Skip to content
புன்னை

புன்னை என்ற சொல் ஒரு வகை மலரை, மரத்தைக் குறிக்கும்

சொல் பொருள்

(பெ) ஒருவகை மரம்/பூ.

சொல் பொருள் விளக்கம்

இது ஒரு கடற்கரைப்பகுதியில் வளரும் மரம்.இது நீண்ட அடிப்பகுதியைக் கொண்டது என்றும் இதன் பூ, முத்துப்போல் வெண்மையாக உருண்டு இருக்கும்.இதன் அடிமரம் நீண்டிருந்தாலும், வளைந்து இருக்கும் என்றும், அதனை வெட்டி பந்தல்காலாக நடுவர்.இதன் பூ மிக்க மணமுள்ளதாகவும் பெரியதாகவும் இருக்கும்.

இந்த மரம் நீல நிறத்தை உடையது என்றும், இலைதழைகள் மிகுந்திருப்பதால் மிகுதியான நிழலைத் தரும் எனவும் அறிகிறோம். இங்கே நீலம் என்பது கருமையைக் குறிக்கும்.இதன் அடிமரம் மட்டுமல்லாமல்,இதன் கிளைகளும் நீண்டதாக இருக்கும்.கடற்கரை ஓரத்தில்மட்டுமன்றி, ஊருக்குள் தெருக்களிலும் இது காணப்படும்.

இதன் பூ மிகுந்த மணமுள்ளதால் விழாக்கொண்டாட இதனைப் பயன்படுத்துவர்.இதன் பூவிலிருக்கும் மகரந்தம் பொன் நிறத்தது.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Mastwood, Calophyllum inophyllum

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இறவு அருந்திய இன நாரை
பூ புன்னை சினை சேப்பின் – பொரு 204,205

என்ற அடிகளால் இது ஒரு கடற்கரைப்பகுதியில் வளரும் மரம் என்பது தெரியவருகிறது.

நெடும் கால் புன்னை நித்திலம் வைப்பவும் – சிறு 149

நெடிய தாளையுடைய புன்னை நித்திலம் (போல அரும்புகள்) வைக்கவும்,

என்ற அடியால், இது நீண்ட அடிப்பகுதியைக் கொண்டது என்றும் இதன் பூ, முத்துப்போல் வெண்மையாக
உருண்டு இருக்கும் என்றும் தெரியவருகிறது. 

கொடும் கால் புன்னை கோடு துமித்து இயற்றிய
பைம் காய் தூங்கும் பாய் மணல் பந்தர் – பெரும் 266,267

வளைந்த காலையுடைய புன்னைகளின் கொம்புகளை வெட்டி(க் கால்களாகக்கொண்டு) உருவாக்கிய,
(படர்ந்த கொடியில்)பச்சைக் காய்கள் தொங்கும், பரப்பப்பட்ட மணலையுடைய பந்தலில்,

இதன் அடிமரம் நீண்டிருந்தாலும், வளைந்து இருக்கும் என்றும், அதனை வெட்டி பந்தல்காலாக நடுவர்
என்றும் தெரிய வருகிறது.

ஆரம் காழ்வை கடி இரும் புன்னை – குறி 93

சந்தனப்பூ, அகிற்பூ, மணத்தையுடைய பெரிய புன்னைப்பூ

இதன் பூ மிக்க மணமுள்ளதாகவும் பெரியதாகவும் இருக்கும் என அறிய முடிகிறது.

கானல் அம் சிறுகுடி கடல் மேம் பரதவர்
நீல் நிற புன்னை கொழு நிழல் அசைஇ – நற் 4/1,2

கடற்கரைச் சோலையிடத்தே அமைந்த அழகான சிறுகுடியில் வாழும் கடல்மேற்செல்லும் பரதவர்கள்
நீல நிறப் புன்னையின் கொழுவிய நிழலில் தங்கி,

இந்த மரம் நீல நிறத்தை உடையது என்றும், இலைதழைகள் மிகுந்திருப்பதால் மிகுதியான நிழலைத் தரும்
எனவும் அறிகிறோம். இங்கே நீலம் என்பது கருமையைக் குறிக்கும் என்பது,

கரும் கோட்டு புன்னை இறைகொண்டனவே – நற் 67/5

பெரும் போது அவிழ்ந்த கரும் தாள் புன்னை – நற் 231/7

என்பதால் தெளிவாகும்.

நெடும் சினை புன்னை கடும் சூல் வெண்குருகு – நற் 31/10

இதன் அடிமரம் மட்டுமல்லாமல்,இதன் கிளைகளும் நீண்டதாக இருக்கும் என அறிகிறோம்.

மன்ற புன்னை மா சினை நறு வீ
முன்றில் தாழையொடு கமழும் – நற் 49/8,9

மன்றத்துப் புன்னையின் பெரிய கிளையில் உள்ள நறு மலர்கள்
வீட்டு முற்றத்தில் இருக்கும் தாழையோடு சேர்ந்து மணங்கமழும்

கடற்கரை ஓரத்தில்மட்டுமன்றி, ஊருக்குள் தெருக்களிலும் இது காணப்படும்.

கல்லென் சேரி புலவர் புன்னை
விழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும் – நற் 63/3,4

மிகுந்த ஆரவாரமுள்ள சேரியை அடுத்த புலால்நாறும் இடத்திலுள்ள புன்னையின்
விழாவுக்குரிய மணம் விளங்கும் பூங்கொத்துகள் உடன் மலர்ந்து மணங்கமழும்

இதன் பூ மிகுந்த மணமுள்ளதால் விழாக்கொண்டாட இதனைப் பயன்படுத்துவர்.

பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம் – நற் 78/3

பொன் போன்ற நுண்ணிய தாதினைப் புன்னை மரங்கள் தூவும்,

இதன் பூவிலிருக்கும் மகரந்தம் பொன் நிறத்தது.
புன்னை மலர்
புன்னை மலர்
பூ புன்னை சினை சேப்பின் - பொரு 205

நெடும் கால் புன்னை நித்திலம் வைப்பவும் - சிறு 149

கொடும் கால் புன்னை கோடு துமித்து இயற்றிய - பெரும் 266

ஆரம் காழ்வை கடி இரும் புன்னை/நரந்தம் நாகம் நள்ளிருள்நாறி - குறி 93,94

நீல் நிற புன்னை கொழு நிழல் அசைஇ - நற் 4/2

நெடும் சினை புன்னை கடும் சூல் வெண்_குருகு - நற் 31/10

மன்ற புன்னை மா சினை நறு வீ - நற் 49/8

கல்லென் சேரி புலவர் புன்னை/விழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும் - நற் 63/3,4

கரும் கோட்டு புன்னை இறைகொண்டனவே - நற் 67/5

புது மணல் கானல் புன்னை நுண் தாது - நற் 74/7

இம்மென் பேர் அலர் நும் ஊர் புன்னை/வீ மலர் உதிர்ந்த தேன் நாறு புலவின் - நற் 76/6,7

பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம் - நற் 78/3

பனி அரும்பு உடைந்த பெரும் தாள் புன்னை/துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும் - நற் 87/6,7

புன்னை பூத்த இன் நிழல் உயர் கரை - நற் 91/2

புன்னை அரும்பிய புலவு நீர் சேர்ப்பன் - நற் 94/6

புன்னை ததைந்த வெண் மணல் ஒரு சிறை - நற் 96/2

புன்னை அம் கொழு நிழல் முன் உய்த்து பரப்பும் - நற் 101/4

பராரை புன்னை சேரி மெல்ல - நற் 145/9

வளி சீத்து வரித்த புன்னை முன்றில் - நற் 159/6

நீல் நிற புன்னை தமி ஒண் கைதை - நற் 163/8

கரும் கோட்டு புன்னை குடக்கு வாங்கு பெரும் சினை - நற் 167/1

புது வீ ஞாழலொடு புன்னை தாஅம் - நற் 167/8

புன்னை ஓங்கிய துறைவனொடு அன்னை - நற் 175/5

புன்னை விழுமம் போல - நற் 180/8

புன்னை அம் கானல் புணர் குறி வாய்த்த - நற் 227/3

பெரும் போது அவிழ்ந்த கரும் தாள் புன்னை/கானல் அம் கொண்கன் தந்த - நற் 231/7,8

இரும்பின் அன்ன கரும் கோட்டு புன்னை/நீலத்து அன்ன பாசிலை அகம்-தொறும் - நற் 249/1,2

படு காழ் நாறிய பராஅரை புன்னை/அடு மரல் மொக்குளின் அரும்பு வாய் அவிழ - நற் 278/1,2

இறை பட வாங்கிய முழவு முதல் புன்னை/மா அரை மறைகம் வம்-மதி பானாள் - நற் 307/6,7

கரும் கோட்டு புன்னை மலர் தாது அருந்தி - நற் 311/9

ஞாழலொடு கெழீஇய புன்னை அம் கொழு நிழல் - நற் 315/7

புலி வரிபு எக்கர் புன்னை உதிர்த்த - நற் 323/7

புன்னை ஓங்கிய கானல் - நற் 327/8

எல்லி அன்ன இருள் நிற புன்னை/நல் அரை முழுமுதல் அ-வயின் தொடுத்த - நற் 354/5,6

நீடு சினை புன்னை நறும் தாது உதிர - நற் 375/1

ஓங்கு இரும் புன்னை வரி நிழல் இருந்து - நற் 388/7

வதி குருகு உறங்கும் இன் நிழல் புன்னை/உடை திரை திவலை அரும்பும் தீம் நீர் - குறு 5/2,3

கரும் கோட்டு புன்னை பூ பொழில் புலம்ப - குறு 123/3

நனைந்த புன்னை மா சினை தொகூஉம் - குறு 175/3

நின்ற புன்னை நிலம் தோய் படு சினை - குறு 236/4

அம்ம வாழி தோழி புன்னை/அலங்கு சினை இருந்த அம் சிறை நாரை - குறு 296/1,2

இணர் அவிழ் புன்னை எக்கர் நீழல் - குறு 299/3

இன் இணர் புன்னை அம் புகர் நிழல் - குறு 303/6

ஓங்கல் வெண் மணல் தாழ்ந்த புன்னை/தாது சேர் நிகர் மலர் கொய்யும் - குறு 311/5,6

நறு வீ ஞாழலொடு புன்னை தாஅய் - குறு 318/2

புன்னை அம் சேரி இ ஊர் - குறு 320/7

புன்னை ஓங்கிய புலால் அம் சேரி - குறு 351/6

அன்னை வாழி வேண்டு அன்னை புன்னை/பொன் நிறம் விரியும் பூ கெழு துறைவனை - ஐங் 110/1,2

இன்னது ஆகுதல் கொடிதே புன்னை/அணி மலர் துறை-தொறும் வரிக்கும் - ஐங் 117/2,3

அம்ம வாழி பாண புன்னை/அரும்பு மலி கானல் இ ஊர் - ஐங் 132/1,2

கரும் கோட்டு புன்னை தங்கும் துறைவற்கு - ஐங் 161/2

புன்னை அம் பூ சினை சேக்கும் துறைவன் - ஐங் 169/3

புன்னை நுண் தாது உறைத்தரு நெய்தல் - ஐங் 189/1

பாசடை பனி கழி துழைஇ புன்னை/வால் இணர் படு சினை குருகு இறைகொள்ளும் - பதி 30/3,4

கரும் கோட்டு நறும் புன்னை மலர் சினை மிசை-தொறும் - கலி 123/1

தேன் இமிர் புன்னை பொருந்தி - கலி 131/45

கடி மலர் புன்னை கீழ் காரிகை தோற்றாளை - கலி 135/6

ஆய் மலர் புன்னை கீழ் அணி நலம் தோற்றாளை - கலி 135/9

திகழ் மலர் புன்னை கீழ் திரு நலம் தோற்றாளை - கலி 135/12

நறு வீ தாழ் புன்னை கீழ் நயந்து நீ அளித்த-கால் - கலி 136/13

முடவு முதிர் புன்னை தடவு நிலை மா சினை - அகம் 10/3

எக்கர் புன்னை இன் நிழல் அசைஇ - அகம் 20/3

மண்ணா முத்தம் அரும்பிய புன்னை/தண் நறும் கானல் வந்து நும் - அகம் 30/13,14

குவை இரும் புன்னை குடம்பை சேர - அகம் 40/4

புன்னை குறைத்த ஞான்றை வயிரியர் - அகம் 45/11

பொன் வீ ஞாழலொடு புன்னை வரிக்கும் - அகம் 70/9

புன்னை அம் கானல் பகல் வந்தீமே - அகம் 80/13

புன்னை அம் கானல் புறந்தை முன்துறை - அகம் 100/13

பொன் இணர் நறு மலர் புன்னை வெஃகி - அகம் 126/15

நன்னர் மெல் இணர் புன்னை போல - அகம் 145/13

படப்பை நின்ற முட தாள் புன்னை/பொன் நேர் நுண் தாது நோக்கி - அகம் 180/13,14

பொதும்பில் புன்னை சினை சேர்பு இருந்த - அகம் 190/7

புன்னை நுண் தாது பொன்னின் நொண்டு - அகம் 230/7

பூ வேய் புன்னை அம் தண் பொழில் - அகம் 240/14

மல்கு திரை உழந்த ஒல்கு நிலை புன்னை/வண்டு இமிர் இணர நுண் தாது வரிப்ப - அகம் 250/2,3

புன்னை நறு வீ பொன் நிறம் கொளாஅ - அகம் 260/9

பராஅரை புன்னை வாங்கு சினை தோயும் - அகம் 270/6

கழி சேர் புன்னை அழி பூ கானல் - அகம் 290/9

பூ விரி புன்னை மீது தோன்று பெண்ணை - அகம் 310/12

தடவு நிலை புன்னை தாது அணி பெரும் துறை - அகம் 320/10

புன்னை அம் பொதும்பின் இன் நிழல் கழிப்பி - அகம் 340/2

புன்னை நறும் பொழில் செய்த நம் குறியே - அகம் 360/19

அகல் இலை புன்னை புகர் இல் நீழல் - அகம் 370/3

தூவல் கலித்த தேம் பாய் புன்னை/மெல் இணர் கண்ணி மிலைந்த மைந்தர் - புறம் 24/7,8

கானல் புன்னை சினை அலைக்குந்து - புறம் 386/15

ததைந்த புன்னை செழு நகர் வரைப்பின் - புறம் 391/17

புன்னை கடியும் பொரு கடல் தண் சேர்ப்ப - நாலடி:10 7/3

என்னை அவரொடு பட்டது புன்னை
விறல் பூம் கமழ் கானல் வீங்கு நீர் சேர்ப்ப - நாலடி:12 7/2,3

பராஅரை புன்னை படு கடல் தண் சேர்ப்ப - நாலடி:25 6/1

நல் தளிர் புன்னை மலரும் கடல் சேர்ப்ப - நாலடி:34 6/3

பொரி புற பல்லி சினை ஈன்ற புன்னை
வரி புற வார் மணல் மேல் ஏறி தெரிப்புற - ஐந்50:43/1,2

புன்னை அம் பூம் கானல் சேர்ப்பனை தக்க தேர் - ஐந்70:58/3

முடம் முதிர் புன்னை படுகோட்டு இருந்த - ஐந்70:71/1

முத்தம் அரும்பும் முட தாள் முது புன்னை
தத்தும் திரை தயங்கும் தண் அம் கடல் சேர்ப்ப - திணை50:42/1,2

புலால் அகற்றும் பூம் புன்னை பொங்கு நீர் சேர்ப்ப - திணை150:35/1

கடும் புலால் புன்னை கடியும் துறைவ - திணை150:44/1

அடல் கானல் புன்னை தாழ்ந்து ஆற்ற மடல் கானல் - திணை150:56/2

புடை எலாம் புன்னை புகன்று - திணை150:58/4

நெரித்த சினை போலும் நீள் இரும் புன்னை
பொரி பூ இதழ் உறைக்கும் பொங்கு நீர் சேர்ப்ப - பழ:22/2,3

பெரும் பழி ஏறுவ பேணார் இரும் புன்னை
புன் புலால் தீர்க்கும் துறைவ மற்று அஞ்சாதே - பழ:262/2,3

என்ன வகையால் செய பெறுப புன்னை
பரப்பில் நீர் தாஅம் படு கடல் தண் சேர்ப்ப - பழ:311/2,3

புன்னை நீழல் புது மணல் பரப்பில் - புகார்:6/168

பொறை மலி பூம் புன்னை பூ உதிர்ந்து நுண் தாது போர்க்கும் கானல் - புகார்:7/46

புன்னை நீழல் புலவு திரைவாய் - புகார்:7/97

நிறைமதியும் மீனும் என அன்னம் நீள் புன்னை அரும்பி பூத்த - புகார்:7/133

புன்னை பொதும்பர் மகர திண் கொடியோன் எய்த புது புண்கள் - புகார்:7/165

மரவம் பாதிரி புன்னை மணம் கமழ் - மது:12/83

குண்டு நீர் அடைகரை குவை இரும் புன்னை
வலம்புரி ஈன்ற நலம் புரி முத்தம் - வஞ்சி: 27/243,244

பொங்கு திரை உலாவும் புன்னை அம் கானல் - மணி:24/28

தூ மலர் புன்னை துறை நிழல் இருப்ப - மணி:25/157

ஆய் மலர் புன்னை அணி நிழல் கீழால் - மணி:25/169

நந்தின் இளம் சினையும் புன்னை குவி மொட்டும் - முத்தொள்:88/1

நாறு பூம் குழல் நன்னுதல் புன்னை மேல் - பால:17 36/1

புன்னை பூம் தாது மானும் பொன் பொடி அப்பிவிட்டார் - பால:22 17/4

பொற்கிழி விரித்தன சினை பொதுளு புன்னை - கிட்:10 73/4

புன்னை குறும் பூ நறும் சுண்ணம் பூசாது ஒரு கால் போகாதே - யுத்1:1 5/4

புன்னை அம் பொதும்பரும் புக்கு நோக்கினான் - யுத்1:4 27/4

புன்னை நறு மலரின் பூம் தாது இடை ஒதுங்கும் - நள:213/1

புன்னை நறும் தாது கோதி பொறி வண்டு - நள:353/1

புடை பாளையின் கமுகினொடு புன்னை மலர் நாற்றம் - தேவா-சம்:88/3

வரத்தான் மிக அளித்தான் இடம் வளர் புன்னை முத்து அரும்பி - தேவா-சம்:114/3

கொந்து ஆர் மலர் புன்னை மகிழ் குரவம் கமழ் குன்றில் - தேவா-சம்:178/3

மந்தல் ஆய மல்லிகையும் புன்னை வளர் குரவின் - தேவா-சம்:707/3

தகர புன்னை தாழை பொழில் சேர் சண்பை நகராரே - தேவா-சம்:714/4

பொன் தாழ் கொன்றை செருந்தி புன்னை பொருந்து செண்பகம் - தேவா-சம்:768/3

குயில் ஆர் கோல மாதவிகள் குளிர் பூஞ்சுர புன்னை
செயில் ஆர் பொய்கை சேரும் நறையூர் சித்தீச்சுரத்தாரை - தேவா-சம்:775/1,2

புன்னை மடலின் பொழில் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக - தேவா-சம்:803/3

போது அலர் செம்பொன் புன்னை கொடுக்கும் புறவமே - தேவா-சம்:1048/4

தாது அவிழ் புன்னை தயங்கு மலர் சிறை வண்டு அறை எழில் பொழில் குயில் பயில் தருமபுரம் பதியே - தேவா-சம்:1459/4

புன்னை வெண் கிழியில் பவளம் புரை பூந்தராய் - தேவா-சம்:1470/2

மாதர் வண்டு தன் காதல் வண்டு ஆடிய புன்னை
தாது கண்டு பொழில் மறைந்து ஊடு சாய்க்காடே - தேவா-சம்:1879/3,4

மட்டு இட்ட புன்னை அம் கானல் மட மயிலை - தேவா-சம்:1971/1

அம் தண் மாதவி புன்னை நல்ல அசோகமும் அரவிந்தம் மல்லிகை - தேவா-சம்:2045/1

புற விரி முல்லை மௌவல் குளிர் பிண்டி புன்னை புனை கொன்றை துன்று பொதுளி - தேவா-சம்:2385/3

சினை மல்கு புன்னை திகழ் வாசம் நாறு திரு முல்லைவாயில் இதுவே - தேவா-சம்:2430/4

செருத்தி ஞாழல் புன்னை வன்னி செண்பகம் செழும் குரா - தேவா-சம்:2569/3

முறி கொள் ஞாழல் முட புன்னை முல்லை முகை வெண் மலர் - தேவா-சம்:2727/2

புன்னை நின்று கமழ் பாதிரிப்புலியூர் உளான் - தேவா-சம்:2780/2

அன்னம் தாவும் அணி ஆர் பொழில் மணி ஆர் புன்னை
பொன் அம் தாது சொரி பாதிரிப்புலியூர்-தனுள் - தேவா-சம்:2788/1,2

புக்க வாசனை புன்னை பொன் திரள் காட்டும் புகலியே - தேவா-சம்:2796/4

புன்னை பொன் தாது உதிர் மல்கும் அம் தண் புகலி நகர் - தேவா-சம்:2875/3

புன்னை நல் மா மலர் பொன் உதிர்க்கும் புனவாயிலே - தேவா-சம்:2910/4

புன்னை அம் பொழில் அணி பூந்தராய் நகர் - தேவா-சம்:2932/3

வெறி கமழ் புன்னை பொன் ஞாழல் விம்மிய - தேவா-சம்:3014/1

பைம் கோட்டு மலர் புன்னை பறவைகாள் பயப்பு ஊர - தேவா-சம்:3471/1

நறை உலவும் பொழில் புன்னை நன் நீழல் கீழ் அமரும் - தேவா-சம்:3510/2

ஊடு உலவு புன்னை விரி தாது மலி சேர் உதவி மாணிகுழியே - தேவா-சம்:3632/4

மடலிடை பவளமும் முத்தமும் தொத்து வண் புன்னை மாடே - தேவா-சம்:3763/3

வாசம் ஆம் புன்னை மௌவல் செங்கழுநீர் மலர் அணைந்து எழுந்த வான் தென்றல் - தேவா-சம்:4083/3

விரிந்து உயர் மௌவல் மாதவி புன்னை வேங்கை வண் செருந்தி செண்பகத்தின் - தேவா-சம்:4126/3

மன்றத்து புன்னை போல மரம் படு துயரம் எய்தி - தேவா-அப்:266/1

செண்பகம் திகழும் புன்னை செழும் திரள் குரவம் வேங்கை - தேவா-அப்:681/3

புன்னை பொழில் புகலூர் அண்ணல் செய்வன கேண்-மின்களோ - தேவா-அப்:1009/2

புன்னை மலர் தலை வண்டு உறங்கும் புகலூர்க்கு அரசே - தேவா-அப்:1010/3

புன்னை ஞாழல் புறணி அருகு எலாம் - தேவா-அப்:1156/1

புன்னை காவல் பொழில் புகலூரனை - தேவா-அப்:1530/3

புன்னை தாது பொழில் புகலூரரை - தேவா-அப்:1535/3

கன்னி அம் புன்னை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே - தேவா-அப்:2309/4

அக்கு அரும்பு பெரும் புன்னை நெருங்கு சோலை ஆரூருக்கு அதிபதி காண் அம் தண் தென்றல் - தேவா-அப்:2847/3

விரும்பிய கமழும் புன்னை மாதவி தொகுதி என்றும் - தேவா-சுந்:77/3

கொல்லி இடம் குளிர் மாதவி மவ்வல் குரா வகுளம் குருக்கத்தி புன்னை
அல்லியிடை பெடை வண்டு உறங்கும் கலி கச்சி அனேகதங்காவதமே - தேவா-சுந்:101/3,4

புன்னை கன்னிகள் அக்கு அரும்பு புறம்பயம் தொழ போதுமே - தேவா-சுந்:357/4

புன்னை மாதவி போது அலர் நீடூர் புனிதனை பணியா விடல் ஆமே - தேவா-சுந்:571/4

புன்னை மலரும் புறவில் திகழும் - தேவா-சுந்:926/2

பொன் அங்கு அலர் புன்னை சேக்கையின்-வாய் புலம்புற்று முற்றும் - திருக்கோ:172/3

கண்டலையே கரியா கன்னி புன்னை கலந்த கள்வர் - திருக்கோ:177/2

சேண் நிகர் காவின் வழங்கும் புன்னை துறை சேர்ப்பர் திங்கள் - திருக்கோ:183/2

முகன் தாழ் குழை செம்பொன் முத்து அணி புன்னை இன்னும் உரையாது - திருக்கோ:184/3

கார் புன்னை பொன் அவிழ் முத்த மணலில் கலந்து அகன்றார் - திருக்கோ:273/3

தாது அவிழ் புன்னை தயங்கும் இரு கரை - திருமந்:2931/2

கன்னிகாரம் குரவம் கமழ் புன்னை கற்பு பாடலம் கூவிளம் ஓங்கி - 1.திருமலை:5 94/2

வழி கரை பொதி பொன் அவிழ்ப்பன மலர் புன்னை
விழிக்கு நெய்தலின் விரை மலர் கண் சுரும்பு உண்ண - 4.மும்மை:5 36/2,3

மன்றல் விரவு மலர் புன்னை மணம் சூழ் சோலை உப்பளத்தின் - 5.திருநின்ற:1 264/1

புன்னை மணம் கமழ் புறவ புறம்பணையில் வந்து அணைந்தார் - 6.வம்பறா:1 1147/4

கணம் கொள் ஓதிமம் கரும் சினை புன்னை அம் கானல் - 8.பொய்:4 7/2

கெழு மலர் மாதவி புன்னை கிளை ஞாழல் தளை அவிழும் - 8.பொய்:6 4/1

புன்னை செருந்தியொடு புன வேங்கையும் கோங்கும் நின்று - நாலாயி:351/3

புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்தி பொதும்பினில் வாழும் குயிலே - நாலாயி:545/3

எழுந்த மலர் கரு நீலம் இருந்தில் காட்ட இரும் புன்னை முத்து அரும்பி செம்பொன் காட்ட - நாலாயி:1140/3

புன்னை மன்னு செருந்தி வண் பொழில் வாய் அகன் பணைகள் கலந்து எங்கும் - நாலாயி:1191/3

நிலவு மலர் புன்னை நாழல் நீழல் தண் தாமரை மலரின் மிசை மலி - நாலாயி:1194/3

பைம் பொனொடு வெண் முத்தம் பல புன்னை காட்ட பலங்கனிகள் தேன் காட்ட பட அரவு ஏர் அல்குல் - நாலாயி:1240/3

பூ நிரை செருந்தி புன்னை முத்து அரும்பி பொதும்பிடை வரி வண்டு மிண்டி - நாலாயி:1339/3

புன்னை பொன் ஏய் தாது உதிர்க்கும் புள்ளம்பூதங்குடி தானே - நாலாயி:1353/4

வண்டு அமரும் மலர் புன்னை வரி நீழல் அணி முத்தம் - நாலாயி:1674/1

போது அலர் புன்னை மல்லிகை மௌவல் புது விரை மது மலர் அணைந்து - நாலாயி:1750/3

புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து அழகு ஆய புல்லாணியே - நாலாயி:1768/4

போது அலரும் புன்னை சூழ் புல்லாணி கைதொழுதேன் - நாலாயி:1786/3

பொன் அலரும் புன்னை சூழ் புல்லாணி அம்மானை - நாலாயி:1787/1

பொன் திகழ் புன்னை மகிழ் புது மாதவி மீது அணவி - நாலாயி:3430/2

போற்றி யான் இரந்தேன் புன்னை மேல் உறை பூம் குயில்காள் - நாலாயி:3456/1

செருந்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ் தண் திருவண்வண்டூர் - நாலாயி:3458/2

புன்னை அம் பொழில் சூழ் திருப்புலியூர் புகழும் இவளே - நாலாயி:3760/4

குன்று நேர் மாடம் மாடே குருந்து சேர் செருந்தி புன்னை
மன்று அலர் பொழில் அனந்தபுரநகர் மாயன் நாமம் - நாலாயி:3903/2,3

மந்தரை கமுகு புன்னை நாரத்தை மகிழ் விளா மருது எலுமிச்சை - சீறா:1002/3

நித்தில திரளின் அரும்பு இளம் புன்னை நிரை மலர் சொரிவன ஒரு-பால் - சீறா:1003/1

கரை எலாம் புன்னை கானமும் கண்டல் அடவியும் கைதை அம் காடும் - வில்லி:6 18/3

பொங்கு இரும் புன்னை பூம் பொழில் முன்னி - உஞ்ஞை:40/22

பெரும் கால் புன்னை கரும் கோட்டு அணைத்த - உஞ்ஞை:40/68

போது பொறை ஆற்றா புன்னை அம் பொதும்பர் - உஞ்ஞை:40/251

புன்னை அம் பள்ளி பொழில்-தொறும் நாடும் - உஞ்ஞை:40/263

எழில் பூம் புன்னை பொழில் புடை நிவந்த - மகத:4/44

குறும் சினை புன்னை நறும் தாது ஆடி - மகத:6/9

நாள்மலர் புன்னை தாள் முதல் பொருந்தி - மகத:6/23

நாள்மலர் புன்னை தாள் முதல் அணைந்நு - மகத:7/79

தெய்வ பாவையை தேன் இமிர் புன்னை
தாள் முதல் பொருந்தி தான் அவள் கண்டதும் - மகத:9/16,17

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *