சொல் பொருள்

1. (வி) 1. தலைகீழாகு, 2. மடங்கு, 3. முறுக்கப்படு

2. (பெ) ஆடு, மான் இவற்றின் இளமை,

சொல் பொருள் விளக்கம்

தலைகீழாகு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be turned upside down, get folded, be twisted, young of sheep, deer, etc.,

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

எரி மறிந்து அன்ன நாவின் இலங்கு எயிற்று
கருமறி காதின் கவை அடி பேய்மகள் – சிறு 196,197

தீச்சுவாலை தலைகீழானது போன்ற நாவினையும், ஒளிரும் பற்களையும்,
வெள்ளாட்டு(க் காதினைப்போன்ற) காதுகளையும், பிளந்த பாதங்களையும் உடைய பேய்மகள்

மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவு உடை – முல் 59

குதிரைச் சவுக்கு வளைந்துகிடக்கின்ற, மடங்கிப் புடைக்குமாறு நெருங்கக் கட்டின உடையையும்,

எருத்து வலிய எறுழ் நோக்கு இரலை
மருப்பின் திரிந்து மறிந்து வீழ் தாடி – கலி 15/5,6

வலிமை மிகுந்த கழுத்தினையும், வன்மையான பார்வையினையும், கலைமானின்
கொம்பு போல திருக்குண்டும் முறுக்குண்டதுமாய் விழுகின்ற தாடியையும்,

இரும் கண் வெள் யாட்டு எழில் மறி கொடுத்தோன் – பரி 5/62

கரிய கண்ணையுடைய வெள்ளாட்டின் அழகிய குட்டியாகக் கொடுத்தான்;

செ வரை சேக்கை வருடை மான் மறி
சுரை பொழி தீம் பால் ஆர மாந்தி – குறு 187/1,2

செம்மையான மலையில் வாழும் வருடைமானின் குட்டி
தன் தாயின் மடியிலிருந்து பொழியும் இனிய பாலை வயிறாரக் குடித்து

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.