சொல் பொருள்
(பெ) 1. பாழிடம், 2. போர்க்களம், 3. பாசறை,
சொல் பொருள் விளக்கம்
1. பாழிடம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
waste land, desert, battlefield, war camp
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிறு மறி தழீஇய தெறி நடை மடப்பிணை பூளை நீடிய வெருவரு பறந்தலை வேளை வெண் பூ கறிக்கும் ஆள் இல் அத்தம் ஆகிய காடே – புறம் 23/19-22 சிறிய மறியை அணைத்துக்கொண்ட துள்ளிய நடையையுடைய மெல்லிய பெண்மான் பூளை ஓங்கி வளர்ந்த அஞ்சத்தக்க பாழிடத்து வேளையினது வெளிய பூவைத் தின்னும் ஆளற்ற அருஞ்சுரமாகிய காட்டுவழியில் கூகை கோழி வாகை பறந்தலை பசும் பூண் பாண்டியன் வினை வல் அதிகன் களிறொடு பட்ட ஞான்றை – குறு 393/3-5 கோட்டான்களாகிய கோழிகளையுடைய வாகை என்னும் போர்க்களத்தில் பசும்பூண் பாண்டியனின் செயல்திறம் மிக்க அதிகன் என்பான் தன் யானையோடு இறந்தபோது களிற்று கணம் பொருத கண் அகன் பறந்தலை விசும்பு ஆடு எருவை பசும் தடி தடுப்ப – புறம் 64/3,4 யானைக் கூட்டம் பொருத இடம் அகன்ற பாசறைக்கண் ஆகாயத்தின்கண்ணே பறக்கும் பருந்தினைப் பசிய ஊன் தடி தடுப்ப
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்