Skip to content

இணைச் சொல்

இணைச் சொல்லைப் பிரித்துத் தனித்துப் பார்ப்பினும் அச்சொல்லுக்குப் பொருள் உண்டு. இனணச் சொல் என்பது தனிச்சொல்லாக நிற்பினும் நிற்கவும், இணைச்சொல்லாக நிற்பினும் நிற்கவும் இயைந்ததன்மையதாம்

தானம் தவம்

சொல் பொருள் தானம் – கொடை தவம் – சேவையைப் பெருக்குவதாய், அமைவதே தவம். சொல் பொருள் விளக்கம் தானம் – கொடை, பொருட்கொடை மட்டுமன்று தன்னைத் தரும் கொடையும் தானமேயாம். தன்- தான்-… Read More »தானம் தவம்

திரட்டி உருட்டி

சொல் பொருள் திரட்டுதல் – பரவிக்கிடப்பதை ஒன்றாக்குதல் திரட்டுதல்.உருட்டுதல் – திரட்டப்பட்டதை வேண்டும் அளவால் உருண்டையாக்குதல். இரண்டையும் செய்தல் திரட்டி உருட்டல் ஆகும். சொல் பொருள் விளக்கம் மட்குடம் வனைவாரும், எருவாட்டி தட்டுவாரும், முதற்கண்… Read More »திரட்டி உருட்டி

திண்ணக்கம் மண்ணக்கம்

சொல் பொருள் திண்ணக்கம் – சோம்பல் செயலாற்றும் மனமில்லாமை.மண்ணக்கம் – மண்ணுள் மண்ணாய் ஆகி மட்கிப் போகும் நிலை. சொல் பொருள் விளக்கம் திண்ணக்கம்- சோம்பல் செயலாற்றும் மனமில்லாமை. எதையும் பொருட்டாக எண்ணாமல் மன… Read More »திண்ணக்கம் மண்ணக்கம்

தில்லுமுல்லு

சொல் பொருள் தில்லு – வலிமை உடல் வலிமை கொழுப்பெடுத்த தன்மைமுல்லு – தேவையில்லாமல் முட்டி மோதல் சொல் பொருள் விளக்கம் “உனக்கு தில்லு இருந்தால் வந்து மோதிப்பார்” என்பதில் ‘தில்’ என்பதற்கு வலிமைப்… Read More »தில்லுமுல்லு

தோலும் வாலும்

சொல் பொருள் தோல் – தோல் என்பதும் வால் என்பதும் உழவர் பயன்படுத்தும் நீர் இறைப்பு பெட்டியொரு இணைந்துள்ள கருவிகள். இரும்பால் தகட்டால்-செய்யப்பட்ட சால் அல்லது கூனையில் இறுக்கிக் கட்டப்பட்ட பெரிய தோல் பை… Read More »தோலும் வாலும்

துண்டு துணி

சொல் பொருள் துண்டு – நெடிய பாவில் இருந்து துண்டு போடுவது-துண்டு துண்டாக அறுத்து அமைப்பது துண்டு;துணி – அத்துண்டையும் சிறிது சிறிதாக அறுத்து ஆக்குவது துணி. துணியிலும் சிறியது துணுக்கு. சொல் பொருள்… Read More »துண்டு துணி

முண்டும் முடிச்சும்

சொல் பொருள் முண்டு – மரத்தின் தூர் திண்டு திண்டாக பருத்திருத்தல்முடிச்சு – மரத்தின் தூரில் கணுக்கள் இருத்தல். சொல் பொருள் விளக்கம் முண்டும் முடிச்சுமாக இருக்கும் இந்த மரத்தை அறுக்க முடியாது. அரம்பத்தையும்,… Read More »முண்டும் முடிச்சும்

பொச்சரிப்பு பூழாப்பு

சொல் பொருள் பொச்சரிப்பு – உள்ளரிப்பாம் எரிவுபூழாப்பு – பொறாமை சொல் பொருள் விளக்கம் “அவன் பொச்சரிப்பும் பூழாப்பும் அவனை அமைதியாய் இருக்கவிடாது” என்பர். உட்சினமும், பொறாமையும் தாமே இருக்கும். விட்டு வைக்குமா? பொச்சாப்பு-மறதி;… Read More »பொச்சரிப்பு பூழாப்பு

புல்லரிப்பு பூரிப்பு

சொல் பொருள் புல்லரிப்பு – ஒரு நிகழ்ச்சியைக் காண்டலாலும் கேட்டலாலும் வரும் மயிர்க்கூச்செறிவுபூரிப்பு – மகிழ்ச்சி அல்லது மனவிம்மிதம். சொல் பொருள் விளக்கம் திடுக்கிடும் செய்திகளும் எதிர்பாராத திருப்பங்களும் உடைய கதை, நொடி கேட்குங்காலும்,… Read More »புல்லரிப்பு பூரிப்பு

பருக்கை தண்ணீர்

சொல் பொருள் பருக்கை – சோறுதண்ணீர் – சோற்று நீர் சொல் பொருள் விளக்கம் “பருக்கை தண்ணீர் ஆயிற்றா?” எனக் கேட்பது உண்டு. உண்டு ஆயிற்றா என்பதே அக்கேள்வி. கஞ்சித் தண்ணீர் என்பதும் ஒரு… Read More »பருக்கை தண்ணீர்