Skip to content
குவளை

குவளை என்பது ஒரு வகை கொடி, மலர்.

1. சொல் பொருள்

(பெ) 1.செங்குவளை, கருங்குவளை, 2. செங்கழுநீர், 3. தட்டையான அடிப்பாகத்தை உடைய ஒரு கொள்கலன்

2. சொல் பொருள் விளக்கம்

குவளைமலர் குளத்தில் பூக்கும். செங்குவளை கருங்குவளை வெண்குவளை என பல வகைகள் உண்டு. குவளை மணமுள்ள மலர். ஆம்பல் மணமில்லா மலர்.

பெண்களின் கண்களுக்கு உவமையாக கூறப்பட்ட ஒரு வகை கருநீல நிறப் பூ

குவளை
கருங்குவளை

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Blue nelumbo

Purple Indian water lily, Nymphaea stellata, Nymphaea nouchali

tumbler

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

குவளை அன்ன ஏந்து எழில் மழை கண் – நற் 6/3

கருங்குவளை மலரைப் போன்ற ஏந்திய அழகுள்ள குளிர்ந்த கண்களையுடைவளும்

அரக்கு இதழ் குவளையொடு நீலம் நீடி – பெரும் 293

சாதிலிங்கம் (போன்ற)இதழையுடைய குவளைப் பூவோடே நீலப்பூவும் வளர்ந்து

காணின் குவளை கவிழ்ந்து நிலன் நோகும்
மாண்இழை கண் ஒவ்வேம் என்று - குறள் 112:4

பைம் தாள் குவளை தூ இதழ் கிள்ளி - திரு 22

பெரும் பல் குவளை சுரும்பு படு பன் மலர் - மது 566

நெடும் தொடர் குவளை வடிம்பு உற அடைச்சி - மது 588

போது அவிழ் குவளை புது பிடி கால் அமைத்து - நெடு 83

தண் கய குவளை குறிஞ்சி வெட்சி - குறி 63

நிரை இதழ் குவளை கடி வீ தொடினும் - மலை 189

குவளை அம் பைம் சுனை அசைவு விட பருகி - மலை 251

குவளை அன்ன ஏந்து எழில் மழை கண் - நற் 6/3

பறியா குவளை மலரொடு காந்தள் - நற் 34/2

இவளொடும் செலினோ நன்றே குவளை/நீர் சூழ் மா மலர் அன்ன கண் அழ - நற் 37/4,5

குவளை உண்கண் மகிழ் மட நோக்கே - நற் 77/12

குட வரை சுனைய மா இதழ் குவளை/வண்டு படு வான் போது கமழும் - நற் 105/8,9

முது நீர் இலஞ்சி பூத்த குவளை/எதிர் மலர் பிணையல் அன்ன இவள் - நற் 160/8,9

குறும் சுனை குவளை அடைச்சி நாம் புணரிய - நற் 204/3

குவளை உண்கண் இவள் ஈண்டு ஒழிய - நற் 205/6

குவளை நாறும் கூந்தல் தே மொழி - நற் 262/7

குவளை உண்கண் என் மகள் ஓர் அன்ன - நற் 271/8

ஆயமொடு குற்ற குவளை/மா இதழ் மா மலர் புரைஇய கண்ணே - நற் 317/9,10

குவளை குறுநர் நீர் வேட்டு ஆங்கு - நற் 332/2

பன் மாண் அகட்டில் குவளை ஒற்றி - நற் 370/8

குல்லை குளவி கூதளம் குவளை/இல்லமொடு மிடைந்த ஈர்ம் தண் கண்ணியன் - நற் 376/5,6

யாரோ பிரிகிற்பவரே குவளை/நீர் வார் நிகர் மலர் அன்ன நின் - நற் 391/8,9

பசலை ஆர்ந்த நம் குவளை அம் கண்ணே - குறு 13/5

அமளி தைவந்தனனே குவளை/வண்டு படு மலரின் சாஅய் - குறு 30/4,5

குவளை உண்கண் குய் புகை கழும - குறு 167/3

இவளின் மேவினம் ஆகி குவளை/குறும் தாள் நாள்_மலர் நாறும் - குறு 270/6,7

குண்டு நீர் பைம் சுனை பூத்த குவளை/வண்டு பயில் பல் இதழ் கலைஇ - குறு 291/6,7

குவளை நாறும் குவை இரும் கூந்தல் - குறு 300/1

சுனை பூ குவளை சுரும்பு ஆர் கண்ணியன் - குறு 321/2

குவளை உண்கண் கலுழ - குறு 339/6

குவளை தண் தழை இவள் ஈண்டு வருந்த - குறு 342/5

சுனை பூ குவளை தொடலை தந்தும் - குறு 346/4

நீர் கால்யாத்த நிரை இதழ் குவளை/கோடை ஒற்றினும் வாடாது ஆகும் - குறு 388/1,2

குவளை உண்கண் ஏஎர் மெல் இயல் - ஐங் 72/3

கள் நறும் குவளை நாறி - ஐங் 73/3

பாசடை நிவந்த பனி மலர் குவளை/உள்ளகம் கமழும் கூந்தல் மெல் இயல் - ஐங் 225/2,3

குன்றக நெடும் சுனை குவளை போல - ஐங் 500/2

தொடர்ந்த குவளை தூ நெறி அடைச்சி - பதி 27/2

குவளை குழை காதின் கோல செவியின் - பரி 11/97

குவளை பசும் தண்டு கொண்டு - பரி 11/102

நீருள் குவளை வெந்து அற்று - கலி 41/31

சே இதழ் அனைய ஆகி குவளை/மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை - அகம் 19/10,11

தெண் நீர்க்கு ஏற்ற திரள் கால் குவளை/பெருந்தகை சிதைத்தும் அமையா பருந்து பட - அகம் 27/13,14

ஆம்பல் மெல் அடை கிழிய குவளை/கூம்பு விடு பன் மலர் சிதைய பாய்ந்து எழுந்து - அகம் 36/3,4

தெரி இதழ் குவளை தேம் பாய் தாரன் - அகம் 38/2

ஆம்பல் மெல் அடை கிழிய குவளை/கூம்பு விடு பன் மலர் மாந்தி கரைய - அகம் 56/4,5

மா தாள் குவளை மலர் பிணைத்து அன்ன - அகம் 62/4

தாது உறு குவளை போது பிணி அவிழ - அகம் 125/6

குறும் சுனை குவளை வண்டு பட சூடி - அகம் 128/9

குவளை உண்கண் இவளொடு செலற்கு என - அகம் 129/16

குவளை உண்கண் தெண் பனி மல்க - அகம் 138/2

குவளை உண்கண் இவளும் யானும் - அகம் 156/8

தாழி குவளை வாடு மலர் சூட்டி - அகம் 165/11

குவளை நாள்மலர் புரையும் உண்கண் இ - அகம் 179/12

தண் கயத்து அமன்ற ஒண் பூ குவளை/அரும்பு அலைத்து இயற்றிய சுரும்பு ஆர் கண்ணி - அகம் 180/5,6

குவளை உண்கண் கலுழவும் திருந்து_இழை - அகம் 183/1

நன் முகை அதிரல் போதொடு குவளை/தண் நறும் கமழ் தொடை வேய்ந்த நின் - அகம் 223/14,15

கண் என மலர்ந்த மா இதழ் குவளை/கல் முகை நெடும் சுனை நம்மொடு ஆடி - அகம் 228/4,5

குவளை உண்கண் இவளும் நம்மொடு - அகம் 285/13

மல்லல் அறைய மலிர் சுனை குவளை/தேம் பாய் ஒண் பூ நறும் பல அடைச்சிய - அகம் 308/11,12

குவளை உண்கண் கலுழ நின் மாட்டு - அகம் 310/5

கண் நேர் இதழ தண் நறும் குவளை/குறும் தொடர் அடைச்சிய நறும் பல் கூழை - அகம் 358/5,6

மா இதழ் குவளை மலர் பிணைத்து அன்ன - அகம் 361/2

நெடு நீர் பயந்த நிரை இதழ் குவளை/எதிர் மலர் இணை போது அன்ன தன் - அகம் 381/19,20

புகர் இல் குவளை போதொடு தெரி இதழ் - அகம் 393/24

தண் கயம் பயந்த வண் கால் குவளை/மாரி மா மலர் பெயற்கு ஏற்று அன்ன - அகம் 395/1,2

தடவு வாய் கலித்த மா இதழ் குவளை/வண்டு படு புது மலர் தண் சிதர் கலாவ - புறம் 105/2,3

தீம் நீர் பெரும் குண்டு சுனை பூத்த குவளை/கூம்பு அவிழ் முழு_நெறி புரள்வரும் அல்குல் - புறம் 116/1,2

குவளை பைம் சுனை பருகி அயல - புறம் 132/5

பனி நீர் பூவா மணி மிடை குவளை/வால் நார் தொடுத்த கண்ணியும் கலனும் - புறம் 153/7,8

குவளை உண்கண் இவளை தாயே - புறம் 348/6

கயத்து வளர் குவளையின் அமர்த்த கண்ணே - ஐங் 277/5

பைம் சுனை பூத்த பகு வாய் குவளையும்/அம் சில் ஓதி அசை நடை கொடிச்சி - ஐங் 299/2,3

நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும் - பரி 2/13

குவளையும் நின் உழவு அன்றோ இகலி - கலி 64/16

கழனி உழவர் குற்ற குவளையும்/கடி மிளை புறவின் பூத்த முல்லையொடு - அகம் 216/9,10

நீர் தரு மகளிர் குற்ற குவளையும்/வன்புல கேளிர்க்கு வரு விருந்து அயரும் - புறம் 42/16,17

அரக்கு இதழ் குவளையொடு நீலம் நீடி - பெரும் 293

மா இதழ் குவளையொடு நெய்தலும் மயங்கி - பட் 241

குவளையொடு தொடுத்த நறு வீ முல்லை - நற் 367/8

குவளையொடு பொதிந்த குளவி நாறு நறு நுதல் - குறு 59/3

நாறு இதழ் குவளையொடு இடை இடுபு விரைஇ - குறு 62/2

தெள் நீர் குவளை பொரு கயல் வேல் என்று - நாலடி:5 4/1

குவளை அம் பூவொடு செம் கயல் மீன் சூடி - திணை150:147/3

காணின் குவளை கவிழ்ந்து நிலன் நோகும் - குறள்:112 4/1

விரி நீர் குவளையை ஆம்பல் ஒக்கல்லா - நாலடி:24 6/2

பொன் யாத்து கொண்டு புகுதல் குவளையை
தன் நாரால் யாத்துவிடல் - பழ:365/3,4

கூட நின்று ஓடை தன் குவளை கண் திறந்து - தேம்பா:1 48/1

கோ உலவு இஞ்சி சூழ்ந்த குவளை நீள் அகழி தோற்றம் - தேம்பா:2 8/4

நீர் வளர் குவளை தேன் துளித்தல் நேர் அவன் - தேம்பா:13 14/2

ஒள் இலை குவளை கண் விழித்து உகுத்த தேன் - தேம்பா:17 5/2

சுனைகள் கண் குவளை இமையா நோக்க சுனை கரை மேல் - தேம்பா:20 17/2

சுனை வளர் குவளை ஆதி சொரி மது மலர்கள் வாடி - தேம்பா:29 8/1

மை கொடு குவளை கண் நோக்கி வாளிச - தேம்பா:30 45/1

கொழும் சுனை கண்கள் ஆய குவளைகள் இமையா நோக்க - தேம்பா:26 96/2

கொம்பு அலர் தருவின் உச்சி குவளையே பூத்தல் போன்றும் - தேம்பா:12 75/2
குவளை
கருங்குவளை
கழுநீர் ஆம்பல் முழுநெறி குவளை
அரும்பு பொதி அவிழ்ந்த சுரும்பு இமிர் தாமரை - புகார்: 2/14,15

