Skip to content

சொல் பொருள்

பெ) 1. வானம், 2. மேலுலகம்

சொல் பொருள் விளக்கம்

வானம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Sky, heaven

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஞாயிறு, திங்கள், மீன்கள், மேகங்கள் நடமாடும் இடம்

விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து – நெடு 161

விண் வீற்றிருக்கும் கய மீன் விரி தகையின் – பரி 23/12

விண் இவர் விசும்பின் மீனும் – புறம் 302/10

மங்குல் மா மழை விண் அதிர்பு முழங்கி – அகம் 294/1

மிக உயரமாக இருக்கும் மலை, கட்டிடமாடம் போன்றவற்றை, ’விண் பொரு’, ’விண் தோய்’, ’விண் உயர்’,
’விண் உற ஓங்கு’ என்று குறிப்பிடுவது உண்டு

விண் பொரு நெடு வரை குறிஞ்சி கிழவ – திரு 267

விண் பொரு நெடு வரை பரிதியின் தொடுத்த – திரு 299

விண் பொர நிவந்த வேயா மாடத்து – பெரும் 348

விண் பொரும் சென்னி கிளைஇய காந்தள் – குறி 196

விண் பொரு நெடும் குடை இயல் தேர் மோரியர் – அகம் 69/10

விண் பொரு நெடு நகர் தங்கி இன்றே – அகம் 167/4

விண் பொரு நெடு வரை கவாஅன் – அகம் 173/17

விண் பொரு புகழ் விறல் வஞ்சி – புறம் 11/6

கண் பொர விளங்கும் நின் விண் பொரு வியன் குடை – புறம் 35/19

விண் பொரு நெடும் குடை கொடி தேர் மோரியர் – புறம் 175/6

விண் தோய் மாடத்து விளங்கு சுவர் உடுத்த – பெரும் 369

விண் தோய் பணவை மிசை ஞெகிழி பொத்த – குறி 226

விண் தோய் விடர்_அகத்து இயம்பும் – குறு 241/6

விண் தொட நிவந்த விலங்கு மலை கவாஅன் – குறு 262/6

விண் தோய் மா மலை சிலம்பன் – குறு 362/6

விண் தோய் கல் நாடனும் நீயும் வதுவையுள் – கலி 39/38

விண் தோய் வரை பந்து எறிந்த அயா வீட – கலி 40/22

விண் தோய் விடர்_அகத்து இயம்பும் அவர் நாட்டு – அகம் 8/12

விண் தோய் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 111/15

வீயா விழு புகழ் விண் தோய் வியன் குடை – அகம் 135/11

விண் தோய் சிமைய விறல் வரை கவாஅன் – அகம் 179/1

விண் தோய் சிமைய விறல் வரை கவாஅன் – புறம் 151/2

விண் தோய் தலைய குன்றம் பிற்பட – புறம் 379/13

விண்டு அனைய விண் தோய் பிறங்கல் – புறம் 391/2

விண் உயர் பிறங்கல் விலங்கு மலை நாட்டே – குறு 144/7

விண் உயர் அரண் பல வௌவிய – ஐங் 443/4

விண் உயர் வைப்பின காடு ஆயின நின் – பதி 23/15

விண் உயர்ந்து ஓங்கிய கடற்றவும் பிறவும் – பதி 30/29

விண் உயர் புள் கொடி விறல் வெய்யொனும் – புறம் 56/6

விண் உற ஓங்கிய பல் படை புரிசை – மது 352

விண் உற ஓங்கிய பனி இரும் குன்றத்து – அகம் 281/10

விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது ஒரு கை – திரு 107,108

விண்ணுலகத்திற்குச் செல்லும் முறைமையினையுடைய துறவிகட்குப் பாதுகாவலாக ஏந்தியது
ஒரு கை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *