சொல் பொருள்
(பெ) 1. உள்ளே குடையப்பட்டது. 2. சிலம்பு
சொல் பொருள் விளக்கம்
உள்ளே குடையப்பட்டது.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
The state of being hollow, anklet
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வில் வகுப்புற்ற நல் வாங்கு குடைச்சூல் அம் சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து – அகம் 198/9,10 வில்லைப்போல் வகையமைந்தநன்மை பொருந்திய வளைந்த உள்ளே குடைந்து வெற்றிடமாயுள்ள அழகிய சிலம்பினை ஒலியாது ஒடுக்கி அச்சத்துடன் வந்து செ விரல் சிவந்த அம் வரி குடைச்சூல் அணங்கு எழில் அரிவையர் பிணிக்கும் – பதி 68/18,19 சிவந்த விரல்கள் மேலும் சிவந்து போன அழகிய வரிகளையும், சிலம்பையும் காண்பாரை வருத்தும் அழகையும் உடைய மகளிரின் மனத்தைத் தன்வயப்படுத்தும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்