Skip to content
தோகை

தோகை என்பதன் பொருள்மயில்பீலி

சொல் பொருள் விளக்கம்

(பெ) 1. மயில்பீலி, 2. மயில், 3. நெல், கரும்பு ஆகியவற்றின் தாள், 4. விலங்கின் வால், 5. இறகு, சிறகு, 6. பெண்ணின் முடி

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

tail of a peacock, peacock, Sheath, as of paddy or sugarcane, Tail of an animal, Feather.

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

விசும்பு இழி தோகைசீர் போன்றிசினே
—————————————————————–
பண்ணை பாய்வோள் தண் நறும் கதுப்பே – ஐங் 74/1-4

வானத்திலிருந்து இறங்கும் மயிலின் தோகை அழகைப் போல இருந்தது
——————————————————————-
நீருக்குள் பாய்பவளின் குளிர்ந்த நறிய கூந்தல்

மேக்கு எழு பெரும் சினை இருந்த தோகை
பூ கொய் மகளிரின் தோன்றும் நாடன் – குறு 26/2,3

மேலே எழும் பெரிய கிளையில் இருந்த மயில் பூக் கொய்யும் மகளிரைப் போல் தோன்றும் நாட்டையுடைய தலைவன்

அழல் நுதி அன்ன தோகை ஈன்ற
கழனி நெல் ஈன் கவை முதல் அலங்கல் – அகம் 13/18,19

தீக்கொழுந்துகளைப் போன்ற தோடுகள் ஈன்ற வயற்காட்டு நெல்லின் கவைத்த அடியைக் கொண்ட நெற்கதிர்

வை எயிற்று வலம் சுரி தோகை ஞாளி மகிழும் – அகம் 122/7,8

கூரிய பல்லினையும் வலமாகச் சுரிதலுடைய வாலினையுமுடைய நாய் குரைக்கும்

நீர் செத்து அயின்ற தோகை வியல் ஊர் - குறி 191

கமழ் தாது ஆடிய கவின் பெறு தோகை/பாசறை மீமிசை கணம்_கொள்பு ஞாயிற்று - நற் 396/5,6

மேக்கு எழு பெரும் சினை இருந்த தோகை/பூ கொய் மகளிரின் தோன்றும் நாடன் - குறு 26/2,3

மட மா தோகை குடுமியின் தோன்றும் - குறு 347/3

விசும்பு இழி தோகை சீர் போன்றிசினே - ஐங் 74/1

தோகை மாட்சிய மடந்தை - ஐங் 293/4

எரி மருள் வேங்கை இருந்த தோகை/இழை அணி மடந்தையின் தோன்றும் நாட - ஐங் 294/1,2

விரிந்த வேங்கை பெரும் சினை தோகை/பூ கொய் மகளிரின் தோன்றும் நாட - ஐங் 297/1,2

கொடிச்சி கூந்தல் போல தோகை/அம் சிறை விரிக்கும் பெரும் கல் வெற்பன் - ஐங் 300/1,2

சிகை மயிலாய் தோகை விரித்து ஆடுநரும் - பரி 9/64

தோகை ஆர் குரல் மணந்து தணந்தோரை - பரி 14/8

அழல் நுதி அன்ன தோகை ஈன்ற - அகம் 13/18

தோகை காவின் துளுநாட்டு அன்ன - அகம் 15/5

வலம் சுரி தோகை ஞாளி மகிழும் - அகம் 122/8

குடுமி நெற்றி நெடு மா தோகை/காமர் கலவம் பரப்பி ஏமுற - அகம் 194/11,12

தோகை தூவி தொடை தார் மழவர் - அகம் 249/12

கறங்கு இசை வெரீஇ பறந்த தோகை/அணங்கு உடை வரைப்பு_அகம் பொலிய வந்து இறுக்கும் - அகம் 266/18,19

காமர் பீலி ஆய் மயில் தோகை/இன் தீம் குரல துவன்றி மென் சீர் - அகம் 358/2,3

காமர் பீலி ஆய் மயில் தோகை/வேறுவேறு இனத்த வரை வாழ் வருடை - அகம் 378/5,6

தோகை மயில் அன்ன சாயலாய் தூற்றுங்கால் - சிறுபஞ்:103/3

பயன்பாடு

மயில்தோகை விரித்தாடும் .

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *