சொல் பொருள்
1. (வி) அணிவி, தரிக்கச்செய்
2. (பெ) 1. வண்டிச் சக்கரத்தின் விளிம்பைச்சூழ அமைக்கப்பட்ட வளைவுமரம், 2. பெண்களுக்குரிய நெற்றி அணி, 3. சுடப்பட்டது
நெற்றி மாலை
உச்சிக் கொண்டையைச் சூட்டு என்பது இலக்கிய வழக்கு
தீப்பற்ற வைக்க உதவும் ஓலையைச் சூட்டு என்பது விளவங்கோடு வட்டார வழக்காகும்.
சொல் பொருள் விளக்கம்
உச்சிக் கொண்டையைச் சூட்டு என்பது இலக்கிய வழக்கு. தலையில் முடி வைப்பது முடி சூட்டு ஆகும். சுடுதல் வழியாகச் சூட்டுக் கோல் என்பது வரும். தீப்பற்ற வைக்க உதவும் ஓலையைச் சூட்டு என்பது விளவங்கோடு வட்டார வழக்காகும்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
put on, cause to wear as with flowers, Felloe of a wheel, forehead ornament for women, that which is burnt and cooked
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எரி அகைந்து அன்ன ஏடு இல் தாமரை சுரி இரும் பித்தை பொலிய சூட்டி – பொரு 159,160 நெருப்புத் தழைத்தாற் போன்ற, இதழ் இல்லாத (பொன்னால் ஆன)தாமரையை, சுருண்ட கரிய மயிரில் பொலிவுபெற அணிவித்து கொழும் சூட்டு அருந்திய திருந்து நிலை ஆரத்து – பெரும் 46 கொழுவிய வட்டைகள் தம் அகத்தே கொண்ட, திருத்தமான நிலையிலுள்ள ஆரங்களையுடைய சூட்டும் கண்ணியும் மோட்டு வலையமும் – பரி 20/30 தலையில் சூடிக்கொள்ளும் சூட்டும், கண்ணியும், பெரிய வளையமுமாய் தண் மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர் – பெரும் 282 பச்சை மீனைச் சுட்டதனோடு, (பசியால்)தளர்ந்தவிடத்தே பெறுவீர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்