சொல் பொருள்
(வி.எ) மீளச்செய்து, திருப்பி,
சொல் பொருள் விளக்கம்
மீளச்செய்து, திருப்பி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
cause to turn back
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விழையா உள்ளம் விழையுமாயினும் என்றும் கேட்டவை தோட்டி ஆக மீட்டு ஆங்கு அறனும் பொருளும் வழாமை நாடி – அகம் 286/9,10 எதனையும் விரும்பாத பெருந்தன்மையுடைய தம் உள்ளமானது ஒரோவழி மயங்கி ஒன்றை விரும்புமாயினும் நாள்தோறும் தாம் கேட்ட அறிவுரைகளைத் அங்குசமாகக் கொண்டு உள்ளம் என்ற யானையை அதன் போக்கிலே கட்டுமீறிச் செல்லாது திருப்பி. அறமும் பொருளும் வழுவாமையை ஆராய்ந்து இகுளை இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன் கோட்டு_இனத்து ஆயர்_மகன் அன்றே மீட்டு ஒரான் போர் புகல் ஏற்று பிணர் எருத்தில் தத்துபு தார் போல் தழீஇயவன் – கலி 103/33-35 “சின்னவளே! இது ஒன்றைப் பார்! இவன் ஒருத்தன்! எருமைக் கூட்டத்தின் ஆயர்மகன் அல்லவா! இனி அதன் வலியை மீளப்பண்ணி அதனை நீங்கான் போரிடுவதில் மிகவும் விருப்பமுள்ள காளையின் சொரசொரப்பான கழுத்தில் பாய்ந்து அதற்கு இட்ட மாலையைப் போல அதனைத் தழுவிக்கொண்டவன்”
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்