சொல் பொருள்

(பெ) மலையமான் திருமுடிக் காரி,

சொல் பொருள் விளக்கம்

மலையமான் திருமுடிக் காரி,

மலையமான் சேர நாட்டு குறுநில மன்னர்கள் வம்சத்துள் ஒன்றாகும். அதில் மலையமான் திருமுடிக்காரி என்பவன் சங்க காலத்தில் வாழ்ந்த மன்னர்களில் ஒருவன். இவன் சிறந்த வீரன்; பெரிய வள்ளல்; புலவர்களால் புகழ்ந்து பாடப்பட்டவன். இவர்கள் திருக்கோயிலூர் என்று இப்போது அழைக்கப்படும் திருக்கோவலூர் என்ற ஊரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்துள்ளார்கள். மலையமான் கடையெழு வள்ளல்களில் ஒருவன்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a chieftain during sangam period, a great philanthropist

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தொலையா நல் இசை விளங்கு மலையன்
மகிழாது ஈத்த இழை அணி நெடும் தேர் – புறம் 123/3,4

கெடாத நல்ல புகழ் விளங்கும் மலையன்
மது நுகர்ந்து மகிழாது வழங்கிய பொற்படைகளால் அணியப்பட்ட உயர்ந்த தேர்

மாரி ஈகை மற போர் மலையனும் – புறம் 158/7,8

மாரி போலும் வண்மையையும், மிக்க போரினையுடைய மலையனும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.