Skip to content
மருது

மருது என்ற ஒரு வகை மரம்.

1. சொல் பொருள்

மருது என்ற ஒரு வகை மரம்/பூ, 

(பெ) பார்க்க : மருதம்

2. சொல் பொருள் விளக்கம்

நீர் மருது அல்லது வெண்மருது , கருமருது, பூ மருது, பிள்ளைமருது

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Terminalia arjuna, Terminalia elliptica,terminalia paniculatta

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

தட மருப்பு எருமை பிணர் சுவல் இரும் போத்து
மட நடை நாரை பல் இனம் இரிய
நெடு நீர் தண் கயம் துடுமென பாய்ந்து
நாள்_தொழில் வருத்தம் வீட சேண் சினை
இருள் புனை மருதின் இன் நிழல் வதியும் – நற் 330/1-5

அகன்ற கொம்புகளையுடைய எருமையின் சொரசொரப்பான பிடரியைக் கொண்ட கரிய ஆணானது,
இள நடையையுடைய நாரையின் பலவான கூட்டம் வெருண்டோட
நெடிய நீர் நிரம்பிய குளிர்ந்த குளத்தில் துடுமென்று விரைவாகப் பாய்ந்து
அந்த நாளிற்செய்த உழும் தொழிலின் வருத்தம் நீங்கும்படியாக நீராடி, நீண்ட கிளைகளையுடைய
இருள் நிரம்பியது போன்ற அடர்ந்த மருதமரத்தின் இனிய நிழலில் படுத்திருக்கும்

