Skip to content
சூரல்

சூரல் என்பதுஇலந்தை மரவகை

1. சொல் பொருள்

(பெ) 1.  முள் இருக்கும் காட்டுப் புதர்ச்செடி, 2. இலந்தை மரவகை, 3. பிரம்பு,  4. (காற்று) சுழற்றி அடித்தல்

2. சொல் பொருள் விளக்கம்

நாட்டுப்புறங்களில் வாழும் மக்கள் சூரல் முள்ளை வெட்டிக் கவைக்கோலில் மாட்டித் துக்கிக் கொண்டுவந்து வேலியாகப் போட்டுக்கொள்வர். ஆற்றுவழிப் பாதையில் வேலிபோல் அமைந்திருக்கும். காடுகளைக் கடந்துசெல்ல வழி விடாமல் ஈங்கை முள்ளும், சூரல்முள்ளும் பின்னிப் பிணைந்து கிடக்கும்.

பாலைநிலச் சூரலில் இருந்துகொண்டு அணில் பிளிற்றும். ஊர்ச்சேவல் இதல் என்னும் காட்டுக்கோழியோடு கூடி விளையாடும்.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Oblique leaved jujube, Zizyphus oenoplia;

Common rattan, cane, Calamus rotang

Whirling, as of wind;

சூரல்
பிரம்பு

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

விரி மலர் ஆவிரை வேரல் சூரல் – குறி 71

விரிந்த பூக்களையுடைய ஆவிரம்பூ, சிறுமூங்கிற்பூ, சூரைப்பூ

குரங்கின் தலைவன் குரு மயிர் கடுவன்
சூரல் அம் சிறு கோல் கொண்டு வியல் அறை
மாரி மொக்குள் புடைக்கும் நாட – ஐங் 275/1-3

குரங்குகளின் தலைவனான, நிறமுள்ள மயிரினைக் கொண்ட ஆண்குரங்கு
பிரம்பின் அழகிய சிறிய கோலினைப் பற்றிக்கொண்டு, அகன்ற பாறையில் தேங்கியிருக்கும்
மழைநீர்க் குமிழிகளை அடித்து விளையாடும் நாட்டினைச் சேர்ந்தவனே!

சாரல் சூரல் தகைபெற வலந்த - குறி 42

விரி மலர் ஆவிரை வேரல் சூரல்/குரீஇப்பூளை குறுநறுங்கண்ணி - குறி 71,72

சூரல் அம் சிறு கோல் கொண்டு வியல் அறை - ஐங் 275/2

சூரல் அம் கடு வளி எடுப்ப ஆர் உற்று - அகம் 1/17

சூரல் மிளைஇய சாரல் ஆர் ஆற்று - அகம் 228/9

கொடு முள் ஈங்கை சூரலொடு மிடைந்த - அகம் 357/1

சூரல் புறவின் அணில் பிளிற்றும் சூழ் படப்பை - ஐந்70:35/1

பார் ஆழி உரை கொண்டே படைத்தாய் ஓர் குறும் சூரல் பயனை கொண்டே - தேம்பா:8 8/1

புனைந்த மா மதுகை காட்ட புணர்ந்த புன் சூரல் கொண்டு - தேம்பா:14 20/2

முந்து நின்று அருணம் மேய்த்த மோயிசன் விளித்து ஓர் சூரல்
தந்து நின் குலம் கொல் கோன் கண் சடுதி தூது ஏகுக என்றான் - தேம்பா:14 24/3,4

ஆளியில் கொடுங்கோன் கேளாது ஆங்கு அவன் எறிந்த சூரல்
வாள் எயிற்று அடும் செம் பாந்தள் வடிவு எடுத்து எழுந்து அங்கு ஆடி - தேம்பா:14 26/2,3

மீட்டு அரும் சூரல் வீச வீழ்ந்தன நுணலை மாரி - தேம்பா:14 30/1

எண் இகல் விடாமை நாதன் ஏவலில் சூரல் ஓங்கி - தேம்பா:14 31/2

விட்ட நோய் போதா வேகத்து இவன் சுழல் சூரல் தன்னால் - தேம்பா:14 34/2

உலை முகந்து அருந்தும் தீய் நெஞ்சு உரு உற சூரல் ஓங்கி - தேம்பா:14 35/1

மோயிசன் தன் கை சூரலின் பிரிந்த மொய் கடல் வழி விடுத்து அன்ன - தேம்பா:12 67/1

நெடிய சூரலை சூழ் ஓங்கி நிருபனோடு எவரும் அஞ்ச - தேம்பா:14 25/3

சொல்லிய விசையில் ஏந்தும் சூரலை சுழற்றி நிற்ப - தேம்பா:14 29/1

தூய் இனம் வெருவ மீண்டு சூரலை ஆட்டும் தன்மைத்து - தேம்பா:14 32/2

திரை மேல் அடல் சூரலை நீட்டு என நீட்டிய சீர் திரண்ட - தேம்பா:14 64/2

அவ்வாறு ஒரு சூரலை கொண்டு அவை யாவையும் செய்தவனோ - தேம்பா:14 75/1

சூரல் அம் கடு வளி எடுப்ப – அகம் 1/17

சுழற்றி அடிக்கும் கடுமையான காற்று மேலெழும்ப

வீரையும் கரிய ஓமையும் நெடிய வேரலும் முதிய சூரலும்
சீரையும் சிறிய பூளையும் சினைய மரவமும் பசிய குரவமும் - சீறா:4210/2,3

தென்மலை பிறந்த பொன் மருள் சூரல்
கரும் கண்-தோறும் பசும்பொன் ஏற்றி - உஞ்ஞை:40/375,376

கரும் கண் சூரல் செங்கோல் பிடித்த - மகத:5/99

வள்ளியும் வகுந்தும் சுள்ளியும் சூரலும்
வழை சேர் வாழையும் கழை சேர் கானமும் - உஞ்ஞை:46/276,277

சுள்ளியும் சூரலும் வள்ளியும் மரலும் - உஞ்ஞை:50/27
சூரல்
சூரல்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *