நித்திலம் –முத்து.
1. சொல் பொருள் விளக்கம்
(பெ) முத்து
மொழிபெயர்ப்புகள்
2. ஆங்கிலம்
3.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
அழி பசி வருத்தம் வீட பொழி கவுள் 140 தறுகண் பூட்கை தயங்கு மணி மருங்கின் சிறு கண் யானையொடு பெரும் தேர் எய்தி யாம் அவண்-நின்றும் வருதும் நீயிரும் இவண் நயந்து இருந்த இரும் பேர் ஒக்கல் செம்மல் உள்ளமொடு செல்குவிர் ஆயின் 145 அலை நீர் தாழை அன்னம் பூப்பவும் தலை நாள் செருந்தி தமனியம் மருட்டவும் கடும் சூல் முண்டகம் கதிர் மணி கழாஅலவும் நெடும் கால் புன்னை நித்திலம் வைப்பவும் நெடிய தாளையுடைய புன்னை முத்துக்கள் (போல அரும்புகள்) வைக்கவும் நித்திலப் பைம்பூண் நிலாத்திகழ் அவிரொளித் தண்கதிர் மதியத் தன்ன மேனியன் ஒண்கதிர் நித்திலம் பூணொடு புனைந்து வெண்ணிறத் தாமரை அறுகை நந்தியென்று இன்னவை முடித்த நன்னிறச் சென்னியன் 20 சிலப்பதிகாரம் அழற்படு காதை களிறு போர் உற்ற களம் போல நாளும் 110 தெளிவு இன்று தீம் நீர் புனல் மதி மாலை மால் இருள் கால்சீப்ப கூடல் வதி மாலை மாறும் தொழிலான் புது மாலை நாள் அணி நீக்கி நகை மாலை பூ வேய்ந்து தோள் அணி தோடு சுடர் இழை நித்திலம் 115 பாடுவார் பாடல் பரவல் பழிச்சுதல் - பரி 10/115,116 வையை கரையே கைவண் தோன்றல் ஈகை போன்ம் என மை படு சிலம்பின் கறியொடும் சாந்தொடும் நெய் குடை தயிரின் நுரையொடும் பிறவொடும் எ வயினானும் மீது_மீது அழியும் துறையே முத்து நேர்பு புணர் காழ் மத்தக நித்திலம் 5 பொலம் புனை அவிர் இழை கலங்கல் அம் புனல் மணி - பரி 16/5,6 நீராடும் துறைகளில், முத்துக்களை ஒன்றாகக் கட்டிய வடம், தலைக்கோலம் என்ற முத்தணி, பொன்னால் செய்யப்பட்ட ஒளிரும் அணிகலன்கள், கலங்கலான அழகிய நீரைப் போன்ற சிவந்த மணிகள், ஆகியவை, வலமாகச் சுழித்துக்கொண்டு வரும் சுழியினால் உந்தப்பட்டுவர 48 எக்கர் இடு மணல் மேல் ஓதம் தர வந்த நித்திலம் நின்று இமைக்கும் நீள் கழி தண் சேர்ப்ப மிக்க மிகு புகழ் தாங்குபவோ தற்சேர்ந்தார் ஒற்கம் கடைப்பிடியாதார் - ஐந்50:48/2 49 எங்கு வருதி இரும் கழி தண் சேர்ப்ப பொங்கு திரை உதைப்ப போந்து ஒழிந்த சங்கு நரன்று உயிர்த்த நித்திலம் நள் இருள் கால் சீக்கும் வரன்று உயிர்த்த பாக்கத்து வந்து - திணை150:49/3 ஏற்ற வாயில் இரண்டுடன் பொலிய, தோற்றிய அரங்கில் - தொழுதனர் ஏத்த; பூதரை எழுதி, மேல் நிலை வைத்து; தூண் நிழல் புறப்பட, மாண் விளக்கு எடுத்து; ஆங்கு, ஒரு முக எழினியும், பொரு முக எழினியும், கரந்து வரல் எழினியும், புரிந்துடன் வகுத்து - ஆங்கு; ஓவிய விதானத்து, உரை பெறு நித்திலத்து மாலைத் தாமம் வளையுடன் நாற்றி; விருந்துபடக் கிடந்த அரும் தொழில் அரங்கத்து - 3. அரங்கேற்று காதை சிலப். 3, 112-3
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்