கணை கால் நெடு மருது கான்ற நறும் தாது - திணை50:32/1

மருதோடு காஞ்சி அமர்ந்து உயர்ந்த நீழல் - திணை150:139/1

தேம் கமழ் மருது இணர் கடுப்ப கோங்கின் - திரு 34

மருது உயர்ந்து ஓங்கிய விரி பூ பெரும் துறை - ஐங் 33/2

மருது இமிழ்ந்து ஓங்கிய நளி இரும் பரப்பின் - பதி 23/18

திரு மருது ஓங்கிய விரி மலர் காவில் - அகம் 36/10

மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை - அகம் 376/3

பலர் ஆடு பெரும் துறை மருதொடு பிணித்த - குறு 258/3

நெடு வெண் மருதொடு வஞ்சி சாஅய - அகம் 226/9

உளை பூ மருதின் ஒள் இணர் அட்டி - திரு 28

முட காஞ்சி செம் மருதின்/மட கண்ண மயில் ஆல - பொரு 189,190

பாம்பு உறை மருதின் ஓங்கு சினை நீழல் - பெரும் 232

இருள் புனை மருதின் இன் நிழல் வதியும் - நற் 330/5

செவ்வி மருதின் செம்மலொடு தாஅய் - குறு 50/2

கழனி மருதின் சென்னி சேக்கும் - ஐங் 70/2

ஒலி தெங்கின் இமிழ் மருதின்/புனல் வாயில் பூ பொய்கை - பதி 13/7,8

வராஅல் அருந்திய சிறு சிரல் மருதின்/தாழ் சினை உறங்கும் தண் துறை ஊர - அகம் 286/6,7

வயல் உழை மருதின் வாங்கு சினை வலக்கும் - புறம் 52/10

தேம் கொள் மருதின் பூ சினை முனையின் - புறம் 351/10

உளை பூ மருதத்து கிளை குருகு இருக்கும் - ஐங் 7/4

முடம் முதிர் மருதத்து பெரும் துறை - ஐங் 31/3

தொல் நிலை மருதத்து பெரும் துறை - ஐங் 75/3

துறை நணி மருதத்து இறுக்கும் ஊரொடு - புறம் 344/3

மருதம் சான்ற மருத தண் பணை - சிறு 186

வாங்கு சினை மருத தூங்கு துணர் உதிரும் - நற் 350/3

மருத மர நிழல் எருதொடு வதியும் - அகம் 37/16

உயர் சினை மருத துறை உற தாழ்ந்து - புறம் 243/6

உளை பூ மருதின் ஒள் இணர் அட்டி - திரு 28

தேம் கமழ் மருது இணர் கடுப்ப கோங்கின் - திரு 34

திரண்ட தாள் நெடும் செறி பணை மருது இடை ஒடிய - பால:15 3/1

மாறு மாறு ஆகி தம்மில் மயங்கும் மா மருத வேலி - பால:2 3/4

மருத வேலியின் வைகின வண்டு-அரோ - பால:2 23/4

வரம்பு மீறிடு மருத வேலிவாய் - பால:6 23/2

வள பரு மருத வைப்பு அழித்து மாற்றினாள் - பால:7 24/4

அள்ளல் நீர் மருத வைப்பு அதனில் அன்னம் ஆம் - பால:14 26/2

மருத வைப்பின் வளம் கெழு நாடு ஒரீஇ - அயோ:7 9/2

மழை பட பொதுளிய மருத தாமரை - கிட்:10 120/1

தண்டலை மருத வைப்பின் கங்கை நீர் தழுவும் நாட்டு - யுத்3:21 15/3

முல்லையை குறிஞ்சி ஆக்கி மருதத்தை முல்லை ஆக்கி - பால:1 17/1

மங்கையர் பண்ணிய மருத யாழ் குழல் - சிந்தா:8 1991/1

பரித்தவை பழன நாரை பார்ப்பொடு மருதில் சேக்கும் - சிந்தா:7 1853/3

கிளி வளர் பூ மருது அணிந்து கேடு இலா - சிந்தா:1 64/1

மருத வேலியின் மாண்புற தோன்றும் - புகார்:6/149

மருதின் நடந்து நின் மாமன் செய் வஞ்ச - மது:12/162

வரு புனல் வையை மருது ஓங்கு முன் துறை - மது:14/72

மருத மகளிர் வண்டலுள் வீழவும் - வத்தவ:2/67

செல்வ மருதத்து ஒல்லையுள் இருந்த - உஞ்ஞை:49/19

பழன மருதின் பார்ப்பு வாய் சொரிந்து - மகத:7/30

மகிழ் பூ மாலையொடு மருது இணர் மிடைந்த - உஞ்ஞை:40/110

மாவும் மருதும் வேர்_அற புய்த்து - உஞ்ஞை:51/45

மடை பட்ட வாளை அகில் நாறும் மருத வேலி - வில்லி:7 83/1

தங்கள் பாடியில் வளர்ந்து மா மருதிடை தவழ்ந்து - வில்லி:27 89/2

மருதிற்கு இடை போமவன் விரைந்து வருமாறு அழை-மின் என மொழிந்தான் - வில்லி:17 6/3

மருது போழ்ந்திட்ட செம் கண் மாயவன் விடுப்ப ஏகி - வில்லி:25 17/3

மருது இடை சென்று உயர் சகடம் விழ உதைத்து பொதுவர் மனை வளர்ந்த மாலே - வில்லி:27 30/2

மருது ஓர் அடி இணை சாடிய மாயன் திரு மருகன் - வில்லி:41 114/4

வசை அறும் புகழ் குருகுல திலகனை மருது இரண்டு ஒடித்தவர் திரு மருகனை - வில்லி:41 123/1

மருது இடை முன் தவழ்ந்தருளும் செம் கண் மாலே மா தவத்தால் ஒரு தமியன் வாழ்ந்தவாறே - வில்லி:45 248/4

மருதுக்கு இடை போம் மதுசூதன் மருகன் வெம் போர் - வில்லி:7 89/3

மருதும் சகடும் விழ உதைத்த வலவன் கடவ வாயு என - வில்லி:40 68/3

முன் மருதூடு தவழ்ந்த வாகை மொய்ம்பற்கு - வில்லி:14 122/2

மருத நல் நிலம் என வளம் உண்டாயதே - சீறா:3292/4

மருத நிலம் கடந்து நெடும் கழுது குடியிருந்த சுர வனமும் நீந்தி - சீறா:4307/2

மருத நல் நிலமும் பாலைவனம் என உலர்ந்து வாவி - சீறா:4747/1

நேய பைம் நாக மணியினை மருத நிலத்தினில் தொகுத்து நெல் குவி மேல் - சீறா:4755/3

மருதங்கள் கலந்த வனத்திலிருந்து - சீறா:701/1

பரிவொடு மகிழ்ந்து இறைஞ்சு மருதிடை தவழ்ந்து நின்ற பரம பத நண்பர் அன்பின் மருகோனே - திருப்:181/7

நிரை பரவி வர வரையுள் ஓர் சீத மருதினொடு பொரு சகடு உதை அது செய்து ஆ மாய மழை சொரிதல் - திருப்:116/9

வளையும் அலை கடல் சுவற விடு பகழி வரதன் இரு மருதினொடு பொருது அருளும் அபிராமன் - திருப்:1091/5

மருது குலுங்கி நலங்க முனிந்திடு வரதன் அலங்கல் புனைந்து அருளும் குறள் - திருப்:771/13

மருது நெறுநெறுநெறு என முறிபட உருளும் உரலொடு தவழ் அரி மருக செவ்வனசம் - திருப்:908/13

உருவு பெருகு அயல் கரியது ஒர் முகில் எனு மருது நெறி பட முறைபட வரைதனில் - திருப்:930/9

மருது நீறு அதாய் வீழ வலி செய் மாயன் வேய் ஊதி மடுவில் ஆனை தான் மூலம் என ஓடி - திருப்:1048/5

மருது நெறுநெறு என மோதி வேரோடு கருதும் அலகை முலை கோதி வீதியில் - திருப்:1157/9

மருது பொடிபட உதைத்திட்டு ஆய் செரி மகளிர் உறிகளை உடைத்து போட்டவர் - திருப்:1183/9

மருதொடு கஞ்சன் உயிர் பலி கொண்டு மகிழ் அரி விண்டு மருகோனே - திருப்:851/5

மடுவில் மத கரி முதல் என உதவிய வரதன் இரு திறல் மருதொடு பொருதவன் - திருப்:1006/11

கரிய மேனியன் மருதொடு பொருதவன் இனிய பாவலன் உரையினில் ஒழுகிய - திருப்:1009/13

மா வாய் பிளந்து மருதிடை போய் மண் அளந்த - நாலாயி:3018/3

புணர் மருதின் ஊடு போய் பூம் குருந்தம் சாய்த்து - நாலாயி:2143/1

மா வாய் உரம் பிளந்து மா மருதின் ஊடு போய் - நாலாயி:2329/3

பொருந்திய மா மருதின் இடை போய எம் - நாலாயி:3207/1

போனாய் மா மருதின் நடுவே என் பொல்லா மணியே - நாலாயி:3342/1

பொய் மாய மருது ஆன அசுரரை பொன்றுவித்து இன்று நீ வந்தாய் - நாலாயி:225/2

மாய சகடம் உதைத்து மருது இறுத்து - நாலாயி:315/1

மருது இறுத்தாய் உன் வளர்த்தியூடே வளர்கின்றதால் உன்தன் மாயைதானே - நாலாயி:700/4

நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் நேமியான் - நாலாயி:1020/1

பட நாகத்து_அணை கிடந்து அன்று அவுணர் கோனை பட வெகுண்டு மருது இடை போய் பழன வேலி - நாலாயி:1097/1

வாட மருது இடை போகி மல்லரை கொன்று ஒக்கலித்திட்டு - நாலாயி:1168/1

எண் திசையோரும் வணங்க இணை மருது ஊடு நடந்திட்டு - நாலாயி:1170/2

மா தொழில் மடங்க செற்று மருது இற நடந்து வன் தாள் - நாலாயி:1290/1

பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்து பெரு நிலம் அளந்தவன் கோயில் - நாலாயி:1338/2

இணை மலி மருது இற எருதினொடு இகல் செய்து - நாலாயி:1709/1

மைத்த கரும் குஞ்சி மைந்தா மா மருது ஊடு நடந்தாய் - நாலாயி:1882/1

இணை மருது இற்று வீழ நடைகற்ற தெற்றல் வினை பற்று அறுக்கும் விதியே - நாலாயி:1990/4

மாய மான் மாய செற்று மருது இற நடந்து வையம் - நாலாயி:2047/1

மருது இடை போய் மண் அளந்த மால் - நாலாயி:2099/4

கீளா மருது இடை போய் கேழலாய் மீளாது - நாலாயி:2335/2

பேரா மருது இறுத்தான் வெள்ளறையே வெஃகாவே - நாலாயி:2706/5

பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து மருது இடை - நாலாயி:3370/1

புள்ளின் வாய் பிளந்தாய் மருது இடை போயினாய் எருது ஏழ் அடர்த்த என் - நாலாயி:3415/1

முனிந்து சகடம் உதைத்து மாய பேய் முலை உண்டு மருது இடை போய் - நாலாயி:3587/1

மாய சகடும் மருதும் இறுத்தவன் - நாலாயி:163/2

கள்ள சகடும் மருதும் கலக்கு அழிய உதைசெய்த - நாலாயி:198/1

கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும் - நாலாயி:350/1

கருள் உடைய பொழில் மருதும் கத களிறும் பிலம்பனையும் கடிய மாவும் - நாலாயி:414/1

நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும் - நாலாயி:540/2

கால் ஆர் மருதும் காய் சினத்த கழுதும் கத மா கழுதையும் - நாலாயி:1705/2

திண்மை மிகு மருதொடு நல் சகடம் இறுத்தருளும் தேவன்-அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் - நாலாயி:1233/2

மன்னு மருதின் அமர்ந்தவரை வணங்கி மதுர சொல் மலர்கள் - 6.வம்பறா:2 65/1

மழலை மென் கிளி மருது அமர் சேக்கைய மருதம் - 4.மும்மை:5 10/3

ஈங்கு எனை ஆளுடையபிரானிடை மருது ஈதோ என்று - 6.வம்பறா:1 413/3

வன் சிறு தோல் மிசை உழத்தி மகவு உறக்கும் நிழல் மருதும்
தன் சினை மென் பெடை ஒடுங்கும் தடம் குழிசி புதை நீழல் - 4.மும்மை:4 8/1,2

எறி புனல் பொன் மணி சிதறும் திரை நீர் பொன்னிஇடை மருதை சென்று எய்தி அன்பினோடு - 5.திருநின்ற:1 192/1

மன் தங்கு இடைமருது ஏகம்பம் வாஞ்சியம் அன்ன பொன்னை - திருக்கோ:268/3

புடை மருது இள முகில் வளம் அமர் பொதுளிய - தேவா-சம்:1304/3

இடை மருது அடைய நம் இடர் கெடல் எளிதே - தேவா-சம்:1304/4

மருது இடை நடவிய மணி வணர் பிரமரும் - தேவா-சம்:1312/1

மன்மதன் என ஒளி பெறுமவர் மருது அமர் - தேவா-சம்:1346/1

இலவம் ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை இள மருது இலவங்கம் - தேவா-சம்:2662/1

மருது கீறி ஊடு போன மால் அயனும் அறியா - தேவா-சுந்:71/2

மண்ணும் மா வேங்கையும் மருதுகள் பீழ்ந்து உந்தி - தேவா-சம்:3187/1

இலை மருதே அழகு ஆக நாளும் இடு துவர்க்காயொடு சுக்கு தின்னும் - தேவா-சம்:63/1

மருதே இடம் ஆகும் விருது ஆம் வினை தீர்ப்பே - தேவா-சம்:1026/2
மருது
மருது

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *