Skip to content

சொல் பொருள்

(வி.அ) நெடுங்காலமாக, வழிவழியாக

(பெ) பழமை,

சொல் பொருள் விளக்கம்

நெடுங்காலமாக, வழிவழியாக

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

for a long time, from the ancient times

antiquity, ancientness

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இன்று என் நெஞ்சம் போல தொன்று நனி
வருந்து-மன் அளிய தாமே
———————————————————
துறைவன் மாவே – நற் 163/6-12

இப்பொழுது என்னுடைய நெஞ்சம் போல, நெடுங்காலமாக மிகவும்
வருந்தின; மிகவும் இரங்கத்தக்கன அவை;
—————————————————–
தலைவனுடைய தேர்க்குதிரைகள்

குட முதல் தோன்றிய தொன்று தொழு பிறையின் – மது 193

மேல் அடிவானத்தில் காணப்படும் வழிவழியாகத் தொழுதுவரும் பிறையைப் போல

தொன்று மொழிந்து தொழில் கேட்ப – மது 72

(தத்தம்)பழைமையான தொடர்புகளைக் கூறி, ஏவிய வழி ஒழுக

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.