Skip to content

இணைச் சொல்

இணைச் சொல்லைப் பிரித்துத் தனித்துப் பார்ப்பினும் அச்சொல்லுக்குப் பொருள் உண்டு. இனணச் சொல் என்பது தனிச்சொல்லாக நிற்பினும் நிற்கவும், இணைச்சொல்லாக நிற்பினும் நிற்கவும் இயைந்ததன்மையதாம்

கூடமாடப் (போதல்)

சொல் பொருள் கூட – ஆள் துணையாகப் போதல்.மாட – பேச்சுத் துணையாகப் போதல். சொல் பொருள் விளக்கம் துணைகளில் வழித்துணையாக வருவாருள் வலுத்துணையும் உண்டு; வாய்த் துணையும் உண்டு. முன்னதுவழித்துணை; பின்னது வாய்த்துணை.… Read More »கூடமாடப் (போதல்)

கூடக்குறைய

சொல் பொருள் கூட – சற்றே மிகுதலாக.குறைய – சற்றே குறைதலாக. சொல் பொருள் விளக்கம் ஏறக்குறைய, ஏறத்தாழ, ஏறஇறங்க, என்பவை போன்ற இணைச்சொல் கூடக்குறைய என்பதாம். ‘கிட்டத்தட்ட’ என்பதும் இவ்வகையினதே. “கூட்டிக்குறைக்க நெடும்பகை”… Read More »கூடக்குறைய

கூச்சல் குழப்பமும்

சொல் பொருள் கூச்சல் – துயருக்கு ஆட்பட்டோர் போடும் ஓலம்.குழப்பம் – துயருற்றோர் ஓலம் கேட்டு வந்தவர் போடும் இரைச்சல். சொல் பொருள் விளக்கம் கூ(கூவுதல்) கூகூ (அச்சக்குறிப்பு) கூப்பாடு இவற்றையும் கூக்குரல் என்பதையும்… Read More »கூச்சல் குழப்பமும்

கூச்சலும் கும்மாளமும்

சொல் பொருள் கூச்சல் – துன்புறுவார் ஓலம்கும்மாளம் – துன்புறுத்துவார் கொண்டாட்டம். சொல் பொருள் விளக்கம் இதனைக் ‘கூச்சல் கும்மரிச்சல்’என்றும் கூறுவதுண்டு. அதற்கும் இதே பொருளாம். இக்கூச்சல் அவலத்தில் இருந்து உண்டாவது. கும்மாளம் அல்லது… Read More »கூச்சலும் கும்மாளமும்

குறுக்குவழி சுருக்குவழி

சொல் பொருள் குறுக்கு வழி- நெடிதாகச் செல்லும் சாலை வழி, வண்டிப்பாதை என்பவை தவிர்த்துக் குறுகலாக அமைந்த நடை வழி. அது நெடுவழியினும் அளவில் குறுகுதலுடன், தொலைவும் குறுகியதாக இருக்கும். சுருக்குவழி – குறுக்கு… Read More »குறுக்குவழி சுருக்குவழி

குறுக்கும் மறுக்கும்

சொல் பொருள் குறுக்கு – குறுக்காகச் செல்வது குறுக்குமறுக்கு – குறுக்காகச் செல்வதற்கு எதிரிடையாக மறுத்துச் செல்வது மறுக்கு. சொல் பொருள் விளக்கம் இது ‘குறுக்கா மறுக்கா’ எனவும் வழங்கும். குறுக்காக மறுக்காக என்பவற்றின்… Read More »குறுக்கும் மறுக்கும்

குற்றுயிரும் குலையுயிரும்

சொல் பொருள் குற்றுயிர் – மூச்சு உள்ளே போகிறதோ வெளியே வருகிறதோ என்பது தெரியாமல் அரைகுறை உயிராகக் கிடக்கும் நிலை.குலையுயிர்- நெஞ்சாங்குலையில் மட்டும் உயிர்த்துடிப்பு இருக்கும் நிலை.குறுமை – சிறுமை; வெளிப்பட அறியமுடியாமல் மெல்லெனச்… Read More »குற்றுயிரும் குலையுயிரும்

குழிவு குவிவு

சொல் பொருள் குழிவு – பக்கங்கள் உயர்ந்து நடுவே குழி வானது குழிவு ஆகும்.குவிவு – நடுவுயர்ந்து பக்கங்கள் குழிவானது குவிவு ஆகும். சொல் பொருள் விளக்கம் முன்னதற்குக் குழியையும் பின்னதற்குக் குவியலையும் கண்டு… Read More »குழிவு குவிவு

கும்மி கோலாட்டம்

சொல் பொருள் கும்மி – பலர் குழுமி, கைகொட்டி ஆடும் ஆட்டம்.கோலாட்டம் – பலர் குழுமி, கோல் கொட்டி ஆடும் ஆட்டம். சொல் பொருள் விளக்கம் பெரும்பாலும் கும்மியும் கோலும் மகளிர் ஆட்டங்களாம். கும்முதல்-கூடுதல்.… Read More »கும்மி கோலாட்டம்

குப்பை கூளம்

சொல் பொருள் குப்பை – குவியலாகப் போடப்பட்ட உரமும் கழிவுப் பொருள்களும்.கூளம் – மாடு தின்று எஞ்சிய வைக்கோல் தட்டை முதலியவற்றின் துண்டு துணுக்குகள். சொல் பொருள் விளக்கம் “குப்பை கூளம் சேரவிடாதே; பூச்சி… Read More »குப்பை கூளம்