Skip to content
வேங்கை

வேங்கை என்பது ஒரு புலி, ஒரு மரம்.

1. சொல் பொருள்

நீண்ட உடலமைப்புள்ள புலி, ஒரு மரம்(சாருவசாதகம், சறுதாகம், திமிசு, பீதகாரகம்), அதன் பூ

2. சொல் பொருள் விளக்கம்

இதன் மஞ்சள் நிறப்பூக்கள் புலியின் தோல் நிறத்திற்கு ஒப்பிட்டு தமிழ் இலக்கியங்களில் காணப்படுகிறது. மரத்தின் பால் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

மொழிபெயர்ப்புகள்

  1. ஆங்கிலம்– Indian Kino Tree
  2. இந்தி – विजयसार

3. ஆங்கிலம்

tiger with a long body, East Indian kino tree, Pterocarpus marsupium

வேங்கை
வேங்கை

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

சிறுத்தைப்புலியின் ஆசிய வகையையே (Acinonyx jubatus) தமிழகத்தில் வேங்கைப்புலி என
அழைக்கின்றனர் என்பர்.

வேங்கை அடு முரண் தொலைத்த நெடு நல் யானை – அகம் 307/6,7

வேங்கைப்புலியின் கொலைத்தொழிலுக்குக் காரணமான வலிமையை அழித்த நீண்ட நல்ல யானை

இம் மரத்தின் அடிப்பகுதி கரியதாகவும், கிளைகள் பெரிதாகவும் இருக்கும்.

கரும் கால் வேங்கை இரும் சினை பொங்கர்
நறும் பூ கொய்யும் பூசல் – மது 296,297

கரிய அடிமரத்தைக்கொண்ட வேங்கையின் பெரியதாய்க் கிளைத்த கொம்புகளில்(பூத்த) நறிய பூவைப் பறிக்கும் ஆரவாரமும்

இது பொன்னிறத்தில் கொத்துக்கொத்தாகப் பூக்கும்.

தலை நாள் பூத்த பொன் இணர் வேங்கை
மலை-மார் இடூஉம் ஏம பூசல் – மலை 305,306

முதல்நாளில்(=முதன்முதலில்) பூத்த பொன் போன்ற கொத்தினையுடைய வேங்கை மலர்களைச் 305 சூடுவதற்குப் (பெண்கள்)போடும் (தீங்கற்ற)மகிழ்ச்சி ஆரவாரமும்;

இதன் ஒருவகை மரம் சிவப்பாகவும் பூக்கும்.

செ வீ வேங்கை பூவின் அன்ன
வேய் கொள் அரிசி – மலை 434,435

சிவந்த மலர்களைக் கொண்ட வேங்கை மரத்தின் பூக்களைப் போன்ற மூங்கிலினின்றும் கொண்ட அரிசி

இதன் பூக்கள் மணம் மிக்கவை, இதன் மணம் ஊர்முழுக்க மணக்கும்.

வேங்கை கமழும் எம் சிறுகுடி – குறு 355/6

வேங்கைப் பூக்கள் மணக்கும் எமது சிறுகுடி

இந்தப் பூ புலியின் புள்ளிகளைப் போன்றிருக்கும்.

புலி பொறி வேங்கை பொன் இணர் கொய்து – ஐங் 396/1

புலியின் புள்ளிகளைப் போன்ற வேங்கையின் பொன்னிறப் பூங்கொத்துகளைக் கொய்து

பூத்திருக்கும் வேங்கை மரம் புலியைப் போல் தோற்றமளிப்பதால், யானை அம் மரத்தைக் குத்தும்.

உறு புலி உரு ஏய்ப்ப பூத்த வேங்கையை
கறுவு கொண்டு அதன் முதல் குத்திய மத யானை – கலி 38/6,7

மிகப்பெரிய புலியின் நிறத்தைப் போன்று பூத்த வேங்கையைச் சினங்கொண்டு அந்த மரத்தின் அடிப்பகுதியைக் குத்திய மதயானை

வேங்கை நுண் தாது அப்பி காண்வர - திரு 36

நளி சினை வேங்கை நாள்மலர் நச்சி - சிறு 23

புகர் இணர் வேங்கை வீ கண்டு அன்ன - பெரும் 194

கரும் கால் வேங்கை இரும் சினை பொங்கர் - மது 296

தலை நாள் பூத்த பொன் இணர் வேங்கை/மலை-மார் இடூஉம் ஏம பூசல் - மலை 305,306

செ வீ வேங்கை பூவின் அன்ன - மலை 434

வேங்கை வீ உகும் ஓங்கு மலை கட்சி - நற் 13/7

வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து - நற் 28/6

குன்ற வேங்கை கன்றொடு வதிந்து என - நற் 57/2

அரும்பு அற மலர்ந்த கரும் கால் வேங்கை/சுரும்பு இமிர் அடுக்கம் புலம்ப களிறு அட்டு - நற் 112/2,3

வேங்கை கண்ணியர் எருது எறி களமர் - நற் 125/9

பொன் இணர் வேங்கை பூ சினை செலீஇயர் - நற் 151/9

குறும் பொறை அயல நெடும் தாள் வேங்கை/அம் பூ தாது உக்கு அன்ன - நற் 157/8,9

வேங்கை முதலொடு துடைக்கும் - நற் 158/8

சுரும்பு உண விரிந்த கரும் கால் வேங்கை/பெரும் சினை தொடுத்த கொழும் கண் இறாஅல் - நற் 168/1,2

தேன் செய் பெரும் கிளை இரிய வேங்கை/பொன் புரை கவளம் புறந்தருபு ஊட்டும் - நற் 202/5,6

எரி மருள் வேங்கை கடவுள் காக்கும் - நற் 216/6

கரும் கால் வேங்கை ஊறுபட மறலி - நற் 217/4

கரும் கால் வேங்கை செம் வீ வாங்கு சினை - நற் 222/1

வேண்டுதும் வாழிய எந்தை வேங்கை/வீ உக வரிந்த முன்றில் - நற் 232/7,8

அரும்பு வாய் அவிழ்ந்த கரும் கால் வேங்கை/பொன் மருள் நறு வீ கல் மிசை தாஅம் - நற் 257/5,6

வேங்கை ஓங்கிய தேம் கமழ் சாரல் - நற் 259/2

வேங்கை முன்றில் குரவையும் கண்டே - நற் 276/10

கரும் கால் வேங்கை நாள் உறு புது பூ - நற் 313/1

ஓங்கு கழை ஊசல் தூங்கி வேங்கை/வெற்பு அணி நறு வீ கல் சுனை உறைப்ப - நற் 334/3,4

வேங்கை அம் கவட்டு இடை சாந்தின் செய்த - நற் 351/6

மழ களிறு உரிஞ்சிய பராரை வேங்கை/மணல் இடு மருங்கின் இரும் புறம் பொருந்தி - நற் 362/7,8

கரும் கால் வேங்கை ஊசல் தூங்கி - நற் 368/2

கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கை/பா அமை இதணம் ஏறி பாசினம் - நற் 373/6,7

வேங்கை அம் படு சினை பொருந்தி கைய - நற் 379/4

கல் அயல் கலித்த கரும் கால் வேங்கை/அலங்கல் அம் தொடலை அன்ன குருளை - நற் 383/1,2

நன்நாள் வேங்கை பொன் மருள் புது பூ - நற் 384/7

விடர் அளை பள்ளி வேங்கை அஞ்சாது - நற் 386/4

வேங்கை தந்த வெற்பு அணி நன்நாள் - நற் 396/3

அரும்பு அற மலர்ந்த கரும் கால் வேங்கை/மேக்கு எழு பெரும் சினை இருந்த தோகை - குறு 26/1,2

கரும் கால் வேங்கை வீ உகு துறுகல் - குறு 47/1

அருவி வேங்கை பெரு மலை நாடற்கு - குறு 96/1

குறும் பொறை தடைஇய நெடும் தாள் வேங்கை/பூ உடை அலங்கு சினை புலம்ப தாக்கி - குறு 134/3,4

பொரு களிறு மிதித்த நெரி தாள் வேங்கை/குறவர் மகளிர் கூந்தல் பெய்ம்-மார் - குறு 208/2,3

மன்ற வேங்கை மலர் பதம் நோக்கி - குறு 241/4

ஆங்கு அறிந்திசினே தோழி வேங்கை/வீயா மென் சினை வீ உக யானை - குறு 247/4,5

கோடை ஒற்றிய கரும் கால் வேங்கை/வாடு பூ சினையின் கிடக்கும் - குறு 343/5,6

வேங்கை கமழும் எம் சிறுகுடி - குறு 355/6

கிழங்கு அகழ் நெடும் குழி மல்க வேங்கை/பொன் மலி புது வீ தாஅம் அவர் நாட்டு - ஐங் 208/2,3

பெரு வரை வேங்கை பொன் மருள் நறு வீ - ஐங் 217/1

கரும் கால் வேங்கை மா தகட்டு ஒள் வீ - ஐங் 219/1

மன்ற வேங்கை மலர் சில கொண்டு - ஐங் 259/2

கல் முகை வேங்கை மலரும் - ஐங் 276/5

எரி மருள் வேங்கை இருந்த தோகை - ஐங் 294/1

விரிந்த வேங்கை பெரும் சினை தோகை - ஐங் 297/1

வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும் - ஐங் 311/1

வேங்கை வென்ற சுணங்கின் - ஐங் 324/4

புலி பொறி வேங்கை பொன் இணர் கொய்து நின் - ஐங் 396/1

வரை சேர்பு எழுந்த சுடர் வீ வேங்கை/பூ உடை பெரும் சினை வாங்கி பிளந்து தன் - பதி 41/8,9

வேங்கை வென்ற பொறி கிளர் புகர் நுதல் - பதி 53/18

வேங்கை விரிந்து விசும்பு உறு சேண் சிமை - பதி 88/34

ஒளிர் சினை வேங்கை விரிந்த இணர் உதிரலொடு - பரி 7/12

கை புனை கிளர் வேங்கை காணிய வெருவு-உற்று - பரி 10/46

சினை வளர் வேங்கை கணவிரி காந்தள் - பரி 11/20

மெல் இணர் வேங்கை வியல் அறை தாயின - பரி 14/11

உறழ நனை வேங்கை ஒள் இணர் மலர - பரி 15/32

எருவை நறும் தோடு எரி இணர் வேங்கை/உருவம் மிகு தோன்றி ஊழ் இணர் நறவம் - பரி  19/77,78

ஒருசார் அணி மலர் வேங்கை மராஅ மகிழம் - பரி 23/7

பிணி நெகிழ் அலர் வேங்கை விரிந்த பூ வெறி கொள - கலி 32/5

வேங்கை விரிவு இடம் நோக்கி - கலி 38/25

புன வேங்கை தாது உறைக்கும் பொன் அறை முன்றில் - கலி 39/34

மன்றல் வேங்கை கீழ் இருந்து - கலி 41/43

வேங்கை தொலைத்த வெறி பொறி வாரணத்து - கலி 43/1

வேங்கை அம் சினை என விறல் புலி முற்றியும் - கலி 46/5

ஆம் இழி அணி மலை அலர் வேங்கை தகை போல - கலி 48/1

தகை இணர் இள வேங்கை மலர் அன்ன சுணங்கினாய் - கலி 57/17

ஆங்கு ஆக அ திறம் அல்லா-கால் வேங்கை வீ - கலி 64/26

வேங்கை தாஅய தேம் பாய் தோற்றம் - அகம் 12/10

விரி இணர் வேங்கை வண்டு படு கண்ணியன் - அகம் 38/1

ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்று-உழி - அகம் 48/6

கிளர்ந்த வேங்கை சேண் நெடும் பொங்கர் - அகம் 52/2

நல்நாள் பூத்த நாகு இள வேங்கை/நறு வீ ஆடிய பொறி வரி மஞ்ஞை - அகம் 85/10,11

அகல் அறை மலர்ந்த அரும்பு முதிர் வேங்கை/ஒள் இலை தொடலை தைஇ மெல்லென - அகம் 105/1,2

தேம் கமழ் இணர வேங்கை சூடி - அகம் 118/2

வேங்கை விரி இணர் ஊதி காந்தள் - அகம் 132/11

நல்நாள் வேங்கை வீ நன் களம் வரிப்ப - அகம் 133/4

கலை பாய்ந்து உகளும் கல் சேர் வேங்கை/தேம் கமழ் நெடு வரை பிறங்கிய - அகம் 141/27,28

வேங்கை வெறி தழை வேறு வகுத்து அன்ன - அகம் 147/2

வேங்கை சேர்ந்த வெற்புஅகம் பொலிய - அகம் 162/20

யாங்கு ஆகுவள்-கொல் தானே வேங்கை/ஊழ்-உறு நறு வீ கடுப்ப கேழ் கொள - அகம் 174/10,11

பூ கண் வேங்கை பொன் இணர் மிலைந்து - அகம் 182/1

மலர்ந்த வேங்கை மலி தொடர் அடைச்சி - அகம் 188/9

நல் இணர் வேங்கை நறு வீ கொல்லன் - அகம் 202/5

நாள்பூ வேங்கை நறு மலர் உதிர - அகம் 205/20

ஒண் பூ வேங்கை கமழும் - அகம் 218/21

களிற்று இரை பிழைத்தலின் கய வாய் வேங்கை/காய் சினம் சிறந்து குழுமலின் வெரீஇ - அகம் 221/11,12

புலி கேழ் வேங்கை பூ சினை புலம்ப - அகம் 227/8

ஓங்கல் மிசைய வேங்கை ஒள் வீ - அகம் 228/10

மன்ற வேங்கை மண நாள் பூத்த - அகம் 232/7

அரும்பு முதிர் வேங்கை அலங்கல் மென் சினை - அகம் 242/1

குருதி செம் களம் புலவு அற வேங்கை/உரு கெழு நாற்றம் குளவியொடு விலங்கும் - அகம் 268/3,4

மலர்ந்த வேங்கை அலங்கு சினை பொலிய - அகம் 272/17

வேங்கை கண்ணியன் இழிதரும் நாடற்கு - அகம் 282/10

இரும் புலி வேங்கை கரும் தோல் அன்ன - அகம் 285/8

சாரல் வேங்கை படு சினை புது பூ - அகம் 288/3

வேங்கை விரி இணர் சிதறி தேன் சிதையூஉ - அகம் 292/13

வேங்கை வென்ற வெருவரு பணை தோள் - அகம் 295/5

மணி மருள் மாலை மலர்ந்த வேங்கை/ஒண் தளிர் அவிர் வரும் ஒலி கெழு பெரும் சினை - அகம் 298/4,5

நறு வீ வேங்கை இன வண்டு ஆர்க்கும் - அகம் 302/6

நீங்கல் ஒல்லுமோ ஐய வேங்கை/அடு முரண் தொலைத்த நெடு நல் யானை - அகம் 307/6,7

பொன் வீ வேங்கை புது மலர் புரைய - அகம் 319/8

கரும் கால் வேங்கை செம் பூ பிணையல் - அகம் 345/8

திருந்து அரை நிவந்த கரும் கால் வேங்கை/எரி மருள் கவளம் மாந்தி களிறு தன் - அகம் 349/10,11

பூதம் தந்த பொரி அரை வேங்கை/தண் கமழ் புது மலர் நாறும் - அகம் 365/13,14

கரும் கால் வேங்கை செம் சுவல் வரகின் - அகம் 367/6

குறும் பொறை அயலது நெடும் தாள் வேங்கை/மட மயில் குடுமியின் தோன்றும் நாடன் - அகம் 368/6,7

வங்கூழ் ஆட்டிய அம் குழை வேங்கை/நன் பொன் அன்ன நறும் தாது உதிர - அகம் 378/3,4

வேங்கை அம் கவட்டு இடை நிவந்த இதணத்து - அகம் 388/7

அழல் சினை வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇ - அகம் 398/17

சாரல் வேங்கை பூ சினை தவழும் - புறம் 108/3

வெப்புள் விளைந்த வேங்கை செம் சுவல் - புறம் 120/1

வேங்கை முன்றில் குரவை அயரும் - புறம் 129/3

கரும் கால் வேங்கை மலரின் நாளும் - புறம் 137/9

நறை நார் தொடுத்த வேங்கை அம் கண்ணி - புறம் 168/15

அரும்பு அற மலர்ந்த கரும் கால் வேங்கை/மா தகட்டு ஒள் வீ தாய துறுகல் - புறம் 202/18,19

ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறு வீ - புறம் 265/2

வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின் - புறம் 336/9

அகடு நனை வேங்கை வீ கண்டு அன்ன - புறம் 390/21

படப்பை வேங்கைக்கு மறந்தனர்-கொல்லோ - குறு 266/3

வேங்கைமார்பன் இரங்க வைகலும் - புறம் 21/9

வீ ததர் வேங்கைய மலை கிழவோற்கே - நற் 51/11

வீ ததர் வேங்கைய வியல் நெடும் புறவின் - நற் 161/3

கோள் வல் வேங்கைய மலை பிறக்கு ஒழிய - ஐங் 385/2

மலர்ந்த வேங்கையின் வயங்கு இழை அணிந்து - பதி 40/22

இறுவரை வேங்கையின் ஒள் வீ சிதறி - கலி 41/11

கொய்து கட்டு அழித்த வேங்கையின்/மெல் இயல் மகளிரும் இழை களைந்தனரே - புறம் 224/16,17

விரி சினை துணர்ந்த நாகு இள வேங்கையின்/கதிர்த்து ஒளி திகழும் நுண் பல் சுணங்கின் - புறம் 352/12,13

மா இரும் குருந்தும் வேங்கையும் பிறவும் - குறி 95

நன்நாள் வேங்கையும் மலர்கமா இனி என - நற் 206/7

வேங்கையும் புலி ஈன்றன அருவியும் - நற் 389/1

வேங்கையும் காந்தளும் நாறி - குறு 84/4

வேங்கையும் ஒள் இணர் விரிந்தன - அகம் 2/16

உறு புலி உரு ஏய்ப்ப பூத்த வேங்கையை/கறுவு கொண்டு அதன் முதல் குத்திய மத யானை - கலி  38/6,7

புதுவது ஆக மலர்ந்த வேங்கையை/அது என உணர்ந்து அதன் அணி நலம் முருக்கி - கலி  49/5,6

விரி இணர் வேங்கையொடு வேறு பட மிலைச்சி - ஐங் 367/2

வெட்சி மா மலர் வேங்கையொடு விரைஇ - புறம் 100/5

செருந்தியும் வேங்கையும் பெரும் சண்பகமும் - மணி:3/165

பூத்தன வேங்கை மேல் பொலிந்து கார் நினைந்து - சிந்தா:1 87/3

வேங்கை நின்று பொன் உகுக்கும் வெற்பு உடுத்த சந்தனம் - சிந்தா:1 149/2

கானத்து-இடை வேங்கை எழ கண்ணினர்கள் அன்றே - சிந்தா:3 590/4

விரும்பி வண்டு இமிர்வது ஓர் வேங்கை வேங்கையின் - சிந்தா:5 1213/3

நக்கு ஆங்கே எயிறு உடைந்த நறவ முல்லை நாள் வேங்கை
தக்கார் போல் கைம்மறித்த காந்தள் அந்தோ தகாது எனவே - சிந்தா:5 1227/2,3

பாசி பாசத்து பைம்பொன் நிரை தாலி பூத்த வேங்கை
மாசில் வெண் துகிலை நீர் தோய்த்து மேல் போர்த்த வண்ணமே போல் - சிந்தா:7 1649/1,2

வித்திய வேங்கை வீயும் விழு பொனும் விளங்க காம - சிந்தா:12 2539/2

கடை தயிர் குரல வேங்கை கண்ணுற சென்று நண்ணி - சிந்தா:13 2717/1

அசும்பு சேர் களிறு திண் தேர் அலை மணி புரவி வேங்கை
விசும்பு இயங்கு அரியோடு ஆளி விடை மயில் அன்னம் நாகம் - சிந்தா:13 3083/2,3
 
விரும்பி வண்டு இமிர்வது ஓர் வேங்கை வேங்கையின்
மருங்கில் ஓர் செந்நெறி வகுக்க பட்டதே - சிந்தா:5 1213/3,4

வேட்ட ஓர் சிங்கம் சூழ்ந்த வேங்கையின் இனத்தின் வெய்ய - சிந்தா:7 1739/2

பூத்த கோங்கும் வேங்கையும் பொன் இணர் செய் கொன்றையும் - சிந்தா:1 154/1

சினைய சண்பகம் வேங்கையோடு ஏற்றுபு - சிந்தா:7 1608/3

வேங்கை நுண் தாது அப்பி காண்வர - திரு 36

கடமா தொலைச்சிய கான் உறை வேங்கை
இடம் வீழ்ந்தது உண்ணாது இறக்கும் இடமுடைய - நாலடி:30 10/1,2

வேங்கை வெரூஉம் நெறி செலிய போலும் என் - நாலடி:40 9/3

வேங்கை இரும் புலி போன்ற புனல் நாடன் - கள40:16/4

பொன் இணர் வேங்கை கவினிய பூம் பொழிலுள் - ஐந்50:11/1

வேங்கை நறு மலர் வெற்பிடை யாம் கொய்து - ஐந்50:15/1

கொடு வரி வேங்கை பிழைத்து கோட்பட்டு - ஐந்50:16/1

உதிரம் துவரிய வேங்கை உகிர் போல் - ஐந்50:31/1

பொன் இணர் வேங்கை கமழும் நளிர் சோலை - ஐந்70:6/1

வேங்கை மலர வெறி கமழ் தண் சிலம்பின் - திணை50:8/1

கணி நிற வேங்கை மலர்ந்து வண்டு ஆர்க்கும் - திணை50:9/3

நெறி வளர் நீள் வேங்கை கொட்கும் முறி வளர் - திணை150:7/2

என் ஆம்கொல் ஈடு இல் இள வேங்கை நாள் உரைப்ப - திணை150:18/1

நாள் வேங்கை பொன் விளையும் நல் மலை நல் நாட - திணை150:20/1

கோள் வேங்கை போல் கொடியார் என் ஐயன்மார் கோள் வேங்கை - திணை150:20/2

கோள் வேங்கை போல் கொடியார் என் ஐயன்மார் கோள் வேங்கை
அன்னையால் நீயும் அரும் தழை யாம் ஏலாமைக்கு - திணை150:20/2,3

கரும் கால் இள வேங்கை கான்ற பூ கல் மேல் - திணை150:26/1

இரும் கால் வய வேங்கை ஏய்க்கும் மருங்கால் - திணை150:26/2

பனி வரை நீள் வேங்கை பய மலை நல் நாட - திணை150:27/1

நாள் வேங்கை நீழலுள் நண்ணான் எவன்கொலோ - திணை150:31/3

கோள் வேங்கை அன்னான் குறிப்பு - திணை150:31/4

பல் நாளும் நின்ற இடத்தும் கணி வேங்கை
நல் நாளே நாடி மலர்தலால் மன்னர் - பழ:120/1,2

பொன் இணர் வேங்கை புனம் சூழ் மலை நாடன் - கைந்:10/1

நாக நறு மலர் நாள் வேங்கை பூ விரவி - கைந்:12/1

கடும் சின வேங்கை கதழ் வேழம் சாய்க்கு - கைந்:16/2

வெறி கமழ் சந்தனமும் வேங்கையும் வேமே - நாலடி:18 10/3

மாலை மேவு வேங்கை பற்றி வண்டு உணாது என மன - தேம்பா:11 3/1

மாலை மேவு வேங்கை பற்றி வண்டு உணாது என மன - தேம்பா:11 3/2

விழுவான் என உதைத்து வேங்கை அனார் வெகுண்டு அற நூல் - தேம்பா:20 62/3

வரி சுமந்து அடும் வெம் வேங்கை மறத்தொடு பொலிய நின்றான் - தேம்பா:25 16/4

நாட்டு அன்னார் வெருவி நைய நண்ணி எண்இல கொல் வேங்கை
கூட்டு அன்னார் அபயர் சூழ கோயிலை இரவின் புக்கான் - தேம்பா:29 85/3,4

பாயா வேங்கையை என்புளி பைம் பூ - தேம்பா:25 28/1
வேங்கை
வேங்கை
கடுக்கை ஆர் வேங்கை கோங்கு பச்சிலை கண்டில் வெண்ணெய் - பால:1 13/3

விலக்கஅரும் கரி மதம் வேங்கை நாறுவ - பால:3 57/1

கண் மலர் கொடிச்சிமார்க்கு கணி தொழில் புரியும் வேங்கை
உண் மலர் வெறுத்த தும்பி புதிய தேன் உதவும் நாக - பால:16 3/2,3

பொன் அணி நிற வேங்கை கோங்குகள் புது மென் பூ - அயோ:9 14/2

மீளிகள் பூண்டன வேங்கை பூண்டன - ஆரண்:7 31/2

வெம் சின கரடி நாய் வேங்கை யாளி என்று - ஆரண்:7 45/2

ஆணி பொன் வேங்கை கோங்கம் அரவிந்தராகம் பூகம் - ஆரண்:10 96/2

மின் கன்றும் எயிற்று கோள் மா வேங்கை என்று இனையவேயும் - கிட்:2 10/2

ஓடு நாகம் ஓட வேங்கை ஓடும் யூகம் ஓடவே - கிட்:7 4/4

வேங்கை நாறின கொடிச்சியர் வடி குழல் விரை வண்டு - கிட்:10 47/1

வேங்கை செற்று மராமரம் வேர் பறித்து - சுந்:6 25/1

கரி பரி வேங்கை மா கரடி யாளி பேய் - சுந்-மிகை:3 14/1

வனைந்த வேங்கையில் கோங்கினில் வயின்-தொறும் தொடுத்து - அயோ:10 24/2

வட்ட வேங்கையின் மலரொடும் ததைந்தன வயங்கும் - அயோ:10 8/3

கோல வேங்கையின் கொம்பர்கள் பொன் மலர் தூவி - அயோ:10 16/3

வேங்கையின் மலரும் கொன்றை விரிந்தன வீயும் ஈர்த்து - கிட்:10 29/3

வெய்ய சீயமும் யாளியும் வேங்கையும்
மொய் கொள் குன்றின் முதலின மொய்த்தலால் - யுத்1:8 27/2,3

சுற்றி ஒரு வேங்கை அதளோடும் பிறை சூடும் - தேவா-சம்:191/3

வேங்கை பொன் மலர் ஆர் விரை தரு கோயில் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே - தேவா-சம்:816/4

கரும் சுனை முல்லை நன் பொன் அடை வேங்கை களி முக வண்டொடு தேன் இனம் முரலும் - தேவா-சம்:829/3

குரவம் சுரபுன்னை குளிர் கோங்கு இள வேங்கை
விரவும் பொழில் அம் தண் வீழிமிழலையே - தேவா-சம்:885/3,4

வெய்ய தண் சாரல் விரி நிற வேங்கை தண் போது - தேவா-சம்:1063/1

வம்பு ஆர் குன்றம் நீடு உயர் சாரல் வளர் வேங்கை
  கொம்பு ஆர் சோலை கோல வண்டு யாழ்செய் குற்றாலம் - தேவா-சம்:1069/1,2

செல்வம் மல்கு செண்பகம் வேங்கை சென்று ஏறி - தேவா-சம்:1071/1

அரவினொடு ஆமையும் பூண்டு அம் துகில் வேங்கை அதளும் - தேவா-சம்:2201/1

பூம் தண் நறு வேங்கை கொத்து இறுத்து மத்தகத்தில் பொலிய ஏந்தி - தேவா-சம்:2241/3

உடைந்த காற்றுக்கு உயர் வேங்கை பூத்து உதிர கல் அறைகள் மேல் - தேவா-சம்:2709/3

கிடந்த வேங்கை சினமா முகம் செய்யும் கேதாரமே - தேவா-சம்:2709/4

உடை கொள் வேங்கை உரி தோல் உடையார்க்கு இடம் ஆவது - தேவா-சம்:2730/3

விரவி ஞாழல் விரி கோங்கு வேங்கை சுரபுன்னைகள் - தேவா-சம்:2751/3

மிக்கு அரை தாழ வேங்கை உரி ஆர்த்து உமையாள் வெருவ - தேவா-சம்:3430/1

குருந்து உயர் கோங்கு கொடி விடு முல்லை மல்லிகை சண்பகம் வேங்கை
கரும் தடம் கண்ணின் மங்கைமார் கொய்யும் கழுமல நகர் எனல் ஆமே - தேவா-சம்:4077/3,4

வேங்கை பூ மகிழால் வெயில் புகா வீழிமிழலையான் என வினை கெடுமே - தேவா-சம்:4082/4

விரிந்து உயர் மௌவல் மாதவி புன்னை வேங்கை வண் செருந்தி செண்பகத்தின் - தேவா-சம்:4126/3

கொலை வரி வேங்கை அதளும் குலவோடு இலங்கு பொன் தோடும் - தேவா-அப்:17/1

செண்பகம் திகழும் புன்னை செழும் திரள் குரவம் வேங்கை
நண்பு செய் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிகளாரே - தேவா-அப்:681/3,4

வெடி கொள் அரவொடு வேங்கை அதள் கொண்டு மேல் மருவி - தேவா-அப்:804/2

மிக தான் பெரியது ஓர் வேங்கை அதள் கொண்டு மெய் மருவி - தேவா-அப்:809/1

வேங்கை தோல் உடை ஆடை வீரட்டரே - தேவா-அப்:1615/4

கொடி ஏறு கோல மா மணி_கண்டனே கொல் வேங்கை அதளனே கோவணவனே - தேவா-அப்:2128/2

கொலை ஆய கூற்றம் உதைத்தார்தாமே கொல் வேங்கை தோல் ஒன்று அசைத்தார்தாமே - தேவா-அப்:2445/2

கொலை ஆன கூற்றம் குமைத்தான் கண்டாய் கொல் வேங்கை தோல் ஒன்று உடுத்தான் கண்டாய் - தேவா-அப்:2479/2

வேங்கை வரி புலி தோல் மேல் ஆடையான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே - தேவா-அப்:2614/4

குரு மணியை கோள் அரவம் ஆட்டுவானை கொல் வேங்கை அதளானை கோவணனை - தேவா-அப்:2766/2

விடை உடையான் வேங்கை அதள் மேல் ஆடை வெள்ளி போல் புள்ளி உழை மான் தோல் சார்ந்த - தேவா-அப்:3055/2

கோடு உயர் கோங்கு அலர் வேங்கை அலர் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் - தேவா-சுந்:25/1

மலைத்த சந்தொடு வேங்கை கோங்கமும் மன்னு கார் அகில் சண்பகம் - தேவா-சுந்:362/3

வெய்ய மா கரி ஈர் உரியானே வேங்கை ஆடையினாய் விதி முதலே - தேவா-சுந்:715/1

தளிர் தரு கோங்கு வேங்கை தட மாதவி சண்பகமும் - தேவா-சுந்:1002/3

குரவு அமர் சுரபுனை கோங்கு வேங்கைகள்
விரவிய பொழில் அணி விசயமங்கையே - தேவா-சம்:2976/3,4

கனகம் என மலர்கள் அணி வேங்கைகள் நிலாவு காளத்தி மலையே - தேவா-சம்:3545/4

அடை அரிமாவொடு வேங்கையின் தோல் - தேவா-சம்:2828/1

பொழிந்து இழி மும்மத களிற்றின மருப்பும் பொன் மலர் வேங்கையின் நல் மலர் உந்தி - தேவா-சுந்:755/1

வெள்ளாடை வேண்டாய் வேங்கையின் தோலை விரும்பினாய் - தேவா-சுந்:941/2

செம்பொன் ஆர்தரு வேங்கையும் ஞாழலும் செருத்தி செண்பகம் ஆனை - தேவா-சம்:2659/1

கோங்கு இள வேங்கையும் கொழு மலர் புன்னையும் - தேவா-சம்:3131/1

மண்ணும் மா வேங்கையும் மருதுகள் பீழ்ந்து உந்தி - தேவா-சம்:3187/1

கொய்யா மலர் கோங்கொடு வேங்கையும் சாடி - தேவா-சுந்:130/1

வேங்கையே ஞாழலே விம்மு பாதிரிகளே விரவி எங்கும் - தேவா-சம்:3778/2

வெண் கவரி கரும் பீலி வேங்கையொடு கோங்கின் விரை மலரும் விரவு புனல் அரிசிலின் தென் கரை மேல் - தேவா-
சுந்:165/3

கணி வளர் வேங்கையோடு கடி திங்கள் கண்ணி கழல் கால் சிலம்ப அழகு ஆர் - தேவா-அப்:77/1

விடையவனே விட்டிடுதி கண்டாய் விறல் வேங்கையின் தோல் - திருவா:6 1/2

மற மனை வேங்கை என நனி அஞ்சும் மஞ்சு ஆர் சிலம்பா - திருக்கோ:96/2

குற மனை வேங்கை சுணங்கொடு அணங்கு அலர் கூட்டுபவோ - திருக்கோ:96/3

நிறம் மனை வேங்கை அதள் அம்பலவன் நெடு வரையே - திருக்கோ:96/4

போது இடங்கொண்ட பொன் வேங்கை தினை புனம் கொய்க என்று - திருக்கோ:138/2

குற பாவை நின் குழல் வேங்கை அம் போதொடு கோங்கம் விராய் - திருக்கோ:205/1

மொய் ஆர் வளர் இள வேங்கை பொன் மாலையின் முன்னினவே - திருக்கோ:262/4

சினை வளர் வேங்கைகள் யாங்கள் நின்று ஆடும் செழும் பொழிலே - திருக்கோ:154/4

நற மனை வேங்கையின் பூ பயில் பாறையை நாகம் நண்ணி - திருக்கோ:96/1

வேங்கையின் வாயின் வியன் கை மடுத்து கிடந்து அலற - திருக்கோ:245/3

துண்ட பிறை போல்வன தூங்கிட வேங்கை வன் தோல் - 3.இலை:3 59/3

கைம் மலை கரடி வேங்கை அரி திரி கானம்-தன்னில் - 3.இலை:3 107/2

குலகிரியின் கொடுமுடி மேல் கொடி வேங்கை குறி எழுதி - 8.பொய்:2 1/1
வேங்கை
வேங்கை
முல்லை நல் நறு மலர் வேங்கை மலர் அணிந்து பல் ஆயர் குழாம் நடுவே - நாலாயி:255/3

பூம் கொடிக்கு இன விடை பொருதவன் இடம் பொன் மலர் திகழ் வேங்கை
கோங்கு செண்பக கொம்பினில் குதி கொடு குரக்கினம் இரைத்து ஓடி - நாலாயி:1152/2,3

கணி வளர் வேங்கை நெடு நிலம்-அதனில் குறவர்-தம் கவணிடை துரந்த - நாலாயி:1820/3

கார் மலி வேங்கை கோங்கு அலர் புறவில் கடி மலர் குறிஞ்சியின் நறும் தேன் - நாலாயி:1821/3

சின வேங்கை பார்க்கும் திருமலையே ஆயன் - நாலாயி:2356/3

புன வேங்கை நாறும் பொருப்பு - நாலாயி:2356/4

கொலை வாய் சின வேங்கைகள் நின்று உறங்கும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே - நாலாயி:271/4

கார் கொள் வேங்கைகள் கன வரை தழுவிய கறி வளர் கொடி துன்னி - நாலாயி:964/1

போர் கொள் வேங்கைகள் புன வரை தழுவிய பூம் பொழில் இமயத்துள் - நாலாயி:964/2

கடி கொள் வேங்கையின் நறு மலர் அமளியின் மணி அறை மிசை வேழம் - நாலாயி:960/3

புன்னை செருந்தியொடு புன வேங்கையும் கோங்கும் நின்று - நாலாயி:351/3

தேம் தினை வித்தினர் உற்றிட வெற்று இலை வேங்கை மரத்து எழிலை கொடு நிற்பவ - திருப்:266/13

வேங்கை அடவி மறவர் ஏங்க வனிதை உருக வேங்கை வடிவு மருவும் குமரேசா - திருப்:634/7

வேங்கை அடவி மறவர் ஏங்க வனிதை உருக வேங்கை வடிவு மருவும் குமரேசா - திருப்:634/7

கடிய காட்டகம் உறையும் வேட்டுவர் கருதொணா கணி வேங்கை ஆகி - திருப்:1057/5

பூம் தளிர்கள் வீறு வேங்கைகள் பலாசு பூம் கதலி கோடி திகழ் சோலை - திருப்:620/7

தீண்டு கழை திரள் உற்றது துற்றிடு வேங்கைதனில் குவளை சுனை சுற்று அலர் - திருப்:266/15

மயிலொடு மான்கள் சூழ வள வரி வேங்கையாகி மலை மிசை தோன்று மாய வடிவோனே - திருப்:774/6

மாங்கனி தேன் ஒழுக வேங்கையில் மேல் அரிகள் மாந்திய ஆரணிய மலை மீதில் - திருப்:1240/6

வேங்கையும் வாரணமும் வேங்கையும் மானும் வளர் வேங்கட மா மலையில் உறைவோனே - திருப்:527/7

வேங்கையும் வாரணமும் வேங்கையும் மானும் வளர் வேங்கட மா மலையில் உறைவோனே - திருப்:527/7

வேங்கையும் உயர்ந்த தீம் புனம் இருந்த வேந்து இழையின் இன்ப மணவாளா - திருப்:899/5

பாங்கியும் வேடுவரும் ஏங்கிட மா முநியும் வேங்கையுமாய் மற மினுடன் வாழ்வாய் - திருப்:527/5

வேங்கை சந்தனம் சண்பகம் நெல்லி வெய் தான்றி - சீறா:26/1

நிலம் மிசை கலங்கி உத்துபா வீழ நெடுங்கழுத்தலை வரி வேங்கை
அலைபட பிடித்து அங்கு அடவியின் அடைய அருக்கனும் குட புலத்து அடைந்தான் - சீறா:677/1,2

நின்ற வேங்கை எவ்வுழி என நிகழ்த்தினர் அவனும் - சீறா:760/3

வீதி-வாய் வர கண்டது பெரு வரி வேங்கை - சீறா:762/4

நன்று நன்று என போற்றியே நடந்தது வேங்கை - சீறா:766/4

வேங்கை போய பின் வள்ளலும் அனைவரும் விரைவில் - சீறா:768/1

சீற்றம் அடங்கா வரி வேங்கை திரியும் வனமும் கொடு மடங்கல் - சீறா:1338/1

விடும் கதிர் கனல் கண் வேங்கை மெய் அணை சிரத்தை சேர்த்த - சீறா:2581/1

விரிந்த தீன் பயிரை ஏற்றும் விறல் படை அலியாம் வேங்கை
பரிந்து இரு கரங்கள் ஏந்தி பற்பல் கால் இறையோன்-தன்பால் - சீறா:3068/2,3

கமை தரு சீற்ற வேங்கை அலி அகம் களிப்ப சொன்னார் - சீறா:3080/4

கான் அமர் வேங்கை வள்ளல் கதிர் மணி புயமும் நெஞ்சும் - சீறா:3081/3

கான வேங்கைகள் நடு வரும் கேசரி கடுப்ப - சீறா:2705/2

சுடர் கண் வேங்கைகள் என சில வீரர்கள் துறுமி - சீறா:3506/2

மறம் தயங்கு வேல் மாந்தர் அ வேங்கையின் வாய் பட்டு - சீறா:759/3

வேங்கையோடு உரை பகர்ந்த செம் கதிர் வடி வேலோய் - சீறா:1236/2

வேங்கை விரி இணர் விரும்புபு கொய்து - இலாவாண:12/83

வீழ் பூம் கொம்பின் வேங்கை நிரந்த - இலாவாண:12/98

கான வேங்கை கவர் சினை ஏறி - வத்தவ:3/71

பொறிப்படு வேங்கையின் குறிப்பிலர் குரங்கவும் - உஞ்ஞை:46/35

திரு கிளர் வேங்கையும் பொன்னும் பிதிர்ந்து - உஞ்ஞை:33/181

கரும் கோல் குறிஞ்சியும் கடி நாள் வேங்கையும்
சுள்ளியும் சூரலும் வள்ளியும் மரலும் - உஞ்ஞை:50/26,27

வேங்கையும் ஆவும் விளவும் வேயும் - இலாவாண:12/13

கல் சுனை நீலமும் கணி வாய் வேங்கையும்
நல் சினை நறவமும் நாகமும் நந்தியும் - இலாவாண:20/59,60

வேங்கையொடு தொடுத்த விளையாட்டு ஊசல் - உஞ்ஞை:33/23

பொலம் பூ வேங்கை நலம் கிளர் கொழு நிழல் - புகார்:0/4

இப்பால் இமயத்து இருத்திய வாள் வேங்கை
உப்பாலை பொன் கோட்டு உழையதா எப்பாலும் - புகார்: 1/67,68

செம் பொன் வேங்கை சொரிந்தன சேஇதழ் - மது:12/79

பூத்த வேங்கை பொங்கர் கீழ் ஓர் - மது:23/191

மலை வேங்கை நறு நிழலின் வள்ளி போல்வீர் மனம் நடுங்க - வஞ்சி:24/3

நறும் சினை வேங்கை நல் நிழல் கீழ் ஓர் - வஞ்சி:24/14

கான நறு வேங்கை கீழாள் ஓர் காரிகையே - வஞ்சி:24/120

கான நறு வேங்கை கீழாள் கணவனொடும் - வஞ்சி:24/121

கோங்கம் வேங்கை தூங்கு இணர் கொன்றை - வஞ்சி:25/17

கான வேங்கை கீழ் ஓர் காரிகை - வஞ்சி:25/57

நல் நாடு அணைந்து நளிர் சினை வேங்கை
பொன் அணி புது நிழல் பொருந்திய நங்கையை - வஞ்சி: 28/220,221

வடவரை மேல் வாள் வேங்கை ஒற்றினன் யார் அம்மானை - வஞ்சி:29/144

வடவரை மேல் வாள் வேங்கை ஒற்றினன் திக்கு எட்டும் - வஞ்சி:29/145

குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும்
விரவிய பூம் பொழில் விளங்கிய இருக்கை - மது: 11/207,208

வாள் வரி வேங்கையும் மான் கணம் மறவா - மது:13/6

குரவமும் வகுளமும் கோங்கமும் வேங்கையும்
மரவமும் நாகமும் திலகமும் மருதமும் - மது: 13/151,152

வேங்கையொடு தொடுத்த விளங்கு விறல் மாலை - வஞ்சி:25/139

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

1 thought on “வேங்கை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *