Skip to content
நெருஞ்சி

நெருஞ்சி என்பது ஒரு முள்செடி

1. சொல் பொருள்

ஒரு முள்செடி, செப்புநெருஞ்சில், நெருஞ்சில்திரிகண்டம்நெருஞ்சிப்புதும்சுவதட்டம்கோகண்டம்காமரசிகிட்டிரம்சுதம், யானை வணங்கி 

2. சொல் பொருள் விளக்கம்

சிறுபஞ்சமூலம் என்னும் மருத்துவ நூலில் கூறப்படும் ஐந்து வேர்கள் பின்வருவவன: அவை

1.கண்டங்கத்தரி வேர்
2.சிறு வழுதுணை வேர்
3.சிறுமல்லி வேர்
4.நெருஞ்சி வேர்
5.பெருமல்லி வேர்

இது ஒரு மருத்துவ மூலிகை. நெருஞ்சியின் இலை, பூ, காய், வேர் ஆகிய அனைத்துமே மருத்துவப் பயன்பாடு உடையன. நிலத்தில் படர்ந்து வளரும் இதன் வேர் நன்கு பரந்து ஆழமாகச் செல்லும். மலர்கள் மஞ்சள் நிறத்தில் தோற்றமளிக்கும். இந்தத் முள்செடி முழுவதும் வெண்ணிற ரோம வளரிகள் காணப்படும்.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

a thorny plant, Cow’s thorn, a small prostrate herb, Tribulus terrestris, Puncture Vine; goat’s-head, bindii, bullhead, burra gokharu, bhakhdi, caltrop, small caltrops, cat’s-head, devil’s eyelashes, devil’s-thorn, devil’s-weed, puncture vine, and tackweed

Englishpuncturevine, Puncture Vine, Afrikaans: Duwweltjie, Dubbeltjie, Volstruisdoring, العربية: حسك أرضي, مصرى: حسك ارضى; azərbaycanca: Yatağan dəmirtikan; تۆرکجه: یاتاغان دمیرتیکان; български: Бабини зъби; বাংলা: গোক্ষুর; català: Tríbol; čeština: kotvičník zemní; Deutsch: Erd-Burzeldorn; ދިވެހިބަސް: ކަށި ގޯނބިލި; Esperanto: Tera tribuluso; español: Abrojo; فارسی: خارخسک; suomi: Okarennokki; français: Tribule terrestre; galego: Abrollo; ગુજરાતી: ગોખરુ (વનસ્પતિ); हिन्दी: गोखरू; hrvatski: Zemaljski babin zub; magyar: Királydinnye; հայերեն: Տատաշ գետնատարած; 日本語: ハマビシ; ქართული: კუროსთავი; Taqbaylit: Tamɣast tinegnit; ಕನ್ನಡ: ನೆಗ್ಗಿಲು; 한국어: 남가새; lietuvių: Gulsčioji ragužė; 文言: 蒺藜; македонски: Бабин заб; മലയാളം: ചെറിയ ഞെരിഞ്ഞിൽ; मराठी: गोखरू; norsk bokmål: Tiggernøtt; norsk nynorsk: Tiggarnøtt; norsk: Tiggernøtt; Diné; bizaad: Shash nátʼoh; ਪੰਜਾਬੀ: ਭੱਖੜਾ

polski: Buzdyganek naziemny; پنجابی: بھکھڑا; română: Colții babei; русский: Якорцы стелющиеся; Ikinyarwanda: Ubuhandanzovu; संस्कृतम्: गोकुरासस्यम्; සිංහල: නෙරෙංචි; slovenčina: Kotvičník zemný; српски / srpski: Бабин зуб (биљка); српски (ћирилица): Бабин зуб; srpski (latinica): Babin zub; svenska: Tiggarnöt; Kiswahili: Mbigili; தமிழ்: நெருஞ்சி; ไทย: โคกกระสุน; Türkçe: Çobançökerten; українська: Якірці сланкі; Tiếng Việt: Bạch tật lê; 吴语: 蒺藜; 中文: 蒺藜; 中文(中国大陆): 蒺藜; 中文(简体): 蒺藜; 中文(繁體): 蒺藜; 中文(香港): 蒺藜; 中文(新加坡): 蒺藜; 中文(臺灣): 蒺藜

நெருஞ்சிமுள்
நெருஞ்சிமுள்

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

இது வறண்ட நிலத்தில் நெருக்கமாய் வளரும், மிகச் சிறிய இலைகளைக் கொண்டது.
இதன் பூ காண்பதற்கு இனிமையானது. மிகச் சிறியது.

புன்புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சி
கட்கு இன் புது மலர் முள் பயந்து ஆங்கு – குறு 202/2,3

சிறு பூ நெருஞ்சியோடு அறுகை பம்பி – பட் 256

இது முட்களையுடையதாதலால், பார்ப்பவர் பிடுங்கி எறிவர். எனவே இது பாழடைந்த இடங்களில்
படர்ந்து வளரும்.

பீர் இவர் வேலி பாழ் மனை நெருஞ்சி – பதி 26/10

பாழ் ஊர் நெருஞ்சி பசலை வான் பூ – புறம் 155/4

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சி பழம் - குறள் 112:10

சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே

புன்புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சி/கட்கு இன் புது மலர் முள் பயந்து ஆங்கு - குறு 202/2,3

நெருஞ்சி அனைய என் பெரும் பணை தோளே - குறு 315/4

ஊரிய நெருஞ்சி நீறு ஆடு பறந்தலை - பதி 13/16

பீர் இவர் வேலி பாழ் மனை நெருஞ்சி/காடு உறு கடு நெறி ஆக மன்னிய - பதி 26/10,11

சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல - அகம் 336/18

பாழ் ஊர் நெருஞ்சி பசலை வான் பூ - புறம் 155/4

சிறு பூ நெருஞ்சியோடு அறுகை பம்பி - பட் 256

நெருஞ்சியும் செய்வது ஒன்று இல்லை செருந்தி - பழ:170/2
நெருஞ்சில்மலர்
நெருஞ்சில்மலர்
பஞ்சி அடர் அனிச்சம் நெருஞ்சி ஈன்ற பழமால் என்று - சிந்தா:1 341/1

நீள் சுடர் நெறியை நோக்கும் நிரை இதழ் நெருஞ்சி பூ போல் - சிந்தா:2 461/3

அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்து கண் அடைத்து-ஆங்கு - மணி:12/60

நெறியை படைத்தான் நெருஞ்சில் படைத்தான் - திருமந்:1617/1

நெறியில் வழுவின் நெருஞ்சில் முள் பாயும் - திருமந்:1617/2

நெறியின் நெருஞ்சில் முள் பாயகிலாவே - திருமந்:1617/4

கான் அமர் குழலார் செ அரி வேல் கண் கணம் எலாம் நெருஞ்சியை நிகர்ப்ப - சீறா:1197/3

செம் கதிர் விரும்பும் பைம் கொடி நெருஞ்சி

பொன் புனை மலரின் புகற்சி போல - இலாவாண:4/14,15

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *