Skip to content

சொல் பொருள்

1. (வி) துளையிடு, 2 (பெ) புயம்

சொல் பொருள் விளக்கம்

துளையிடு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

bore, shoulder

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தோளா முத்தின் தெண் கடல் பொருநன் – அகம் 137/13

துளையிடாத புதிய முத்துக்கள் விளையும் தெளிந்த கடலையுடைய வீரன்

தாழ் மென் கூந்தல் தட மென் பணை தோள்
மடந்தை மாண் நலம் புலம்ப – அகம் 21/4,5

தாழ்ந்த மெல்லிய கூந்தல், பருத்த மெல்லிய மூங்கில்(போன்ற)தோள்கள்(கொண்ட)
தலைவியின் மாட்சிமையுடைய பெண்மைநலம் தனிமையில் வருந்த,

படலை கண்ணி பரேர் எறுழ் திணி தோள்
முடலை யாக்கை முழு வலி மாக்கள் – நெடு 31,32

பச்சிலை கலந்த தலை மாலையினையும், பருத்த அழகினையும் வலியினையும் உடைய இறுகின தோளினையும்,
முறுக்குண்ட உடம்பினையும், மிகுந்த உடற்பலமும் உடைய மிலேச்சர்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.