சொல் பொருள்

(பெ) 1. மலரும் பருவத்து அரும்பு, 2. பொழுது, நாள்,

சொல் பொருள் விளக்கம்

மலரும் பருவத்து அரும்பு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Flower bud ready to open, time, day

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

முள் அரை தாமரை முகிழ் விரி நாள்போது – சிறு 183

முள்(இருக்கும்) தண்டினை(க்கொண்ட) தாமரையின் அரும்பு விரிந்த அன்றைய பூவின்

கூம்பிய நிலையில் இருக்கும் மொட்டு, முறுக்கு அவிழ்ந்து, சற்றே விரிந்து மலரத்தொடங்கும் நிலையில்
போது எனப்படும். இதனைக் கீழ்க்கண்ட அடிகளால் உணரலாம்.

போது அவிழ் புது மலர் தெரு_உடன் கமழ – மது 564

போது பிணி விட்ட கமழ் நறும் பொய்கை – மது 654

போது அவிழ் குவளை புது பிடி கால் அமைத்து – நெடு 83

போது பொதி உடைந்த ஒண் செம்_காந்தள் – நற் 176/6

பெரும் போது அவிழ்ந்த கரும் தாள் புன்னை – நற் 231/7

போது அவிழ் தாமரை அன்ன நின் – ஐங் 424/3

போது போல் குவிந்த என் எழில் நலம் எள்ளுவாய் – கலி 118/10

போது அவிழ் அலரி நாரின் தொடுத்து – புறம் 371/3

போது விரி பகன்றை புது மலர் அன்ன – புறம் 393/17

யாணர் தண் பணை போது வாய் அவிழ்ந்த – அகம் 269/23

போது அறியேன் பதி பழகவும் – புறம் 400/14

அவன் ஊரின்கண் இருந்தேனாகக் கழிந்த நாட்களை அறியேனாயினேன்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.