சொல் பொருள்
மாடம் – தளத்தின் மேல் தளம் அமைத்த கட்டடம்.
கூடம் – மாடத்தின் மேல் அமைத்த கூண்டுக் கட்டடம்.
சொல் பொருள் விளக்கம்
மேல்தளம், மாடம், மாடி, மெத்து, மச்சு, தட்டு இன்னவெல்லாம் மாடங்களே. ஒன்றன்மேல் ஒன்றாய் எத்தனை தட்டுகள் அடுக்கினாலும் மாடங்களே. மாடத்தின் மேல் வளைகூடாய் செய்யப்பட்டவை கூடமாம். “எழுநிலை மாடத்து இடைநிலத் திருந்துழி” என்பது சிலம்பு. “ஏராரும்மாட கூட மதுரையில்” என்பது திருப்புகழ்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்