தும்பை என்பது ஒரு செடி, பூ, திணை
1. சொல் பொருள்
(பெ) 1. ஒரு செடி/பூ, சிறுதும்பை, பெருந்தும்பை, முடிதும்பை, கருந்தும்பை, மலைத்தும்பை, கவிழ்தும்பை, காசித் தும்பை, 2. வீரச் செயல் புரிவதன் குறியாக வீரர் போரில் அணியும் அடையாளப்பூ, 3. புறத்திணை வகைகளுள் ஒன்றான தும்பைத் திணை
2. சொல் பொருள் விளக்கம்
சிறுதும்பை, பெருந்தும்பை ஆகிய வகைகள் உண்டு. தும்பை ஆயுர்வேதத்தில் `துரோண புஸ்பி’ என அழைக்கப்படுகிறது. இச்செடியில் நுண் மயிர்கள் காணப்படும். ஒவ்வொரு சிறு கிளையின் நுனியிலும் சிறிய பந்து போன்று ஒரு பிரிவு வளர்ந்து அதன் துளைகளிலிருந்து மொக்கு வெளிவந்து அழகான வெண்மைநிற பூக்கள் பூக்கும்.
இலை சற்று கனமாக இருக்கும்
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
white dead nettle, Leucas aspera, Spreng.
A garland of flowers worn by warriors when engaged in battle, as a mark of their valour
Major theme of a king or warrior heroically fighting against his enemy;
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
தும்பை-தானே நெய்தலது புறனே - பொருள். புறத்:14/1 அலர் பூ தும்பை அம் பகட்டு மார்பின் – புறம் 96/1 மலர்ந்த பூவையுடைய தும்பை மாலையை அணிந்த அழகிய வலிய மார்பினையும் அமர் கடந்து மலைந்த தும்பை பகைவர் – பதி 14/8 போர்க்களங்களில் எதிர்சென்று போரிடும் தும்பைப் பூ சூடிய பகைவரின் பெருவீரச்செயல் காட்டிப் பகைவரோடு போர்செய்தலைக் கூறும் புறத்திணை வகைகளுள் ஒன்றான தும்பைத்திணை. துப்பு துறைபோகிய வெப்பு உடை தும்பை கறுத்த தெவ்வர் கடி முனை அலற – பதி 39/3,4 போர்த்துறை எல்லாம் முற்றவும் கடைபோகிய, வெம்மையையுடைய தும்பை சூடிப் பொரும் போரின்கண் சினங்கொண்டு வந்த பகைவர்கள், அச்சந்தரும் போர்முனையில் அலறியோடும்படி தன் வீரம் ஒன்றனையே பெரிது எனக் கருதி, பகைமைகொண்டு படையெடுத்துவந்த வேந்தனை, எதிர்கொண்டு சென்று அவனுடன் போரிட்டு அவனை அழிக்கும் மன்னம் செய்யும் போர் தும்பைப்போர் எனப்படும். இப்போர் நிகழும்போது வீரர்கள் தும்பைப் பூவைச் சூடுவர். இப்போர் பற்றிய பாடல்கள் தும்பைத்திணையைச் சார்ந்தவை எனப்படும். இது அகத்திணையில் உள்ள நெய்தல் திணைக்குப் புறம் என்று கொள்வர் தொல்காப்பியர். தும்பை-தானே நெய்தலது புறனே மைந்து பொருளாக வந்த வேந்தனை சென்று தலை அழிக்கும் சிறப்பிற்று என்ப – தொல் – புறத் – 14,15 என்பது தொல்காப்பியம். வெட்சி நிரை கவர்தல் ; மீட்டல் கரந்தையாம் வட்கார் மேல் செல்வது வஞ்சியாம் ; உட்காது எதிர்ஊன்றல் காஞ்சி ; எயில்காத்தல் நொச்சி அது வளைத்தல் ஆகும் உழிஞை – அதிரப் பொருவது தும்பையாம் ; போர்க்களத்து மிக்கோர் செரு வென்றது வாகையாம் என்னும் புறப்பொருள் வெண்பாமாலைப் பாடலும் இதனை வலியுறுத்தும் பார்க்க: உழிஞை
வாடா தும்பை வயவர் பெருமகன் - பெரும் 101 புரையோர்க்கு தொடுத்த பொலம் பூ தும்பை/நீர் யார் என்னாது முறை கருதுபு சூட்டி - மது 737,738 தும்பை துழாஅய் சுடர் பூ தோன்றி - குறி 90 தும்பை மாலை இள முலை - ஐங் 127/2 அமர் கடந்து மலைந்த தும்பை பகைவர் - பதி 14/8 துப்பு துறைபோகிய வெப்பு உடை தும்பை/கறுத்த தெவ்வர் கடி முனை அலற - பதி 39/3,4 தும்பை சூடாது மலைந்த மாட்சி - பதி 42/6 பொலம் பூ தும்பை பொறி கிளர் தூணி - பதி 45/1 தொலையா தும்பை தெவ்வழி விளங்க - பதி 52/8 தும்பை சான்ற மெய் தயங்கு உயக்கத்து - பதி 79/15 துவைத்த தும்பை நனவு-உற்று வினவும் - பதி 88/23 வித்தக தும்பை விளைத்தலான் வென் வேலாற்கு - பரி 9/68 நிலம் தலைக்கொண்ட பொலம் பூ தும்பை/ஈர்ஐம்பதின்மரும் பொருது களத்து ஒழிய - புறம் 2/14,15 ஆடு கொள குழைந்த தும்பை புலவர் - புறம் 21/10 பொலம் தோட்டு பைம் தும்பை/மிசை அலங்கு உளைய பனை போழ் செரீஇ - புறம் 22/20,21 அலர் பூ தும்பை அம் பகட்டு மார்பின் - புறம் 96/1 பொலம் தும்பை கழல் பாண்டில் - புறம் 97/15 கமழ் பூ தும்பை நுதல் அசைத்தோனே - புறம் 283/13 ஒளிறு ஒள் வாள் அட குழைந்த பைம் தும்பை/எறிந்து இலை முறிந்த கதுவாய் வேலின் - புறம் 347/3,4 கஞ்சம் சேர் திரு பதத்தால் மிதித்த வெற்றி காட்ட மது கான்ற நறும் தும்பை மாலை - தேம்பா:8 58/3
வாகை தும்பை மணி தோட்டு போந்தையோடு - வஞ்சி:26/70 போந்தையொடு தொடுத்த பருவ தும்பை ஓங்கு இரும் சென்னி மேம்பட மலைய - வஞ்சி: 26/219,220 வட திசை தும்பை வாகையொடு முடித்து - வஞ்சி:27/198 வாகை தும்பை வட திசை சூடிய - வஞ்சி:27/221 தோள் நலம் உணீஇய தும்பை போந்தையொடு - வஞ்சி:27/248 தும்பை வெம்போர் சூழ் கழல் வேந்தே - வஞ்சி:28/84 தோடு ஆர் போந்தை தும்பையொடு முடித்து - வஞ்சி:27/45 தோடு ஆர் போந்தை தும்பையொடு முடித்த - வஞ்சி:27/112 கொத்து அலர் தும்பை சூடி கோவிந்தன் வாழ்க என்னா - சிந்தா:10 2277/2 மூசி வண்டு உடை தும்பை அம் தொடையலை முடித்து - சீறா:3495/1 தீ அழல் விழியில் காட்டி சென்னியில் தும்பை காட்டி - சீறா:3952/3 தும்பையும் சூடி அகுத்தபு பவத்தில் தோன்றிய குயையும் ஏகினனால் - சீறா:4443/4 வெள் எருக்கொடு தும்பை மிலைச்சியே ஏறு முன் செல தும்பை மிலைச்சியே - தேவா-சம்:4026/1 வெள் எருக்கொடு தும்பை மிலைச்சியே ஏறு முன் செல தும்பை மிலைச்சியே - தேவா-சம்:4026/1 