காமரு குவளை கழுநீர் மா மலர் - புகார்:4/40


காண்வரு குவளை கண்மலர் விழிப்ப - புகார்:4/76

தாழி குவளை சூழ் செங்கழுநீர் - புகார்:5/192

மாதர் வாள் முகத்து மணி தோட்டு குவளை
போது புறங்கொடுத்து போகிய செம் கடை - புகார்: 5/230,231

கோதை பரிந்து அசைய மெல் விரலால் கொண்டு ஓச்சும் குவளை மாலை - புகார்:7/43

குவளை அல்ல கொடிய கொடிய - புகார்:7/96

குறுநர் இட்ட குவளை அம் போதொடு - புகார்:10/86

குவளை உண்கண் தவள வாள் முகத்தி - மது:23/2

வண்டு உண மலர்ந்த மணி தோட்டு குவளை
முண்டக கோதையொடு முடித்த குஞ்சியின் - வஞ்சி: 27/234,235

கரு நெடும் குவளையும் குமிழும் பூத்து ஆங்கு - புகார்:5/215

குவளையும் குமிழும் கொவ்வையும் கொண்ட - புகார்:8/75

கொழும் கொடி அறுகையும் குவளையும் கலந்து - புகார்:10/132

கரு நெடும் குவளையும் ஆம்பலும் கமலமும் - மது:13/184

தண் நறு முல்லையும் தாழ் நீர் குவளையும்
கண் அவிழ் நெய்தலும் கதுப்பு உற அடைச்சி - மது: 14/76,77

தாழி குவளையொடு தண் செங்கழுநீர் - புகார்:4/64

குவளை மேய்ந்த குட கண் சேதா - மணி:5/130

மா இதழ் குவளை மலர் புறத்து ஓட்டி - மணி:18/74

குவளை செம் கணும் குறிப்பொடு வழாஅள் - மணி:20/76

தாமரை குவளை கழுநீர் ஆம்பல் - மணி:28/20

ஆம்பலும் குவளையும் தாம் புணர்ந்து மயங்கி - மணி:8/7

மா மலர் குவளையும் நெய்தலும் மயங்கிய - மணி:11/38

மயிலையும் செயலையும் மாவும் குவளையும்
பயில் இதழ் கமலமும் பருவத்து அலர்ந்த - மணி: 24/38,39

கூடினார் கண் அம் மலர் குவளை அம் குழி-இடை - சிந்தா:1 66/1

குன்று அயல் மணி சுனை குவளை கண் விழிப்பவும் - சிந்தா:1 148/2

குனி வளர் சிலையை கொன்ற குவளை கண் கயலை கொன்ற - சிந்தா:2 486/2

அரக்கு எறி குவளை வாள் கண் அம் வளை தோளினாளை - சிந்தா:3 560/1

காசு அறு குவளை காமர் அக இதழ் பயில மட்டித்து - சிந்தா:3 622/3

உறை செல நீக்கி பைம் தாள் ஒண் மணி குவளை நீட்ட - சிந்தா:3 668/3

நல்லவள் நோக்கம் நாய்கன் தேர்ந்து பூம் குவளை போதின் - சிந்தா:3 669/1

உள் நட்ட குவளை போலும் உருவ கண் வெருவி ஆட - சிந்தா:3 676/2

குட்ட நீர் குவளை எல்லாம் கூடி முன் நிற்கல் ஆற்றா - சிந்தா:3 710/1

தண் கழுநீரொடு குவளை தாமரை - சிந்தா:3 827/2

தாழி வாய் குவளை வாள் கண் தையலார் பர
வ சார்ந்தார் - சிந்தா:3 833/4

தடம் கண்கள் குவளை பூப்ப தையலோடு ஆடும் அன்றே - சிந்தா:3 839/4

அள் உடை குவளை கயம் நீடிய - சிந்தா:4 868/1

நலம் கெழு குவளை வாள் கண் நன்_நுதல் நலத்தை உண்டார் - சிந்தா:4 964/4

ஈட்டம் சால் நீள் நிதியும் ஈர்ம் குவளை பைம் தடம் சூழ் - சிந்தா:4 1042/1

இரு மலர் குவளை உண்கண் இமைப்பு இலா பயத்தை பெற்ற - சிந்தா:5 1171/1

தட மலர் குவளை பட்டம் தழுவிய யாணர் நல் நட்டு - சிந்தா:5 1185/2

அரும்பு அவிழ் குவளை நீர் வாவி ஆகுமே - சிந்தா:5 1204/4

சுரும்பு சூழ் குவளை ஓர் சுனை உண்டு அ சுனை - சிந்தா:5 1213/1

மொய் மலர் குவளை கண்ணி மொய்ம்ப நீ முழுதும் நீந்தி - சிந்தா:5 1214/2

வரி வரால் பிறழ் வயல் குவளை கட்பவர் - சிந்தா:5 1249/3

காண் வரு குவளை கண்ணால் காளை மேல் நோக்கினாளே - சிந்தா:5 1257/4

குன்று இரண்டு அனைய தோளான் கொழு மலர் குவளை போது அங்கு - சிந்தா:5 1289/1

குவளை ஏய்ந்த கொடும் குழை கூந்தலுள் - சிந்தா:5 1331/1

சுனைகள் கண்கள் ஆக சூழ்ந்த குவளை விழியா - சிந்தா:6 1417/1

சுனை மலர் குவளை குற்று சூழ் மலர் கண்ணி சூட்டி - சிந்தா:6 1495/3

தூ மலர் குவளை கால் அணைத்து தோல் அடி - சிந்தா:7 1615/2

வாச நீலம் கழுநீர் குவளை படை சாற்றி வந்து - சிந்தா:7 1675/1

காண்தகு காதில் தாழ்ந்த குண்டலம் குவளை பைம் தார் - சிந்தா:7 1722/3

பின்னை நாள் குவளை நீர் வீழ் பெற்றிய கண்ணள் ஆகி - சிந்தா:7 1743/4

காவி கழுநீர் குவளை ஆம்பல் கடி கமலம் - சிந்தா:7 1781/1

குருகினோடு இரிய செந்நெல் கொழும் கதிர் குவளை எற்ற - சிந்தா:7 1854/2

புள் ஆவி செம் கழுநீர் குவளை செய்தாள் புனை பூணாள் - சிந்தா:7 1887/4

குழி மது குவளை அம் கண்ணி வார் குழல் - சிந்தா:8 1939/1

பந்து ஆர்வம் செய்து குவளை கண் பரப்பி நின்றாள் - சிந்தா:8 1959/3

தெள் நீர் பனி கயத்து மட்டு அவிழ்ந்த தேன் குவளை
கண் நீர்மை காட்டி கடல் போல் அகன்ற என் - சிந்தா:8 1968/1,2

வாச வான் குவளை மெல்ல வாய்விடா நின்றது ஒக்கும் - சிந்தா:8 1987/3

குடங்கையின் நெடியன குவளை உண்கணே - சிந்தா:9 2006/4

கோல மணி வாய் குவளை வாள் கண் மடவாளை - சிந்தா:9 2029/1

சுனை வளர் குவளை உண்கண் சுமதிக்கு செவிலி செப்ப - சிந்தா:9 2075/2

அணி மலர் குவளை பைம் போது ஒரு கையின் அருளி அம் பொன் - சிந்தா:9 2083/2

குடம் புரை செருத்தல் குவளை மேய் கய வாய் குவி முலை படர் மருப்பு எருமை - சிந்தா:10 2102/1

இழை ஒளி பரந்த கோயிலின் இன மலர் குவளை பொன் பூ - சிந்தா:10 2130/1

தாமரை போதில் பூத்த தண் நறும் குவளை பூ போல் - சிந்தா:10 2133/1

தடம் பெரும் குவளை கண் தாழ் குழலார் சாந்து அணிந்து - சிந்தா:10 2244/1

தாது ஆர் குவளை தடம் கண் முத்து உருட்டி விம்மா - சிந்தா:11 2349/3

ஒன்றி வீழ்ந்தனர் குவளை கண் உவகை முத்து உகவே - சிந்தா:12 2380/4

தேன் இமிர் குவளை கண் திருமகள் அனையாளை - சிந்தா:12 2429/2

கள்ளும் தேனும் ஒழுகும் குவளை கமழ் பூ நெரித்து வாங்கி - சிந்தா:12 2439/1

சாண் இடை நெடிய வாள் கண் தளை அவிழ் குவளை பூப்ப - சிந்தா:12 2461/1

குட்ட நீர் குவளை கண்கள் விருந்து உண விரும்பி நின்றார் - சிந்தா:12 2533/3

காதம் நான்கு அகன்ற பொய்கை கடி நகர் குவளை பூத்து - சிந்தா:12 2544/3

குடங்கையின் நொண்டு கொண்டு பருகுவார் குவளை கொம்பின் - சிந்தா:12 2553/2

காதலித்தார் கரும் குவளை கண்ணினார் - சிந்தா:13 2675/4

உய்த்து ஆங்கு அதனுள் கொள அழுத்தி குவளை செவி தாது உறுத்தாரே - சிந்தா:13 2693/4

நீல குவளை நிரையும் போல் கண்ணார் காவில் இருந்தாரே - சிந்தா:13 2698/4

வண்ண குவளை மலர் அளைஇ மணி கோல் வள்ளத்து அவன் ஏந்த - சிந்தா:13 2700/2

தாள் நெடும் குவளை கண்ணி தளை அவிழ் கோதை மாலை - சிந்தா:13 2802/1

தொடு மணி குவளை பட்டம் துணையொடு நினைப்பதே போல் - சிந்தா:13 2878/2

சாறு அழி குவளை மாலையவரையும் தனமும் நீக்கி - சிந்தா:13 2879/2

நீர் அணி குவளை நீர் நிறைந்த போன்றவே - சிந்தா:13 2894/4

தேன் உடை குவளை செம் கேழ் நாகு இளம் தேரை புல்லி - சிந்தா:13 2901/2

குட்ட நீர் குளத்தின் அல்லால் குப்பை மேல் குவளை பூவா - சிந்தா:13 2925/4

தாழி வாய் மறைக்கும் தண் என் தடம் பெரும் குவளை கண்ணார் - சிந்தா:13 2974/1

ஆய் நிற குவளை அஞ்சி குறு விழி கொள்ளும் வாள் கண் - சிந்தா:13 2998/2

மை பொதி குவளை வாள் கண் மல்லிகை கோதை நல்லார் - சிந்தா:13 3049/1

கொழு மலர் குவளை கண்ணி கூற்று உயிர் உண்பதே போல் - சிந்தா:13 3079/3

குவளை கண் மலர் கோலம் வாழ்த்தியும் - சிந்தா:13 3126/2

எழுது ஆர் மணி குவளை கண் வலையுள் பட்டு இமையார்கள் காமம் அறு சுழியுள் ஆழ்ந்து - சிந்தா:13 3137/3

வாய் பொழி குவளைகள் சூடி மள்ளர்கள் - சிந்தா:1 55/2

மெலிவு எய்த குவளைகள் வாட கம்பலம் - சிந்தா:1 56/2

குரை மது குவளைகள் கிடங்கில் பூத்தவும் - சிந்தா:1 99/3

வண்டார் குவளைய வாவியும் பொய்கையும் - சிந்தா:1 337/1

இரிந்த தேன் குவளையின் நெற்றி தைவர - சிந்தா:1 48/1

நீர் உடை குவளையின் நெடும் கண் நின்ற வெம் பனி - சிந்தா:1 274/1

கண் என குவளையும் கட்டல் ஓம்பினார் - சிந்தா:1 51/1

கோல நீர் குவளையும் மரையும் பூத்து வண்டு - சிந்தா:3 830/3

பூரித்து புதவம்-தோறும் குவளையும் மரையும் பூத்து - சிந்தா:12 2543/3

குவளையே அளவுள்ள கொழும் கணாள் - சிந்தா:1 243/2

செய் ஆடிய குவளை மலர் நயனத்தவளோடும் - தேவா-சம்:152/3

கழுநீர் குவளை மலர கயல் பாயும் - தேவா-சம்:327/2

கறை இலங்கு மலர் குவளை கண் காட்ட கடி பொழிலின் - தேவா-சம்:666/1

தண்டு ஆர் குவளை கள் அருந்தி தாமரை தாதின் மேல் - தேவா-சம்:719/3

கரு மலர் கமழ் சுனை நீள் மலர் குவளை கதிர் முலை இளையவர் மதி முகத்து உலவும் - தேவா-சம்:821/3

மை செறி குவளை தவளை வாய் நிறைய மது மலர் பொய்கையில் புது மலர் கிழிய - தேவா-சம்:841/1

கருமை கொள் வடிவொடு சுனை வளர் குவளை கயல் இனம் வயல் இள வாளைகள் இரிய - தேவா-சம்:851/3

தகை ஆரும் வரம்பு இடறி சாலி கழுநீர் குவளை சாய பாய்ந்து - தேவா-சம்:1410/3

தாமரை சேர் குவளை படுகில் கழுநீர் மலர் வெறி கமழ் செறி வயல் தருமபுரம் பதியே - தேவா-சம்:1465/4

கோடு எலாம் நிறைய குவளை மலரும் குழி - தேவா-சம்:1483/1

குவளை போல் கண்ணி துண்ணென வந்து குறுகிய - தேவா-சம்:1496/3

மடை ஆர் குவளை மலரும் மருகல் - தேவா-சம்:1655/3

கொந்து ஆர் குவளை குலவும் மருகல் - தேவா-சம்:1656/3

சேல் மருவு பைம் கயத்து செங்கழுநீர் பைம் குவளை
தாம் மருவும் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே - தேவா-சம்:1926/3,4

நீல மலர் குவளை கண் திறக்க வண்டு அரற்றும் நெடும் தண் சாரல் - தேவா-சம்:2237/3

குவளை கண் மலரும் கொள்ளம்பூதூர் - தேவா-சம்:2859/1

தூய விரி தாமரைகள் நெய்தல் கழுநீர் குவளை தோன்ற மது உண் - தேவா-சம்:3578/1

குன்றியில் அடுத்த மேனி குவளை அம் கண்டர் எம்மை - தேவா-அப்:442/3

அருகு எலாம் குவளை செந்நெல் அகல் இலை ஆம்பல் நெய்தல் - தேவா-அப்:535/1

அம் கால் குவளை மெல் ஆவி உயிர்ப்ப அருகு உலவும் - தேவா-அப்:1003/2

இள எழுந்த இரும் குவளை மலர் - தேவா-அப்:2013/1

கடைகள் விடுவார் குவளை களைவாரும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே - தேவா-சுந்:409/4

அருவி பாய்தரு கழனி அலர்தரு குவளை அம் கண்ணார் - தேவா-சுந்:777/1

கொங்கையார் பலரும் குடைந்து ஆட நீர் குவளை மலர்தர - தேவா-சுந்:886/1

கோல மலர் குவளை கழுநீர் வயல் சூழ் கிடங்கில் - தேவா-சுந்:1008/3

நீல மா மலர் சுனை வண்டு பண் செய்ய நீர் மலர் குவளைகள் தாது விண்டு ஓங்கும் - தேவா-சம்:822/3

கயல் வளாவிய கழனி கரு நிற குவளைகள் மலரும் - தேவா-சம்:2465/3

காவியும் குவளையும் கமலம் செங்கழுநீரும் - தேவா-சுந்:290/3

வந்து மா வள்ளையின் பவர் அளி குவளையை சாடி ஓட - தேவா-சம்:3759/2

குவளை கண்ணி கூறன் காண்க - திருவா:3/64

பைம் குவளை கார் மலரால் செங்கமல பைம் போதால் - திருவா:7 13/1

குவளை களத்து அம்பலவன் குரை கழல் போல் கமலத்தவளை - திருக்கோ:33/1

குவளை கரும் கண் கொடி ஏர் இடை இ கொடி கடைக்கண் - திருக்கோ:51/1

மை ஏர் குவளை கண் வண்டினம் வாழும் செந்தாமரை-வாய் - திருக்கோ:66/3

முத்து ஈன் குவளை மென் காந்தளின் மூடி தன் ஏர் அளப்பாள் - திருக்கோ:121/2

வண்ண குவளை மலர்கின்றன சின வாள் மிளிர் நின் - திருக்கோ:162/3

மை வார் குவளை விடும் மன்ன நீள் முத்த மாலைகளே - திருக்கோ:170/4

பூம் குவளை பொலி மாலையும் ஊரன் பொன் தோள் இணையும் - திருக்கோ:357/1

சிறு வாள் உகிர் உற்று உறா முன்னம் சின்னப்படும் குவளைக்கு
எறி வாள் கழித்தனள் தோழி எழுதில் கரப்பதற்கே - திருக்கோ:334/1,2

