Skip to content

சொல் பொருள்

(வி) 1. முழுதுமாகு, 2. புலர்த்து, 3. சிவ, சிவப்பாயிரு,

2 (பெ) 1. சிவப்பு,  2. காவி நிறம், 3. நாவல் அல்லது பூவந்தி, கடு, நெல்லி, தான்றி, ஆல், அரசு, அத்தி, இத்தி,
முத்தக்காசு அல்லது கருங்காலி, மாந்தளிர் என்ற பத்துத் துவர்ப்பு மருந்துப்பொருள், 4. துவர்ப்புச்சுவை.

சொல் பொருள் விளக்கம்

1. முழுதுமாகு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be complete, dry, wipe off moisture, be red, red, scarlet, red ochre, Medical astringents, numbering ten, Astringency;

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மிக்கு எழு கடும் தார் துய் தலை சென்று
துப்பு துவர் போக பெரும் கிளை உவப்ப
ஈத்து ஆன்று ஆனா இடன் உடை வளனும் – பதி 32/4,5

போர்வேட்கை மிகுந்து எழுகின்ற கடுமையான முன்னணிப்படையினர் பகைவர் நாட்டின் இறுதியெல்லை வரை சென்று
வலிமை முழுவதையும் காட்டிப் போரிட்டு, பெருங்கூட்டமான பாணரும் கூத்தருமாகிய சுற்றத்தார் மகிழும்படி,
கொடுத்து நிறைந்தும் அழியாத செல்வத்தையுடைய வளமும்

பின் இரும் கூந்தல் பிழிவனம் துவரி
உள்ளகம் சிவந்த கண்ணேம் – குறி 60,61

பின்னப்பட்ட கரிய கூந்தலைப் பிழிந்து ஈரத்தைப் புலர்த்தி,
உட்புறமெல்லாம் சிவந்த கண்ணையுடையோமாய்

அவரை ஆய் மலர் உதிர துவரின
வாங்கு துளை துகிரின் ஈங்கை பூப்ப – அகம் 243/1,2

அவரையின் அழகிய மலர் உதிரவும், சிவப்பாயிருக்கும்
வளைந்த துளையினையுடைய பவளம் போல இண்டையானது பூக்கவும்

இலவு இதழ் புரையும் இன் மொழி துவர் வாய் – பொரு 27

இலவின் இதழை ஒக்கும் இனிய சொல்லையுடைய சிவந்த வாயினையும்,

நிறை பெயல் அறியா குறைத்து ஊண் அல்லில்
துவர் செய் ஆடை செம் தொடை மறவர் – நற் 33/5,6

நிறைந்த மழையை அறியாத, குறைந்த உணவையுடைய இரவினில்
பழுப்பேறிய ஆடையையுடைய, செம்மையாக அம்பினைத் தொடுத்திருக்கும் மறவர்கள்

தண்ணம் துவர் பல ஊட்டி சலம் குடைவார் – பரி 10/90

குளிர்ச்சியான அழகிய பத்துவகைத் துவர்களையும் தேய்த்துக்கொண்டு நீரில் முழுகுவோர் சிலர்

தொட்டதை தைப்பு அமை சருமத்தின் தாள் இயை தாமரை
துப்பு அமை துவர் நீர் துறை மறை அழுத்திய – பரி 21/3,4

நீ அணிந்துகொண்டது,
தைப்பதற்காக அமைந்த தோலினால், உன் திருவடிக்குப் பொருந்திய தாமரை மலர் போன்று செய்யப்பட்டது;
செம்பவளம் போன்ற துவர்நீர்த் துறையில் முழுதும் மறையும்படி அழுத்திப் பதனிடப்பட்டது

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *