சொல் பொருள்
நொண்டி – கால் குறையால் நொண்டி நடப்பவர்
நொடம் – கை முடங்கிப் போனவர்
சொல் பொருள் விளக்கம்
நொண்டியடித்தல் ஒரு விளையாட்டு, முள்ளோ கல்லோ இடித்தால் நொண்டி நடப்பது உண்டு. ஆனால் இந்நொண்டுதல் இயற்கையாகி விட்ட நிலை.
நொடம், நுடம், முடம் என்பன ஒரு பொருளன.
நொண்டுதல் காலைப் பற்றியதும் முடங்குதல் கையைப் பற்றியதுமாம். முடத்தாழை, முடத்தெங்கு என்பவற்றில் வரும் முடத்திற்கு வளைவுப் பொருள் உண்மை அறிக.
‘நொட மருத்துவர்’ என்னும் விளம்பரத்துடன் இருப்பவர் ‘நொண்டி’ நொடம்’ இரண்டும் பார்ப்பவரே.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்