பைம் தாள் குவளைகள் பூத்து இருள் சூழ்ந்து பயின்றனவே - திருக்கோ:363/4

நீல குவளை மலர் அன்ன கண்ணினாள் - திருமந்:1100/2

உழவன் உழவினில் பூத்த குவளை
உழவன் உழத்தியர் கண் ஒக்கும் என்றிட்டு - திருமந்:1619/2,3

குட்டத்து நீரில் குவளை எழுந்தது - திருமந்:2904/2

வில் குவளை பவள மலர் மதி பூத்த விரை கொடியோ - 1.திருமலை:5 140/3

தள்ளும் தாள் நடை அசைய தளை அவிழ் பூம் குவளை மது - 4.மும்மை:4 10/2

மை பூம் குவளை களத்தாரை நாளும் வழிபட்டு ஒழுகும்-ஆல் - 12.மன்னிய:4 2/4

நீர் அணிந்த குவளை வாசம் நிகழ நாறும் வில்லிபுத்தூர் - நாலாயி:138/2

பூம் குவளை போதில் பொறி வண்டு கண்படுப்ப - நாலாயி:476/5

கூசி இட்டீர் என்று பேசும் குவளை அம் கண்ணியர்-பால் - நாலாயி:975/2

குவளை அம் கண்ணி கொல்லி அம் பாவை சொல்லு நின் தாள் நயந்திருந்த - நாலாயி:1108/3

குளம் படு குவளை கண் இணை எழுதாள் கோல நல் மலர் குழற்கு அணியாள் - நாலாயி:1109/2

அ ஆய வாள் நெடும் கண் குவளை காட்ட அரவிந்தம் முகம் காட்ட அருகே ஆம்பல் - நாலாயி:1182/3

மை இலங்கு கரும் குவளை மருங்கு அலரும் வயல் ஆலி - நாலாயி:1207/1

குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும் - நாலாயி:1318/2

நெல்லில் குவளை கண் காட்ட நீரில் குமுதம் வாய் காட்ட - நாலாயி:1597/1

கொங்கு மலி கரும் குவளை கண் ஆக தெண் கயங்கள் - நாலாயி:1675/1

குவளை நீள் முளரி குமுதம் ஒண் கழுநீர் கொய்ம் மலர் நெய்தல் ஒண் கழனி - நாலாயி:1749/3

குவளை மலர் நிற வண்ணர் மன்னு குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் - நாலாயி:1788/4

குவளைவண்ணன் காண ஆடீர் குழமணிதூரமே - நாலாயி:1875/4

வண் பூம் குவளை மட மான் விழிக்கின்ற மா இதழே - நாலாயி:2486/4

குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் வண்டு - நாலாயி:3046/2

குவளை தடம் கண்ணும் கோவை செ வாயும் பயந்தனள் - நாலாயி:3290/2

குவளை ஒண் மலர் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமுறுமே - நாலாயி:3495/4

குவளைவண்ணன் காண ஆடீர் குழமணிதூரமே - நாலாயி:1875/4

குன்று ஆடு கொழு முகில் போல் குவளைகள் போல் குரை கடல் போல் - நாலாயி:410/1

மை அணைந்த குவளைகள் தம் கண்கள் என்றும் மலர் குமுதம் வாய் என்றும் கடைசிமார்கள் - நாலாயி:1180/3

கொய் ஆர் குவளையும் காயாவும் போன்று இருண்ட - நாலாயி:2016/2

விழி கயல் அயில் பகழி வருணி கருவிளை குவளை விடம் என நாயேன் - திருப்:147/3

புளகித்து குவளை கண் பொன் கணை ஒத்திட்டு உழல சுத்தி - திருப்:154/2

வீர அதி சூரர் கிளை வேர் மாளவே பொருத தீர குமரா குவளை சேர் ஓடை சூழ் கழனி - திருப்:169/15

அறுகு தாளி நறை அவிழ்ந்த குவளை வாச மலர் கரந்தை அடைய வாரி மிசை பொழிந்து உன் அடி பேணி - திருப்:231/3

தனி மண குவளை நித்தமும் மலர் தரு திரு தணியினில் சரவண பெருமாளே - திருப்:261/8

குவளை கணை தொட்ட அவனுக்கு முடி குடை இட்ட குறை பிறையாலே - திருப்:265/1

தீண்டு கழை திரள் உற்றது துற்றிடு வேங்கைதனில் குவளை சுனை சுற்று அலர் - திருப்:266/15

திரியு மருள் விட்டு உனது குவளை சிகரி பகர பெறுவேனோ - திருப்:271/4

குரவு செச்சை வெண் முளரி புத்து அலர் குவளை முற்று அணி திரு மார்பா - திருப்:345/6

இயல் காட்டு கொல் குவளை காட்டி முல்லை நகை காட்டு அல்லி இடை மாதர் - திருப்:477/2

குவளை பூசல் விளைத்திடும் அம் கயல் கடுவது ஆம் எனும் மை கண் மடந்தையர் - திருப்:555/1

வகுள மலர் குவளை இதழ் தரு மணமும் மிருகமதம் ஒன்றி கறுத்து முகில் வென்றிட்டு நெய்த்த குழல் - திருப்:624/7

குலவு தோகை மீது ஆறு முகமும் வேலும் ஈராறு குவளை வாகும் நேர் காண வருவாயே - திருப்:694/4

குவளை பொருது இரு குழையை முடுகிய கோல வேல் விழி மடவார்தம் - திருப்:791/1

கொடுமை கடுமை குவளை கடையில் குலைபட்டு அலையக்கடவேனோ - திருப்:792/4

சஞ்சரி உகந்து நின்று முரல்கின்ற தண் குவளை உந்து குழலாலும் - திருப்:937/1

அழகிய குவளை விழியினும் அமுத மொழியினும் அவச அநுராக - திருப்:1076/3

கொலையிலே மெத்த விரகிலே கற்ற குவளை ஏர் மை கண் விழி மானார் - திருப்:1085/1

கொடிய வாள் அரவு இளம் பிறையினோடு அலை சலம் குவளை சேர் சடையர்தம் திரு மேனி - திருப்:1108/7

குலகிரி தரும் அபிராம மயூரம் ப்ரியப்படும்படி குவளை வாச மலர் கொடு - திருப்:1150/9

கொங்கின் புசக கோத்திரி பங்கம் களையும் ஆய்க்குடி கொங்கின் குவளை பூக்கிற கிரி சோண - திருப்:1182/3

மை குவளை கண் குறிப்பு அழுத்திய பொதுமாதர் - திருப்:1198/2

எனது மன பங்கயம் குவளை குரவம் புனைந்து இரவுபகல் சந்ததம் சிந்தியாதோ - திருப்:1220/2

விளவின் இள இலை தளவு குவளை கமழ் பவள நிற வெட்சி திரு தாள் வணங்குவேனோ - திருப்:1222/4

கூட வரவழைக்கும் மாடு குழை அடர்த்த நீடிய குவளை கண் மடமானார் - திருப்:1237/2

பொங்கும் சுனைகளில் எங்கும் குவளைகள் என்றும் புகழ் பெற மலர் ஈனும் - திருப்:297/7

எருக்கு மாலிகை குவளையின் நறு மலர் கடுக்கை மாலிகை பகிரதி சிறு பிறை - திருப்:838/11

கள் அவிழ் குவளை ஒருபுறம் சரிய கடி மலர் குமுதமும் மடிய - சீறா:43/2

சொரி மது துளித்து குவளை வாய் சிதற சுருட்டி வால் விசைத்திட துள்ளி - சீறா:55/3

நலம் கொள் தாமரை முக மலர் தர நறும் குவளை
விலங்கி வள்ளையில் விழி என கிடப்ப மெல் அரும்பு - சீறா:64/1,2

தேறல் கொப்பிளித்து வனசமும் குவளை திரள்களும் குமுதமும் விரிய - சீறா:697/2

குவளை மை விழி சுரிகுழலியர் கொழும் கரத்தால் - சீறா:1110/1

பாய் ஒளி ஆம்பலும் செம்பதுமமும் குவளை மானும் - சீறா:1167/2

மடல் அவிழ் பைம் குவளை செறி மடு சூழும் நீள் புரிசை மக்க மீதில் - சீறா:1638/3

மடல் அவிழ் குவளை மது மலர் மலர்த்தி முகம்மதை தெளிதர நோக்கி - சீறா:1916/3

கடி மலர் குவளை காடும் கமலமும் நெரிந்து சிந்த - சீறா:3381/1

திவள் ஒளி குவளை காடும் திசை எலாம் வழியதாக - சீறா:3412/3

குவளை மை விழி மாதர்கள் சுக தடம் குளித்து - சீறா:3796/1

பறித்தனர் தட குவளை பைம் கமல நெய்தல் - சீறா:4130/2

இடத்தினும் குவளை ஓடையின் மருங்கும் எழில் தரு கிடங்கினும் உயர்ந்த - சீறா:4448/2

விரை மலர் குவளை மணம் அறா கய வாய் மேதியும் கவை அடி கொறியும் - சீறா:4924/3

கொடி துடர் பவளத்தூடும் குவளைகள் பூத்த போன்ற - சீறா:1171/4

சேந்த கஞ்சமும் குவளையும் என எழில் சிறந்த - சீறா:67/3

இன் இசை பட ஊட்டு தேம் குவளையும் இடையில் - சீறா:868/2

நகை விரித்து அனைய குவளையும் துகிரின் நறு மலர் விரிந்து என விரிந்து - சீறா:997/2

விரை கமழ்ந்த மென் குவளையும் வனசமும் மேவி - சீறா:1703/2

கரும் கண் போல் செழும் குவளையும் முக கமலமும் போன்று - சீறா:3121/2

குற்றமுற்ற விழியும் குவளையை
வெற்றி கொண்டு விரை மலர் பூ பயமுற்று - சீறா:4768/2,3

தாழி நறும் குவளை அம் தார் தருமன் மகன் அருள் புனலும் தரங்க வேலை - வில்லி:8 18/1

தாது அவிழ் குவளை மாலை தருமன் மா மதலை பெற்ற - வில்லி:11 5/1

விராடனை நறும் குவளை மாலை வியல் மார்பில் - வில்லி:23 9/1

குவளை பரிமளம் மேவரு குளிர் வாரி பருக்கி - வில்லி:42 55/1

கழுநீர் குவளை பெரும் பொதி அவிழ்ந்த - உஞ்ஞை:35/184

குவளை கண்ணியும் குங்கும குவையும் - உஞ்ஞை:38/284

பனி பூம் குவளை பயத்தின் வளர்த்த - உஞ்ஞை:38/308

நீல குவளை நிரை இதழ் உடுத்த - உஞ்ஞை:40/52

குவளை கோதை கொண்ட கூந்தலர் - உஞ்ஞை:46/245

எதிர் மலர் குவளை இடு நீர் சொரிந்து - இலாவாண:9/156

குவளை பல் மலர் குழைத்து தவளை - மகத:2/21

குவளை உண்கண் இவளொடு புணர்ந்த - மகத:17/118

மணி நிற குவளை அணி மலர் செரீஇ - மகத:17/154

மறு இல் குவளை நாள்_மலர் பிடித்து - வத்தவ:17/38

பனி பூம் குவளையொடு பாதிரி விரைஇ - உஞ்ஞை:40/123

எழு நீர் குவளையொடு இன்னவை பிறவும் - உஞ்ஞை:48/49

கழுநீர் ஆம்பல் கரும் கேழ் குவளையொடு
கொழு நகை குறும் போது குறிப்பில் பிரியா - இலாவாண:15/20,21

கொண்டல்கள் முழவின் ஏங்க குவளை கண் விழித்து நோக்க - பால:2 4/2

பங்கயம் குவளை ஆம்பல் படர் கொடி வள்ளை நீலம் - பால:10 18/1

படர் பூம் குவளை நாள் மலரோ நீலோற்பலமோ பானலோ - பால:10 65/2

பண் மலர் பவள செ வாய் பனி மலர் குவளை அன்ன - பால:16 3/1

மை அவாம் குவளை எல்லாம் மாதர் கண்_மலர்கள் பூத்த - பால:18 3/1

கை அவாம் உருவத்தார்-தம் கண் மலர் குவளை பூத்த - பால:18 3/2

வண்ண வாய் குவளை வாள் கண் மருங்கு இலா கரும்பின் அன்னார் - பால:18 7/2

தாள் கரும் குவளை தோய்ந்த தண் நறை சாடியுள் தன் - பால:19 13/3

மொய் வளர் குவளை பூத்த முளரியின் முளைத்த முந்நாள் - பால:22 16/1

களை கட்டவர் தளை விட்டு எறி குவளை தொகை கண்டான் - அயோ:7 5/4

உண்டு உறை குவளை ஒண் கண் ஒருங்குற நோக்கி ஊழின் - ஆரண்:5 2/2

பழுவ நாள் குவளை செவ்வி கண் பனி பரந்து சோர - ஆரண்:5 3/2

எல்லி அம் குவளை கானத்து இடை இடை மலர்ந்து நின்ற - ஆரண்:5 6/3

கூற்றாய் நின்ற குல சனகி குவளை மலர்ந்த தாமரைக்கு - ஆரண்:10 115/2

கொள்ளையின் அலர் கரும் குவளை நாள்_மலர் - ஆரண்:10 120/3

சேயரி குவளை முத்தம் சிந்துபு சீறி போனாள் - ஆரண்:11 66/4

குவளை காட்டுவ துவர் இதழ் காட்டுவ குமுதம் - கிட்:1 17/4

வண்ண நறும் தாமரை மலரும் வாச குவளை நாள்மலரும் - கிட்:1 24/1

விரிந்த குவளை சேதாம்பல் விரை மென் கமலம் கொடி வள்ளை - கிட்:1 25/1

கூர் அயில் தரும் கண் என குவிந்தன குவளை
மாரன் அன்னவர் வரவு கண்டு உவக்கின்ற மகளிர் - கிட்:10 35/2,3

குவளை உண் கண்ணி வண்ண வாய் அது குறியும் அஃதே - கிட்:13 49/4

செருகுறும் கணின் தேம் குவளை குலம் - கிட்:15 41/1

குவளை கோட்டகம் கடுத்தது குளிர் முக குழுவால் - சுந்:2 31/3

கோது அறு குவளை நாட்டம் கொழுநர் கண் வண்ணம் கொள்ள - சுந்:2 106/1

பாய் திரை பவளமும் குவளை பண்பிற்றால் - சுந்:4 39/4

குப்புற கருதுவான் குவளை நோக்கி-தன் - யுத்1:4 24/2

குவளை கண்ணினை வான் அர_மடந்தையர் கோட்டி - யுத்3:22 178/1

மா பிறழ் நோக்கினார்-தம் மணி நெடும் குவளை வாள் கண் - யுத்3:25 15/1

குவளை கண்ணி அங்கு இராக்கத கன்னியை கூட - யுத்3:30 14/2

கொய் தலை பூசல் பட்டோர் குலத்தியர் குவளை தோற்று - யுத்4:34 20/1

குவளையின் எழிலும் வேலின் கொடுமையும் குழைத்து கூட்டி - அயோ:3 74/1

காவியும் குவளையும் கடி கொள் காயாவும் ஒத்து - பால:20 22/1

காவியும் கரும் குவளையும் நெய்தலும் காயாம் - கிட்:10 50/1

பானலும் குவளையும் பரந்த புன்னையும் - யுத்1:4 25/2

நதியினும் குளத்தும் பூவா நளினங்கள் குவளையோடு
மதி நுதல் வல்லி பூப்ப நோக்கிய மழலை தும்பி - பால:17 9/1,2

பூம் குவளை காட்டு-இடையே போயினான் தேம் குவளை
தேன் நாடி வண்டு சிறகு உலர்த்து நீர் நாதன் - நள:27/2,3

கொழு நுதியில் சாய்ந்த குவளை உழுநர் - நள:38/2

இட்ட பசும் குவளை ஏர் அடித்த கட்டி - நள:74/2

தேம் குவளை தன்னிலே செந்தாமரை மலர - நள:88/1

பூம் குவளை தாமரைக்கே பூத்ததே ஆங்கு - நள:88/2

வண்ண குவளை மலர் வௌவி வண்டு எடுத்த - நள:148/1

பண்ணில் செவி வைத்து பைம் குவளை உண்ணாது - நள:148/2

குவளை கரு நிழலும் கொள்ள பவள - நள:181/2

கொய்த குவளை கிழித்து குறு நுதல் மேல் - நள:190/1

செழு நீல நோக்கு எறிப்ப செம் குவளை கொய்வாள் - நள:196/1

குவளை பணை பைம் தாள் குண்டு நீர் நாடா - நள:229/3

கூன் இறால் பாய குவளை தவளை வாய் - நள:347/1

பைம் தாள் குவளை தூ இதழ் கிள்ளி - திரு 22

போது அவிழ் குவளை புது பிடி கால் அமைத்து - நெடு 83

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *