Skip to content
நெல்லி

நெல்லி என்பதுஒரு மரம், அதன் காய்.

1. சொல் பொருள்

ஒரு மரம், அதன் காய்

2. சொல் பொருள் விளக்கம்

நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியத்தில் உள்ளது.

  1. இதன் இலை மிகச் சிறியதாக இருக்கும்.
  2. இதன் காய்கள் இலேசான புளிப்புச் சுவை உள்ளவை.
  3. இதன் காயைத் தின்ற பின் நீர் குடித்தால் சுவையாக இருக்கும் என்பர்.
  4. சிறுவர்கள் விளையாடும் பளிங்கு உருண்டைகள் போல் இதன் காய்கள் இருக்கும்.
  5. இந்த நெல்லி சடைசடையாகக் காய்க்கும்.
  6. புறாக்கள் இதன் காய்களைக் கொத்தித் தின்னும்.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Emblic myrobalan, Phyllanthus emblica;

அருநெல்லி
அருநெல்லி

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

இதன் இலை மிகச் சிறியதாக இருக்கும்.

சிறியிலை நெல்லி தீம் சுவை திரள் காய் – அகம் 291/16

இதன் காய்கள் இலேசான புளிப்புச் சுவை உள்ளவை.

நெல்லி அம் புளி மாந்தி அயலது – குறு 201/4

இதன் காயைத் தின்ற பின் நீர் குடித்தால் சுவையாக இருக்கும் என்பர்.

புன் காழ் நெல்லி பைம் காய் தின்றவர்
நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி – அகம் 54/15,16

புல்லிய விதைகளையும் கொண்ட நெல்லியின் பசுங்காயைத் தின்றவர்
நீர் குடிக்கும்போது பெறும் சுவையைப் போல, இனிய மொழிகளைக் கூறி,

சிறுவர்கள் விளையாடும் பளிங்கு உருண்டைகள் போல் இதன் காய்கள் இருக்கும்.

பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி – அகம் 5/9

இந்த நெல்லிக்காய்களை வைத்து சிறுவர் உருட்டி விளையாடுவர்.

கல்லா சிறாஅர் நெல்லி வட்டு ஆடும் – நற் 3/4

இந்த நெல்லி சடைசடையாகக் காய்க்கும்.

பல் கோள் நெல்லி பைம் காய் அருந்தி – அகம் 399/14

புறாக்கள் இதன் காய்களைக் கொத்தித் தின்னும்.

புறவு குயின்று உண்ட புன் காய் நெல்லி – அகம் 315/10,11

இதன் காய்கள் மேற்புறத்தில் புள்ளிகள் இன்றி வழுவழுப்பாகவும் பச்சையாகவும் இருக்கும்.

புல் இலை நெல்லி புகர் இல் பசும் காய் – அகம் 363/6

கமழ் பூ சாரல் கவினிய நெல்லி/அமிழ்து விளை தீம் கனி ஔவைக்கு ஈந்த - சிறு 100,101

கல்லா சிறாஅர் நெல்லி வட்டு ஆடும் - நற் 3/4

நெல்லி அம் புளி சுவை கனவிய ஆஅங்கு - நற் 87/4

சுவை காய் நெல்லி போக்கு அரும் பொங்கர் - நற் 271/5

நெல்லி அம் புளி மாந்தி அயலது - குறு 201/4

சுரம் தலைப்பட்ட நெல்லி அம் பசும் காய் - குறு 209/1

கல் உயர் நண்ணியதுவே நெல்லி/மரைஇனம் ஆரும் முன்றில் - குறு 235/3,4

நெல்லி தின்ற முள் எயிறு தயங்க - குறு 262/4

தீம் புளி நெல்லி மாந்தி அயலது - குறு 317/2

நெல்லி நீடிய கல் காய் கடத்து இடை - ஐங் 334/2

பைம் காய் நெல்லி பல உடன் மிசைந்து - ஐங் 381/1

பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி/மோட்டு இரும் பாறை ஈட்டு வட்டு ஏய்ப்ப - அகம் 5/9,10

புன் காழ் நெல்லி பைம் காய் தின்றவர் - அகம் 54/15

நெல்லி நீள் இடை எல்லி மண்டி - அகம் 67/7

பராரை நெல்லி அம் புளி திரள் காய் - அகம் 69/7

அத்த நெல்லி தீம் சுவை திரள் காய் - அகம் 241/13

செல் உயிர் நிறுத்த சுவை காய் நெல்லி/பல் காய் அம் சினை அகவும் அத்தம் - அகம் 271/7,8

சிறியிலை நெல்லி காய் கண்டு அன்ன - அகம் 284/1

சிறியிலை நெல்லி தீம் சுவை திரள் காய் - அகம் 291/16

புறவு குயின்று உண்ட புன் காய் நெல்லி/கோடை உதிர்த்த குவி கண் பசும் காய் - அகம் 315/10,11

புல் இலை நெல்லி புகர் இல் பசும் காய் - அகம் 363/6

நெல்லி நீடிய கல் அறை கவாஅன் - அகம் 385/8

பல் கோள் நெல்லி பைம் காய் அருந்தி - அகம் 399/14

சிறியிலை நெல்லி தீம் கனி குறியாது - புறம் 91/9

மரை பிரித்து உண்ட நெல்லி வேலி - புறம் 170/1

புன் காழ் நெல்லி வன்புல சீறூர் - புறம் 314/4

சுரதலம் உற்று ஒளிர் நெல்லி கடுப்ப - பால:5 116/1

கயல் கடல் சூழ் உலகு எல்லாம் கைநெல்லி கனி ஆக்கி - பால:12 12/1

கை உறை நெல்லி தன்மையின் எல்லாம் கரை கண்டாம் - கிட்:17 1/2

கை உறு நெல்லி அம் கனியின் காண்டியால் - சுந்:4 25/3

கைத்து ஒன்று நெல்லி அம் கனியின் காண்டியால் - யுத்1:3 58/4

கைத்தலை நெல்லி போல காட்டிலேன் கழிந்தும் இல்லேன் - யுத்2:19 212/2

அங்கையின் நெல்லி போல் அனைத்தும் நோக்கினும் - யுத்4:40 63/3

கையுறு நெல்லி அம் கனியின் காட்டும் என் - யுத்4:40 80/2

கைம் நிலை நெல்லியங்கனியின் காட்டுகேன் - சுந்:5 70/3

வேனில் ஆடும் விருப்பினால் வியன் காய் நெல்லி சாந்து அரைத்து - சிந்தா:13 2692/1

தோற்றரவு அடுக்கும் கை நெல்லி போல் எனல் - மணி:29/83

சிற்றிலை நெல்லி சிறு காய் துணரும் - உஞ்ஞை:51/29

வெண் பூம் கவள முனைஇ நெல்லி
பைம் காய் அமிழ்தம் பல்-வயின் அடக்கி - உஞ்ஞை:52/66,67

தீம் சுவை நெல்லி திரள் காய் தாரையுள் - இலாவாண:6/66

ஈங்கையும் இலவும் தேம் காய் நெல்லியும்
வாகையும் பிறவும் வன் மரம் ஒடுங்கி - உஞ்ஞை:52/43,44

உதிர்ந்த வெள்ளில் உணங்கு நெல்லி ஒடுங்கு துள்ளி உலர்ந்த வேல் - கலிங்:77/1

நல் நலம் மிகுத்த நெல்லி நறும் கனி ஒன்று கண்டாள் - வில்லி:18 1/3

கைதவம் இல்லா நெல்லி கனியினை கருதுறாமல் - வில்லி:18 8/2

கிளைபடு நெல்லி வாச கேழ் உறு கனி முன் வைத்தால் - வில்லி:18 11/2

நெல்லி அம் கனி இனி நேரலார் உயிர் என - வில்லி:34 11/2

அனிகம் கெழும் போர் அரசன்-தனை அங்கை நெல்லி
  கனி கண்டனையாய் எவண் காண்குதும் காட்டுக என்றார் - வில்லி:46 110/3,4

நிறை சுவை அமுத நெல்லியின் கனியும் நின்ற கொம்பு அணைந்ததால் என்றும் - வில்லி:18 22/3

வேங்கை சந்தனம் சண்பகம் நெல்லி வெய் தான்றி - சீறா:26/1

சிந்துரம் அசோகு மாதவி நெல்லி செண்பகம் பாடலம் தேமா - சீறா:1002/2

காய்ச்சின நீரொடு நெல்லி கடாரத்தில் பூரித்து வைத்தேன் - நாலாயி:154/3

நெல்லி மல்கி கல் உடைப்ப புல் இலை ஆர்த்து அதர்வாய் - நாலாயி:1016/3

நிரை திகழ் பொதுவர் நெறிபடு பழைய நெல்லி மரத்து அமர்ந்த அபிராம - திருப்:657/6

கரு நெல்லி மேனியர் அரி மருகோனே கன வள்ளியார் கணவ முருகேசா - திருப்:685/3

கைத்தலம் சேர்தரு நெல்லி கனி ஒக்கும் - திருமந்:2992/2

மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பு இடில் - திருமந்:849/3

நெல்லி கனியை தேனை பாலை நிறை இன் அமுதை அமுதின் சுவையை - திருவா:27 4/3

தட கையின் நெல்லிக்கனி எனக்கு ஆயினன் - திருவா:3/162

சிந்தித்து எழுவார்க்கு நெல்லி கனியே சிறியார் பெரியார் மனத்து ஏறலுற்றால் - தேவா-சுந்:34/1

திரை ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு ஆரூர் தேவூர் திரு நெல்லிக்கா

உரையார் தொழ நின்ற ஒற்றியூரும் ஓத்தூரும் மாற்பேறும் மாந்துறையும் - தேவா-அப்:2152/1,2

விள்ளாத நெடுங்களம் வேட்களம் நெல்லிக்கா கோலக்கா ஆனைக்கா வியன் கோடிகா - தேவா-அப்:2806/3

அங்கை நெல்லியின் பழத்திடை அமுதே அத்த என் இடர் ஆர்க்கு எடுத்து உரைக்கேன் - தேவா-சுந்:552/2

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *