Skip to content

சொல் பொருள்

(பெ) 1. காவற்காடு, 2. குறுங்காடு, 3. காவல், 4. ஒரு நாடு,

சொல் பொருள் விளக்கம்

காவற்காடு, குறுங்காடு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Wood, forest, serving as a defence, thicket, copse, watch, guard, a province

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கதிர் நுழைகல்லா மரம் பயில் கடி மிளை
அரும் குறும்பு உடுத்த கானப்பேர் எயில் – புறம் 21/5,6

வெயிற்கதிர் நுழையாத மரம் செறிந்த காவற்காட்டினையுடைத்தாய்
அணைதற்கரிய சிற்றரண்களால் சூழப்பட்ட கானப்பேர் என்னும் அரண்

சூரல் மிளைஇய சாரல் ஆர் ஆற்று – அகம் 228/9

பிரம்பு காடாக வளர்ந்திருக்கும் சாரல் பொருந்திய வழியிலே

வளை ஆன் தீம் பால் மிளை சூழ் கோவலர்
வளையோர் உவப்ப தருவனர் சொரிதலின் – மலை 409,410

சங்கு (போன்ற வெண்மையான)பசுக்களின் இனிய பாலை, கிடையைக் காவல் சூழ்கின்ற இடையர்களின்,
வளையல்கள் அணிந்த பெண்கள், (நீவிர்)மகிழும்படி கொண்டுவந்து (உள்ளங்கையில்)ஊற்றுகையினால்

மிளை நாட்டு அத்தத்து ஈர்ம் சுவல் கலித்த
வரி மரல் கறிக்கும் மட பிணை – அகம் 133/16,17

மிளை என்னும் நாட்டின் பாலை நெறியிலீரமுடைய மோட்டு நிலத்தே தழைத்த
வரிகளையுடைய மரலைக் கடித்துண்ணும் மடப்பத்தையுடைய பெண்மானுடன்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *