தோகை என்பதன் பொருள்மயில்பீலி
சொல் பொருள் விளக்கம்
(பெ) 1. மயில்பீலி, 2. மயில், 3. நெல், கரும்பு ஆகியவற்றின் தாள், 4. விலங்கின் வால், 5. இறகு, சிறகு, 6. பெண்ணின் முடி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
tail of a peacock, peacock, Sheath, as of paddy or sugarcane, Tail of an animal, Feather.
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
விசும்பு இழி தோகைசீர் போன்றிசினே —————————————————————– பண்ணை பாய்வோள் தண் நறும் கதுப்பே – ஐங் 74/1-4 வானத்திலிருந்து இறங்கும் மயிலின் தோகை அழகைப் போல இருந்தது ——————————————————————- நீருக்குள் பாய்பவளின் குளிர்ந்த நறிய கூந்தல் மேக்கு எழு பெரும் சினை இருந்த தோகை பூ கொய் மகளிரின் தோன்றும் நாடன் – குறு 26/2,3 மேலே எழும் பெரிய கிளையில் இருந்த மயில் பூக் கொய்யும் மகளிரைப் போல் தோன்றும் நாட்டையுடைய தலைவன் அழல் நுதி அன்ன தோகை ஈன்ற கழனி நெல் ஈன் கவை முதல் அலங்கல் – அகம் 13/18,19 தீக்கொழுந்துகளைப் போன்ற தோடுகள் ஈன்ற வயற்காட்டு நெல்லின் கவைத்த அடியைக் கொண்ட நெற்கதிர் வை எயிற்று வலம் சுரி தோகை ஞாளி மகிழும் – அகம் 122/7,8 கூரிய பல்லினையும் வலமாகச் சுரிதலுடைய வாலினையுமுடைய நாய் குரைக்கும் நீர் செத்து அயின்ற தோகை வியல் ஊர் - குறி 191 கமழ் தாது ஆடிய கவின் பெறு தோகை/பாசறை மீமிசை கணம்_கொள்பு ஞாயிற்று - நற் 396/5,6 மேக்கு எழு பெரும் சினை இருந்த தோகை/பூ கொய் மகளிரின் தோன்றும் நாடன் - குறு 26/2,3 மட மா தோகை குடுமியின் தோன்றும் - குறு 347/3 விசும்பு இழி தோகை சீர் போன்றிசினே - ஐங் 74/1 தோகை மாட்சிய மடந்தை - ஐங் 293/4 எரி மருள் வேங்கை இருந்த தோகை/இழை அணி மடந்தையின் தோன்றும் நாட - ஐங் 294/1,2 விரிந்த வேங்கை பெரும் சினை தோகை/பூ கொய் மகளிரின் தோன்றும் நாட - ஐங் 297/1,2 கொடிச்சி கூந்தல் போல தோகை/அம் சிறை விரிக்கும் பெரும் கல் வெற்பன் - ஐங் 300/1,2 சிகை மயிலாய் தோகை விரித்து ஆடுநரும் - பரி 9/64 தோகை ஆர் குரல் மணந்து தணந்தோரை - பரி 14/8 அழல் நுதி அன்ன தோகை ஈன்ற - அகம் 13/18 தோகை காவின் துளுநாட்டு அன்ன - அகம் 15/5 வலம் சுரி தோகை ஞாளி மகிழும் - அகம் 122/8 குடுமி நெற்றி நெடு மா தோகை/காமர் கலவம் பரப்பி ஏமுற - அகம் 194/11,12 தோகை தூவி தொடை தார் மழவர் - அகம் 249/12 கறங்கு இசை வெரீஇ பறந்த தோகை/அணங்கு உடை வரைப்பு_அகம் பொலிய வந்து இறுக்கும் - அகம் 266/18,19 காமர் பீலி ஆய் மயில் தோகை/இன் தீம் குரல துவன்றி மென் சீர் - அகம் 358/2,3 காமர் பீலி ஆய் மயில் தோகை/வேறுவேறு இனத்த வரை வாழ் வருடை - அகம் 378/5,6 தோகை மயில் அன்ன சாயலாய் தூற்றுங்கால் - சிறுபஞ்:103/3
பயன்பாடு
மயில்தோகை விரித்தாடும் .
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்