சொல் பொருள்
(பெ) குழம்பிலிடுங் கறித்துண்டு,
சொல் பொருள் விளக்கம்
குழம்பிலிடுங் கறித்துண்டு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Pieces of flesh and vegetables in sauce
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கரும் கண் வராஅல் பெரும் தடி மிளிர்வையொடு புகர்வை அரிசி பொம்மல் பெரும் சோறு – நற் 60/4,5 கரிய கண்களையுடைய வரால் மீனின் பெரும் துண்டங்கள் குழம்பிலே இட்டவற்றை உண்ணுதற்குரிய அரிசியை வேகவைத்த மிக்க சோற்றுடன் மீன்குழம்பில் கிடக்கும் மீன்துண்டுகளைத்தான் இங்கு மிளிர்வை என்கிறார் புலவர். மிளிர் என்றால் சுழலு, புரளு என்ற பொருள் உண்டு. போர்க்களத்தில் வாள்கள் சுழலுவதை, கூர் வாய் இரும் படை நீரின் மிளிர்ப்ப – புறம் 371/10 என்கிறது புறநானூறு. கொதிக்கிற குழம்பில் புரண்டு புரண்டு சுழன்று வெந்த மீன்துண்டுகள் அல்லது கறித்துண்டுகளே மிளிர்வை எனப்படுகின்றன.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்