Skip to content

ஊ வரிசைச் சொற்கள்

ஊ வரிசைச் சொற்கள், ஊ வரிசைத் தமிழ்ச் சொற்கள், ஊ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், ஊ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

ஊருணி

சொல் பொருள் உண்பதற்குரிய தண்ணீர் நிறைந்த குளம் ஊருணி எனப்படும் சொல் பொருள் விளக்கம் உண்பதற்குரிய தண்ணீர் நிறைந்த குளம் ஊருணி எனப்படும். ஊரார் உண்ணும் நீரையுடையதாதலால் ஊருணி என்னும் பெயர் அதற்கு அமைந்ததென்பர்.… Read More »ஊருணி

ஊராண்மை

சொல் பொருள் உபகாரியாந் தன்மை சொல் பொருள் விளக்கம் உபகாரியாந் தன்மை; அஃதாவது இலங்கையர் வேந்தன் போரிடைத் தன் தானை முழுதும் படத்தமியனாய் அகப்பட்டானது நிலைமை நோக்கி, அயோத்தியர் இறைமேற் செல்லாது “இன்று போய்… Read More »ஊராண்மை

ஊரணி

சொல் பொருள் ஊருக்கு அணித்தானமையின் பொய்கையை ஊரணி என்று கூறுதலும், ஊரினரால் உண்ணப்படும் தகுதியுடைய நீர்நிலையை ஊருணி என்று கூறுதலும் வழக்கென்று கொள்ளுதலும் பொருந்தும் சொல் பொருள் விளக்கம் ஊருக்கு அணித்தானமையின் பொய்கையை ஊரணி… Read More »ஊரணி

ஊடல்

சொல் பொருள் உள்ளத்து நிகழ்ந்ததனைக் குறிப்பு மொழியான் அன்றி கூற்றுமொழியான் உரைப்பது சொல் பொருள் விளக்கம் (1) ஊடல் என்பது, உள்ளத்து நிகழ்ந்ததனைக் குறிப்பு மொழியான் அன்றி கூற்றுமொழியான் உரைப்பது.(தொல். பொருள். 499. பேரா.)… Read More »ஊடல்

ஊசிமுறி

சொல் பொருள் விளக்கம் ஊசிமுறி என்னும் பெயர், எழுதுங்காலத்தில் எழுத்தாணியால் எழுத முடியாத ஓசையையுடைய செய்யுட் களையுடைமையாற் பெற்ற காரணப்பெயர். (சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும். 39.)

ஊக்கமுடைமை

சொல் பொருள் விளக்கம் அஃதாவது மனம் மெலிதல் இன்றி வினை செய்வதற்கண் கிளர்ச்சி உடைத்தாதல். (திருக். ஊக்கமுடைமை. பரி.)

ஊக்கம்

சொல் பொருள் விளக்கம் ஊக்கம் என்பது உள்ளமானது மேம்படக் கருதும் மேற்கோள் என்றவாறு. (திருக். 382. காலிங்)

ஊரணியும் ஊருணியும்

சொல் பொருள் ஊரணி – ஊருக்கு அணித்தாக அமைந்த நீர்நிலை.ஊருணி – ஊரவர்க்குக் குடிநீராக அமைந்த நீர் நிலை. சொல் பொருள் விளக்கம் ஊர்+அணி-ஊரணி; ஊர்-உணி-ஊருணி. ஊர்க்கு அணித்தே அமைந்த நீர்நிலை. குளிக்கவும் துணி… Read More »ஊரணியும் ஊருணியும்

ஊடும் பாவும்

சொல் பொருள் ஊடு – ஊடை எனப்படும் குறுக்குநூல்.பா – பாவு எனப்படும் நெடுக்குநூல். சொல் பொருள் விளக்கம் ஊடும் பாவும் சீராக வாராக்கால், இழையறுந்தும் திண்டும் திரடுமாகித் தோன்றும். ஊடு என்பது ஊடை… Read More »ஊடும் பாவும்