மல்லிகை என்பது ஒரு பூங்கொடி, செடி
1. சொல் பொருள்
(பெ) பூங்கொடி வகை,
2. சொல் பொருள் விளக்கம்
தமிழில் “மல்லி” என்பதன் பொருள் பருத்தது, உருண்டது மற்றும் தடித்தது. இதன் காரணமாக, இம்மலர் “மல்லிகை” எனப் பெயர் பெற்றிருக்கலாம். குண்டு மல்லி, அடுக்குமல்லி மற்றும் இருவாச்சி எனப் பல வகை மல்லிகைப் பூக்களைக் காணலாம்
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Himalayan heart-leaved smooth jasmine, m.cl., Jasminum anestomosans, Jasminum pubescens, wild.;
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
மல்லிகை மௌவல் மணம் கமழ் சண்பகம் – பரி 12/77
மல்லிகா மாலை வளாய் - பரி 11/105
வெண் தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு - புகார்:2/33
இல் வளர் முல்லையொடு மல்லிகை அவிழ்ந்த - புகார்:4/27
இல் வளர் முல்லை மல்லிகை மயிலை - புகார்:5/191
வெண் பூ மல்லிகை வேரொடு மிடைந்த - புகார்:8/46
மாதவி மல்லிகை மனை வளர் முல்லை - மது:13/120
வெண் பூ மல்லிகை விரியலொடு தொடர்ந்த - மது:14/78
சண்பகம் தமநகம் தமாலம் மல்லிகை
தண் கழுநீரொடு குவளை தாமரை - சிந்தா:3 827/1,2
மல்லிகை மாலை மணம் கமழ் வார் குழல் - சிந்தா:4 879/1
சீர் தங்கு செம்பொன் கொடி மல்லிகை மாலை சேர்ந்து - சிந்தா:4 881/1
கடி கமழ் பூம் சிகை காமர் மல்லிகை
வடிவு உடை மாலை கால் தொடர்ந்து வாய்ந்தது - சிந்தா:4 1011/1,2
மல்லிகை மலிந்த மாலை சோர ஆர்ந்த குண்டலம் - சிந்தா:4 1100/1
மல்லிகை மணம் கமழ் மாலை வார் குழல் - சிந்தா:6 1458/1
மழலை வண்டு உழல நக்க மல்லிகை அலங்கல் சூட்டி - சிந்தா:6 1503/3
திருந்தும் மல்லிகை தேம் கமழ் மாலை யான் - சிந்தா:6 1512/1
மல்லிகை கோதை ஐம்பால் மலைமகள் மனையை சேர்ந்தேன் - சிந்தா:7 1745/4
ஏத்தரும் மல்லிகை மாலை ஏந்திய - சிந்தா:9 2007/1
மருள் தகு மல்லிகை மாலை வல்லவன் - சிந்தா:12 2450/3
மை திரண்ட வார் குழல் மேல் வண்டு ஆர்ப்ப மல்லிகை மெல் மாலை சூடி - சிந்தா:13 2626/1
உளைந்து மல்லிகை ஒலியல் சூடினார் - சிந்தா:13 2682/4
மா நிற தளிர் நல் மேனி மல்லிகை மாலை சொன்னாள் - சிந்தா:13 2707/4
மை பொதி குவளை வாள் கண் மல்லிகை கோதை நல்லார் - சிந்தா:13 3049/1
ஒத்தேர் உடைய மல்லிகையின் ஒலியல் மாலை உறுப்பு அடக்கி - சிந்தா:13 2693/2
தணியும் மது மல்லிகை தாமம் வெறுத்து வாசம் - பால:16 45/3 மன்றல் தங்கு அலங்கல் மாரன் வாளி போல மல்லிகை தென்றல் வந்து எதிர்ந்த போது சீறுவானும் ஆயினான் - ஆரண்:10 94/3,4 மல்லிகை மலர்-தொறும் வதிந்த வண்டு எலாம் - சுந்:2 56/4 மல்லிகை கானமும் வானம் ஒத்ததே - யுத்1:5 4/4 மன்றல்-வாய் மல்லிகை எயிற்றின் வண்டு_இனம் - யுத்1:5 9/1 மல்லிகையே வெண் சங்கா வண்டு ஊத வான் கருப்பு - நள:106/1 வளர் பூம் கோங்கம் மாதவியோடு மல்லிகை குளிர் பூம் சாரல் வண்டு அறை சோலை பரங்குன்றம் - தேவா-சம்:1083/1,2 கொல்லையின் முல்லை மல்லிகை மௌவல் கொடி பின்னி - தேவா-சம்:1093/3 குருந்தம் மல்லிகை கோங்கு மாதவி நல்ல குரா மரவம் - தேவா-சம்:1428/3 மரு குலாவிய மல்லிகை சண்பகம் வண் பூம் - தேவா-சம்:1880/3 அம் தண் மாதவி புன்னை நல்ல அசோகமும் அரவிந்தம் மல்லிகை பைம் தண் ஞாழல்கள் சூழ் புறவார்பனங்காட்டூர் - தேவா-சம்:2045/1,2 நறவம் மல்லிகை முல்லையும் மௌவலும் நாள் மலர் அவை வாரி - தேவா-சம்:2665/1 குருந்தொடு மாதவி கோங்கு மல்லிகை பொருந்திய பொழில் திரு பூவணத்து உறை - தேவா-சம்:3013/1,2 மர விரி போது மௌவல் மண மல்லிகை கள் அவிழும் - தேவா-சம்:3427/2 மாடு உலவு மல்லிகை குருந்து கொடி மாதவி செருந்தி குரவின் - தேவா-சம்:3632/3 குருந்து உயர் கோங்கு கொடி விடு முல்லை மல்லிகை சண்பகம் வேங்கை - தேவா-சம்:4077/3 மல்லிகை மலரும் சோலை திரு ஐயாறு அமர்ந்த தேனை - தேவா-அப்:390/3 மல்லிகை கண்ணியோடு மா மலர் கொன்றை சூடி - தேவா-அப்:431/2 நாறு மல்லிகை கூவிளம் செண்பகம் - தேவா-அப்:1177/1 கொல்லை முல்லை கொழும் தகை மல்லிகை நல்ல சேர் கடம்பூர் கரக்கோயிலே - தேவா-அப்:1270/3,4 மருவு நாள் மலர் மல்லிகை செண்பகம் - தேவா-அப்:1585/3 மல்லிகை மாடம் நீடு மருங்கொடு நெருங்கி எங்கும் - தேவா-சுந்:76/3 அரும்பு ஆர்ந்தன மல்லிகை சண்பகம் சாடி - தேவா-சுந்:126/1 தெற்று கொடி முல்லையொடு மல்லிகை செண்பகமும் திரை பொருது வரு புனல் வேர் அரிசிலின் தென் கரை மேல் - தேவா-சுந்:161/3 மதியம் சேர் சடை கங்கையான் இடம் மகிழும் மல்லிகை சண்பகம் - தேவா-சுந்:352/3 நாறு செங்கழுநீர் மலர் நல்ல மல்லிகை சண்பகத்தொடு - தேவா-சுந்:883/1 மந்தல் ஆய மல்லிகையும் புன்னை வளர் குரவின் - தேவா-சம்:707/3 நாறும் மல்லிகையும் எருக்கொடு முருக்கும் மகிழ் இளவன்னியும் இவை நலம் பகர - தேவா-சம்:837/3 மரவம் இருகரையும் மல்லிகையும் சண்பகமும் மலர்ந்து மாந்த - தேவா-சம்:2242/3 அரும்பு உடை மலர் பொய்கை அல்லியும் மல்லிகையும் விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீ அன்றே - தேவா-சுந்:293/3,4 விரிதரு மல்லிகையும் மலர் சண்பகமும் அளைந்து - தேவா-சுந்:1013/3 எல்லி மல்லிகையே கமழ் நீடூர் ஏத்தி நாம் பணியா விடல் ஆமே - தேவா-சுந்:579/4 மல்லிகை போதின் வெண் சங்கம் வண்டு ஊத விண் தோய் பிறையோடு - திருக்கோ:364/3 தும்பை வகுளம் சுரபுன்னை மல்லிகை செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே - திருமந்:1003/3,4 வலம் காதின் மேல் தோன்றிப்பூ அணிந்து மல்லிகை வன மாலை மௌவல் மாலை - நாலாயி:262/1 மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம் - நாலாயி:319/4 மல்லிகை வெண் சங்கு ஊதும் மதில் அரங்கம் என்பதுவே - நாலாயி:409/4 கொங்கு செண்பகம் மல்லிகை மலர் புல்கி இன் இள வண்டு போய் இளம் - நாலாயி:1195/3 சலம் கொண்டு மலர் சொரியும் மல்லிகை ஒண் செருந்தி செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலினூடே - நாலாயி:1228/3 வாடாத வள் உகிரால் பிளந்து அவன்-தன் மகனுக்கு அருள்செய்தான் வாழும் இடம் மல்லிகை செங்கழுநீர் - நாலாயி:1241/2 மன்றில் மாம் பொழில் நுழைதந்து மல்லிகை மௌவலின் போது அலர்த்தி - நாலாயி:1368/3 போது அலர் புன்னை மல்லிகை மௌவல் புது விரை மது மலர் அணைந்து - நாலாயி:1750/3 தாது அவிழ் மல்லிகை புல்லி வந்த தண் மதியின் இள வாடை இன்னே - நாலாயி:1789/1 மௌவல் மாலை வண்டு ஆடும் மல்லிகை மாலையொடும் அணைந்த மாருதம் - நாலாயி:1839/3 நாறு செண்பகம் மல்லிகை மலர் புல்கி இன் இள வண்டு நல் நறும் - நாலாயி:1841/3 குன்றின் முல்லையின் வாசமும் குளிர் மல்லிகை மணமும் அளைந்து இளம் - நாலாயி:1844/3 வான் ஆர் வண் கமுகும் மது மல்லிகை கமழும் - நாலாயி:3429/2 மல்லிகை கமழ் தென்றல் ஈரும் ஆலோ வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ - நாலாயி:3869/1 மது மண மல்லிகை மந்த கோவை வண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து - நாலாயி:3876/3 வால் ஒளி வளர் முல்லை கரு முகைகள் மல்லிகை அலம்பி வண்டு ஆலும் ஆலோ - நாலாயி:3878/3 பிணி அவிழ் மல்லிகை வாடை தூவ பெரு மத மாலையும் வந்தின்று ஆலோ - நாலாயி:3917/2 மருவி மணம் கமழ்கின்ற மல்லிகைப்பூ சூட்ட வாராய் - நாலாயி:183/4 போர் உற்ற வாடை தண் மல்லிகைப்பூ புது மணம் முகந்துகொண்டு எறியும் ஆலோ - நாலாயி:3875/4 விரை பொலிந்த வெண் மல்லிகையும் நிரைத்துக்கொண்டு - நாலாயி:2257/2 மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே - நாலாயி:3868/4 செண்பக மல்லிகையோடு செங்கழுநீர் இருவாட்சி - நாலாயி:191/1 மல்லி சலியாட பட்டு ஆடை கொண்டாட மயல் தள்ளு நடையோடு சற்றே மொழிந்து ஆசை கொடு - திருப்:478/7 மரு மல்லி மா வனம் நீடிய பொழில் மெல்லி கா வனம் மாடு அமை - திருப்:682/15 மரு மல்லி ஆர் குழலின் மட மாதர் மருள் உள்ளி நாய் அடியன் அலையாமல் - திருப்:685/1 கொடி கோட்டு மல்லி குரவ ஆர் கொள் தொல்லை மறை வாழ்த்து செய்ய கழல் தாராய் - திருப்:1230/4 படர்ந்த மல்லிகை மாதுளை பந்தரும் நோக்கி - சீறா:872/3 மல்லிகை மடல் கைதை மா மகிழ் மருக்கொழுந்து - சீறா:1108/2 கான் நறு மல்லிகை கமல மெல் இதழ் - சீறா:1137/1 முல்லை மல்லிகை உற்பலம் குமுதம் மா முளரி - வில்லி:42 116/1 இல் எழு முல்லையொடு மல்லிகை மயங்கி - உஞ்ஞை:33/73 மல்லிகை சூட்டும் நெல் வளர் கதிரும் - உஞ்ஞை:42/68 மா குருக்கத்தியொடு மல்லிகை மணந்த - உஞ்ஞை:44/14 மல்லிகை நறும் சூட்டு வெள்ளிதின் விளங்க அதன் - உஞ்ஞை:46/233 வளர் பிறை அன்ன மல்லிகை கத்திகை - இலாவாண:4/142 மகிழ் பதம் அயின்றிசினாங்கு மல்லிகை அவிழ் தாது ஊதி அளி துயில் அமர - மகத:7/27,28 மல்லிகை கோதை மறித்தனள் இருந்து - மகத:14/107 மல்லிகை இரீஇ வல்லோர் புணர்ந்த - மகத:17/156
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்