Skip to content
மோரோடம்

மோரோடம் என்பது செங்கருங்காலி மரம்.

1. சொல் பொருள்

ஒரு மரம்/மரத்தின் மலர், செங்கருங்காலி.

2. சொல் பொருள் விளக்கம்

ஒரு மரம்/மரத்தின் மலர், செங்கருங்காலி, மோரோடம் நறுமணம் மிக்க மலர். பார்க்க: சிறுமாரோடம்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Red catechu, Acacia chundra, Senegalia chundra

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

மோரோடம்
மோரோடம்
குல்லை பிடவம் சிறுமாரோடம்/வாழை வள்ளி நீள் நறு நெய்தல் - குறி 78,79

பராரை பாதிரி குறு மயிர் மா மலர்
நறு மோரோடமொடு உடன் எறிந்து அடைச்சிய
செப்பு இடந்து அன்ன நாற்றம் தொக்கு – நற் 337/4-6

பசு மோரோடமோடு ஆம்பல் ஒல்லா - ஐங் 93/2

பருத்த அடிமரத்தைக் கொண்ட பாதிரியின் நுண்ணிய மயிர்களைக் கொண்ட சிறந்த மலரையும்,
 நறுமணம் கமழும் செங்கருங்காலி மலருடன் ஒன்றாகச் சேர்த்துக் கட்டி அடைத்துவைத்துள்ள
 செப்பினைத் திறந்துவைத்ததைப் போன்ற நறுமணம் சேர்ந்து
மோரோடம்
மோரோடம்

ஆய் பூம் தில்லையும் அணி மாரோடமும் ஆரமும் சந்தும் அகிலும் தமாலமும் – உஞ்ஞை:50/31,32

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *