Skip to content
முல்லை

முல்லை என்பது வெண்ணிறப்பூ, படர்க்கொடி.

1. சொல் பொருள்

(பெ) 1. ஒரு சிறிய வெண்ணிறப்பூ, படர்க்கொடி. 2. காடும் காடு சார்ந்த இடமும், 3. கணவன் பிரிந்து சென்றபோது இல்லிருந்து நல்லறஞ்செய்து ஆற்றியிருக்கும் தன்மையான ஒழுக்கம், 4. ஒரு பண், திணை, 5. கற்பு

2. சொல் பொருள் விளக்கம்

முல்லையின் வகைகள்

  1. தவளம் – வெண்ணிறமுல்லை – Jasminum auriculatum
  2. செம்மல் – சாதிமுல்லை – Jasminum officinale
  3. தளவம் – செம்முல்லை – Jasminum grandiflorum
  4. கொகுடி – காட்டுமுல்லை – Jasminum sambac
  5. ஊசிமுல்லை – Jasminum caspidabium
  6. கொடிமுல்லை – Jasminum sambac var.heyneanum
  7. மயிலை – Jasminum sambac var.florae manoraepleno
முல்லை
கொடிமுல்லை

முல்லையின் பெயரால் சங்க இலக்கியங்களில் உள்ள பாக்கள் பல.

  1. பத்துப்பாட்டில் – முல்லைப்பாட்டு
  2. கலித்தொகையில் – முல்லைக்கவி
  3. ஐங்குறுநூற்றில் – ஐந்தாவது பகுதி-முல்லை
  4. அகநானுாற்றில் – நான்கு எண்ணுள்ள பாக்கள் (நாலு தனி முல்லை)

முல்லை என்னும் பெயர் தமிழ் நாட்டில் காடு-காடு சார்ந்த புலத்தைக் குறிப்பதோடு முல்லைத்தினையையும் குறிக்கும். போரில் வெற்றியைக் குறிப்பது வாகைத்திணை. வாகைத்திணையில் முல்லைப்பெயர் பெற்ற துறைகள் பன்னிரண்டாவன

  1. அரசமுல்லை – அரசனது வெற்றி மேம்பாடு கூறுவது
  2. பார்ப்பனமுல்லை – பார்ப்பனரது நடுவு நிலைச் சிறப்பைக் கூறுவது
  3. கணியன்முல்லை – கணித்துக் கூறும் சோதிடன் புகழ் கூறுவது
  4. மூதின்முல்லை – பழங் குடி வீரத்தாயின் மன வலிமை
  5. அவையமுல்லை – நடுவு நிலைப் பெருமையைக் குறிப்பது
  6. ஏறாண்முல்லை – ஏறுபோன்றவனால் பெற்ற குடிப் பெருமை கூறுவது.
  7. வல்லாண்முல்லை –  ஊர், குடி கூறி வீரனது நல்லாண்மை குறிப்பது
  8. காவல்முல்லை – அரசனது காவற் சிறப்பைக் குறிப்பது
  9. பேராண்முல்லை – அரசன் போர்க்களத்தில் காட்டிய பேராண்மையைக் குறிப்பது
  10. மறமுல்லை – படைவீரனது போர்த்துடிப்பைக் கூறுவது
  11. குடைமுல்லை – மன்னனது கொற்றக்குடையின் சிறப்புக கூறுவது
  12. சால்புமுல்லை – அறிவிற் சிறந்த சான்றோரது சிறப்புப் பற்றியது

காலத்தைக் குறிக்கும் முல்லைக் கார்முல்லை. கார் காலத்தையும், மாலைப்பொழுதை யும் குறிப்பது முல்லை மலர்.

முல்லை
வெண்ணிறமுல்லை

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

a kind of jasmine, Jasminum Auriculatum vahl., pastoral region, patient endurance of the akam heroine during the separation of the hero., a primary melody type.

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என - பொருள். அகத்:5/5

காரும் மாலையும் முல்லை குறிஞ்சி - பொருள். அகத்:6/1

முல்லை முதலா சொல்லிய முறையான் - பொருள். அகத்:28/2

வஞ்சி-தானே முல்லையது புறனே - பொருள். புறத்:6/1
முல்லை
முல்லை
நகு முல்லை உகு தேறு வீ - பொரு 200

நீல் நிற முல்லை பல் திணை நுவல - பொரு 221

முல்லை சான்ற கற்பின் மெல் இயல் - சிறு 30

முல்லை சான்ற முல்லை அம் புறவின் - சிறு 169

முல்லை சான்ற முல்லை அம் புறவின் - சிறு 169

நாழி கொண்ட நறு வீ முல்லை/அரும்பு அவிழ் அலரி தூஉய் கைதொழுது - முல் 9,10

சுரி முகிழ் முசுண்டையொடு முல்லை தாஅய் - மது 281

முல்லை சான்ற புறவு அணிந்து ஒருசார் - மது 285

முல்லை பல் போது உறழ பூ நிரைத்து - நெடு 130

தில்லை பாலை கல் இவர் முல்லை/குல்லை பிடவம் சிறுமாரோடம் - குறி 77,78

உள்ளினள் உறைவோள் ஊரே முல்லை/நுண் முகை அவிழ்ந்த புறவின் - நற் 59/8,9

முல்லை முகை வாய் திறப்ப பல் வயின் - நற் 69/5

முல்லை சான்ற கற்பின் - நற் 142/10

மீமிசை கலித்த வீ நறு முல்லை/ஆடு தலை துருவின் தோடு தலைப்பெயர்க்கும் - நற் 169/5,6

சிறு வீ முல்லை தேம் கமழ் பசு வீ - நற் 248/1

கான முல்லை கய வாய் அலரி - நற் 321/3

முல்லை தாய கல் அதர் சிறு நெறி - நற் 343/1

சிறு வீ முல்லை பெரிது கமழ் அலரி - நற் 361/1

கூதிர் முல்லை குறும் கால் அலரி - நற் 366/5

குவளையொடு தொடுத்த நறு வீ முல்லை/தளை அவிழ் அலரி தண் நறும் கோதை - நற் 367/8,9

எல்லை பைபய கழிப்பி முல்லை/அரும்பு வாய் அவிழும் பெரும் புன் மாலை - நற் 369/3,4

கோடல் எதிர் முகை பசு வீ முல்லை/நாறு இதழ் குவளையொடு இடை இடுபு விரைஇ - குறு 62/1,2

பாசிலை முல்லை ஆசு இல் வான் பூ - குறு 108/3

பெயல் புறந்தந்த பூ கொடி முல்லை/தொகு முகை இலங்கு எயிறு ஆக - குறு 126/3,4

முல்லை வாழியோ முல்லை நீ நின் - குறு 162/3

முல்லை வாழியோ முல்லை நீ நின் - குறு 162/3

கொல்லை புனத்த முல்லை மென் கொடி - குறு 186/2

முகை முற்றினவே முல்லை முல்லையொடு - குறு 188/1

இன்றும் முல்லை முகை நாறும்மே - குறு 193/6

இருவி சேர் மருங்கில் பூத்த முல்லை/வெருகு சிரித்து அன்ன பசு வீ மென் பிணி - குறு 220/3,4

எல் அறு பொழுதின் முல்லை மலரும் - குறு 234/2

முல்லை ஊர்ந்த கல் உயர்பு ஏறி - குறு 275/1

பெய்த புலத்து பூத்த முல்லை/பசு முகை தாது நாறும் நறு நுதல் - குறு 323/4,5

சிறு வீ முல்லை கொம்பின் தாஅய் - குறு 348/3

சொல்லுப அன்ன முல்லை வெண் முகையே - குறு 358/7

தண் துளிக்கு ஏற்ற பைம் கொடி முல்லை/முகை தலை திறந்த நாற்றம் புதல் மிசை - குறு 382/1,2

எல்லை கழிய முல்லை மலர - குறு 387/1

பாணர் முல்லை பாட சுடர் இழை - ஐங் 408/1

வாள் நுதல் அரிவை முல்லை மலைய - ஐங் 408/2

காயா கொன்றை நெய்தல் முல்லை/போது அவிழ் தளவொடு பிடவு அலர்ந்து கவினி - ஐங் 412/1,2

முல்லை நாறும் கூந்தல் கமழ் கொள - ஐங் 446/1

மெல் அவல் மருங்கின் முல்லை பூப்ப - ஐங் 448/3

கார் நயந்து எய்தும் முல்லை அவர் - ஐங் 454/3

பருவம் செய்தன பைம் கொடி முல்லை/பல் ஆன் கோவலர் படலை கூட்டும் - ஐங் 476/2,3

முல்லை நல் யாழ் பாண மற்று எமக்கே - ஐங் 478/5

மென்புல முல்லை மலரும் மாலை - ஐங் 489/2

நன் நுதல் நாறும் முல்லை மலர - ஐங் 492/2

தண் கமழ் புறவின் முல்லை மலர - ஐங் 494/2

முல்லை கண்ணி பல் ஆன் கோவலர் - பதி 21/20

பூத்த முல்லை புதல் சூழ் பறவை - பதி 66/16

முகை முல்லை வென்று எழில் முத்து ஏய்க்கும் வெண் பல் - பரி 8/76

முகிழ் மயங்கு முல்லை முறை நிகழ்வு காட்ட - பரி 15/39

நறு முல்லை நேர் முகை ஒப்ப நிரைத்த - கலி 22/9

ஆனா சீர் கூடலுள் அரும்பு அவிழ் நறு முல்லை/தேன் ஆர்க்கும் பொழுது என தெளிக்குநர் உளர் ஆயின் - கலி  30/11,12

காதலர் எயிறு ஏய்க்கும் தண் அருவி நறு முல்லை/போது ஆர கொள்ளும் கமழ் குரற்கு என்னும் - கலி  32/16,17

தண் அருவி நறு முல்லை தாது உண்ணும் பொழுது அன்றோ - கலி 35/10

தேம் கமழ் கதுப்பினுள் அரும்பு அவிழ் நறு முல்லை/பாய்ந்து ஊதி படர் தீர்ந்து பண்டு தாம் மரீஇய - கலி  66/6,7

புரி நெகிழ் முல்லை நறவோடு அமைந்த - கலி 91/2

முல்லை அம் தண் பொழில் புக்கார் பொதுவரோடு - கலி 101/49

முல்லை முகையும் முருந்தும் நிரைத்து அன்ன - கலி 103/6

சிறு முல்லை நாறியதற்கு குறு மறுகி - கலி 105/54

சில்லை செவிமறை கொண்டவன் சென்னி குவி முல்லை/கோட்டம் காழ் கோட்டின் எடுத்துக்கொண்டு ஆட்டிய - கலி  
107/6,7

முல்லை முகையும் முருந்தும் நிரைத்து அன்ன - கலி 108/15

பனி பூ தளவொடு முல்லை பறித்து - கலி 108/42

முல்லை குருந்தொடு முச்சி வேய்ந்து எல்லை - கலி 113/25

முல்லை ஒரு காழும் கண்ணியும் மெல்_இயால் - கலி 115/5

காட்டு சார் கொய்த சிறு முல்லை மற்று இவை - கலி 117/11

முல்லை இவை ஆயின் முற்றிய கூழையாய் - கலி 117/12

தகை மிக்க புணர்ச்சியார் தாழ் கொடி நறு முல்லை/முகை முகம் திறந்து அன்ன முறுவலும் கடிகல்லாய் - கலி  118/19,20

முல்லை வை நுனை தோன்ற இல்லமொடு - அகம் 4/1

முல்லை வியன் புலம் பரப்பி கோவலர் - அகம் 14/7

கொய் அகை முல்லை காலொடு மயங்கி - அகம் 43/9

பைம் கொடி முல்லை மென் பத புது வீ - அகம் 74/6

நறு வீ முல்லை நாள்மலர் உதிரும் - அகம் 84/8

தண் கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ - அகம் 94/5

வண் பெயற்கு அவிழ்ந்த பைம் கொடி முல்லை/வீ கமழ் நெடு வழி ஊது வண்டு இரிய - அகம் 124/11,12

முல்லை வீ கழல் தாஅய் வல்லோன் - அகம் 134/5

தண் கார்க்கு ஈன்ற பைம் கொடி முல்லை/வை வாய் வான் முகை அவிழ்ந்த கோதை - அகம் 144/3,4

செல்வேம் ஆதல் அறியாள் முல்லை/நேர் கால் முது கொடி குழைப்ப நீர் சொரிந்து - அகம் 174/5,6

புன் தலை புதைத்த கொழும் கொடி முல்லை/ஆர் கழல் புது பூ உயிர்ப்பின் நீக்கி - அகம் 184/9,10

முல்லை அருந்தும் மெல்லிய ஆகி - அகம் 191/14

மணம் கமழ் முல்லை மாலை ஆர்ப்ப - அகம் 204/7

முல்லை நறு மலர் தாது நயந்து ஊத - அகம் 234/13

முகை வாய் திறந்த நகை வாய் முல்லை/கடிமகள் கதுப்பின் நாறி கொடி மிசை - அகம் 244/4,5

முல்லை சான்ற கற்பின் - அகம் 274/13

முல்லை படப்பை புல்வாய் கெண்டும் - அகம் 284/10

வேலி சுற்றிய வால் வீ முல்லை/பெரும் தார் கமழும் விருந்து ஒலி கதுப்பின் - அகம் 314/19,20

முல்லை மாலை நகர் புகல் ஆய்ந்தே - அகம் 324/15

முல்லை இல்லமொடு மலர கல்ல - அகம் 364/7

முயல் பறழ் உகளும் முல்லை அம் புறவில் - அகம் 384/5

பாசிலை முல்லை முகைக்கும் - புறம் 117/9

முல்லை வேலி நல் ஊரானே - புறம் 144/14

இவரே பூ தலை அறாஅ புனை கொடி முல்லை/நா தழும்பு இருப்ப பாடாது ஆயினும் - புறம் 200/9,10

குருந்தே முல்லை என்று - புறம் 335/2

வீ ததை முல்லை பூ பறிக்குந்து - புறம் 339/3

புதன் முல்லை பூ பறிக்குந்து - புறம் 352/4

சிறு வீ முல்லைக்கு பெரும் தேர் நல்கிய - சிறு 89

முல்லைக்கு ஈத்த செல்லா நல் இசை - புறம் 201/3

அவரோ வாரார் முல்லையும் பூத்தன - குறு 221/1

வாலிய மலர்ந்த முல்லையும் உடைத்தே - ஐங் 437/3

முல்லையும் தாய பாட்டம்-கால் தோழி நம் - கலி 111/4

முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே - புறம் 242/6

முகை முற்றினவே முல்லை முல்லையொடு/தகை முற்றினவே தண் கார் வியன் புனம் - குறு 188/1,2

வெருக்கு பல் உருவின் முல்லையொடு கஞலி - குறு 240/3

நெடும் கொடி முல்லையொடு தளவ மலர் உதிர - ஐங் 422/2

நறு வீ முல்லையொடு தோன்றி தோன்ற - அகம் 164/6

கடி மிளை புறவின் பூத்த முல்லையொடு/பல் இளம் கோசர் கண்ணி அயரும் - அகம் 216/10,11

தளவ முல்லையொடு தலைஇ தண்ணென - அகம் 254/15

தேம் பாய் முல்லையொடு ஞாங்கர் போக்கி - அகம் 391/5
கொடிமுல்லை
கொடிமுல்லை
முல்லை முகை முறுவல் முத்து என்று இவை பிதற்றும் - நாலடி:5 5/1

முல்லை அலைக்கும் எயிற்றாய் நிரப்பு என்னும் - நாலடி:29 7/3

முல்லை இலங்கு எயிறு ஈன நறும் தண் கார் - கார்40:14/3

சிறு முல்லை போது எல்லாம் செவ்வி நறு நுதல் - கார்40:21/2

முல்லை கொடி மகிழ மொய் குழலார் உள் மகிழ - கார்40:41/1

கொலை படை சால பரப்பிய முல்லை
முகை வென்ற பல்லினாய் இல்லையோ மற்று - ஐந்50:3/2,3

முல்லை நறு மலர் ஊதி இரும் தும்பி - ஐந்50:6/1

பைம் கொடி முல்லை அவிழ் அரும்பு ஈன்றன - ஐந்50:9/3

பைம் கொடி முல்லை மணம் கமழ வண்டு இமிர - ஐந்70:15/2

கொடி மயங்கு முல்லை தளிர்ப்ப இடி மயங்கி - ஐந்70:20/2

கார் கொடி முல்லை எயிறு ஈன காரோடு - ஐந்70:21/2

முல்லை தளவொடு போது அவிழ எல்லி - ஐந்70:24/2

பல் நிற முல்லை அரும்ப பருவம் செய்து - திணை50:22/3

கரும் கொடி முல்லை கவின முழங்கி - திணை50:26/2

காடு எலாம் கார் செய்து முல்லை அரும்பு ஈன - திணை50:29/2

எல்லு நல் முல்லை தார் சேர்ந்த இரும் கூந்தல் - திணை50:38/3

கொல்லை தரு வான் கொடிகள் ஏறுவ காண் முல்லை
பெரும் தண் தளவொடு தம் கேளிரை போல் காணாய் - திணை150:105/2,3

வந்து ஆரம் தேம் கா வரு முல்லை சேர் தீம் தேன் - திணை150:106/3

குருந்தோடு முல்லை குலைத்தனகாண் நாமும் - திணை150:112/3

முல்லை புரையும் முறுவலாய் செய்வது என் - பழ:110/3

கார் செய் புறவில் கவினி கொடி முல்லை
கூர் எயிறு ஈன குருந்து அரும்ப ஓரும் - கைந்:25/1,2

முல்லை எயிறு ஈன - கைந்:34/1

முல்லைக்கு தேரும் மயிலுக்கு போர்வையும் - பழ:361/1
செம்முல்லை
செம்முல்லை
இல் வளர் முல்லை மல்லிகை மயிலை - புகார்:5/191

அகல் நகர் எல்லாம் அரும்பு அவிழ் முல்லை
நிகர் மலர் நெல்லொடு தூஉய் பகல் மாய்ந்த - புகார்: 9/1,2

மாதவி மல்லிகை மனை வளர் முல்லை
போது விரி தொடையல் பூ அணை பொருந்தி - மது: 13/120,121

அருவி முல்லை அணி நகை_ஆட்டி - மது:13/165

முல்லை அம் பூம் குழல்-தான் - மது:17/38

முல்லை தீம் பாணி என்றாள் - மது:17/76

முல்லை அம் தீம் குழல் கேளாமோ தோழீ - மது:17/90

குழல் வளர் முல்லையில் கோவலர் தம்மொடு - புகார்:4/15

எரி நிறத்து இலவமும் முல்லையும் அன்றியும் - புகார்:5/214

முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து - மது:11/64

தண் நறு முல்லையும் தாழ் நீர் குவளையும் - மது:14/76

இல் வளர் முல்லையொடு மல்லிகை அவிழ்ந்த - புகார்:4/27

கோவலர் முல்லை குழல் மேற்கொள்ள - மணி:5/136

முருகு விரி முல்லையும் கருவிளம் பொங்கரும் - மணி:19/94

முல்லை அம் குழலார் முலை செல்வமும் - சிந்தா:1 137/1

முல்லை கார் என பூப்ப மொய் நிரை - சிந்தா:2 413/2

முல்லை அம் கண்ணி சிந்த கால் விசை முறுக்கி ஆயர் - சிந்தா:2 438/2

தேன் சொரி முல்லை கண்ணி செம் துவர் ஆடை ஆயர் - சிந்தா:2 485/1

கான் சொரி முல்லை தாரான் கடிவினை முடிக என்றான் - சிந்தா:2 485/4

கொங்கு உடை முல்லை பைம் போது இருவடம் கிடந்த மார்ப - சிந்தா:3 547/3

பண் நிற சுரும்பு சூழும் பனி முல்லை சூட்டு வேய்ந்தார் - சிந்தா:3 624/4

புனம் சேர் கொடி முல்லை பூம் பவளத்துள் புக்கு பூத்த போலும் - சிந்தா:3 636/2

தாம்தாம் தாம் என தாழ்ந்த பொன் மேகலை தாம அரங்கின் மேல் தாது ஆர் முல்லை
   பூம் தாம கொம்பு ஆட கண்டார் எல்லாம் புன மயிலே அன்னமே பொன்னம் கொம்பே - சிந்தா:3 680/2,3

தான் உடை முல்லை எல்லாம் தாது உக பறித்திட்டானே - சிந்தா:3 686/4

முல்லை பூம் பந்து தன்னை மும்மத களிற்று வேலி - சிந்தா:3 743/3

முருகு உலா முல்லை மாலை மூப்பு இலா முலையினார் நும் - சிந்தா:3 769/1

மூழி வாய் முல்லை மாலை முருகு உலாம் குழலினாளும் - சிந்தா:3 833/1

முருகு விண்டு உலாம் முல்லை கத்திகை - சிந்தா:4 989/1

குருந்தம் ஏறிய கூர் அரும்பார் முல்லை
   பொருந்து கேள்வரை புல்லிய பொன் அனார் - சிந்தா:5 1195/2,3

கோதை வீழ்ந்தது என முல்லை கத்திகை - சிந்தா:5 1208/1

நக்கு ஆங்கே எயிறு உடைந்த நறவ முல்லை நாள் வேங்கை - சிந்தா:5 1227/2

முல்லை முறுவலித்து நகுதிர் போலும் இனி நும்மை - சிந்தா:5 1228/2

கொய்தகை பொதியில் சோலை குழவிய முல்லை மௌவல் - சிந்தா:5 1267/1

புகழ் கொடி நங்கை தன் பேர் பொறித்தது ஓர் கன்னி முல்லை
   அகழ் கடல் தானை வேந்தே அணி எயிறு ஈன்றது அன்றோ - சிந்தா:5 1268/3,4

முல்லை அம் குழலினாய் நின் முலை முதல் கொழு நன் மேல் நாள் - சிந்தா:5 1399/2

முகபடாம் வைப்ப ஆள் செற்று அழன்று கண் கரிந்த முல்லை
   தொகு கள் தாம் கோதை வெய்ய துணை மணி முலைகள் தாமே - சிந்தா:6 1486/3,4

குறிஞ்சி எல்லையின் நீங்கி கொடி முல்லை மகள் மகிழ்ந்து ஆட - சிந்தா:7 1563/1

போதொடு நானம் மூழ்கி பூம் புகை தவழ்ந்து முல்லை
   கோதை கண் படுக்கும் கூந்தல் குரை வளி பித்தோடு ஐயேய் - சிந்தா:7 1583/1,2

வெருகு வேட்ப சிரிப்பன போல் முகைத்த முல்லை வெய்ய வாய் - சிந்தா:7 1651/1

தெரிவில பேதை முல்லை பூத்தன தெளி இது என்றான் - சிந்தா:7 1740/4

கார் தோன்றவே மலரும் முல்லை கமலம் வெய்யோன் - சிந்தா:8 1931/1

மின் மலர்ந்த முல்லை மாலை நக்கி மிக்கு இறந்து எழுந்து - சிந்தா:8 1957/2

முல்லை அம் கோதை ஒன்றும் பிழைப்பு இலேன் முனியல் நீ என்று - சிந்தா:9 2084/3

மோட்டு இள முல்லை மொய் மலர் கானம் முருகு வந்து எதிர்கொள நடந்தார் - சிந்தா:10 2104/4

கான கார் முல்லை கார் மழைக்கு எதிர்ந்தன போல - சிந்தா:12 2382/2


அரும்பும் இலையும் மயக்கி ஆய்ந்த முல்லை சூட்டு மிலைச்சி - சிந்தா:12 2438/2

அவிர் இழை சுடர முல்லை அலங்கல் அம் கூந்தல் சோர - சிந்தா:12 2542/1

முல்லை முகை சொரிந்தால் போன்று இனிய பால் அடிசில் மகளிர் ஏந்த - சிந்தா:13 2623/1

கோள் புலி சுழல் கண் அன்ன கொழும் சுவை கருனை முல்லை
   மோட்டு இள முகையின் மொய் கொள் கொக்கு உகிர் நிமிரல் வெண் சோறு - சிந்தா:13 2972/1,2

மூழி வாய் முல்லை மாலை முலை முகம் முரிந்து நக்க - சிந்தா:13 2974/2

கயல் இனம் உகளி பாய முல்லை அம் பொதும்பில் காமர் - சிந்தா:13 3042/1

முல்லை சூழ் முல்லை வேலி முயலொடு கவரி மேயும் - சிந்தா:13 3062/1

முல்லை சூழ் முல்லை வேலி முயலொடு கவரி மேயும் - சிந்தா:13 3062/1

பூ அலர் முல்லை கண்ணி பொன் ஒரு பாகம் ஆக - சிந்தா:13 3117/2

முல்லை அம் சூட்டு வேயின் முரிந்து போம் நுசுப்பின் நல்லார் - சிந்தா:13 3119/3

முல்லை கண்ணிகள் சிந்த மொய் நலம் - சிந்தா:13 3129/2

முரிந்து போது அவிழ்ந்து கொங்கு உயிர்க்கும் முல்லையின்
   அரும்பு சேர்ந்து அணி ஞிமிறு ஆர்ப்ப வாய் பதம் - சிந்தா:1 48/2,3

பூத்த முல்லையின் போது பொழிந்து உக - சிந்தா:7 1777/2

தவள மெல் இணர் தண் கொடி முல்லையே - சிந்தா:5 1331/4

முல்லை பல் போது உறழ பூ நிரைத்து - நெடு 130
செம்முல்லை
செம்முல்லை
நாடலின் நகைத்து என நனைத்த முல்லை நீடு - தேம்பா:1 48/3

கார் முகத்து அலரும் முல்லை கடி முகத்து இமைக்கும் வண் கால் - தேம்பா:4 30/1

கொழுந்து உறும் குளிர்ந்த முல்லை கொண்ட கோவர் கூட்டமும் - தேம்பா:11 2/1

மாலை ஆக வீங்கு உவந்து வாசம் ஆரும் முல்லை ஆர் - தேம்பா:11 3/3

முல்லை தாரார் இ தலை பல் நாள் முறை எஞ்சாது - தேம்பா:11 80/2

துறை தவிர்ந்து இடத்து இட்டு ஏகி துளித்த தேன் முல்லை சேர்ந்தார் - தேம்பா:12 22/4

அனையது விளம்பி போன அணி வளர் முல்லை சொல்வாம் - தேம்பா:12 27/4

மது பட மலர்ந்தன முல்லை வாய் எலாம் - தேம்பா:12 28/4

தண் அம் கந்த மலர் முல்லை தடத்தில் பெருகி அ நாளில் - தேம்பா:15 10/3

கான் சுரக்கும் இள முல்லை நட்டு பொன்னால் கடை கோலி - தேம்பா:30 15/1

வாமமே பறவை தேர் மேல் வளர் அற முல்லை சேர்ந்து என் - தேம்பா:30 79/3

குலவ முல்லை நிலம் கொள ஏகினார் - தேம்பா:30 97/4

விரவ நக்க முல்லை விரை காட்டும்-ஆல் - தேம்பா:30 98/4

வகை அணிந்த முல்லை பினர் மற்று அதன் - தேம்பா:30 99/2

கார் முகத்து அலரும் முல்லை கதிர் முகத்து அலரும் கஞ்சம் - தேம்பா:30 136/1

தேன் உயிர்த்த முல்லை சிறு மூரலான் - தேம்பா:31 66/3

கார் முகத்து அலர்ந்த முல்லை கா என திரண்ட பல் நோய் - தேம்பா:33 7/3

உணங்கிய முல்லைக்கு உயிர் பெய் நீர் துளி போல் - தேம்பா:35 83/1

நக்கார் என முல்லைகள் நக்கு அலர - தேம்பா:30 21/2

ஏகையின் வண்டு கண்டு இளைய முல்லைகள்
  ஓகையின் நக்கு என எயிறு உடைந்தவே - தேம்பா:30 54/3,4

வாச வாய் தென்றல் தீண்டிய முல்லைகள் மதுவை - தேம்பா:32 19/2

தேன் நிமிர் முல்லையாக திருந்து அற தொகுதி நட்டு - தேம்பா:30 73/1

மாலை ஆக ஈங்கு வந்து வாசம் ஆரும் முல்லையார் - தேம்பா:11 3/4

முன் அருந்திய தீம் சுவை முல்லையார்
  பின் அருந்திட பெட்பு உறீஇ நாள்-தொறும் - தேம்பா:11 15/1,2

கான் முகத்து அலர் முல்லையார் கண்டதும் கடந்த - தேம்பா:25 7/2

முகை மலி முல்லையார் மொழிய கேட்டலும் - தேம்பா:30 148/3

விழீஇயின இணை பொறா விளங்க முல்லையே - தேம்பா:12 38/4

முல்லையை குறிஞ்சி ஆக்கி மருதத்தை முல்லை ஆக்கி - பால:1 17/1

கொன்றை வேய்ங்குழல் கோவலர் முல்லை அம் குடுமி - அயோ:9 34/2

மூரல் மென் குறு முறுவல் ஒத்து அரும்பின முல்லை - கிட்:10 35/4

ஓங்கு நாள்_முல்லை நாறின ஆய்ச்சியர் ஓதி - கிட்:10 47/3

விராவு வெம் கடுவின் கொல்லும் மேல் இணர் முல்லை வெய்தின் - கிட்:10 58/2

இலவு இதழ் துடித்த முல்லை எயிறு வெண் நிலவை ஈன்ற - யுத்3:25 7/2

முல்லையும் கடல் முத்தும் எதிர்ப்பினும் - அயோ:4 226/1

முல்லையும் முருந்தும் முத்தும் முறுவல் என்று உரைத்த-போது - கிட்:13 51/1

முல்லையை குறிஞ்சி ஆக்கி மருதத்தை முல்லை ஆக்கி - பால:1 17/1

வில்லி கணை தெரிந்து மெய் காப்ப முல்லை எனும் - நள:106/2
முல்லை
கொகுடி
வெருக்கு பல் உருவின் முல்லையொடு கஞலி – குறு 240/3

காட்டுப்பூனையின் பல் போன்ற தோற்றமுடைய முல்லைப்பூவுடன் கலக்கும்படியாக

முல்லை வியன் புலம் பரப்பி கோவலர்
குறும் பொறை மருங்கின் நறும் பூ அயர
பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன் – அகம் 14/7-9

முல்லை ஆகிய அகன்ற புலத்தில் பரவலாக விட்டு, கோவலர்கள்
சிறிய குன்றுகளின் பக்கங்களில் உள்ள நறிய பூக்களைப் பறித்துச் சூடிக்கொள்ள,
அறுகம்புல் மேய்ச்சலில் உணவருந்திய செருக்கிய நடையுடைய நல்ல ஆனினங்கள்

முல்லை சான்ற முல்லை அம் புறவின் – சிறு 169

முல்லை ஒழுக்கம் பொருந்திய முல்லை(க்கொடி படர்ந்த)அழகிய காட்டில்

பாணர் முல்லை பாட சுடர் இழை
வாள் நுதல் அரிவை முல்லை மலைய – ஐங் 408/1,2

பாணர்கள் முல்லைப் பண்ணை யாழில் வாசிக்க, ஒளிரும் அணிகலன்களைக் கொண்ட
ஒளிபொருந்திய நெற்றியையுடைய மனைவி முல்லை மலரைச் சூடியிருக்க,

முல்லை வெண் நகையாய் தொல் நாள் முறைமுறை மறைகள் எல்லாம் - சீறா:626/1

வெண் தயிர் உடைக்கும் ஒலி மறா முல்லை வேலியும் கடந்து அயல் போனார் - சீறா:1000/4

முல்லை சண்பகம் பாடலம் செ இதழ் முளரி - சீறா:1108/1

முல்லை அம் குழல் கதீஜா மின்னே முதல் - சீறா:1300/3

படர் கொடி நுடங்கும் முல்லை பரப்பையும் நீந்தி ஈந்தின் - சீறா:1723/3

முல்லை_மன்னவன் தரு நறும் பாலினை முறையா - சீறா:2642/3

விரை கொள் முல்லை அம் பந்தரும் விளை நறா உடைந்து - சீறா:2678/3

அறையும் முல்லை அம் பறை கடல் அமலையை அவிப்ப - சீறா:2680/2

இருவர் வந்து ஒரு முல்லை அம் பாடியின் இறங்கி - சீறா:2697/2

முல்லை அம் பாடியோர்க்கு முறைமுறை தொழும்பனாகி - சீறா:2843/3

முல்லை வெண் நகை மயில் முன்றில் நண்ணினார் - சீறா:3254/4

கரும் புவி போல கதிர் சுட காய்ந்த கடும் பரல் பாலையும் முல்லை
குரம்பையும் குடில் சூழ் முல்லையும் நீந்தி கொடி நகர் மதீன நாடு அடைந்தார் - சீறா:4452/3,4

முன் உமக்கு முலைகொடுத்த அலிமாவின் கிளையில் உள்ள முல்லை சேரும் - சீறா:4684/2

வேயினை முறித்து வெடித்த முத்து அனைத்தும் முல்லை அம் புறவினுக்கு அளித்து - சீறா:4755/1

முத்து அணி சிறப்ப இரு கரை கொழித்து முல்லையில் புகுந்தது சலிலம் - சீறா:33/4

மறவரை முல்லையில் ஆக்கி மாசு உடை - சீறா:734/2

முல்லையும் முருந்தும் நிரைத்தன போன்று முத்து என திகழ்ந்து அற நெருங்கி - சீறா:1961/1

பொதுவர் முல்லையும் குறிஞ்சியும் கடந்து அயல் போனார் - சீறா:2702/4

முல்லையும் கடந்து ஒரு பொழிலை முன்னினார் - சீறா:3315/4

பூம் பொழில் கொன்றை வேலி முல்லையும் கடந்து போனார் - சீறா:3383/4

நீறு பாலையும் முல்லையும் நீந்தியே - சீறா:4221/3

குரம்பையும் குடில் சூழ் முல்லையும் நீந்தி கொடி நகர் மதீன நாடு அடைந்தார் - சீறா:4452/4

மின்னும் கொடியும் நிகர் மருங்குல் வேய் தோள் முல்லை வெண் முறுவல் - வில்லி:3 89/3

கல் கெழு குறும்பும் சாரல் அம் கிரியும் கடி கமழ் முல்லை அம் புறவும் - வில்லி:19 6/1

முடை கமழ் முல்லை மாலை முடியவன்-தன்னை போரில் - வில்லி:25 13/1

கான் எலாம் மலர்ந்த முல்லை ககனம் மீது எழுந்தது என்ன - வில்லி:27 163/1

முல்லை மல்லிகை உற்பலம் குமுதம் மா முளரி - வில்லி:42 116/1

தூ நிற முல்லைகள் மலர்ந்து தோன்றுமால் - வில்லி:11 116/2

படா முதல் முல்லையின் பரிமளம் கொளா - வில்லி:11 93/3
முல்லைபடர்க்கொடி
முல்லை
முல்லை அம் கோதை சில் சூட்டு அணிந்து - உஞ்ஞை:42/149

முல்லை கிழத்தி முன் அருள் எதிர - உஞ்ஞை:49/90

முறுவல் அரும்பிய முல்லை அயல - உஞ்ஞை:49/97

முல்லை பெரும் திணை புல்லுபு கிடந்த - உஞ்ஞை:49/125

முகைந்த புறவின் முல்லை அம் பெரும் திணை - உஞ்ஞை:50/2

முல்லையும் பிடாவும் குல்லையும் கொன்றையும் - இலாவாண:12/18

குராஅம் பாவையும் கொங்கு அவிழ் முல்லையும்
பிண்டி தளிரும் பிறவும் இன்னவை - இலாவாண:19/155,156

இல் எழு முல்லையொடு மல்லிகை மயங்கி - உஞ்ஞை:33/73

முடி மிசை அணிந்த முல்லை அம் கோதை - இலாவாண:5/83

பைம் கொடி முல்லை வெண் போது பறித்தும் - இலாவாண:14/28

முல்லை போதின் உள் அமிழ்து உணாஅ - மகத:1/193

முல்லை முது திணை செல்வம் எய்தி - மகத:2/38

பைம் தார் முல்லை வெண் போது நெகிழ - மகத:7/14

பருவம் பொய்யா பைம் கொடி முல்லை
வெண் போது கலந்த தண்கண் வாடை - மகத:14/261,262

முல்லை தலை அணிந்த முஞ்ஞை வேலி - வத்தவ:2/63

முகை கொடி முல்லை நகை திரு முகத்து - வத்தவ:13/235
முழவு கார் கொள முல்லைகள் முகைப்பன முல்லை - 4.மும்மை:5 10/2

அங்கண் முல்லையின் தெய்வம் என்று அரும் தமிழ் உரைக்கும் - 4.மும்மை:5 18/3

கோல முல்லையும் குறிஞ்சியும் அடுத்த சில் இடங்கள் - 4.மும்மை:5 15/1

இணைந்து முல்லையும் குறிஞ்சியும் கலப்பன எங்கும் - 4.மும்மை:5 43/4

வயலும் முல்லையும் இயைவன பல உள மருங்கு - 4.மும்மை:5 45/4

வெறி கொண்ட முல்லை பிணை மீது குறிஞ்சி வெட்சி - 3.இலை:3 57/3

மல்கு வளத்தது முல்லை உடுத்த மருங்கு ஓர்-பால் - 3.இலை:7 5/4

கண் மலர் காவிகள் பாய இருப்பன கார் முல்லை
தண் நகை வெண் முகை மேவும் சுரும்பு தடம் சாலி - 3.இலை:7 6/1,2

நிறைந்த நீறு அணி மார்பின் நிரை முல்லை முகை சுருக்கி - 3.இலை:7 17/1

கோல வெண் முகை ஏர் முல்லை கோபம் வாய் முறுவல் காட்ட - 3.இலை:7 19/2

மாறு முதல் பண்ணின் பின் வளர் முல்லை பண் ஆக்கி - 3.இலை:7 25/1

பால் நிறைந்த புல் பதத்தன முல்லை நீள் பாடி - 4.மும்மை:5 9/2

முழவு கார் கொள முல்லைகள் முகைப்பன முல்லை
மழலை மென் கிளி மருது அமர் சேக்கைய மருதம் - 4.மும்மை:5 10/2,3

முல்லை மென் புதல் முயல் உகைத்து தடங்கு நீள் முல்லை - 4.மும்மை:5 16/4

முல்லை மென் புதல் முயல் உகைத்து தடங்கு நீள் முல்லை - 4.மும்மை:5 16/4

வேறு தன் பெரு வைப்பு என விளங்கும் மா முல்லை - 4.மும்மை:5 19/4

வாச மென் மலர் மல்கிய முல்லை சூழ் மருதம் - 4.மும்மை:5 20/1

காரைகள் கூகை முல்லை என நிகழ் கலை சேர் வாய்மை - 6.வம்பறா:1 115/1

கார் நாடு முகை முல்லை கடி நாறு நிலம் கடந்து - 6.வம்பறா:1 628/2

முல்லை வெண் நகை முகிழ் முலையார் உடன் முடியாமல் - 6.வம்பறா:1 1054/2

தொண்டைமானுக்கு அன்று அருள் கொடுத்து அருளும் தொல்லை வண் புகழ் முல்லை நாயகரை - 6.வம்பறா:2 278/1

முல்லை முகை வெண் நகை பரவை முகில் சேர் மாடத்திடை செல்ல - 6.வம்பறா:2 330/3

முன்னி இறைஞ்சி அகன்று போய் முல்லை படப்பை கொல்லை மான் - 13.வெள்ளானை:1 4/2

விண்ட முல்லை அரும்பு அன்ன பல்லினர் - நாலாயி:17/3

முல்லை நல் நறு மலர் வேங்கை மலர் அணிந்து பல் ஆயர் குழாம் நடுவே - நாலாயி:255/3

முல்லை பிராட்டி நீ உன் முறுவல்கள் கொண்டு எம்மை - நாலாயி:600/1

மொய் கொள் மாதவி சண்பகம் முயங்கிய முல்லை அம் கொடி ஆட - நாலாயி:1150/3

கான மா முல்லை கழை கரும்பு ஏறி வெண் முறுவல் செய்து அலர்கின்ற - நாலாயி:1372/3

பனி சேர் முல்லை பல் அரும்ப பானல் ஒரு-பால் கண் காட்ட - நாலாயி:1509/3

நளிர் வாய் முல்லை முறுவலிக்கும் நறையூர் நின்ற நம்பியே - நாலாயி:1511/4

உழும் நீர் வயலுள் பொன் கிளைப்ப ஒரு-பால் முல்லை முகையோடும் - நாலாயி:1722/3

கொல்லை வளர் இள முல்லை புல்கு குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் - நாலாயி:1793/4

கொல்லை முல்லை மெல் அரும்பு ஈனும் குறுங்குடியே - நாலாயி:1804/4

குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே - நாலாயி:1806/4

பகல் அடு மாலை வண் சாந்தம் ஆலோ பஞ்சமம் முல்லை தண் வாடை ஆலோ - நாலாயி:3870/2

வால் ஒளி வளர் முல்லை கரு முகைகள் மல்லிகை அலம்பி வண்டு ஆலும் ஆலோ - நாலாயி:3878/3

மணி மிகு மார்பினில் முல்லை போது என் வன முலை கமழ்வித்து உன் வாய் அமுதம் தந்து - நாலாயி:3917/3

குரவில் கொடி முல்லைகள் நின்று உறங்கும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடை மேல் - நாலாயி:274/2

தூ மது வாய்கள் கொண்டுவந்து என் முல்லைகள் மேல் தும்பிகாள் - நாலாயி:3531/1

தார் கொடி முல்லைகளும் தவள நகை காட்டுகின்ற - நாலாயி:588/2

பெரும் தண் முல்லைப்பிள்ளை ஓடி - நாலாயி:1364/3

என்னை வருக என குறித்திட்டு இன மலர் முல்லையின் பந்தர் நீழல் - நாலாயி:705/1

கொழும் கொடி முல்லையின் கொழு மலர் அணவி கூர்ந்தது குண திசை மாருதம் இதுவோ - நாலாயி:918/1

குன்றின் முல்லையின் வாசமும் குளிர் மல்லிகை மணமும் அளைந்து இளம் - நாலாயி:1844/3

செம்முல்லை
செம்முல்லை
இயல் காட்டு கொல் குவளை காட்டி முல்லை நகை காட்டு அல்லி இடை மாதர் - திருப்:477/2

முல்லை மலர் போலும் முத்தாய் உதிர்ந்தான நகை வள்ளை கொடி போலும் நல் காது இலங்கு ஆடு குழை - திருப்:478/1

முல்லை மலர் மாலை சுற்று ஆடும் கொந்து ஆரும் குழல் அலை போது அம் - திருப்:478/2

அல்லி விழியாலும் முல்லை நகையாலும் அல்லல்பட ஆசை கடல் ஈயும் - திருப்:530/1

வெல்லி குவீக்கும் முல்லை கை வீக்கு வில் இக்கு அதா கருதும் வேளால் - திருப்:535/1

கற்ற விஞ்ஞை சொல்லி உற்ற எண்மை உள் உகக்க எண்ணி முல்லை நகை மாதர் - திருப்:606/2

குவலயம் மல்கு தவலிகள் முல்லை குளிர் நகை சொல்லு முது பாகு - திருப்:658/1

புளகித வல்லி இளகித வல்லி புரி இள முல்லை நகை மீதே - திருப்:659/2

மைய செவ்வி மவ்வல் முல்லை மல்கு நல்ல குழலாலும் - திருப்:661/3

மெள்ள ஏறி குரவு வெள்ளில் ஆர் வெட்சி தண் அ முல்லை வேர் உற்பலம் முளரி நீபம் - திருப்:1232/3

முல்லைக்கு மாரன் அம் கை வில்லுக்கும் மாதர்தங்கள் பல்லுக்கும் வாடி இன்பம் முயலா நீள் - திருப்:533/1
சொல்ல அரும் புகழான் தொண்டைமான் களிற்றை சூழ் கொடி முல்லையால் கட்டிட்டு - தேவா-சுந்:707/1

நறவம் மல்லிகை முல்லையும் மௌவலும் நாள் மலர் அவை வாரி - தேவா-சம்:2665/1

தண் இதழ் முல்லையொடு எண் இதழ் மௌவல் மருங்கு அலர் கரும் கழி நெருங்கு நல் தருமபுரம் பதியே - தேவா-சம்:1461/4

தெற்று கொடி முல்லையொடு மல்லிகை செண்பகமும் திரை பொருது வரு புனல் வேர் அரிசிலின் தென் கரை மேல் - தேவா-சுந்:161/3

கார் கொள் கொடி முல்லை குருந்தம் ஏறி கரும் தேன் மொய்த்து - தேவா-சம்:485/3

தவழும் கொடி முல்லை புறவம் சேர நறவம் பூத்து - தேவா-சம்:489/3

கொல்லை முல்லை நகையினாள் ஓர்கூறு அது அன்றியும் போய் - தேவா-சம்:505/1

கரும் சுனை முல்லை நன் பொன் அடை வேங்கை களி முக வண்டொடு தேன் இனம் முரலும் - தேவா-சம்:829/3

கொல்லை முல்லை மெல் அரும்பு ஈனும் குற்றாலம் - தேவா-சம்:1071/2

கொல்லையின் முல்லை மல்லிகை மௌவல் கொடி பின்னி - தேவா-சம்:1093/3

முல்லை வெண் முறுவல் நகையாள் ஒளியீர் சொலீர் - தேவா-சம்:1484/3

நீடல் கோடல் அலர வெண் முல்லை நீர் மலர் நிரை தாது அளம்செய - தேவா-சம்:2038/1

பைம் கால் முல்லை பல் அரும்பு ஈனும் பாசூரே - தேவா-சம்:2116/4

கொம்பு ஆர் குரவு கொகுடி முல்லை குவிந்து எங்கும் - தேவா-சம்:2162/3

முல்லை அயலே முறுவல்செய்யும் முதுகுன்றே - தேவா-சம்:2164/4

காரைகள் கூகை முல்லை கள வாகை ஈகை படர் தொடரி கள்ளி கவினி - தேவா-சம்:2377/1

புற விரி முல்லை மௌவல் குளிர் பிண்டி புன்னை புனை கொன்றை துன்று பொதுளி - தேவா-சம்:2385/3

முறி கொள் ஞாழல் முட புன்னை முல்லை முகை வெண் மலர் - தேவா-சம்:2727/2

கோடல்கள் புறவு அணி கொல்லை முல்லை மேல் - தேவா-சம்:2946/1

முல்லை ஆர் புறவு அணி முது பதி நறை கமழ் - தேவா-சம்:3151/3

கம் முதம் முல்லை கமழ்கின்ற கருகாவூர் - தேவா-சம்:3289/3

கடி கொள் முல்லை கமழும் கருகாவூர் எம் - தேவா-சம்:3291/3

கைதல் முல்லை கமழும் கருகாவூர் எம் - தேவா-சம்:3292/3

கார் தண் முல்லை கமழும் கருகாவூர் எம் - தேவா-சம்:3296/3

கோங்கமே குரவமே கொழு மலர் புன்னையே கொகுடி முல்லை
வேங்கையே ஞாழலே விம்மு பாதிரிகளே விரவி எங்கும் - தேவா-சம்:3778/1,2

பைம் கொடி முல்லை படர் புறவின் பரிதிநியமமே - தேவா-சம்:3917/4

பல் வளர் முல்லை அம் கொல்லை வேலி பரிதிநியமமே - தேவா-சம்:3921/4

குருந்து உயர் கோங்கு கொடி விடு முல்லை மல்லிகை சண்பகம் வேங்கை - தேவா-சம்:4077/3

குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில் சூழ் கோணமாமலை அமர்ந்தாரே - தேவா-சம்:4126/4

அம் கள் கடுக்கைக்கு முல்லை புறவம் முறுவல்செய்யும் - தேவா-அப்:831/1

கொல்லை முல்லை கொழும் தகை மல்லிகை - தேவா-அப்:1270/3

கோடல் கோங்கம் புறவு அணி முல்லை மேல் - தேவா-அப்:1483/1

முல்லை வெண் நகை மொய் குழலாய் உனக்கு - தேவா-அப்:1522/1

முல்லை வெண் முறுவல் உமை அஞ்சவே - தேவா-அப்:1636/2

முல்லை நல் முறுவல் உமை_பங்கனார் - தேவா-அப்:1851/1

முல்லை அம் கண்ணி முடியாய் போற்றி முழு நீறு பூசிய மூர்த்தி போற்றி - தேவா-அப்:2131/1

முல்லை புறவம் முருகன்பூண்டி முழையூர் பழையாறை சத்திமுற்றம் - தேவா-அப்:2786/3

முல்லை முகை நகையாள் பாகர் போலும் முன்னமே தோன்றி முளைத்தார் போலும் - தேவா-அப்:2906/3

முல்லை முறுவல் உமை ஒருபங்கு உடை முக்கணனே - தேவா-சுந்:203/1

அல்லி மென் முல்லை அம் தார் அமர்நீதிக்கு அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே - தேவா-சுந்:393/4

முல்லை தாது மணம் கமழ் முருகன்பூண்டி மா நகர்-வாய் - தேவா-சுந்:499/3

முல்லை படைத்த நகை மெல்லியலாள் ஒருபால் மோகம் மிகுத்து இலங்கும் கூறு செய் எப்பரிசும் - தேவா-சுந்:856/2

குறை அணி குல்லை முல்லை அனைந்து குளிர் மாதவி மேல் - தேவா-சுந்:1006/3

முல்லை முறுவல் கொடி எடுப்ப கொன்றை முகம் மோதிரம் காட்ட - தேவா-சுந்:1029/3

இடையார் மெலிவும் கண்டு அண்டர்கள் ஈர் முல்லை வேலி எம் ஊர் - திருக்கோ:136/2

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *