தாழ் என்பதன் பொருள்தாழ்ப்பாள்.
சொல் பொருள் விளக்கம்
(வி) 1. நீண்டு தொங்கு, 2. கீழ்நோக்கிவா, 3. அமிழ், 4. தங்கு, 5. ஆழமாக இரு, 6. மேலிருந்து விழு, 7. வளை, 8. தாமதி, 9. பணி,
2. (பெ) தாழ்ப்பாள்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
hang down, be low, sink, drown, stay, rest, be deep, flow down, droop, bend, delay, be submissive, bolt, latch
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஈரிரண்டு ஏந்திய மருப்பின் எழில் நடை தாழ் பெரும் தட கை உயர்த்த யானை – திரு 157,158 நான்கு ஏந்திய கொம்புகளையும், அழகிய நடையினையும், (நிலம் வரை)தாழ்ந்த பெரிய வளைவினையுடைய கையினையும் உடைய புகழ்பெற்ற யானையின் தளிர் புன்கின் தாழ் காவின் – பொரு 196 தளிரையுடைய புன்கினையும், தாழ்ந்த சோலைகளும் கோடை நீடினும் குறைபடல் அறியா தோள் தாழ் குளத்த கோடு காத்திருக்கும் – பெரும் 272,273 கோடைக்காலம் நீட்டித்து நின்றதாயினும் வற்றுதலை அறியாத, தோள்களும் அமிழும் குளங்களினுடைய கரையைக் காத்திருக்கும், இழை சூழ் வட்டம் பால் கலந்தவை போல் நிழல் தாழ் வார் மணல் நீர் முகத்து உறைப்ப – பெரும் 378,379 நூல் போலச் சூழ்ந்துகிடக்கின்ற அப்பம் பாலிலே கிடந்தவை போல், நிழல் கிடந்த வார்ந்த மணலிடத்துக் குழிகளில் நின்ற நீரிடத்தே மிக விழும்படி குறும் கை இரும் புலி கோள் வல் ஏற்றை பூ நுதல் இரும் பிடி புலம்ப தாக்கி தாழ் நீர் நனம் தலை பெரும் களிறு அடூஉம் – நற் 36/1-3 குட்டையான கைகளையுடைய பெரிய புலியின் கொல்லுதலில் வல்ல ஆண்புலி அழகிய நெற்றியையுடைய பெரிய பெண்யானை புலம்பும்படி தாக்கி ஆழமான நீரையுடைய அகன்ற இடத்தில் பெரிய களிற்றினைக் கொல்லும் தண் தாழ் அருவி அர_மகளிர் ஆடுபவே – கலி 40/23 குளிர்ச்சியாய் விழுகின்ற அருவியில் தேவ மகளிர் ஆடுகின்றனரே! நறு வீ தாழ் புன்னை கீழ் நயந்து நீ அளித்த_கால் – கலி 136/13 நறிய மலர்கள் வளைந்துதொங்கும் புன்னை மரத்தின் கீழ் விருப்பத்துடன் நீ இவளிடம் அன்புசெய்தபோது புனை புணை ஏற தாழ்த்ததை தளிர் இவை நீரின் துவண்ட – பரி 6/68,69 “அழகாகச் செய்யப்பட்ட தெப்பத்தில் ஏறி வரும்போது தாமதமானதால் தளிரான இவை வையையின் நீர் காரணமாகத் துவண்டன தாழ்ந்தாய் போல் வந்து தகவு இல செய்யாது – கலி 69/22 பணிந்தவன் போல் வந்து தகுதியில்லாதவற்றைச் செய்யாதே! போர் வாய் கதவம் தாழொடு துறப்ப – நெடு 63 பொருதுகின்ற வாயுடைய(இரட்டைக்)கதவுகள் தாழிட்டுக் கிடக்க
வெயில் தாழ போகலாம், தாழ்ந்தகுணம்
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர் - குறள் 8/1 நாணு தாழ் வீழ்த்த கதவு - குறள் 126/2
தாழ் பெரும் தட கை உயர்த்த யானை - திரு 158 தாழ் தாழை தண் தண்டலை - பொரு 181 தளிர் புன்கின் தாழ் காவின் - பொரு 196 தோள் தாழ் குளத்த கோடு காத்திருக்கும் - பெரும் 273 தாழ் கோள் பலவின் சூழ் சுளை பெரும் பழம் - பெரும் 356 நிழல் தாழ் வார் மணல் நீர் முகத்து உறைப்ப - பெரும் 379 நகை தாழ் கண்ணி நல் வலம் திருத்தி - முல் 78 வரை தாழ் அருவி பொருப்பின் பொருந - மது 42 ஒண் குழை புணரிய வண் தாழ் காதின் - மது 709 தவ பள்ளி தாழ் காவின் - பட் 53 தாழ் உடை தண் பணியத்து - பட் 164 தாழ் நீர் நனம் தலை பெரும் களிறு அடூஉம் - நற் 36/3 வீழ் தாழ் தாழை பூ கமழ் கானல் - நற் 78/4 பூண்க தில் பாக நின் தேரே பூண் தாழ் ஆக வன முலை கரை_வலம் தெறிப்ப - நற் 81/5,6 பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய - நற் 93/9 ஞாழல் அம் சினை தாழ் இணர் கொழுதி - நற் 106/7 தாழ் நீர் நனம் தலை அழுந்துபட பாஅய் - நற் 112/7 சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப - நற் 120/4 தண்ணிய கமழும் தாழ் இரும் கூந்தல் - நற் 137/1 புறன் அழிந்து ஒலிவரும் தாழ் இரும் கூந்தல் - நற் 295/2 தாழ் நறும் கதுப்பில் பையென முள்கும் - நற் 337/8 நிலம் தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்த - நற் 356/1 நனை முதிர் புன்கின் பூ தாழ் வெண் மணல் - குறு 53/2 மடல் தாழ் பெண்ணை எம் சிறு நல் ஊரே - குறு 81/8 தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்து - குறு 156/3 பிறங்கு குரல் இறடி காக்கும் புறம் தாழ் அம் சில் ஓதி அசை இயல் கொடிச்சி - குறு 214/2,3 வீழ் தாழ் தாழை ஊழ்_உறு கொழு முகை - குறு 228/1 தாழ் இருள் துமிய மின்னி தண்ணென - குறு 270/1 தழை தாழ் அல்குல் இவள் புலம்பு அகல - குறு 345/4 தாழ் இரும் கூந்தல் வம்-மதி விரைந்தே - ஐங் 411/4 கார் மலர் கமழும் தாழ் இரும் கூந்தல் - பதி 21/33 தாழ் அடும்பு மலைந்த புணரி வளை ஞரல - பதி 30/6 வளை தலை மாத்த தாழ் கரும் பாசவர் - பதி 67/16 சாய் அறல் கடுக்கும் தாழ் இரும் கூந்தல் - பதி 74/3 மலி நீர் அதர் பல கெழுவு தாழ் வரை - பரி 6/6 அருவி தாழ் மாலை சுனை - பரி 8/16 அரி மலர் மீ போர்வை ஆரம் தாழ் மார்பின் - பரி 11/26 நீல் நெய் தாழ் கோதையவர் விலக்க நில்லாது - பரி 11/124 தாழ் நீர் இமிழ் சுனை நாப்பண் குளித்து அவண் - பரி 21/39 தாழ் கதுப்பு அணிகுவர் காதலர் மற்று அவர் - கலி 4/11 மாலை தாழ் வியன் மார்பர் துனைதந்தார் - கலி 33/30 தகை கொண்ட ஏனலுள் தாழ் குரல் உரீஇ - கலி 40/3 புரி விரி புதை துதை பூ ததைந்த தாழ் சினை - கலி 40/19 தண் தாழ் அருவி அர_மகளிர் ஆடுபவே - கலி 40/23 தாழ் இரும் கூந்தல் என் தோழியை கை கவியா - கலி 42/29 இலங்கு தாழ் அருவியோடு அணி கொண்ட நின் மலை - கலி 46/25 தாழ் செறி கடும் காப்பின் தாய் முன்னர் நின் சாரல் - கலி 48/10 ஒருத்தி அடி தாழ் கலிங்கம் தழீஇ ஒரு கை - கலி 92/42 முடி தாழ் இரும் கூந்தல் பற்றி பூ வேய்ந்த - கலி 92/43 தொய்யக தோட்டி குழை தாழ் வடி மணி - கலி 97/13 சார் சார் நெறி தாழ் இரும் கூந்தல் நின் பெண்டிர் எல்லாம் - கலி 97/28 மிக்கு ஒளிர் தாழ் சடை மேவரும் பிறை நுதல் - கலி 104/11 மாலை நீ தகை மிக்க தாழ் சினை பதி சேர்ந்து புள் ஆர்ப்ப - கலி 118/17 தகை மிக்க புணர்ச்சியார் தாழ் கொடி நறு முல்லை - கலி 118/19 தாழ் நீர முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய் - கலி 131/22 நறு வீ தாழ் புன்னை கீழ் நயந்து நீ அளித்த_கால் - கலி 136/13 பையென நோக்குவேன் தாழ் தானை பற்றுவேன் - கலி 147/49 வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில் - அகம் 8/9 தாழ் மென் கூந்தல் தட மென் பணை தோள் - அகம் 21/4 உறை இறந்து ஒளிரும் தாழ் இரும் கூந்தல் - அகம் 46/8 தாழ் பெயல் பெருநீர் வலன் ஏர்பு வளைஇ - அகம் 84/3 தாழ் இரும் கூந்தல் நம் காதலி - அகம் 87/15 தண் பல் அருவி தாழ் நீர் ஒரு சிறை - அகம் 92/10 மாழ்கி அன்ன தாழ் பெரும் செவிய - அகம் 104/10 வண்டு படுபு இருளிய தாழ் இரும் கூந்தல் - அகம் 131/3 தாள் தாழ் தார் மணி தயங்குபு இயம்ப - அகம் 154/12 தண் மழை பொழிந்த தாழ் பெயல் கடை நாள் - அகம் 163/2 தாழ் இரும் கதுப்பின் காவிரி வவ்வலின் - அகம் 222/8 மறந்து கண்படுதல் யாவது புறம் தாழ் அம் பணை நெடும் தோள் தங்கி தும்பி - அகம் 223/10,11 புயல் என ஒலிவரும் தாழ் இரும் கூந்தல் - அகம் 225/15 நுசுப்பு அழித்து ஒலிவரும் தாழ் இரும் கூந்தல் - அகம் 253/23 தண் மழை தவழும் தாழ் நீர் நனம் தலை - அகம் 258/5 தாழ் சினை உறங்கும் தண் துறை ஊர - அகம் 286/7 தாழ் பூ கோதை ஊது வண்டு இரீஇ - அகம் 298/12 கழல் இலை உகுத்த கால் பொரு தாழ் சினை - அகம் 351/6 தாழ் சினை மருதம் தகைபெற கவினிய - அகம் 366/1 தாழ் பெரும் தட கை தலைஇய கானத்து - அகம் 392/1 தாழ் சடை பொலிந்த அரும் தவத்தோற்கே - புறம் 1/13 நீ நீடு வாழிய நெடுந்தகை தாழ் நீர் - புறம் 55/19 விழுமியோன் பெறுகுவன் ஆயின் தாழ் நீர் - புறம் 75/7 தாள் தாழ் படு மணி இரட்டும் பூ நுதல் - புறம் 165/6 புறம் தாழ் புரி சடை புலர்த்துவோனே - புறம் 251/7 தாழ் உவந்து தழூஉ மொழியர் - புறம் 360/6 காவிரி அணையும் தாழ் நீர் படப்பை - புறம் 385/8 மாலை தாழ் சென்னி வயிர மணி தூண்_அகத்து - சிலப்.புகார் 1/50 தாழ் இரும் கூந்தல் தையால் நின்னை என்று - சிலப்.புகார் 2/80 தாழ் குரல் தண்ணுமை ஆடலொடு இவற்றின் - சிலப்.புகார் 3/27 தாழ் துணை துறந்தோர் தனி துயர் எய்த - சிலப்.புகார் 4/13 கடைமுக வாயிலும் கரும் தாழ் காவலும் - சிலப்.புகார் 5/113 தாழ் பொழில் உடுத்த தண் பத பெருவழி - சிலப்.புகார் 10/32 கோதை தாழ் பிண்டி கொழு நிழல் இருந்த - சிலப்.மது 11/3 வாழையும் கமுகும் தாழ் குலை தெங்கும் - சிலப்.மது 11/83 தடம் தாழ் வயலொடு தண் பூம் காவொடு - சிலப்.மது 11/89 தாழ் துயர் எய்தி தான் சென்று இருந்ததும் - சிலப்.மது 13/72 தண் நறு முல்லையும் தாழ் நீர் குவளையும் - சிலப்.மது 14/76 தாழ் நீர் வேலி தலைச்செங்கானத்து - சிலப்.மது 15/11 தமர்_முதல் பெயர்வோன் தாழ் பொழில் ஆங்கண் - சிலப்.மது 15/16 தாழ் பூ கோதை-தன் கால் சிலம்பு - சிலப்.மது 16/151 புண் தாழ் குருதி புறம் சோர மாலை-வாய் - சிலப்.மது 19/37 தாழ் கழல் மன்னன்-தன் திருமேனி - சிலப்.வஞ்சி 25/191 சந்தின் குப்பையும் தாழ் நீர் முத்தும் - சிலப்.வஞ்சி 26/168 தாழ் கழல் மன்னர் நின் அடி போற்ற - சிலப்.வஞ்சி 28/184 தாழ் நீர் வேலி தண் மலர் பூம் பொழில் - சிலப்.வஞ்சி 28/197 உறி தாழ் கரகமும் உன் கையது அன்றே - சிலப்.வஞ்சி 30/64 உறி தாழ் கரகமும் என் கை தந்து - சிலப்.வஞ்சி 30/90 பொன் தாழ் அகலத்து போர் வெய்யோன் முன் - சிலப்.வஞ்சி 30/113 தாழ் கழல் மன்னர் தன் அடி போற்ற - சிலப்.வஞ்சி 30/169 தண் மணல் துருத்தியும் தாழ் பூம் துறைகளும் - மணி 1/65 தண்ணுமை கருவியும் தாழ் தீம் குழலும் - மணி 2/21 ஒளித்து அறை தாழ் கோத்து உள்ளகத்து இரீஇ - மணி 4/88 தாழ் ஒளி மண்டபம்-தன் கையின் தடைஇ - மணி 5/9 ஞாழல் ஓங்கிய தாழ் கண் அசும்பின் - மணி 8/6 தாழ் துயர் உறுவோள் தந்தையை உள்ளி - மணி 8/39 தாய் வாய் கேட்டு தாழ் துயர் எய்தி - மணி 25/77
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்