சொல் பொருள்
(பெ) பண்டைத் தமிழகத்தில் இருந்த வளப்பமான ஓர் ஊர்,
சொல் பொருள் விளக்கம்
பண்டைத் தமிழகத்தில் இருந்த வளப்பமான ஓர் ஊர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a fertile ancient city
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வண்டு மூசு நெய்தல் நெல்லிடை மலரும் அரியல் அம் கழனி ஆர்க்காடு – நற் 190/5,6 வண்டுகள் மொய்க்க மலரும் நெய்தல் பூக்கள் நெற்பயிர்களுக்கிடையே மலர, அவற்றினின்றும் தேன்வடியும் அழகிய வயல்களுள்ள ஆர்க்காடு எனும் ஊர் ஏந்துகோட்டு யானைச் சேந்தன் தந்தை அரியல் அம் புகவின் அம் தோட்டு வேட்டை நிரைய ஒள்வாள் இளையர் பெருமகன் அழிசி ஆர்க்காடு அன்ன – குறு 258/4-7 ஏந்திய மருப்பினையுடைய யானைகளுடைய சேந்தன் என்பானின் தந்தையான, தேறலாகிய இனிய உணவினைக் கொண்ட, அழகிய கூட்டங்களான விலங்குகளை வேட்டையாடுகின்ற வரிசையான வாள்களை உடைய வீரர்களுக்குத் தலைவனான, அழிசியின் ஆர்க்காடு என்னும் நகரத்தைப் போன்ற
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்