மந்தி

மந்தி என்பதன் பொருள்பெண் குரங்கு

சொல் பொருள் விளக்கம்

(41) 1. குரங்கு, 2. பெண் குரங்கு, வானரம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

monkey, female monkey

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மா மேயல் மறப்ப மந்தி கூர – நெடு 9

விலங்குகள் மேய்தலை மறந்துபோக, குரங்குகள் (குளிரால்)கூனிப்போக

பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும்
மூடும் நாகும் கடமையும் அளகும்
மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும்
அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே – தொல்-பொருள்-மர/3

நெடும் கை யானை நெய் மிதி கவளம்
கடும் சூல் மந்தி கவரும் காவில் – பெரும் 394,395

நெடிய கைகளையுடைய யானைக்கு இடும் நெய்வார்த்து மிதித்த கவளத்தை,
முதற் சூலையுடைய மந்தி கவர்ந்துகொண்டுபோகும் சோலையினையும்;

மந்தி கணவன் கல்லா கடுவன் – ஐங் 274/1

மந்தியின் கணவனான, ஒன்றையும் கற்றுக்கொள்ளாத ஆண்குரங்கு

வரை மந்தி கழி மூழ்க - பொரு 224

மகாஅர் அன்ன மந்தி மடவோர் - சிறு 56

கடும் சூல் மந்தி கவரும் காவில் - பெரும் 395

மந்தி சீக்கும் மா துஞ்சு முன்றில் - பெரும் 497

மந்தி ஆட மா விசும்பு உகந்து - மது 334

மா மேயல் மறப்ப மந்தி கூர - நெடு 9

கை கோள் மறந்த கரு விரல் மந்தி
அரு விடர் வீழ்ந்த தன் கல்லா பார்ப்பிற்கு - மலை 311,312

முந்து விளை பெரும் குரல் கொண்ட மந்தி
கல்லா கடுவனொடு நல் வரை ஏறி - நற் 22/2,3

துஞ்சு பதம் பெற்ற துய் தலை மந்தி
கல்லென் சுற்றம் கை கவியா குறுகி - நற் 57/3,4

துய் தலை மந்தி வன் பறழ் தூங்க - நற் 95/4

செம் முக மந்தி செய்குறி கரும் கால் - நற் 151/8

புன் தலை மந்தி வன் பறழ் நக்கும் - நற் 168/5

மட மா மந்தி மாணா வன் பறழ் - நற் 233/2

கொழு முதல் ஆய் கனி மந்தி கவரும் - நற் 251/3

துய் தலை மந்தி தும்மும் நாட - நற் 326/4

கரு விரல் மந்தி செம் முக பெரும் கிளை - நற் 334/1

செம் முக மந்தி ஆரும் நாட - நற் 355/5

புன் தலை மந்தி தூர்ப்ப தந்தை - நற் 373/2

புன் தலை மந்தி கல்லா வன் பறழ் - நற் 379/1

மகவு உடை மந்தி போல - குறு 29/6

கைம்மை உய்யா காமர் மந்தி
கல்லா வன் பறழ் கிளை முதல் சேர்த்தி - குறு 69/2,3

பைம் கண் மந்தி பார்ப்பொடு கவரும் - குறு 335/4

அவரை அருந்த மந்தி பகர்வர் - ஐங் 271/1

கரு விரல் மந்தி கல்லா வன் பறழ் - ஐங் 272/1

புன் தலை மந்தி வன் பறழ் ஆரும் - ஐங் 273/2

மந்தி கணவன் கல்லா கடுவன் - ஐங் 274/1

மந்தி காதலன் முறி மேய் கடுவன் - ஐங் 276/1

கல்லா மந்தி கடுவனோடு உகளும் - ஐங் 277/2

குளவி மேய்ந்த மந்தி துணையோடு - ஐங் 279/2

கரு விரல் மந்தி கல்லா வன் பார்ப்பு - ஐங் 280/1

மக முயங்கு மந்தி வரை_வரை பாய - பரி 15/38

மரல் சாய மலை வெம்ப மந்தி உயங்க - கலி 13/5

மெல் விரல் மந்தி குறை கூறும் செம்மற்றே - கலி 40/16

மந்தி நல் அவை மருள்வன நோக்க - அகம் 82/8

செம் முக மந்தி ஆடும் - அகம் 241/15

கயம் தலை மந்தி உயங்கு பசி களைஇயர் - அகம் 288/12

கல்லா மந்தி கடுவனோடு உகளும் - அகம் 378/21

அருவி பாய்ந்த கரு விரல் மந்தி
செழும் கோள் பலவின் பழம் புணை ஆக - அகம் 382/9,10

இனி யான் விடுக்குவென் அல்லென் மந்தி
பனி வார் கண்ணள் பல புலந்து உறைய - அகம் 396/11,12

மன்ற பலவின் மா சினை மந்தி
இரவலர் நாற்றிய விசி கூடு முழவின் - புறம் 128/1,2

மந்தி சீக்கும் அணங்கு உடை முன்றிலில் - புறம் 247/4

மயில் ஆடு அரங்கில் மந்தி காண்பன காண் - மணி 4/6

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு மூலச்சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.