Skip to content
மை

மை என்பது ஆடு

1. சொல் பொருள்

(பெ) அஞ்சனம், பெண்கள் கண்களுக்குத் தீட்டிக்கொள்ளும் கருப்புநிற அலங்காரப் பொருள், எழுதுபொருளாகப்பயன்படும் திரவம், கருமை நிறம், குற்றம், களங்கம், ஆடு, செம்மறியாடு, எருமை, கருமேகம், இருள்,

பார்க்க மை துரு துருவை யாடு வெள்யாடு புருவை வெண்மறி

2. சொல் பொருள் விளக்கம்

சங்க காலத்தில் ஆட்டினத்தை விரும்பி வளர்த்தனர் . இவைகளை விரும்பி வளர்த்தோர் ஆயர் எனப்பட்டனர் . முல்லை நிலத்தில் மாடும் , ஆடும் மந்தைகளாக வளர்க்கப்பட்டன.

ஆட்டினத்தில் செம்மறியாடு, வெள்ளாடு என்று இரு இனங்கள் வழங்கப்பட்டன, யாடு , மை என்றசொற்கள் ஆட்டினத்திற்குப் பொதுவாக வழங்கின. துரு துருவாடு , துருவை என்ற சொற்கள் செம்மறியாட்டைக் ( Sheep ) குறித்து வழங்கின .

தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும் -அகம் , 85

படுதலைத் துருவின் தோடே மார்ப்பக் -அகம் , 274

சிறுதலைத் துருவின் பழுப்புறு விளை தயிர் “–சிகம் , 884 .

ஆடுதலைத் துருவின் தோடுதலைப் பெயர்க்கும்– நற்றிணை , 169

செம்மறியாடுகளை மந்தையாக இடையர் வளர்த்தனர். ஆட்டு மந்தை தோடு எனப்பட்டது . செம்மறியாட்டைப் போல் வெள்ளாட்டையும் ( goats ) வளர்த்தனர். துரு வென்ற செம்மறி யாட்டின் பெயர் அதன்செம்மை கலந்த நிறத்தைக் குறித்து வழங்கிற்று. அது போல் வெள்ளை நிறத்தின் காரணமாக வெள்ளாடென்ற பெயர் வழங்கிற்று

பூங்கொடி அவரைப் பொய்யதன் அன்ன

உள்ளில் வயிற்ற வெள்ளை வெண்மறி – ச .இ வி 29

மாழ்கி யன்ன தாழ்பெருஞ் செவிய

புன் தலைச் சிறாரோ டுகளி மன்றுழைக்

கவையிலை ஆரின் அங்குழை கறிக்கும் ” – அகம் , 104

நிலைக் கோட்டு வெள்ளை நால்செவிக் கிடா அய் -அகம் , 156

தகர்விரவு துருவை வெள்ளையொடு விரைஇக்

கல்லென் கடத்திடை கடலி னிரைக்கும்

பல்யாட் டினநிரை யெல்லினிர் புகினே – மலைபடுகடாம் , வரி. 414-416 .

கொடுமுகத் துருவையொடு வெள்ளை சேக்கு

மிடுமுள் வேலி யெருப்படு வரைப்பின் – பெரும்பாண் , வரி. 153-154 .

வெள்ளாட்டின் கொம்பு நிலைக் கோடு என்றும் காது கவிந்துள்ளதை நால் செவி என்றும் தாழ் பெரும் செவி என்றும் விளக்கப்பட்டுள்ளது . மொச்சைக் காயில் உள்ளீடற்ற காய்போல வெள்ளாட்டுக்குட்டி காணப்பட்டதாகக் கூறுவதையும் ஆத்திச் செடியின் இலைகளை வெள்ளாடு கறிப்பதையும் அகநானூறு கூறுகின்றது . வெள்ளாடு ஆத்திச் செடியின் இலைகளை விரும்பி உண்பது இன்றும் காணக்கூடிய உண்மைச்

செய்தியாகும் . செம்மறியாடு அறுகம் புல்லைத் தின்பதாகக் கூறுவதையும் வெள்ளாடு இலைகளைத் தின்பதாகக் கூறுவதையும் கவனிக்க வேண்டும் . கொங்கு நாட்டில் மாட்டினத்தில் சிறந்த இனத்தைக் குறிப்பிட்டது போல ஆட்டினத்திலும் சிறந்த இனத்தைப் பூழி நாட்டில் காணப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர் .

யாரணங் குற்றனை கடலே பூழியர்

சிறுதலை வெள்ளைத் தோடுபரந் தன்ன

மீனார் குருகின் கானலம் பெருந்துறை – குறுந்தொகை, 168 .

மரம்பயில் சோலை மலியப் பூழியர்

உருவத் துருவின் நாண் மேயல் ஆரும் — நற்றிணை , 192 .

பூழி நாடு என்பது மலையாளத்தில் பொன்னானியைச் சேர்ந்த பகுதியாகும் . இதைச் சேர அரசர்கள் வென்றதாகச் சங்க நூல்கள் கூறும் . இந்தப் பூழிநாட்டிலும் அதற்கருகிலும் இன்றும் சிறந்த இன வெள்ளாடுகளைக் காண்கிறோம் . இவை பிறநிறக் கலப்பின்றி வெண்மையாகவே காணப்படுகின்றன. நிறையப் பால் தருகின்றன . இந்த இனத்தைத் தலைச்சேரி ஆடு ( Tellicherry goat ) என்று தனியான சிறந்த இனமாக இன்று அறிஞர் கருதுகின்றனர் . இந்த இன ஆட்டையே சங்க நூல் கூறும் பூழியர் ஆடாகக் கருத வேண்டும் .

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

a black pigment applied on the edges of eyelashes by women, ink, black colour, fault, defect, stain, blot, goat, sheep, buffalo, dark clouds, darkness

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

மை
மை

ஐது ஏய்ந்து அகன்ற அல்குல் மை கூர்ந்து
மலர் பிணைத்து அன்ன மா இதழ் மழை கண் – நற் 252/8,9

மென்மை பொருந்தி அகன்ற அல்குலையும், மையிட்டு
மலர்களைக் கட்டிவைத்தது போன்ற கரிய இமைகளைக் கொண்ட குளிர்ச்சியான கண்களையும்,

மை உக்கு அன்ன மொய் இரும் கூந்தல் – மது 417

மை ஒழுகினாற் போன்ற செறிந்த கரிய கூந்தலினையுமுடைய

மை இரும் குட்டத்து மகவொடு வழங்கி – பெரும் 271

கரிய பெரிய ஆழமான குளங்களில் பிள்ளைகளோடு நீந்தி,

மை இல் பளிங்கின் அன்ன தோற்ற
பல் கோள் நெல்லி பைங்காய் அருந்தி – அகம் 399/13,14

மை
மை

குற்றமற்ற பளிங்கினைப் போன்ற தோற்றத்தையுடைய
பலவாகக் காய்த்த நெல்லியின் பசிய காய்களை உண்டு

மை அறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய
மலர் அணி வாயில் பலர் தொழு கொடியும் – பட் 159,160

களங்கம் அற்ற சிறப்பினைடைய தெய்வங்களைக் கொண்ட
மலர் அணிந்த (கோயில்)வாசலில் (கட்டின) பலரும் வணங்கும் கொடிகளும்

களம்தோறும் கள் அரிப்ப
மரம்-தோறும் மை வீழ்ப்ப – மது 753,754

களங்கள்தோறும் கள்ளை அரிப்பவும்,
மரத்தடிகள்தோறும் செம்மறிக்கிடாயை வெட்டவும்

மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல் – நற் 83/5

ஆட்டிறைச்சி கலந்த நெய்யிட்டுச் சமைத்த வெண்சோற்றை

வைகு புலர் விடியல் மை புலம் பரப்ப – அகம் 41/1

பின்னிருட்டு புலர்ந்த விடியல் வேளையில் எருமைகளை மேய்நிலத்திற்கு ஓட்டிவிட

மை சூழ் வெற்பின் மலை பல இறந்து – நற் 214/7

முகில்கள் சூழ்ந்த சிகரங்களையுடைய மலைகள் பலவற்றைக் கடந்து

கரும் கல் கான்யாற்று அரும் சுழி வழங்கும்
கராஅம் பேணாய் இரவரின்
வாழேன் ஐய மை கூர் பனியே – நற் 292/7-9

கருங்கற்களுக்கிடையே ஓடும் காட்டாற்றில் நீந்தமுடியாத சுழல்களில் திரியும்
முதலைகளையும் கருத்தில்கொள்ளாமல் இரவுக்காலத்தில் வந்தால்,
நான் உயிரோடு இருக்கமாட்டேன் ஐயனே! அதுவும் இந்த இருள் நிறைந்த பனிக்காலத்தில்

மை
மை

மை இரும் குட்டத்து மகவொடு வழங்கி – பெரும் 271

மை தீர்ந்து கிளர்ந்து விளங்க – மது 9

மை உக்கு அன்ன மொய் இரும் கூந்தல் – மது 417

மை படு பெரும் தோள் மழவர் ஓட்டி – மது 687

மரம்-தோறும் மை வீழ்ப்ப – மது 754

மை அறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய – பட் 159

மை என விரிந்தன நீள் நறு நெய்தல் – மலை 124

மை படு மா மலை பனுவலின் பொங்கி – மலை 361

மை ஈர் ஓதி பெரு மட தகையே – நற் 29/11

மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே – நற் 57/10

மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல் – நற் 83/5

மலை அயல் கலித்த மை ஆர் ஏனல் – நற் 108/1

மை
மை

வரை கிழிப்பு அன்ன மை இருள் பரப்பி – நற் 154/2

மை படு சிறு நெறி எஃகு துணை ஆக – நற் 168/9

மை அணல் காளை பொய் புகல் ஆக – நற் 179/8

மை அணல் எருத்தின் முன்பின் தட கை – நற் 198/9

மை சூழ் வெற்பின் மலை பல இறந்து – நற் 214/7

மை அற விளங்கிய மணி நிற விசும்பில் – நற் 231/1

ஐது ஏய்ந்து அகன்ற அல்குல் மை கூர்ந்து – நற் 252/8

வாழேன் ஐய மை கூர் பனியே – நற் 292/9

மை இரும் பனை மிசை பைதல உயவும் – நற் 335/7

மணி ஏர் தோட்ட மை ஆர் ஏனல் – நற் 344/2

மை படு மால் வரை பாடினள் கொடிச்சி – நற் 373/3

மை
மை

மை பட்டு அன்ன மா முக முசு கலை – குறு 121/2

மை ஈர் ஓதி மாஅயோள்-வயின் – குறு 199/5

மை இரும் கூந்தல் மடந்தை நட்பே – குறு 209/7

திரி மருப்பு எருமை இருள் நிற மை ஆன் – குறு 279/1

மை அணி மருங்கின் மலைஅகம் சேரவும் – குறு 319/4

மை படு சிலம்பின் ஐவனம் வித்தி – குறு 371/2

கையற வீழ்ந்த மை இல் வானமொடு – ஐங் 235/1

மால் வெள்ளோத்திரத்து மை இல் வால் இணர் – ஐங் 301/1

மை வரை நாட வருந்துவள் பெரிதே – ஐங் 301/4

மை அணல் காளையொடு பைய இயலி – ஐங் 389/2

மை
மை

மை அற விளங்கிய கழல் அடி – ஐங் 399/4

மை அறு சுடர் நுதல் விளங்க கறுத்தோர் – ஐங் 474/1

மை ஊன் பெய்த வெண்ணெல் வெண் சோறு – பதி 12/17

மை இல் அறிவினர் செவ்விதின் நடந்து தம் – பதி 22/8

மணி நிற மை இருள் அகல நிலா விரிபு – பதி 31/11

மை அற விளங்கிய வடு வாழ் மார்பின் – பதி 38/11

வைகு ஆர்ப்பு எழுந்த மை படு பரப்பின் – பதி 41/22

மை அணிந்து எழுதரு மா இரும் பல் தோல் – பதி 52/5

மை படு மலர் கழி மலர்ந்த நெய்தல் – பதி 64/16

மா உடை மலர் மார்பின் மை இல் வால் வளை மேனி – பரி 1/3

மை இல் கமலமும் வெள்ளமும் நுதலிய – பரி 2/14

இரும்பு ஈர் வடி ஒத்து மை விளங்கும் கண் ஒளியால் – பரி 7/58

இருள் மை ஈர் உண்கண் இலங்கு இழை ஈன்றாட்கு – பரி 8/59

மை இரு நூற்று இமை உண்கண் மான் மறி தோள் மணந்த ஞான்று – பரி 9/8

மை புரை மட பிடி மட நல்லார் விதிர்ப்பு உற – பரி 10/47

மலர் அகல் மார்பின் மை படி குடுமிய – பரி 15/9

மை படு சிலம்பின் கறியொடும் சாந்தொடும் – பரி 16/2

மை வளம் பூத்த மலர் ஏர் மழை கண்ணார் – பரி 18/16

மை இல் வாள் முகம் பசப்பு ஊரும்மே – கலி 7/8

மை அற்ற படிவத்தான் மறுத்தரல் ஒல்வதோ – கலி 15/15

மை எழில் மலர் உண்கண் மரு ஊட்டி மகிழ் கொள்ள – கலி 27/17

மை அற விளங்கிய துவர் மணல் அது அது – கலி 32/2

மை தவழ் வெற்பன் மண அணி காணாமல் – கலி 39/42

மை படு சென்னி பய மலை நாடனை – கலி 43/6

மை தீர்ந்தன்று மதியும் அன்று – கலி 55/10

மை இல் மதியின் விளங்கும் முகத்தாரை – கலி 62/14

மை தபு கிளர் கொட்டை மாண் பதி படர்தரூஉம் – கலி 74/4

மை அற விளங்கிய மணி மருள் அம் வாய் தன் – கலி 81/1

மை இல் செம் துகிர் கோவை அவற்றின் மேல் – கலி 85/4

மை அற விளங்கிய ஆன் ஏற்று அவிர் பூண் – கலி 85/11

மை படு சென்னி மழ களிற்று ஓடை போல் – கலி 86/1

மை அறு மண்டிலம் வேட்டனள் வையம் – கலி 141/12

மை இல் சுடரே மலை சேர்தி நீ ஆயின் – கலி 142/41

மை ஈர் ஓதி மட மொழியோயே – கலி 150/23

மார்பினஃதே மை இல் நுண் ஞாண் – அகம் 0/3

மை படு மா மலை விலங்கிய சுரனே – அகம் 17/22

மலர் பாடு ஆன்ற மை எழில் மழை கண் – அகம் 33/9

வைகு புலர் விடியல் மை புலம் பரப்ப – அகம் 41/1

மை இரும் கானம் நாறும் நறு நுதல் – அகம் 43/10

மை ஈர் ஓதி மடவீர் நும் வாய் – அகம் 48/18

மை இல் மான் இனம் மருள பையென – அகம் 71/5

மை எழில் உண்கண் கலுழ – அகம் 81/14

உவ இனி வாழிய நெஞ்சே மை அற – அகம் 87/12

மை படு திண் தோள் மலிர வாட்டி – அகம் 89/11

மை ஆடு சென்னிய மலை கிழவோனே – அகம் 108/18

மை அணி யானை மற போர் செழியன் – அகம் 116/13

மை தோய் சிமைய மலை முதல் ஆறே – அகம் 119/20

வை வால் ஓதி மை அணல் ஏய்ப்ப – அகம் 125/5

மை தோய் விசும்பின் மாதிரத்து உழிதர – அகம் 125/10

மை தவழ் உயர் சிமை குதிரை கவாஅன் – அகம் 143/13

மை படு மா மலை விலங்கிய சுரனே – அகம் 153/19

மைஈர்ஓதி அரும் படர் உழத்தல் – அகம் 173/5

மை படு மா மலை விலங்கிய சுரனே – அகம் 187/24

மை படு விடர்அகம் துழைஇ ஒய்யென – அகம் 192/10

மதி உடம்பட்ட மை அணல் காளை – அகம் 221/6

மை ஈர் ஓதி வாள் நுதல் குறு_மகள் – அகம் 230/5

மை எழில் உண்கண் மடந்தையொடு வையை – அகம் 256/10

மை பட்டு அன்ன மா முக முசு இனம் – அகம் 267/9

மை ஈர் ஓதி மாஅயோளே – அகம் 279/17

மை அற விரிந்த படை அமை சேக்கை – அகம் 289/12

மை நிற உருவின் மணி கண் காக்கை – அகம் 327/15

கை கறித்து உரறும் மை தூங்கு இறும்பில் – அகம் 329/12

எய்த வந்தனரே தோழி மை எழில் – அகம் 363/17

மை ஈர் ஓதி மடவோய் யானும் நின் – அகம் 386/10

மை ஈர் ஓதி மட நல்லீரே – அகம் 388/10

மை இல் பளிங்கின் அன்ன தோற்ற – அகம் 399/13

வாயில் மாடம்-தொறும் மை விடை வீழ்ப்ப – புறம் 33/21

மை படு மருங்குல் பொலிய மஞ்ஞை – புறம் 50/2

நொய்தால் அம்ம தானே மை அற்று – புறம் 75/10

அடி புனை தொடு கழல் மை அணல் காளைக்கு என் – புறம் 83/1

மை ஊன் மொசித்த ஒக்கலொடு துறை நீர் – புறம் 96/7

மட்டு வாய் திறப்பவும் மை விடை வீழ்ப்பவும் – புறம் 113/1

நெய்யொடு துறந்த மை இரும் கூந்தல் – புறம் 147/6

ஐவனம் வித்தி மை உற கவினி – புறம் 159/17

மை அணி நெடு வரை ஆங்கண் ஒய்யென – புறம் 174/11

நெய் உலை சொரிந்த மை ஊன் ஓசை – புறம் 261/8

மை இரும் பித்தை பொலிய சூட்டி – புறம் 269/3

கை பய பெயர்த்து மை இழுது இழுகி – புறம் 281/3

மை விடை இரும் போத்து செம் தீ சேர்த்தி – புறம் 364/4

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *