சொல் பொருள்
(வி.அ) நெடுங்காலமாக, வழிவழியாக
(பெ) பழமை,
சொல் பொருள் விளக்கம்
நெடுங்காலமாக, வழிவழியாக
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
for a long time, from the ancient times
antiquity, ancientness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இன்று என் நெஞ்சம் போல தொன்று நனி வருந்து-மன் அளிய தாமே ——————————————————— துறைவன் மாவே – நற் 163/6-12 இப்பொழுது என்னுடைய நெஞ்சம் போல, நெடுங்காலமாக மிகவும் வருந்தின; மிகவும் இரங்கத்தக்கன அவை; —————————————————– தலைவனுடைய தேர்க்குதிரைகள் குட முதல் தோன்றிய தொன்று தொழு பிறையின் – மது 193 மேல் அடிவானத்தில் காணப்படும் வழிவழியாகத் தொழுதுவரும் பிறையைப் போல தொன்று மொழிந்து தொழில் கேட்ப – மது 72 (தத்தம்)பழைமையான தொடர்புகளைக் கூறி, ஏவிய வழி ஒழுக
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்