Skip to content
மந்தி

மந்தி என்பதன் பொருள்பெண் குரங்கு

1. சொல் பொருள் விளக்கம்

(41) 1. குரங்கு, 2. பெண் குரங்கு, வானரம்

பார்க்க குரங்கு கடுவன் கலை முசு ஊகம் பெருங்கிளை கணக்கலை கிளை

மொழிபெயர்ப்புகள்

2. ஆங்கிலம்

monkey, female monkey

3. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

மா மேயல் மறப்ப மந்தி கூர – நெடு 9

விலங்குகள் மேய்தலை மறந்துபோக, குரங்குகள் (குளிரால்)கூனிப்போக

பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும்
மூடும் நாகும் கடமையும் அளகும்
மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும்
அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே – தொல்-பொருள்-மர/3

நெடும் கை யானை நெய் மிதி கவளம்
கடும் சூல் மந்தி கவரும் காவில் – பெரும் 394,395

நெடிய கைகளையுடைய யானைக்கு இடும் நெய்வார்த்து மிதித்த கவளத்தை,
முதற் சூலையுடைய மந்தி கவர்ந்துகொண்டுபோகும் சோலையினையும்;

மந்தி
மந்தி

மந்தி கணவன் கல்லா கடுவன் – ஐங் 274/1

மந்தியின் கணவனான, ஒன்றையும் கற்றுக்கொள்ளாத ஆண்குரங்கு

வரை மந்தி கழி மூழ்க – பொரு 224

மகாஅர் அன்ன மந்தி மடவோர் – சிறு 56

கடும் சூல் மந்தி கவரும் காவில் – பெரும் 395

மந்தி சீக்கும் மா துஞ்சு முன்றில் – பெரும் 497

மந்தி ஆட மா விசும்பு உகந்து – மது 334

மா மேயல் மறப்ப மந்தி கூர – நெடு 9

கை கோள் மறந்த கரு விரல் மந்தி
அரு விடர் வீழ்ந்த தன் கல்லா பார்ப்பிற்கு – மலை 311,312

முந்து விளை பெரும் குரல் கொண்ட மந்தி
கல்லா கடுவனொடு நல் வரை ஏறி – நற் 22/2,3

துஞ்சு பதம் பெற்ற துய் தலை மந்தி
கல்லென் சுற்றம் கை கவியா குறுகி – நற் 57/3,4

துய் தலை மந்தி வன் பறழ் தூங்க – நற் 95/4

செம் முக மந்தி செய்குறி கரும் கால் – நற் 151/8

புன் தலை மந்தி வன் பறழ் நக்கும் – நற் 168/5

மட மா மந்தி மாணா வன் பறழ் – நற் 233/2

கொழு முதல் ஆய் கனி மந்தி கவரும் – நற் 251/3

துய் தலை மந்தி தும்மும் நாட – நற் 326/4

கரு விரல் மந்தி செம் முக பெரும் கிளை – நற் 334/1

செம் முக மந்தி ஆரும் நாட – நற் 355/5

புன் தலை மந்தி தூர்ப்ப தந்தை – நற் 373/2

புன் தலை மந்தி கல்லா வன் பறழ் – நற் 379/1

மகவு உடை மந்தி போல – குறு 29/6

மந்தி
மந்தி

கைம்மை உய்யா காமர் மந்தி
கல்லா வன் பறழ் கிளை முதல் சேர்த்தி – குறு 69/2,3

பைம் கண் மந்தி பார்ப்பொடு கவரும் – குறு 335/4

அவரை அருந்த மந்தி பகர்வர் – ஐங் 271/1

கரு விரல் மந்தி கல்லா வன் பறழ் – ஐங் 272/1

புன் தலை மந்தி வன் பறழ் ஆரும் – ஐங் 273/2

மந்தி கணவன் கல்லா கடுவன் – ஐங் 274/1

மந்தி காதலன் முறி மேய் கடுவன் – ஐங் 276/1

கல்லா மந்தி கடுவனோடு உகளும் – ஐங் 277/2

குளவி மேய்ந்த மந்தி துணையோடு – ஐங் 279/2

கரு விரல் மந்தி கல்லா வன் பார்ப்பு – ஐங் 280/1

மக முயங்கு மந்தி வரை_வரை பாய – பரி 15/38

மரல் சாய மலை வெம்ப மந்தி உயங்க – கலி 13/5

மெல் விரல் மந்தி குறை கூறும் செம்மற்றே – கலி 40/16

மந்தி நல் அவை மருள்வன நோக்க – அகம் 82/8

செம் முக மந்தி ஆடும் – அகம் 241/15

கயம் தலை மந்தி உயங்கு பசி களைஇயர் – அகம் 288/12

கல்லா மந்தி கடுவனோடு உகளும் – அகம் 378/21

அருவி பாய்ந்த கரு விரல் மந்தி
செழும் கோள் பலவின் பழம் புணை ஆக – அகம் 382/9,10

இனி யான் விடுக்குவென் அல்லென் மந்தி
பனி வார் கண்ணள் பல புலந்து உறைய – அகம் 396/11,12

மன்ற பலவின் மா சினை மந்தி
இரவலர் நாற்றிய விசி கூடு முழவின் – புறம் 128/1,2

மந்தி சீக்கும் அணங்கு உடை முன்றிலில் – புறம் 247/4

மயில் ஆடு அரங்கில் மந்தி காண்பன காண் – மணி 4/6

மந்தி
மந்தி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு மூலச்சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *