சொல் பொருள்
அமிழ், மறை, நுழை, புகு, அழுந்து
சொல் பொருள் விளக்கம்
அமிழ்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
plunge, submerge, sink, be hidden, enter, get in, reach, be thrust
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பாசடை நிவந்த கணை கால் நெய்தல் இன மீன் இரும் கழி ஓதம் மல்கு-தொறும் கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும் – குறு 9/4-6 பசிய இலைகளுக்கு மேல் உயர்ந்த திரண்ட காம்பையுடைய நெய்தல்பூ கூட்டமான மீன்களையுடைய கரிய கழியில், நீரோட்டம் மிகுந்தோறும் குளத்தில் அமிழும் மகளிரின் கண்களை ஒக்கும் வானம் மூழ்கிய வயங்கு ஒளி நெடும் சுடர் கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிற்று – நற் 163/9,10 அடிவானத்தில் மறைந்துபோன, விளங்குகின்ற ஒளிபொருந்திய நெடிய சுடரையுடைய கதிர்கள் வெப்பத்துடன் எழுந்து உள்ளிடமெல்லாம் தகிக்கும் ஞாயிற்றின் வகை பெற எழுந்து வானம் மூழ்கி சில்_காற்று இசைக்கும் பல் புழை நல் இல் – மது 357,358 பலவகையால் பெயர்பெற எழுந்து வானத்தே சென்று(ப்பின்) சில்லென வீசும் காற்று ஒலிக்கும் பல சாளரங்களையுடைய நல்ல இல்லங்களையும் குடி நிறை வல்சி செம் சால் உழவர் நடை நவில் பெரும் பகடு புதவில் பூட்டி பிடி வாய் அன்ன மடி வாய் நாஞ்சில் உடுப்பு முக முழு கொழு மூழ்க ஊன்றி தொடுப்பு எறிந்து உழுத துளர் படு துடவை – பெரும் 197-201 குடியிருப்பு நிறைந்த, உணவினையுடைய செவ்விய சாலாக உழுகின்ற உழவர்கள் நடை பயின்ற பெரிய எருதுகளை முற்றத்தே நுகத்தைப் பூட்டிக்கொண்டு சென்று, பிடியின் வாயை ஒத்த, மடங்கிய வாயையுடைய கலப்பையின் உடும்பின் முகத்தை ஒத்த பெரும் கொழு அழுந்த அமுக்கி, வளைவாக, விதைத்தவாறே, உழுத, (பின்னர் வளர்ந்த களைகளைக்)களைக்கொட்டுச் செத்திய தோட்டத்தை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்