கோடு அலர் வன்னி தும்பை கொக்கு இறகு அலர்ந்த கொன்றை - தேவா-அப்:704/3 ஏடு ஏறு மலர் கொன்றை அரவு தும்பை இள மதியம் எருக்கு வான் இழிந்த கங்கை - தேவா-அப்:2978/1 திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்து இலங்கு மத்தையின் சேரேசேரே நீர் ஆக செறிதரு சுர நதியோடு - தேவா-சம்:1361/1 தும்பை வகுளம் சுரபுன்னை மல்லிகை - திருமந்:1003/3 தும்பை வெள் அடம்பு திங்கள் தூய நீறு அணிந்த சென்னி - 6.வம்பறா:2 100/2 துஞ்சின் நுனி தனி பரப்பும் தும்பை நறு மலர் தோன்ற - 7.வார்கொண்ட:3 27/4 சென்று தும்பை துறை முடித்தும் செருவில் வாகை திறம் கெழுமி - 7.வார்கொண்ட:6 3/2 பூ வேய்ந்த நெடும் சடை மேல் அடம்பு தும்பை புதிய மதி நதி இதழி பொருந்த வைத்த - 11.பத்தராய்:7 1/3 தோடு உலாம் மலர் இதழியும் தும்பையும் அடம்பும் - 6.வம்பறா:1 441/2 மவுன உபதேச சம்பு மதி அறுகு வேணி தும்பை மணி முடியின் மீது அணிந்த மக தேவர் - திருப்:110/5 சலம் அறுகு பூளை தும்பை அணி சேயே சரவணபவா முகுந்தன் மருகோனே - திருப்:122/3 இள மதி கடுக்கை தும்பை அரவு அணிபவர்க்கு இசைந்து இனிய பொருளை பகர்ந்த குருநாதா - திருப்:139/5 பறித்த விழி தலை மழு உழை செம் கை செழித்த சிவ பரன் இதழி நல் தும்பை படித்த மதி அறல் அரவு அணி சம்பு குருநாதா - திருப்:140/9,10 தலை மதிய நதி தும்பை இள அறுகு கமழ் கொன்றை சடை முடியில் அணிகின்ற பெருமானார் - திருப்:295/7 தும்பை தொடையினர் கண்ட கறையினர் தொந்தி கடவுளை தந்திட்டவர் இட - திருப்:444/41 அரவு பிறை பூளை தும்பை விலுவமொடு தூர்வை கொன்றை அணிவர் சடையாளர் தந்த முருகோனே - திருப்:648/7 எருக்கு ஆர் தாளி தும்பை மரு சேர் போது கங்கையினை சூடு ஆதி நம்பர் புதல்வோனே - திருப்:711/5 வாகை வேல கொன்றை தும்பை மாலை கூவிளம் கொழுந்து வால சோமன் அஞ்சு பொங்கு பகு வாய - திருப்:734/6 பாரம் ஆர் தழும்பர் செம்பொன் மேனியாளர் கங்கை வெண் கபால மாலை கொன்றை தும்பை சிறுதாளி - திருப்:735/5 இந்துவும் கரந்தை தும்பை கொன்றையும் சலம் புனைந்திடும் பரன் தன் அன்பில் வந்த குமரேசா - திருப்:835/7 வால இள பிறை தும்பை ஆறு கடுக்கை கரந்தை வாசுகியை புனை நம்பர் தரு சேயே - திருப்:841/5 கஞ்ச மலர் கொன்றை தும்பை மகிழ் விஞ்சி கந்தி கமழ்கின்ற கழலோனே - திருப்:937/5 கறை அற ஒப்பற்ற தும்பை அம்புலி கங்கை சூடும் - திருப்:1012/14 தும்பை செம்பொன் சொரிந்து தரும் கொன்றை துன்பம் கடிந்து என்பொடும் தொலையா நீர் - திருப்:1101/6 அறுகொடு நொச்சி தும்பை மேல் வைத்த அரி அயன் நித்தம் வந்து பூசிக்கும் - திருப்:1166/15 பரிய குமிழ் அறுகு கன தும்பையும் செம்பையும் துன்று மூல - திருப்:860/4 கண பண புயங்கமும் கங்கையும் திங்களும் குரவும் அறுகும் குறு தும்பையும் கொன்றையும் - திருப்:922/13 கஞ்சமும் தும்பையும் கொன்றையும் சந்ததம் கந்தமும் துன்று செம் சடையாளர் - திருப்:1100/6
தும்பை ஆடு அமரில் மாய வெல்ல வல சூரன் ஆகுவன் யான் எனா - வில்லி:1 150/2
தும்பை சூடிய வேல் துரியோதனன் - வில்லி:5 107/1
தும்பை சூட கருதினர் சொல்லுவார் - வில்லி:12 9/4
தும்பை வகை மாலை செறி வில்லமொடு கொன்றை மலர் சூதம் அறுகே கமழ்தரும் - வில்லி:12 115/1
தும்பை அம் சடையான் வெற்பை துளக்கிய சூரன் மாள - வில்லி:13 27/3
தொடைப்படு தும்பை மாலை சுயோதனன் சூழ்ச்சி ஆக - வில்லி:28 16/2
சூடு தும்பை மண்டலீகர் தூசியாக நிற்கவும் - வில்லி:30 7/3
தும்பை அம் தார் முடி சூழ் படை மன்னரும் - வில்லி:34 12/3
துருபத யாகசேன நிருபனும் தும்பை சூடி - வில்லி:39 17/1
சொற்று அராபதம் நெருங்க தொடை தும்பை புனைந்தானே - வில்லி:40 2/4
மிகைத்தனர் தும்பை மாலை முடி மிலைச்சினர் இன்று சாலும் என - வில்லி:40 22/1
துணிவுற தெரியுமோ தும்பை மாலையாய் - வில்லி:41 249/4
சயம் புனை வாளின் தும்பை தார் புனை தலையும் கொய்து - வில்லி:42 159/2
தொடை உண்ட மலர் தும்பை சுமக்கும் திரள் தோளார் - வில்லி:44 66/2
புனை தும்பை மாலை சருகு பட எழு பொடி மண்ட ஓடி மறைக விரைவுடன் - வில்லி:44 82/3
முன் ஆன தும்பை முடித்தோன் முடி தலையும் - வில்லி:45 176/2
சொல் வளைத்திலர் தொடுத்தனர் தும்பை அம் தொடையார் - வில்லி:45 193/4
நறை கெழு தும்பை மாலை நகுல சாதேவர் என்னும் - வில்லி:46 40/3
தும்பை மா மாலை வேய்ந்து தொடு கணை வலிதின் வாங்கி - வில்லி:46 43/2
மட்டு அவிழும் தும்பை அம் தார் தருமன் மைந்தன் வாகு வலியுடன் எறிய மத்திரேசன் - வில்லி:46 73/3
புகல் அரிய தும்பையுடன் வெற்றி வாகை புனைந்திடும் இ கணத்தில் வலம்புரி தார் வேந்தன் - வில்லி:45 30/3
தும்பையுற்று மிலைச்சி ஈசன் அளித்த வில்லொடு தோன்றினான் - வில்லி:29 48/4
தும்பை சூடிய இராவணன் முகம்-தொறும் தோன்றும் - யுத்2:15 231/2
தும்பை அம் தொடையலர் தட கை தூணி வாங்கு - யுத்3:22 52/3
தும்பை மா மலர் தூவினன் காரி எள் சொரிந்தான் - யுத்3:22 160/2
தும்பையின் தலை துரந்தது சுடர் மணி தண்டு ஒன்று - யுத்3:22 111/3
சுற்றினான் நெடும் தும்பையும் சூடினான் - யுத்2:15 97/4
துளவொடு தும்பையும் சுழிய சூடினான் - யுத்2:15 115/4
தோகை அன்னவர் விழி தொடர் தும்பையும் சூட்டி - யுத்4:35 16/4
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்