சொல் பொருள்
நெடுமை
நெடிய கழுத்தை நெட்டை என்பது விளவங்கோடு வட்டார வழக்கு
தேங்காய் நாரை நெட்டு என்பது தென்காசி வட்டார வழக்கு.
நெட்டு என்பது வாழைப்பழத்தோல் என்னும் பொருளில் நெல்லை வட்டார வழக்குள்ளது
சொல் பொருள் விளக்கம்
நெட்டு என்பது நீளம். ‘நெட்டை மரம்’ என்பார் பாரதியார். நெடிய கழுத்தை நெட்டை என்பது விளவங்கோடு வட்டார வழக்கு. நீண்டு இழுத்துக் கயிறாக்க உதவும் தேங்காய் நாரை நெட்டு என்பது தென்காசி வட்டார வழக்கு. நெட்டு என்பது வாழைப்பழத்தோல் என்னும் பொருளில் நெல்லை வட்டார வழக்குள்ளது. அது வழுக்கி விட்டு நீளச் செய்தல் பற்றியதாகலாம்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
lengthiness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பானாள் துஞ்சாது உறைநரொடு உசாவா துயில் கண் மாக்களொடு நெட்டு இரா உடைத்தே – குறு 145/3-5 நள்ளிரவில் துயிலாமல் இருப்போரை ஏனென்று கேட்காமல் துயிலுகின்ற கண்களையுடைய மக்களோடு, நீண்ட இரவையும் உடையது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்