில்லி:10 71/2

பாடினர் புகழ்ந்து பரவினர் பரவி பைம் துழாய் கமழ் மலர் பாதம் - வில்லி:10 149/3

முருகு அவிழ் பரிமளம் மொய்த்த தண் துழாய்
மரகத கிரி திரு மைத்துனன்-தனை - வில்லி:12 140/1,2

பண் என படுத்தது அந்த பைம் துழாய் பரமன் வாளி - வில்லி:13 78/4

முனி குலம் தொழு கடவுள் யார் மொய் துழாய் முகுந்தன் - வில்லி:16 56/1

வண் துவரையில் வாழ் தண் துழாய் மாலை மாதவன் வருதலும் எதிர்கொண்டு - வில்லி:18 14/2

சூடுகின்ற துழாய் முடியோன் சுரருடனே முனிவர்களும் சுருதி நான்கும் - வில்லி:27 17/1

பைம் துழாய் முடி பரமனும் கண் மலர் பரப்பி - வில்லி:27 73/2

முன்னம் நின்றவர்கள் இட்ட பீடம் மிசை மொய் துழாய் முகிலும் எய்தினான் - வில்லி:27 104/4

தன் பெரும் சேனை நிற்க தண் துழாய் அலங்கலானும் - வில்லி:27 187/1

விரவி பயிலும் துழாய் முடியோன் வேறு ஓர் மொழியும் விளம்பாமல் - வில்லி:27 220/2

புரந்தரன் பசும் தண் துழாய் அணிந்திடும் புயல்வணன் இருந்துழி போந்தே - வில்லி:27 242/2

மலர்ந்த பற்ப வனம் நிகர் பைம் துழாய்
அலங்கல் வித்தகன் ஏந்தினஆதலால் - வில்லி:29 19/1,2

தரு மாலை மணம் நாறு தாளானை வண்டு ஏறு தண் அம் துழாய்
மரு மாலை புனைகின்ற திருமாலை அல்லாது வல்லார்கள் யார் - வில்லி:33 1/3,4

போரில் எஞ்சினன் குருகுலேசன் என்று கண்ட புருகூதன் மைந்தனும் புனை துழாய்
வீரனும் துனைந்து வரு தேரின்-நின்று இழிந்து இரு கண் வீழும் அம்பினில் முழுகினார் - வில்லி:38 37/1,2

மன்றல் கமழும் துழாய் மவுலி மாலும் தாமும் பாடி மனை - வில்லி:39 35/3

மாசு அற விளங்கும் மேனி வண் துழாய் அலங்கல் மூர்த்தி - வில்லி:41 154/2

அன்பொடு துழாய் முதல்வன் அப்பொழுது அழைக்க - வில்லி:41 176/1

மன்றல் அம் துழாய் முடி மாயன் மேல் மனம் - வில்லி:41 196/3

பூதனை முலை நுகர் பூம் துழாய் முடி - வில்லி:41 257/1

வண் துழாய் மது மாலையாய் வளைந்து மேல் வரு வரூதினி-தன்னை - வில்லி:42 71/3

புனை துழாய் மவுலி விரகினால் முரசு உயர்த்த பூபன் உரை பொய்த்ததும் - வில்லி:43 47/3

வரு பகதத்தன் எறிந்த வேல் உன்-தன் வண் துழாய் மார்பகத்து ஏற்றாய் - வில்லி:45 13/2

மாலை நறும் துழாய் மார்பும் திரண்ட தோளும் மணி கழுத்தும் செ இதழும் வாரிசாத - வில்லி:45 247/3

தேன் பெற்ற துழாய் அலங்கல் களப மார்பும் திரு புயமும் தைவந்து தீண்டப்பெற்றேன் - வில்லி:45 249/2

தண் துழாய் முடி மாயவன் தம்பியை சாயகம் பல கோடி - வில்லி:46 56/1

தனகரற்கும் குமரற்கும் தண் துழாய் முடியவற்கும் - வில்லி:46 145/3

இலை குலாம் துழாய் முடி ஏக நாயகன் - பால:8 26/3

தேம் பொழி துழாய் முடி செம் கண் மாலவன் - பால:14 8/2

மண்ணிய மணி நிற வண்ண வண் துழாய்
  கண்ணிய யாவர்க்கும் களை_கண் ஆகிய - பால:24 40/2,3

பாதி மா மதி சூடியும் பைம் துழாய்
  சோதியோனும் அ தூய் மலராளியும் - பால-மிகை:11 52/1,2

பைம் துழாய் தெரியலாய்க்கே நல்வினை பயக்க என்பார் - அயோ:3 92/4

மரு ஆரும் துழாய் அலங்கல் மணி மார்பில் வைகுவாள் - ஆரண்:1 57/4

இலை கொள் தண் துழாய் இலங்கு தோள் இராமனுக்கு இளையான் - யுத்2:15 211/4

புன துழாய் மாலையான் என்று உவக்கின்ற ஒருவன் புக்கு உன் - யுத்2:17 26/3

புன துழாய் மாலை மார்பீர் புட்பகம் போதல் முன்னம் - யுத்3:26 86/4

புன துழாய் கணவற்கும் வணக்கம் போக்கினாள் - யுத்4:40 71/4

இணர் துழாய் தொங்கல் இராமற்கு என்று இமையவர் இசைப்ப - யுத்4:40 85/3

புனம் துழாய் முடி புரவலன் நீ நிறை புகழோய் - யுத்4-மிகை:40 21/4

வெறி துழாய் முடி வேத மெய் பொருளினை வியவா - யுத்4-மிகை:41 141/2

நலம் கிளர் பூமி என்னும் நங்கையை நறும் துழாயின்
அலங்கலான் புணரும் செல்வம் காண வந்து அடைந்திலாதார் - அயோ:3 75/1,2

தேன் பிடிக்கும் தண் துழாய் செம் கண் கரு முகிலை - நள:259/1

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *