போங்கம் என்பது ஒரு குறிஞ்சி நிலத்து மரம்.
1. சொல் பொருள்
(பெ) மஞ்சாடி அல்லது ஆனைக் குன்றிமணி
2. சொல் பொருள் விளக்கம்
மஞ்சாடி அல்லது ஆனைக் குன்றிமணி
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Adenanthera pavonina
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
போங்கம் திலகம் தேம் கமழ் பாதிரி – குறி 74 இதன் பூக்கள் சற்று நீளமாயும் பூனை வால் போன்று கூந்தல் கொண்டும் அமைந்திருக்கும். கொட்டைகள் செந்நிறமாயும் பிரகாசமானவையாயும் இருக்கும். மஞ்சாடி விதைகளே பழங்கால இந்தியாவில் தங்கம் போன்ற பெறுமதிப்பு மிக்க மாலைகளை நிறுப்பதற்குப் பயன்பட்டன. மஞ்சாடி விதைகள் கழுத்தணிகள், கைம்மாலைகள் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகின்றன
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்