Skip to content
ஆம்பல்

ஆம்பல் என்பது ஒரு வகை அல்லி மலர் ஆகும்

1. சொல் பொருள்

(பெ) அல்லி, பண்வகை, ஒரு பேரெண், ஒரு பூவின் இதழ்

2. சொல் பொருள் விளக்கம்

ஆழமற்ற ஏரிகள் மற்றும் குளங்களில் பொதுவாக காணப்படுகிறது.ஆம்பல் நீரில் வளரும் ஒரு கொடியும் அதில் பூக்கும் மலரின் பெயரும் ஆகும்.  அகன்ற இலைகளையும் குழல் போன்ற தண்டினையும் கொண்ட ஒரு வகை நீர்த் தாவரம். இரவில் மலர்ந்து காலையில் இதழ்கள் மூடும். வெண்ணிற மலரையுடைய வெள்ளாம்பலும், நீலநிற மலரையுடைய நீல ஆம்பலும், செந்நிற மலரையுடைய அரக் காம்பலும் (செவ்வல்லி) உள்ளன.

நீல நிற அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும், வெண்ணிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் குவியும்.

ஆம்பற் கொடியின் வேர்த்தொகுதியில் கிழங்கு இருக்கும். இக்கிழங்கு உணவாகப் பயன்படும். ஆம்பற் கிழங்கொடு புலால் நாற்றமுள்ள ஆமையின் முட்டையுடன் பரிசிலர். ஆம்பல் மலரானது ஷாப்ளா என வங்காள மொழியிலும், கோகா என இந்தியிலும் குமுதம் என சமஸ்கிருத்த்திலும் அழைக்கப்படுகிறது 

ஆம்பல்
ஆம்பல்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Water-lily, nymphaea lotus, Nymphaea pubescenshairy water lily, pink water-lily, A melody-type, A very high number

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

“பூம்பாவாய் ஆம்பல், புன்னகையோ மௌவல்” , (”வாஜி வாஜி” திரைப்படப் பாடல், சிவாஜி (2007))

நீர் வளர் ஆம்பல் தூம்பு உடை திரள் கால் – நற் 6/1

நீரில் வளரும் ஆம்பலின் உள்துளையுள்ள திரண்ட தண்டு
ஆம்பல்
ஆம்பல்மலர்
ஒண் செம்_காந்தள் ஆம்பல் அனிச்சம் - குறி 62

ஆம்பல் அம் தீம் குழல் தெள் விளி பயிற்ற - குறி 222

ஆம்பல் ஆய் இதழ் கூம்பு விட வள மனை - குறி 223

புனல் ஆம்பல் பூ சூடியும் - பட் 66

நீர் வளர் ஆம்பல் தூம்பு உடை திரள் கால் - நற் 6/1

குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன் - நற் 100/3

ஆம்பல் அம் குழலின் ஏங்கி - நற் 113/11

ஆம்பல் அமன்ற தீம் பெரும் பழனத்து - நற் 200/6

கணை கால் ஆம்பல் அமிழ்து நாறு தண் போது - நற் 230/3

கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பல்/தூங்கு நீர் குட்டத்து துடுமென வீழும் - நற் 280/2,3

வயல் வெள் ஆம்பல் சூடு தரு புது பூ - நற் 290/1

உறு கால் ஒற்ற ஒல்கி ஆம்பல்/தாமரைக்கு இறைஞ்சும் தண் துறை ஊரன் - நற் 300/3,4

உறு கால் தூக்க தூங்கி ஆம்பல்/சிறுவெண்காக்கை ஆவித்து அன்ன - நற் 345/3,4

வயல் வெள் ஆம்பல் உருவ நெறி தழை - நற் 390/4

ஆம்பல் பூவின் சாம்பல் அன்ன - குறு 46/1

கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சி - குறு 80/1

ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே - குறு 84/5

மாரி ஆம்பல் அன்ன கொக்கின் - குறு 117/1

ஆம்பல் குறுநர் நீர் வேட்டு ஆங்கு இவள் - குறு 178/3

ஆம்பல் நாறும் தேம் பொதி துவர் வாய் - குறு 300/2

நெடு நீர் ஆம்பல் அடை புறத்து அன்ன - குறு 352/1

பொய்கை ஆம்பல் அணி நிற கொழு முகை - குறு 370/1

புள்ளி களவன் ஆம்பல் அறுக்கும் - ஐங் 21/2

பொய்கை பூத்த புழை கால் ஆம்பல்/தாது ஏர் வண்ணம் கொண்டன - ஐங் 34/2,3

பொய்கை ஆம்பல் நார் உரி மென் கால் - ஐங் 35/2

வண்டு பிணி ஆம்பல் நாடு கிழவோனே - ஐங் 40/5

ஆம்பல் அம் செறுவின் தேனூர் அன்ன - ஐங் 57/2

கரும்பு நடு பாத்தியில் கலித்த ஆம்பல்/சுரும்பு பசி களையும் பெரும் புனல் ஊர - ஐங் 65/1,2

கன்னி விடியல் கணை கால் ஆம்பல்/தாமரை போல மலரும் ஊர - ஐங் 68/1,2

வயல் மலர் ஆம்பல் கயில் அமை நுடங்கு தழை - ஐங் 72/1

வெறி மலர் பொய்கை ஆம்பல் மயக்கும் - ஐங் 91/2

பசு மோரோடமோடு ஆம்பல் ஒல்லா - ஐங் 93/2

வளை தலை மூதா ஆம்பல் ஆர்நவும் - பதி 13/6

குறாஅது மலர்ந்த ஆம்பல்/அறாஅ யாணர் அவர் அகன் தலை நாடே - பதி 23/24,25

அலர்ந்த ஆம்பல் அக மடிவையர் - பதி 27/3

அருவி ஆம்பல் மலைந்த சென்னியர் - பதி 62/17

அடை அடுப்பு அறியா அருவி ஆம்பல்/ஆயிர வெள்ள ஊழி - பதி 63/19,20

அருவி ஆம்பல் நெய்தலொடு அரிந்து - பதி 71/2

அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல்/இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை - பரி  3/44,45

செ வாய் ஆம்பல் செல் நீர் தாமரை - பரி 8/116

மதி உண் அரமகள் என ஆம்பல் வாய் மடுப்ப - பரி 10/78

அல்லி கழுநீர் அரவிந்தம் ஆம்பல்/குல்லை வகுளம் குருக்கத்தி பாதிரி - பரி  12/78,79

பசும்பிடி இள முகிழ் நெகிழ்ந்த வாய் ஆம்பல்/கை போல் பூத்த கமழ் குலை காந்தள் - பரி  19/75,76

மதி நோக்கி அலர் வீத்த ஆம்பல் வால் மலர் நண்ணி - கலி 72/6

நேர் இதழ் ஆம்பல் நிரை இதழ் கொள்-மார் - கலி 75/2

ஆம்பல் குழலால் பயிர்பயிர் எம் படப்பை - கலி 108/62

அரி பெய் சிலம்பின் ஆம்பல் அம் தொடலை - அகம் 6/1

ஆம்பல் மெல் அடை கிழிய குவளை - அகம் 36/3

ஆம்பல் மெல் அடை கிழிய குவளை - அகம் 56/4

தடம் தாள் ஆம்பல் மலரொடு கூட்டி - அகம் 78/18

அருவி ஆம்பல் அகல் அடை துடக்கி - அகம் 96/5

பொன் செய் பாவை வயிரமொடு ஆம்பல்/ஒன்று வாய் நிறைய குவைஇ அன்று அவண் - அகம் 127/8,9

பரூஉ பகை ஆம்பல் குரூஉ தொடை நீவி - அகம் 136/27

கழனி ஆம்பல் முழுநெறி பைம் தழை - அகம் 156/9

ஆம்பல் அகல் இலை அமலை வெம் சோறு - அகம் 196/5

ஆம்பல் மெல் அடை ஒடுங்கும் ஊர - அகம் 256/7

அரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்பு - அகம் 316/2

அருவி ஆம்பல் கலித்த முன்துறை - அகம் 356/18

மயங்கு வள்ளை மலர் ஆம்பல்/பனி பகன்றை கனி பாகல் - புறம் 16/13,14

ஆம்பல் வள்ளி தொடி கை மகளிர் - புறம் 63/12

சிறு வெள் ஆம்பல் ஞாங்கர் ஊதும் - புறம் 70/12

தேன் நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம் - புறம் 176/4

கூம்பு விடு மென் பிணி அவிழ்ந்த ஆம்பல்/அகல் அடை அரியல் மாந்தி தெண் கடல் - புறம் 209/3,4

அளிய தாமே சிறு வெள் ஆம்பல்/இளையம் ஆக தழை ஆயினவே இனியே - புறம் 248/1,2

புழல் கால் ஆம்பல் அகல் அடை நீழல் - புறம் 266/3

சிறு வெள் ஆம்பல் அல்லி உண்ணும் - புறம் 280/13

ஐயவி சிதறி ஆம்பல் ஊதி - புறம் 281/4

ஆம்பல் வள்ளி தொடி கை மகளிர் - புறம் 352/5

கூம்பு விடு மென் பிணி அவிழ்த்த ஆம்பல்/தேம் பாய் உள்ள தம் கமழ் மடர் உள - புறம் 383/8,9

தீம் குழல் ஆம்பலின் இனிய இமிரும் - ஐங் 215/4

குண்டு நீர் ஆம்பலும் கூம்பின இனியே - குறு 122/2

நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும் - பரி 2/13

மெல் இலை அரி ஆம்பலொடு/வண்டு இறைகொண்ட கமழ் பூ பொய்கை - மது 252,253

மணி நிற நெய்தல் ஆம்பலொடு கலிக்கும் - ஐங் 96/2

அழல் மலி தாமரை ஆம்பலொடு மலர்ந்து - பதி 19/20

அரி மலர் ஆம்பலொடு ஆர் தழை தைஇ - அகம் 176/14

ஆ பெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇ - அகம் 214/12

சிறு மாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும் - புறம் 61/2

விரி நீர் குவளையை ஆம்பல் ஒக்கல்லா - நாலடி:24 6/2

அரக்கு ஆம்பல் நாறும் வாய் அம் மருங்கிற்கு அன்னோ - நாலடி:40 6/1

ஆயர் இனம் பெயர்த்து ஆம்பல் அடைதர - திணை50:27/1

ஆம்பல் அணி தழை ஆரம் துயல்வரும் - திணை50:40/1

முகம் தாமரை முறுவல் ஆம்பல் கண் நீலம் - திணை150:72/1

மடல் அன்றில் மாலை படு வசி ஆம்பல்
கடல் அன்றி கார் ஊர் கறுத்து - திணை150:121/3,4

ஆம்பல் மயக்கி அணி வளை ஆர்ந்து அழகா - திணை150:137/3

தாம் தீயார் தம் தீமை தேற்றாரால் ஆம்பல்
மண இல் கமழும் மலி திரை சேர்ப்ப - பழ:174/2,3

அரக்கு ஆம்பல் தாமரை அம் செங்கழுநீர் - கைந்:47/1

வண்டு இனம் வெளவாத ஆம்பலும் வார் இதழான் - திணை150:101/1

நோக்க இன்பு உளம் நுகர ஒள் முளரியோடு ஆம்பல்
நீக்கு அலாது எலாம் நீர்மலர் களை என கட்டல் - தேம்பா:1 13/1,2

ஆம்பல் வாய் நறும் விரை அவிழ்த்து விள்ளிய - தேம்பா:1 57/1

ஆம்பல் வாய் மலர்ந்து அன அணங்கையார் இனிது - தேம்பா:1 57/2

ஆம்பல் வாய் குரலுடன் ஆய்ந்து வெண் மதி - தேம்பா:1 57/3

ஆம்பல் வாய் திருந்து உணர்வு அறைந்து பாடுவார் - தேம்பா:1 57/4

விரி ஆம்பல் விரை சினை விண்டமை போல் - தேம்பா:5 93/4

நளி அமை ஆம்பல் வாய் நளினம் நாண் முகம் - தேம்பா:9 100/3

பனி மதி பொழிந்த கற்றை பருகிய ஆம்பல் போல - தேம்பா:26 117/1

அ திறத்து அவர் எவர் என்ன ஆம்பல் வாய் - தேம்பா:32 71/3

ஆம்பலம் கிளர் பூ இரும் சினையாக நின்றன மா தவன் - தேம்பா:10 133/2

சுனைய நீலமும் கமலமோடு ஆம்பலும் துளி தேன் - தேம்பா:32 11/1

வருந்த ஆம்பலே மனம் மகிழ் முளரி வாய் மலரும் - தேம்பா:25 35/3

அங்கண் ஆம்பலோடு அலர் எலாம் களை என பறிப்பார் - தேம்பா:12 51/4
ஆம்பல்
ஆம்பல்மலர்
நெய்தல் ஆம்பல் கழுநீர் மலர்ந்து எங்கும் - தேவா-சம்:278/1

ஆக்கினான் தொல் கோயில் ஆம்பல் அம் பூம் பொய்கை புடை - தேவா-சம்:1921/3

ஆம்பல் அம் பூம் பொய்கை ஆமாத்தூர் அம்மான்-தன் - தேவா-சம்:1941/3

கள் ஆர் நெய்தல் கழுநீர் ஆம்பல் கமலங்கள் - தேவா-சம்:2154/3

அருகு எலாம் குவளை செந்நெல் அகல் இலை ஆம்பல் நெய்தல் - தேவா-அப்:535/1

ஆம்பல் அம் பூம் பொய்கை ஆரூர் அமர்ந்தான் அடி நிழல் கீழ் - தேவா-அப்:986/3

நெய்தல் ஆம்பல் நிறை வயல் சூழ்தரும் - தேவா-அப்:1158/1

ஆம்பல் மலர் கொண்டு அணிந்தாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி - தேவா-அப்:2132/4

ஆம்பல் அம் போது உளவோ அளிகாள் நும் அகன் பணையே - திருக்கோ:11/4

ஆம்பல் குழலியின் கஞ்சுளி பட்டது - திருமந்:1623/2

கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடை - திருமந்:2901/1

அயல் ஆமை அடுப்பு ஏற்றி அரக்கு ஆம்பல் நெருப்பு ஊதும் - 1.திருமலை:2 16/3

தாழை தண் ஆம்பல் தடம் பெரும் பொய்கைவாய் - நாலாயி:220/1

செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் - நாலாயி:487/2

அ ஆய வாள் நெடும் கண் குவளை காட்ட அரவிந்தம் முகம் காட்ட அருகே ஆம்பல்
செ வாயின் திரள் காட்டும் வயல் சூழ் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே - நாலாயி:1182/3,4

கேவலம் அன்று கடலின் ஓசை கேள்-மின்கள் ஆயன் கை ஆம்பல் வந்து என் - நாலாயி:1795/1

தடம் போது ஒடுங்க மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண் திங்களே - நாலாயி:2553/4

புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ புலம்புறு மணி தென்றல் ஆம்பல் ஆலோ - நாலாயி:3870/1

முழு நீலமும் மலர் ஆம்பலும் அரவிந்தமும் விரவி - நாலாயி:1633/1

முள் ஆர் முளரியும் ஆம்பலும் முன் கண்ட-கால் - நாலாயி:2017/2

தரள நகைப்பித்து ஆம்பல் ஆரி இதழ் குல முகில் ஒத்திட்டு ஆய்ந்த ஓதியர் - திருப்:340/7

வண் பயிலும் குவடு ஆண்ட மார் முலையின் பொறி அம் குமிழ் ஆம்பல் தோள் கர - திருப்:763/3

மேகாங்க கேசம் காட்டி வாய் ஆம்பல் வாசம் காட்டி மீது ஊர்ந்த போகம் காட்டி உயிர் ஈர்வார் - திருப்:1258/3

ஆம்பல் அம் குழலில் வாய் வைத்து ஆயர்கள் இசைக்கும் ஓதை - சீறா:3383/1

பாய் ஒளி ஆம்பலும் செம்பதுமமும் குவளை மானும் - சீறா:1167/2

ஒருங்கு பூத்த செ வாய் என ஆம்பலும் ஒசியும் - சீறா:3121/3

காவியும் ஆம்பலும் பைம் கருவிள மலரும் போன்ற - வில்லி:27 164/2

ஆம்பல் பரப்பில் பாய்ந்த பைம்_தொடி - உஞ்ஞை:40/38

கழுநீர் ஆம்பல் கரும் கேழ் குவளையொடு - இலாவாண:15/20

ஆம்பல் அகல் இலை முருக்கி கூம்பல் - மகத:2/20

தளை அவிழ் ஆம்பல் தாஅள் வாட்டி - வத்தவ:16/24

பாசடை தாமரை ஆம்பலொடு பயின்று - உஞ்ஞை:53/78

கழுநீர் ஆம்பல் முழுநெறி குவளை - புகார்:2/14

ஆம்பல் நாறும் தேம் பொதி நறு விரை - புகார்:4/73

புரி வளையும் முத்தும் கண்டு ஆம்பல் பொதி அவிழ்க்கும் புகாரே எம் ஊர் - புகார்:7/36

பொறை மலி பூம் கொம்பு ஏற வண்டு ஆம்பல் ஊதும் புகாரே எம் ஊர் - புகார்:7/134

ஆம்பல் அம் தீம் குழல் கேளாமோ தோழீ - மது:17/87

வெட்சி தாழை கள் கமழ் ஆம்பல்
சேடல் நெய்தல் பூளை மருதம் - மது: 22/68,69

கரு நெடும் குவளையும் ஆம்பலும் கமலமும் - மது:13/184

தாமரை குவளை கழுநீர் ஆம்பல்
பூ மிசை பரந்து பொறி வண்டு ஆர்ப்ப - மணி: 28/20,21

ஆம்பலும் குவளையும் தாம் புணர்ந்து மயங்கி - மணி:8/7

மெல் விரல் மெலிய கொய்த குள நெல்லும் விளைந்த ஆம்பல்
அல்லியும் உணங்கும் முன்றில் அணில் விளித்து இரிய ஆமான் - சிந்தா:1 355/1,2

ஆம்பல் நாறு அமுத செ வாய் அரசனை தொழுது நின்றாள் - சிந்தா:3 561/4

பனி மதியின் கதிர் பருகும் ஆம்பல் போல் - சிந்தா:6 1554/1

தண் என் தாமரை கழுநீர் நீலம் தாது அவிழ் ஆம்பல்
எண் இல் பன் மலர் கஞலி இன வண்டு பாண் முரன்று உளதே - சிந்தா:7 1566/3,4

ஆம்பல் நாறும் அரக்கார் பவள வாயார் அமுதம் அன்னார் - சிந்தா:7 1656/1

உருவு கொண்ட குரல் அன்றில் உயிர் மேல் ஆம்பல் உலாய் நிமிரும் - சிந்தா:7 1662/2

காவி கழுநீர் குவளை ஆம்பல் கடி கமலம் - சிந்தா:7 1781/1

மாலை கண் ஆம்பல் போல மகளிர் தம் குழாத்தில் பட்டார் - சிந்தா:10 2284/1

ஆம்பல் ஆய் மலர் காடு ஒத்து அழிந்ததே - சிந்தா:11 2336/4

அடர் பிணி அவிழும் ஆம்பல் அலை கடல் கானல் சேர்ப்பன் - சிந்தா:13 2652/3

மதியம் பொழி தீம் கதிர்கள் பருகி மலர் ஆம்பல்
பொதி அவிழ்ந்து தேன் துளிப்ப போன்று பொரு இல்லார் - சிந்தா:13 3103/1,2

பகை கொள் மாலையும் பையுள் செய் ஆம்பலும்
புகை இல் பொங்கு அழல் போல் சுடுகின்றவே - சிந்தா:5 1314/3,4

கொன்றை பழ குழல் கோவலர் ஆம்பலும் - வளையா:72/3

அள்ளல் பழனத்து அரக்கு ஆம்பல் வாய்அவிழ - முத்தொள்:14/1

பங்கயம் குவளை ஆம்பல் படர் கொடி வள்ளை நீலம் - பால:10 18/1

அரைசன் ஒதுங்க தலை எடுத்த குறும்பு போன்றது அரக்கு ஆம்பல் - பால:10 75/4

ஆம்பல் ஒத்து அமுது ஊறு செ வாய்ச்சியர் - பால:21 30/1

மீன் என விளங்கிய வெள்ளி ஆம்பல் வீ - அயோ:10 40/3

செய்ய தாமரை ஆம்பல் அம் போது என சிவந்த - கிட்:3 70/4

கொண்டலின் குழவி ஆம்பல் குனி சிலை வள்ளை கொற்ற - கிட்:13 58/1

உண்ண ஆம்பல் இன் அமிழ்தம் ஊறு வாய் - கிட்:15 12/2

ஆம்பல் விரிந்தால் அன்ன சிரிப்பன் அறிவாளன் - கிட்:17 20/2

ஆம்பல் நெடும் பகை போல் அவன் நின்றான் - சுந்:9 61/4

ஆம்பல் அம் பகைஞன் தன்னோடு அயிந்தரம் அமைந்தோன் அன்னாய் - யுத்3:31 45/4

ஆம்பல் வாயும் முகமும் அலர்ந்திட - யுத்4:40 8/1

அகல் மதில் நெடு மனை அரத்த ஆம்பல்கள்
பகலிடை மலர்ந்தது ஓர் பழனம் போன்றவே - அயோ:4 176/3,4

ஆம்பலும் என்ற-போது நின்ற போது அலர்வது உண்டோ - அயோ:6 3/4

தாரை வன் தலை தண் இள ஆம்பலை
சேரை என்று புலம்புவ தேரையே - கிட்:15 43/3,4

அங்கு அணைக்க வாய் நெகிழ்த்த ஆம்பல் பூ கொங்கு அவிழ் தேன் - நள:189/2

பொன் தேர் மேல் தேவியோடும் போயினான் முற்று ஆம்பல்
தே நீர் அளித்து அருகு செந்நெல் கதிர் விளைக்கும் - நள:414/2,3

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *