சொல் பொருள்
பெ) 1. வானம், 2. மேலுலகம்
சொல் பொருள் விளக்கம்
வானம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Sky, heaven
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஞாயிறு, திங்கள், மீன்கள், மேகங்கள் நடமாடும் இடம் விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து – நெடு 161 விண் வீற்றிருக்கும் கய மீன் விரி தகையின் – பரி 23/12 விண் இவர் விசும்பின் மீனும் – புறம் 302/10 மங்குல் மா மழை விண் அதிர்பு முழங்கி – அகம் 294/1 மிக உயரமாக இருக்கும் மலை, கட்டிடமாடம் போன்றவற்றை, ’விண் பொரு’, ’விண் தோய்’, ’விண் உயர்’, ’விண் உற ஓங்கு’ என்று குறிப்பிடுவது உண்டு விண் பொரு நெடு வரை குறிஞ்சி கிழவ – திரு 267 விண் பொரு நெடு வரை பரிதியின் தொடுத்த – திரு 299 விண் பொர நிவந்த வேயா மாடத்து – பெரும் 348 விண் பொரும் சென்னி கிளைஇய காந்தள் – குறி 196 விண் பொரு நெடும் குடை இயல் தேர் மோரியர் – அகம் 69/10 விண் பொரு நெடு நகர் தங்கி இன்றே – அகம் 167/4 விண் பொரு நெடு வரை கவாஅன் – அகம் 173/17 விண் பொரு புகழ் விறல் வஞ்சி – புறம் 11/6 கண் பொர விளங்கும் நின் விண் பொரு வியன் குடை – புறம் 35/19 விண் பொரு நெடும் குடை கொடி தேர் மோரியர் – புறம் 175/6 விண் தோய் மாடத்து விளங்கு சுவர் உடுத்த – பெரும் 369 விண் தோய் பணவை மிசை ஞெகிழி பொத்த – குறி 226 விண் தோய் விடர்_அகத்து இயம்பும் – குறு 241/6 விண் தொட நிவந்த விலங்கு மலை கவாஅன் – குறு 262/6 விண் தோய் மா மலை சிலம்பன் – குறு 362/6 விண் தோய் கல் நாடனும் நீயும் வதுவையுள் – கலி 39/38 விண் தோய் வரை பந்து எறிந்த அயா வீட – கலி 40/22 விண் தோய் விடர்_அகத்து இயம்பும் அவர் நாட்டு – அகம் 8/12 விண் தோய் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 111/15 வீயா விழு புகழ் விண் தோய் வியன் குடை – அகம் 135/11 விண் தோய் சிமைய விறல் வரை கவாஅன் – அகம் 179/1 விண் தோய் சிமைய விறல் வரை கவாஅன் – புறம் 151/2 விண் தோய் தலைய குன்றம் பிற்பட – புறம் 379/13 விண்டு அனைய விண் தோய் பிறங்கல் – புறம் 391/2 விண் உயர் பிறங்கல் விலங்கு மலை நாட்டே – குறு 144/7 விண் உயர் அரண் பல வௌவிய – ஐங் 443/4 விண் உயர் வைப்பின காடு ஆயின நின் – பதி 23/15 விண் உயர்ந்து ஓங்கிய கடற்றவும் பிறவும் – பதி 30/29 விண் உயர் புள் கொடி விறல் வெய்யொனும் – புறம் 56/6 விண் உற ஓங்கிய பல் படை புரிசை – மது 352 விண் உற ஓங்கிய பனி இரும் குன்றத்து – அகம் 281/10 விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது ஒரு கை – திரு 107,108 விண்ணுலகத்திற்குச் செல்லும் முறைமையினையுடைய துறவிகட்குப் பாதுகாவலாக ஏந்தியது ஒரு கை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்