சொல் பொருள்
வையகம், பூமி, உலகம், குதிரை பூட்டிய தேர், கூடார வண்டி,
சொல் பொருள் விளக்கம்
வையகம், பூமி, உலகம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
earth, world, Chariot drawn by horses, covered cart
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வையம் காவலர் வளம் கெழு திரு நகர் – புறம் 261/6 உலகத்தைக் காக்கும் வேந்தருடைய செல்வம் மிக்க திருநகரின்கண் தச்சன் செய்த சிறு மா வையம் – குறு 61/1 தச்சன் செய்த சிறிய குதிரைகளையுடைய தேரினை மெய்யாப்பு மெய் ஆர மூடுவார் வையத்துக்கு ஊடுவார் ஊடல் ஒழிப்பார் உணர்குவார் – பரி 24/19,20 மகளிர் தம் மெய்யாப்பால் தம் மெய்முழுக்க மூடுவார், வண்டிக்குள் இருக்கும் பெண்கள் தம் கணவருடன் ஊடல் கொள்வார், கணவர் ஊடலை ஒழிப்பார், அதனை உணர்ந்து ஊடல் தீர்வார், – வையத்துக்கு – வேற்றுமை மயக்கம் – பொ.வே.சோ.உரை விளக்கம்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்