Skip to content
முருக்கு

முருக்கு என்பதன் பொருள்புரசமரம்.

1. சொல் பொருள்

(வி) 1. கொல், 2. அழி, சிதை, 3. முறி, துண்டாக்கு, 2. (பெ) புரச மரம்,

பார்க்க பலாசம் புழகு

2. சொல் பொருள் விளக்கம்

முருக்கு (butea monosperma) என்பது பலாச (butea) வகையைச் சேர்ந்த ஒரு மரமாகும். இதற்கு பலாசுபொரசுபுரசை, என்ற பெயர்கள் உண்டு

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

kill, ruin, destroy, crush, break into pieces, palas tree, Butea Monosperma

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

செறுநர் தேய்த்து செல் சமம் முருக்கி
கறுவு கொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே ஒரு முகம் – திரு 99,100

கோபமுடையோரை அழித்து, செல்லுகின்ற போரில் கொன்றழித்து,
வெகுளி கொண்ட நெஞ்சத்தோடு களவேள்வியைச் செய்யும்; ஒரு முகம்

விறல் வேல் மன்னர் மன் எயில் முருக்கி
நயவர் பாணர் புன்கண் தீர்த்த பின் – சிறு 247,248

வெற்றி (தரும்)வேலினையுடைய வேந்தரின் உயர்ந்த அரண்களை அழித்து,
விரும்பிவந்தவர், பாணர் முதலியோரின் வறுமையையும் போக்கி,

புலி பொர சிவந்த புலால் அம் செம் கோட்டு
ஒலி பன் முத்தம் ஆர்ப்ப வலி சிறந்து
வன் சுவல் பராரை முருக்கி கன்றொடு
மட பிடி தழீஇய தட கை வேழம் – நற் 202/1-4

புலியுடன் போரிட்டதால் சிவந்துபோன புலால் நாறும் அழகிய செம்மையான கொம்புகளில்
உண்டாயிருக்கும் பலவான முத்துக்கள் ஒலிக்க, வலிமை மிக்கு,
கட்டாந்தரையான மேட்டுநிலத்தில் உள்ள பருத்த அடியினைக் கொண்ட வேங்கையை முறித்து, கன்றோடு
தன் இளைய பெண்யானைத் தழுவிக்கொண்ட நீண்ட கைகளையுடைய ஆண்யானை

செம் பூ முருக்கின் நன் நார் களைந்து – குறு 156/2

சிவந்த பூக்களைக்கொண்ட புரச மரத்தின் கொப்பின் பட்டையை உரிந்து

கரு நனை அவிழ்ந்த ஊழ்_உறு முருக்கின்
எரி மருள் பூ சினை இன சிதர் ஆர்ப்ப – அகம் 41/2,3

பெரிய அரும்புகள் தம் பிணியவிழ்ந்த மலர்ச்சியடைந்த முருக்கமரத்தின்
நெருப்பைப் போன்ற பூக்களைக் கொண்ட கிளைகளில் வண்டினம் மிக்கு ஒலிக்க,

சிதர் நனை முருக்கின் சேண் ஓங்கு நெடும் சினை - சிறு 254

வேனில் முருக்கின் விளை துணர் அன்ன - நற் 73/1

செம் பூ முருக்கின் நன் நார் களைந்து - குறு 156/2

கரு நனை அவிழ்ந்த ஊழ்-உறு முருக்கின்/எரி மருள் பூ சினை இன சிதர் ஆர்ப்ப - அகம் 41/2,3

செம் முகை அவிழ்ந்த முள் முதிர் முருக்கின்/சிதர் ஆர் செம்மல் தாஅய் மதர் எழில் - அகம் 99/2,3

நனை முதிர் முருக்கின் சினை சேர் பொங்கர் - அகம் 223/5

பொங்கு அழல் முருக்கின் ஒண் குரல் மாந்தி - அகம் 277/17

குவி முகை முருக்கின் கூர் நுனை வை எயிற்று - அகம் 317/4

இகலினர் எறிந்த அகல் இலை முருக்கின்/பெரு மர கம்பம் போல - புறம் 169/10,11

பாசரும்பு ஈன்ற செம் முகை முருக்கின/போது அவிழ் அலரி கொழுதி தாது அருந்து - அகம் 229/16,17

முருக்கு தாழ்பு எழிலிய நெருப்பு உறழ் அடைகரை - பதி 23/20

பிணி விடு முருக்கு இதழ் அணி கயத்து உதிர்ந்து உக - கலி 33/4

முருக்கு அரும்பு அன்ன வள் உகிர் வய பிணவு - அகம் 362/5

எதிரி முருக்கு அரும்ப ஈர்ம் தண் கார் நீங்க எதிருநர்க்கு - ஐந்50:31/2

எரி சிதறி விட்டு அன்ன ஈர் முருக்கு ஈடு இல் - திணை150:64/3

வல் வரும் காணாய் வயங்கி முருக்கு எல்லாம் - திணை150:66/1

முருக்கு இடை துறவற முயற்சி வேண்டுவர் - தேம்பா:26 122/3

முருக்கு இதழ் குலிகம் ஊட்டி வைத்து அன முறுவல் செ வாய் - சிந்தா:6 1454/1

முருக்கு ஒளி மலர் அடி மூரி மொய்ம்பனை - சிந்தா:7 1825/3

முழங்கு திரு மணி முறுவல் முருக்கு இதழ் கொடி பவழத்து - சிந்தா:13 3088/1

முருக்கு அலர் போல் சிவந்து ஒள்ளியரேனும் - வளையா:62/1

முருக்கு இதழ் மட கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்த கலவை - தேவா-சம்:3642/3

முருக்கு வாய் மலர் ஒக்கும் திரு மேனியானை முன்னிலையாய் முழுது உலகம் ஆய பெருமானை - தேவா-சுந்:408/2

நாறும் மல்லிகையும் எருக்கொடு முருக்கும் மகிழ் இளவன்னியும் இவை நலம் பகர - தேவா-சம்:837/3

முருக்கும் அசபையை மாற்றி முகந்து - திருமந்:2149/2

முருக்கு இலங்கு கனி துவர் வாய் பின்னை கேள்வன் மன் எல்லாம் முன் அவிய சென்று வென்றி - நாலாயி:1505/1

முருக்கு இதழ் வாய்ச்சி முன் கை வெண் சங்கம் கொண்டு முன்னே நின்று போகாய் - நாலாயி:1937/3

புயல் குழன்ற அம் கமழ் அறல் குலம் தங்கு அவிர் முருக்கு வண் செம் துவர் தந்து போகம் - திருப்:17/2

முருக்கு இதழ் கரிய கூந்தல் முத்த வெண் நகையினார் தம் - சீறா:934/1

முருக்கு இதழ் வல்லி தன் முளரி செம் கையால் - வில்லி:21 20/3

முருக்கு அலர் வெளுத்திடும் அருண நாட்டமும் முகில் குரல் இளைத்திட முதிரும் வார்த்தையும் - வில்லி:42 196/2

திரு முகை முருக்கின் விரி மலர் கடுப்ப - உஞ்ஞை:34/208

முளவும் முருக்கும் முருங்க ஒற்றி - உஞ்ஞை:51/44

கள்ளியும் கடம்பும் முள்ளியும் முருக்கும்
தணக்கும் பலாசும் கணை கால் ஞெமையும் - உஞ்ஞை:52/41,42

மிக பெரு முரட்சியை முருக்கும் உபாயம் - வத்தவ:8/52

மண்டு அமர் முருக்கும் களிறு அனையார்க்கு - மணி:18/140

முருக்கு இதழ் மடந்தையர் முனிவனை தொழா - பால:5 39/3

முருக்கு இதழ் சாந்தையாம் முக_நலாள்-தனை - பால:5 52/3

முருக்கு இதழ் முத்த மூரல் முறுவலார் முகங்கள் என்னும் - பால:14 56/1

முழுவதும் மலர் விரிந்த தாள் முருக்கு இடை மிடைந்த - அயோ:10 28/3

முருக்கு இதழ் மகளிர் ஏந்த முரசு_இனம் முகிலின் ஆர்ப்ப - கிட்:11 102/2

துவள்வு_இல் இலவம் கோபம் முருக்கு என்று இ தொடக்கம் சால - கிட்:13 49/2

முருக்கு என சிவந்தன முரிய வெந்தன - யுத்1:6 44/3

புரங்கள் ஒரு மூன்றையும் முருக்கு புனிதன்-தன் - யுத்1-மிகை:2 16/1
புரசு
புரசு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *