சொல் பொருள்
(பெ) 1. தென்னை, பனை ஆகியவற்றின் இலை, 2. நெல், கரும்பு ஆகியவற்றின் தாள், 3. பூவிதழ்கள், 4. தொகுதி, கூட்டம், திரள், 5. பூ 6. காதணி,
விளவங்கோடு வட்டாரத்தில் தோடு என்பது ஓடை என்னும் பொருளில் வழங்கும்.
துளை, பொந்து என்னும் பொருளில் மதுரை வட்டார வழக்காக உள்ளது
சொல் பொருள் விளக்கம்
விளவங்கோடு வட்டாரத்தில் தோடு என்பது ஓடை என்னும் பொருளில் வழங்கும். தொடப்பட்டது (தோண்டப் பட்டது) தோடு ஆகும். நீரால் தோண்டப்பட்டோ, மக்களால் தோண்டப்பட்டோ அமைந்தவையே ஓடை ஆகும். ஆதலால் அப் பொருள் குறிக்க அமைந்த வழக்கு இது. தோடு என்பது துளை, பொந்து என்னும் பொருளில் மதுரை வட்டார வழக்காக உள்ளது. அதுவும் துளைத்துத் தோண்டல் வழியதே.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
coconut tree pr palm leaf sheath of paddy, sugarcane etc., flower petals collection. assemblage, multitude flower ear stud for women
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வண் தோட்டு தெங்கின் வாடு மடல் வேய்ந்த மஞ்சள் முன்றில் மணம் நாறு படப்பை – பெரும் 353,354 வளவிய தோட்டினையுடைய தென்னை மரத்தின் வற்றிய மடலினை வேய்ந்த, மஞ்சளையுடைய முற்றத்தினையும் மணல் கமழ்கின்ற சுற்றுப்புறங்களையும் உடைய வண் தோட்டு நெல்லின் வரு கதிர் வணங்க – நெடு 22 வளப்பமான தாள்களையுடைய நெல்லிலிருந்து மேலெழுந்த கதிர் (முற்றி)வளைய; தோடு ஆர் தோன்றி குருதி பூப்ப – முல் 96 இதழ்கள் நிறைந்த தோன்றி உதிரம் போல பூப்பவும் நோன் சினை இருந்த இரும் தோட்டு புள்_இனம் – குறு 191/2 வலிய கிளையில் இருந்த பெரிய கூட்டமான பறவையினம் தோடு அவிழ் கமழ் கண்ணி தையுபு புனைவார்க்கண் தோடு உற தாழ்ந்து துறை_துறை கவின் பெற – கலி 28/3,4 மலர்ந்த பூக்கள் மணக்கும் மாலைகளைக் கட்டிச் சூடிக்கொள்வாருக்காக, அவர்களின் காதணிகளைத் தொடுமாறு மலர்க்கொத்துக்கள் தாழ்ந்து துறைகள்தோறும் அழகு செய்ய
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
Enlightened. Keep up the good work